Tnpsc

Daily Tamil current affairs 1st and 2nd July 2016

Daily Tamil current affairs 1st and 2nd July 2016

Dear Readers of winmeen, here we have updated Daily Tamil current affairs 1st and 2nd july 2016. It is very useful to govt job seekers to get their eligible marks in exams. This current affairs is dated 1st and 2nd july 2016. Mainly this tamil current affairs are focusing tnpsc group 4 exam. Aspirants are requested to visit daily to get daily current affairs in tamil in our website winmeen.com.

Daily Tamil current affairs 1st and 2nd July 2016
Daily Tamil current affairs 1st and 2nd July 2016

1] தேஜாஸ் போர் விமானங்கள் இன்று இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. 2003 ம் ஆண்டு முதல் எதிர்பார்க்கப்பட்ட முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இலகுரக போர் விமானம் இது. இன்று இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விமானம் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கூட்டு முயற்சியில் உருவான ஜெஎப் – 17 ரக போர் விமானத்தைவிட அதிகசக்தி வாய்ந்ததாகும்.

* 2 தேஜாஸ் விமானங்களை இந்திய விமானப் படைக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் வழங்கியது

2] புதுச்சேரிக்கு புதிய கலெக்டர் நியமனம்

* புதுச்சேரி மாவட்ட கலெக்டராக சத்யேந்திர சிங் துர்சாவத் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் காரைக்கால் மாவட்ட கலெக்டராக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

3] மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO சத்யா நாதள்ள , தனது பணிக்கால அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை சம்பவங்களை ” Hit Refresh ” என்ற பெயரில் புத்தகமாக எழுதி வருகின்றார். 2017ல் இந்த புத்ததகம் வெளியாகிறது.

4] இந்திய தலைமை கணக்கு தணிக்கை மற்றும் ஆடிட்டர் ஜெனெரல் ஆக { The Comptroller and Auditor General (CAG) }பதவி வகிக்கும் சசி காந்த் சர்மா சீனாவில் உள்ள Nanjing Audit University யின் கவுரவ பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5] (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம்

* ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி நம் நாட்டில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்க மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு இரண்டாவது முதல் அமைச்சராக இருந்தவர் பிடன் சந்திர ராய் (பி.சி.ராய்). 1882-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்த இவர், நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவராக இருந்துள்ளார். (1948-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் 1962 ஜூலை 1-ஆம் தேதி வரை) 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநில முதல்வராக திறம்பட பணியாற்றி உள்ளார். மருத்துவத்துறையில் திறம்பட பணியாற்றி பல்வேறு சாதனைகளை படைத்ததுடன், தன்னலம் பாராது பிறர்நலன் கருதி மகத்தான மருத்துவச் சேவை செய்ததால், மத்தியஅரசு 1961-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி பிடன் சந்திரராய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

* இந்திய மருத்துவத்துறைக்கு பெருமை தேடி தந்த பிடன் சந்திர ராய் தன்னுடைய 80-ஆவது வயதில், அதாவது 1962-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி இறந்தார். அவர் செய்த மருத்துவ சேவையை நினைவு கூறும் வகையில் இந்திய மருத்துவக்கழகம் அவருடைய பிறந்த நாளும், இறந்த நாளும் ஜூலை 1-ஆம் தேதி வருவதால், அன்றைய தினத்தை `தேசிய மருத்துவர் தினமாக’ அனுசரித்து வருகிறது.

6] Half Lion , How P.V.Narasimha Rao Transformed India [ எழுதியவர் — வினய் சீதாபதி ]

7] SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகள் / திட்டங்கள் பற்றிய விபரங்களை வழங்குவதற்கும், அவர்களின் ஐயங்களுக்கு தீர்வை வழங்குவதற்கும் Face book மற்றும் Twitterல் ” SBI MINGLE ” என்ற பெயரில் கணக்கை துவக்கியுள்ளது.

8] கூகுள் நிறுவனம் தனது அடுத்த Android version 7க்கு NOUGAT என பெயரிட்டுள்ளது. ( Cupcake , Donut, Eclair, Froyo, Gingerbread, Honeycomb, Ice Cream Sandwich, Jelly Bean, KikKat, Lollipop , Marshmallow. )

9] RIMPAC – 2016

* ஹவாய் தீவு கடல் பகுதிகளில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 26 நாடுகள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய கடற்பயிற்சி ” RIMPAC (Rim of the Pacific) 2016 ” ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 04 வரை நடைபெறுகிறது.

* இந்த பயிற்சியின் கருப்பொருள் ( Theme ) — Capable, Adaptive, Partners .

10] கேரள மாநில அரசு electronic cigerete எனப்படும் e – சிகரட்டை தயாரிக்க , விற்பனை செய்ய, பயன்படுத்த தடை விதித்துள்ளது.

* ஏற்கனவே பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகியவை e – சிகரெட்டுக்கு தடை விதித்துள்ளன.

11] ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் ஸ்பான்சரராக ” அமுல் ” தேர்வு செய்யப்பட்டுள்ளது.

12] ஜூலை – 1 தேசிய மருத்துவர்கள் தினம் * ஜூலை – 2 சர்வதேச விளையாட்டுச் செய்தியாளர்கள் தினம்

* ஜூலை மாத முதல் சனிக்கிழமை ( இந்த ஆண்டு ஜூலை 2 ) – சர்வதேச கூட்டுறவு தினம் ( International co – operative day ) Theme – Co-operatives: The power to act for a sustainable future

13] ஹரியானா மாநிலத்தில் குர்கான் மாவட்டத்தின் Dhaula, Alipur, Harichandpur மற்றும் Taj Nagar மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்த Rojka Meo கிராமங்களை Smart model கிராமமாக மாற்றும் முன்னோடி திட்டத்தை ( Smart Model Village Pilot Project ) ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துவக்கி வைத்துள்ளார்.

14] இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பாதுகாப்பு தொலைத்தொடர்பு வலையமைப்பு தொடக்கம். * முப்படைகள் விழிப்புணர்வுடன் செயலாற்ற தொடங்கப்பட்டுள்ளது.

15] மராத்திய எழுத்தாளர் ராமசந்திர சிந்தமான் காலமானார்.

* இவர் இலக்கிய ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்.

16] மத்திய மனித வள மேம்பாட்டு துறை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் கற்பித்தலுக்காக ‘ prashiksha’ என்ற ஆன்லைன் வசதியை தொடங்கி உள்ளது.

17] மத்திய ரயில்வே அமைச்சகம் அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் குறைகளை போக்க இணைய வழி வசதியை தொடங்கி உள்ளது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவால் தொடங்கப்பட்டது.

18] இந்திய சூரிய சக்தி திட்டத்திற்கு உலக வங்கி நிதி உதவி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலக வங்கி தலைவர் Jim yong Kim முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

19] மத்திய அரசு திட்டமிடல் சாராத திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான நிதி அதிகாரத்தை அதிக படுத்த முடிவு செய்துள்ளது.

20] 2016 சாம்பியன் கோப்பை ஆக்கி போட்டியில் அர்ஜெண்டினா பெண்கள் அணி 7வது முறையாக சாம்பியன். சிறந்த வீரர் : Carla rebecchi ( Argentina) இளைய வீரர் : maria granotto ( Argentina) கோல்கீப்பர் : Joyce son broek ( Netherland)

21] அண்டார்டிகா வில் உள்ள ஓசோன் துளை சரியாகி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓசோன் படலம் புற ஊதாக்கதிர்கள் மனிதர்களை தாக்காமல் இருக்க உதவுகிறது.

22] இந்தியாவில் மேம்படுத்த பட்ட நீர் வழி ஆகாயம் தாக்கும் நடுத்தர ஏவுகணையை இஸ்ரேல் வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூரில் ஒருங்கிணைந்த சோதனை மூலம் சோதிக்கப்பட்டது.

23] இமாலய மாநிலங்களில் பருவ நிலை மாற்றத்தால் விலங்குகள் சந்திக்கும் விளைவுகளை ஆய்வு செய்யும் திட்டத்தை zoological survey of India தொடங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!