Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs 17th September 2016

Tnpsc Tamil Current Affairs 17th September 2016

Tamil Current Affairs 17th September 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 17th September 2016 is given below as quiz format. Also tnpsc peoples can download Daily Current affairs in tamil as PDF format.

Tnpsc Tamil Current Affairs 17th September 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 17th September 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. 2016-ம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் யார் ?
A
யுவராஜ் சிங்
B
மகேந்திர சிங் தோனி
C
ரஹானே
D
ரோஹித் ஷர்மா
Question 1 Explanation: 
புது தில்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் ரஹானே, ரோகித் சர்மா ஆகியோருக்கு முறையே 2016 மற்றும் 2015-ம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இவ்விருவரும் சர்வதேச போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்ததால் இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து அர்ஜுனா விருதை பெற முடியவில்லை.
Question 2
2. 2016 Naropa திருவிழா இந்தியாவின் எந்த மாநிலத்தில் தொடங்கியது?
A
இமாசலப் பிரதேசம்
B
ஜம்மு மற்றும் காஷ்மீர்
C
சிக்கிம்
D
உத்தரகண்ட்
Question 2 Explanation: 
ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் Naropa எனப்படும் ஒரு பெரும் புத்த திருவிழா, ஜம்மு-காஷ்மீரின் லடாக்கில் உள்ள 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஹெமிஸ் மடாலயத்தில் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வு, ஆன்மீக அருட்தொண்டர் Naropa-வின் 1000 வது பிறந்த நாள் கொண்டாட்டம் ஆகும். பார்வையாளர்களுக்கு விடுதலை அளிக்கும் சென்று கூறப்படும் Naropa-ன் ஆறு எலும்பு ஆபரணங்கள் விழாவில் காண்பிக்கப்பட உள்ளன. இது தவிர, புத்தர் அமிதாபின் பண்டைய பட்டு Thangka (திபெத்திய புத்தமத ஓவியம்) அனைவருக்கும் காண்பிக்கும் பொருட்டு திறக்கப்பட உள்ளது.
Question 3
3.  மனித கடத்தலில் தப்பி பிழைத்தவர்களின் கண்ணியத்திற்கான  நல்லெண்ண தூதராக UNODC-வால்  நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
சமந்தா கான்
B
நிஹாரிகா ரைஜாடா
C
நாடியா முராத்
D
மலாலா யூசுப்சாய்
Question 3 Explanation: 
இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகளின் கடத்தல் மற்றும் கற்பழிப்பில் உயிர் தப்பிய ஒரு இளம் Yazidi இன பெண்ணான நாடியா முராத் பேசீ தாஹ, UNODC (United Nations Office on Drugs and Crime)ஆணையத்தால் மனித கடத்தலில் தப்பிப்பிழைத்தவர்களின் கண்ணியத்திற்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடியா, Yazidi மக்களுக்காக கடுமையாக போராடினார் மற்றும் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உழைத்தார். மேலும் இவர் அமைதிக்கான நோபல் பரிசு வேட்பாளர்.
Question 4
4. 2017-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி (AfDB) குழுமத்தின்  வருடாந்திர மாநாட்டை எந்த நாடு நடத்தவுள்ளது ?
A
சீனா
B
நேபாளம்
C
இந்தியா
D
இலங்கை
Question 4 Explanation: 
குஜராத்தின் அஹமதாபாத்திலுள்ள மகாத்மா காந்தி மாநாட்டு மையத்தில் இந்திய அரசும், ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியும், வங்கியின் 2017 ஆண்டுக் கூட்டத்தை மே 22-26, 2017 அன்று இந்தியா நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டுள்ளது. 2017 AfDB கூட்டம் ஒரு மெகா சர்வதேச நிகழ்வாகும். இதில் ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் உறுப்பு நாடுகளிலுள்ள 80 நாடுகளின் ஆளுநர்கள், மாற்று ஆளுநர்கள், நிர்வாக இயக்குனர்கள் , கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வியாபார நிலையங்களில் இருந்து 5000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர் .
Question 5
5. சமீபத்தில் மறைந்த எட்வர்டு ஆல்பி, எந்த துறையை சேர்ந்தவர் ?
A
இதழியல்
B
அறிவியல்
C
விளையாட்டு
D
நாடக ஆசிரியர்
Question 5 Explanation: 
"Who’s Afraid of Virginia Woolf ?" என்ற நாடகத்தை எழுதிய 88 வயதான அமெரிக்க நாடக ஆசிரியர் எட்வர்டு ஆல்பி சமீபத்தில் நியூயார்க் நகரத்தில் காலமானார். ஆர்தர் மில்லர் மற்றும் ஆகஸ்டு வில்சன் ஆகியோருக்கு பிறகு அமெரிக்காவின் மிகப்பெரிய வாழும் நாடக ஆசிரியராக இவர் கருதப்பட்டார். ஆல்பி, A Delicate Balance, Seascape மற்றும் Three Tall Women ஆகிய புத்தகங்களுக்காக 3 முறை புலிட்சர் பரிசு பெற்றுள்ளார்.
Question 6
6. எந்த இந்திய அமெரிக்கர்,  2016 Marconi Society Paul Baran Young Scholar  விருதை பெற்றார் ?
A
நந்தன் முருதார்
B
பிரியங்கா செர்னோவ்
C
தினேஷ் பாரதியா
D
ஆபிரகாம் வர்கீஸ்
Question 6 Explanation: 
தினேஷ் பாரதியா, ஒரு இந்திய வம்சாவளி எம்ஐடி விஞ்ஞானி. வானொலி (வயர்லெஸ்) சிக்னல்களை அனுப்புதல் மற்றும் பெறுதல் , மொபைல் தொழில்நுட்பம் மற்றும் அதே சேனல் (அலை) மூலம் தரவுகளை அனுப்புதல் போன்றவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மதிப்புமிக்க 2016 Marconi Society Paul Baran Young Scholar விருது வழங்கப்பட்டுள்ளது. ரேடியோ அலைகள் மீது இவர் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம், குறுக்கீட்டு விளைவின் காரணமாக ரேடியோவானது ஒரே அதிர்வெண்ணை பெற்று அதை பரப்ப இயலாது என்ற 150 ஆண்டுகால அனுமானத்தை தவறு என நிரூபித்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பிரிவில் இந்த விருது நோபல் பரிசுக்கு சமமாக கருதப்படுகிறது மற்றும் $ 4,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. நவம்பர் 2, 2016 அன்று கலிபோர்னியாவில் Mountain View-வில் நடைபெறவுள்ள விழாவில் இவ்விருது அளிக்கப்பட இருக்கிறது.
Question 7
7. எந்த நாடு Tiangong-2 விண்வெளி ஆய்வகத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ?
A
சீனா
B
தைவான்
C
ஜப்பான்
D
வியட்நாம்
Question 7 Explanation: 
விண்வெளி தொழில்நுட்ப சோதனை, மருத்துவ மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கு Tiangong-2 எனும் விண்வெளி ஆய்வகத்தை Long March 2-F T2 ராக்கெட் மூலம் வடமேற்கு கோபி பாலைவனத்திலுள்ள Jiuquan விண்வெளி நிலையத்திலிருந்து சீனா சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது. Tiangong 2 ஆய்வகம் , இடைக்கால விண்வெளி அமைப்பு பற்றிய சோதனைகளுக்கும்,நடைமுறைகளுக்கும், எரிபொருள் நிரப்பும் சோதனைக்கும், மருந்துகள் மற்றும் பல்வேறு விண்வெளி தொடர்பான தொழில்நுட்ப சோதனைகளுக்கும் அமைக்கப்பட்டது.
Question 8
8. 2016 "பொறியாளர் தினம்" இந்தியாவில் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?
A
செப்டம்பர் 17
B
செப்டம்பர் 18
C
செப்டம்பர் 16
D
செப்டம்பர் 15
Question 8 Explanation: 
பாரத ரத்னா விருது பெற்ற மோக்சகுன்டம் விஸ்வேஸ்வரய்யா நினைவாக இந்தியாவில் செப்டம்பர் 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. விஸ்வேஸ்வரய்யா ஒரு தலைமை பொறியாளர். மைசூர் கிருஷ்ண ராஜாசாகர் அணையின் கட்டுமான பொறுப்பாளர் மற்றும் ஹைதராபாத் நகர வெள்ள பாதுகாப்பு அமைப்பின் தலைமை வடிவமைப்பாளர் போன்ற பொறுப்புகளில் இருந்தார். 2016 பொறியாளர் தினத்தின் 49வது பதிப்பின் மையக்கரு "Skill Development for Young Engineers to Reform the Core Sector: Vision 2025" ஆகும்.
Question 9
9. அண்மையில் சக்தி வாய்ந்த சூறாவளி Meranti எந்த நாட்டை தாக்கியது ?
A
சீனா
B
வியட்நாம்
C
மலேஷியா
D
இந்தியா
Question 9 Explanation: 
சூறாவளி Meranti, பிலிப்பைன்ஸ்சில் Ferdie என அழைக்கப்படும் சூறாவளி சமீபத்தில் சீனாவின் புஜியான் மாகாணத்தினை 173 km / h காற்று வேகத்தில் மோசமான நிலையில் தாக்கியது. இது 2016-ல் உலகின் வலிமையான சூறாவளி ஆகும். இதற்கு முன் ஏற்பட்ட சூறாவளி, தைவான் தென் பகுதியில் அடித்துவிட்டு பிறகு பலத்த காற்று மற்றும் பெருமழையுடன் சீனாவின் தென்கிழக்கு பகுதியை தாக்கியது. கிட்டத்தட்ட 2 மில்லியன் வீடுகள் புஜியான் மாகாணத்தில் செயலிழந்தன. இந்த சூறாவளியால் ஏற்பட்ட பலத்த மழைப்பொழிவால் சீனாவின் ஸேஜியாங் பிரதேசம் பலமாக அடி வாங்கியது. ஸேஜியாங்கில் 63,000 க்கும் மேற்பட்ட மக்கள் குடியேற்றப்பட்டனர்.
Question 10
10. புத்தகம் “One & A Half Wife” யாரால் எழுதப்பட்டது?
A
அத்வைத கலா
B
மேக்னா பான்ட்
C
ராஜீவ் சேத்
D
மாதுரி பானர்ஜி
Question 10 Explanation: 
“One & A Half Wife” என்ற புத்தகம் மேக்னா பான்ட் என்பவரால் எழுதப்பட்டது. இவர் ஒரு இந்திய இலக்கிய புனைகதை எழுத்தாளர் மற்றும் நிதி பத்திரிகையாளர். இது "அமரா" என்ற ஒரு இந்திய பெண்னின் கதை. உங்களுக்கு உள் தைரியத்தையும், ஒவ்வொரு முறை தடைகள் ஏற்படும்போது விழாமல் அதை கடக்க ஒரு நம்பிக்கையையும், மீண்டும் விழாமல் இருக்க புதிய வழிகள் மற்றும் முறைகளையும் இக்கதை கூறுகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Tags :

Tnpsc Tamil Current Affairs September 2016, Tnpsc Tamil Current Affairs 2016, Tnpsc Tamil Current Affairs 2017, Tnpsc Tamil Current Affairs October 2016, Tnpsc Tamil Current Affairs november 2016, Tnpsc Tamil Current Affairs december 2016, Tnpsc group 4 tamil current affairs, Tnpsc Portal current affairs, Tnpsc job current affairs

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!