Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs 18th and 19th September 2016

Tnpsc Tamil Current Affairs 18th and 19th September 2016

Tamil Current Affairs 18th and 19th September 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 18th and 19th September 2016 is given below as quiz format. Also tnpsc peoples can download Daily Current affairs in tamil as PDF format.

Tnpsc Tamil Current Affairs 18th and 19th September 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 18th and 19th September 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. 2016  உலக பொருளாதார சுதந்திர குறியீட்டில் இந்தியாவின் தரம் என்ன?
A
118
B
89
C
112
D
78
Question 1 Explanation: 
உலக பொருளாதார சுதந்திர குறியீட்டில் இந்தியா 159 நாடுகளில் 112வது இடத்தை பெற்றுள்ளது. 2016 வருடாந்திர அறிக்கை படி, உலக பொருளாதார சுதந்திர குறியீட்டில் முதலிடத்தில் ஹாங்காங் உள்ளது. அதனை தொடர்ந்து சிங்கப்பூர், நியூசிலாந்து, சுவிச்சர்லாந்து, கனடா, ஜோர்ஜியா, அயர்லாந்து, மொரிஷியஸ், ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பட்டியல் வரிசையில் உள்ளது. இந்த அறிக்கை 2014 புள்ளிவிபரத்தின் அடிப்படையில் மற்றும் பொருளாதார சுதந்திரமானது, அனைத்து 159 நாடுகள், பிரதேசங்களின் கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அளவிடப்படுகிறது.
Question 2
2. 2017  துடிப்பான குஜராத் உலகளாவிய மாநாட்டில்(Vibrant Gujarat Global Summit-2017) பின்வரும் எந்த நாடு பங்குதார நாடாக இணையவுள்ளது ?
A
அமெரிக்கா
B
ரஷ்யா
C
ஐக்கிய ராஜ்யம்
D
ஜெர்மனி
Question 2 Explanation: 
ஜனவரி 8-9, 2017-ல் காந்திநகரின் மகாத்மா மந்திரில் நடைபெறும் துடிப்பான குஜராத் உலகளாவிய மாநாட்டின் 8வது பதிப்பில் பங்குதார நாடாக அமெரிக்கா இருக்கும். உச்சி மாநாடு "நிலையான பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி" யில் கவனம் செலுத்தும். உச்சி மாநாட்டின் நோக்கம், உலகிலுள்ள சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், மாநில மற்றும் அரசாங்க அமைச்சர்கள், கார்ப்பரேட் உலகில் உள்ள தலைவர்கள், மூத்த கொள்கை வகுப்பாளர்கள் ஆகிய அனைவரையும் ஒன்றாக அழைத்து வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்க முயற்சிப்பதாகும்.
Question 3
3. 2016 தேசிய தொழிலாளர் மாநாட்டை இந்தியாவின் எந்த நகரம் நடத்தவுள்ளது ?
A
கொச்சி
B
புவனேஸ்வர்
C
சென்னை
D
லக்னோ
Question 3 Explanation: 
ஒடிசா அரசு, சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO) இணைந்து புவனேஸ்வரில் 2016 செப்டம்பர் 20-ம் நாள் தேசிய தொழிலாளர் மாநாட்டைநடத்தவுள்ளது.இந்த 2 நாள் மாநாட்டின் நோக்கம், இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் பல பிரச்சினைகள் பற்றி விவாதிப்பது ஆகும்.
Question 4
4. “Democrats and Dissenters” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ?
A
உபமன்யு சட்டர்ஜி
B
ராமச்சந்திர குஹா
C
விக்ரம் சேத்
D
அமிஷ் திரிபாதி
Question 4 Explanation: 
“Democrats and Dissenters” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராமச்சந்திர குஹா ஆவார். அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு , கருத்து சுதந்திரம், மற்றவர்கள் மத்தியில் பழங்குடியினருக்கு எதிரான பாகுபாடு போன்ற பரவலான பிரச்சினைகள் குறித்த 16 கட்டுரைகளை இப்புத்தகம் கொண்டுள்ளது.
Question 5
5. மத்திய குடிமைப்பணி தேர்வணையத்தின் (UPSC) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
தீபக் குப்தா
B
பி எஸ் பேஸ்ஸி
C
மாதவ் சக்சேனா
D
அல்கா சிரோஹி
Question 5 Explanation: 
அல்கா சிரோஹி, மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, செப்டம்பர் 21,2016 முதல் மத்திய குடிமைப்பணி தேர்வணையத்தின் (UPSC) புதிய தலைவராக பணியாற்றவுள்ளார். இவருக்கு முன், தீபக் குப்தா இப்பதவி வகித்தார். தற்போது, சிரோஹி ஆணையத்தின் ஒரு உறுப்பினராக உள்ளார், இவரது பதவிக்காலம் நிறைவடையும் நாளான ஜனவரி 3, 2017 வரை இவர் அலுவலகத்தில் இருப்பார்.
Question 6
6. "Joint Sea-2016" எனும் கூட்டு கடற்படைப் பயிற்சி பின்வரும் எந்த இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளன ?
A
இந்தியா மற்றும் ரஷ்யா
B
இந்தியா மற்றும் சீனா
C
சீனா மற்றும் ரஷ்யா
D
இந்தியா மற்றும் அமெரிக்கா
Question 6 Explanation: 
சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் "Joint Sea-2016" எனும் கூட்டு கடற்படைப் பயிற்சியை செப்டம்பர் 12-19 வரை சர்ச்சைக்குரிய தென் சீன கடலில் நடத்தவுள்ளது. பொதுநலன்களை பாதுகாத்தல், உலகிலுள்ள அனைத்து கடல் பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், கொள்ளைக்கெதிராக போராடுதல், கடற்பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்றவை இந்த கூட்டு பயிற்சியின் நோக்கமாகும்.
Question 7
7.  சுபான்கர் ப்ரமானிக் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
வூஷூ
B
குத்துச்சண்டை
C
நீச்சல்
D
துப்பாக்கி சுடுதல்
Question 7 Explanation: 
சுபான்கர் ப்ரமானிக், வங்காளத்தை சேர்ந்த ஒரு இந்திய துப்பாக்கி சுடும் வீரர். அஸர்பைஜானின் கபாலாவில் நடைபெற்ற கைத்துப்பாக்கி, சுழல் துப்பாக்கி, சிறுதுப்பாக்கிக்கான 2016 ISSF ஜூனியர் உலக கோப்பை 50 மீட்டர் போட்டியில் இவர் தங்கம் வென்றுள்ளார். இவரை தவிர, இளைய ஆண்கள் 25 மீட்டர் போட்டியில் சாம்பாஜி பாட்டீல் தங்கம் வென்றார். குர்மீட் மற்றும் ரிதுராஜ் சிங்குடன் இணைந்து பாட்டீல் அணியாகவும் தங்கம் வென்றார்.
Question 8
8. 2016 மோகனன் சுவர்ணா முத்ரா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்  யார் ?
A
எஸ் மாதவன்
B
எம்.டி.வாசுதேவன் நாயர்
C
எம் லீலாவதி
D
ஓ என் வி குருப்
Question 8 Explanation: 
டாக்டர் எம் லீலாவதி, பிரபல மலையாள விமர்சகர் மற்றும் கல்வியாளர். மலையாள மொழி மற்றும் இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காக மதிப்புமிக்க 2016 மோகனன் சுவர்ணா முத்ரா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இறையாண்மை மிக்க ஒரு தங்க பதக்கத்தை உள்ளடக்கிய இவ்விருது, நன்கு அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர் என்.மோகனன் நினைவாக நிறுவப்பட்டது.
Question 9
9. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்.ஐ.சி.) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
உஷா பால்
B
உஷா சங்வான்
C
வி.கே. சர்மா
D
நிதின் ஸ்ரீவஸ்தவா
Question 9 Explanation: 
வி.கே. சர்மா, இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்.ஐ.சி.) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் தலைவர் பதவியில் இருந்து எஸ்.கே. ராய் ராஜினாமா செய்தார், இதனால் வி கே சர்மா புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த பதவிக்கு முன்பு சர்மா எல்.ஐ.சி.யின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்தார்.
Question 10
10.   எந்த இந்திய வம்சாவளி ஆளுமை சர்வதேச இரத்த தான சங்கத்தின் (ISBT) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
A
அபிஷேக் கிருஷ்ணன்
B
ரவி ரெட்டி
C
கடுவகுளம் ஆண்டனி
D
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
Question 10 Explanation: 
ரவி ரெட்டி, ஒரு இந்திய வம்சாவளி தென் ஆப்பிரிக்கர். உலகளவில் இரத்த ஏற்ற பாதுகாப்பிற்காக பணிபுரியும் மருத்துவ நிபுணர்களின் உலகளாவிய அமைப்பான சர்வதேச இரத்ததான சங்கத்தின் (ISBT) தலைவராக ரவி ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து வரும் முதல் தலைவர் என்ற பெருமையை ரெட்டி பெறுகிறார். தற்போது, ரெட்டி தென்னாப்பிரிக்க இரத்த சேவை (SANBS) சங்கத்தின் முதன்மை செயல் அலுவலர் (COO -Chief Operations Officer). நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமை தலைமையகமாக கொண்ட ISBT-ன் நோக்கமானது, இரத்த ஏற்றம் குறித்து பயில்வதை ஊக்குவித்தல் ஆகும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Tags :

Tnpsc Tamil Current Affairs September 2016, Tnpsc Tamil Current Affairs 2016, Tnpsc Tamil Current Affairs 2017, Tnpsc Tamil Current Affairs October 2016, Tnpsc Tamil Current Affairs november 2016, Tnpsc Tamil Current Affairs december 2016, Tnpsc group 4 tamil current affairs, Tnpsc Portal current affairs, Tnpsc job current affairs

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!