Tnpsc

Tnpsc Tamil Current Affairs 20th September 2016

Tnpsc Tamil Current Affairs 20th September 2016

Tamil Current Affairs 20th September 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 20th September 2016 is given below as quiz format. Also tnpsc peoples can download Daily Current affairs in tamil as PDF format.

Tnpsc Tamil Current Affairs 20th September 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 20th September 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. Malakas எனப்படும் சக்தி வாய்ந்த சூறாவளி அண்மையில்  எந்த நாட்டை தாக்கியது ?
A
ஜப்பான்
B
இந்தோனேஷியா
C
வியட்நாம்
D
சீனா
Question 1 Explanation: 
Malakas சூறாவளி, பயங்கர காற்று (180 கி.மீ / மணிக்கு) மற்றும் மழை வெள்ளத்துடன் தென் ஜப்பான் பகுதியை மிக மோசமாக தாக்கியது. மேற்கு மற்றும் தெற்கு ஜப்பான் பகுதிகளில் 500,000 பேரை தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 110-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த சூறாவளி, வக்காயாமா எல்லை கரையை அடைந்துள்ளதால் நூறாயிரக்கணக்கான மக்கள் அங்கு வெளியேற்றப்பட்டனர்.
Question 2
2. 2016 இந்திய சர்வதேச கடல் உணவு நிகழ்ச்சி (IISS-India International Seafood Show) எங்கு நடைபெறவுள்ளது ?
A
புது தில்லி
B
மும்பை
C
கொச்சி
D
விசாகப்பட்டினம்
Question 2 Explanation: 
இந்திய சர்வதேச கடல்உணவு நிகழ்ச்சியின்(IISS) 20 வது பதிப்பு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2016 செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் துவங்கியது. 2016 IISS-ன் மையக்கருத்தானது, “Safe and Sustainable Indian Aquaculture”. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், மீன்பிடிப்பில் உள்ள பாதுகாப்பான மற்றும் நிலையான நடைமுறைகளில் இந்தியாவின் அர்ப்பணிப்பை முன்னிலைப்படுத்துவதாகும். இந்த 3 நாள் நிகழ்வில் இந்தியாவில் இருந்து 2,000 பிரதிநிதிகளும், வெளிநாடுகளில் இருந்து 200 பிரதிநிதிகளும் பங்கு பெற உள்ளனர். இந்திய கடற்பொருள் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் ,செயலிகள், வள நிபுணர்கள், பணியாளர்கள்,செயலாக்க இயந்திர உற்பத்தியாளர்கள் ஆகிய அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து பங்கேற்பாளர்கள் மற்றும் வர்த்தக பார்வையாளர்களுடன் ஒரு வணிக தொடர்பை அமைத்து பரஸ்பர நன்மை பெறும் வகையில் வணிக உறவுகளை மேம்படுத்த IISS வாய்ப்பை வழங்கும்.
Question 3
3. உலக வங்கிக்கான இந்தியாவின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
கிரிஷன் காந்த் பால்
B
ஜூனைட் அகமது
C
ஹருஹிகோ குரோடா
D
ஒன்னோ ருஹ்ல்
Question 3 Explanation: 
வங்கதேசத்தவரான ஜூனைட் அகமது, உலக வங்கிக்கான இந்தியாவின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒன்னோ ருஹ்ல்-யை தோற்கடித்து இப்பதவியை அடைந்தார். இப்பதவிக்கு முன்னர் ஜூனைட், உலக வங்கியின் குழு தலைவர் ஜிம் யோங் கிம்-ன் தலைமை அலுவலராக இருந்தார்.
Question 4
4. ருஷிராஜ் பரோட் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
பூப்பந்து
B
குத்துச்சண்டை
C
மல்யுத்தம்
D
துப்பாக்கி சுடுதல்
Question 4 Explanation: 
ருஷிராஜ் பரோட், சமீபத்தில் அஸர்பைஜானின் கபாலாவில் நடைபெற்ற 2016 ISSF ஜூனியர் உலக கோப்பை போட்டியில் ஆண்களுக்கான ஜூனியர் 25m விரைவு கைத்துப்பாக்கி போட்டியில் தங்கம் வென்றார்.
Question 5
5. 2016 பிரிக்ஸ் விவசாயம் மற்றும் பயிர்த்தொழில் வளர்ச்சி மாநாடு இந்தியாவின்  எந்த நகரத்தில் நடைபெற்றது ?
A
போபால்
B
ஜெய்ப்பூர்
C
புது தில்லி
D
கான்பூர்
Question 5 Explanation: 
2016 பிரிக்ஸ் விவசாயம் மற்றும் பயிர்த்தொழில் வளர்ச்சி மாநாட்டின் 6-வது பதிப்பு புது தில்லியில் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டை வேளாண் அமைச்சகம் மற்றும் உழவர் நல சங்கம் நடத்துகிறது. பிரிக்ஸ்- ன் 2012-2016 செயல் திட்டத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய 5 பகுதிகள் இம்மாநாட்டில் முதன்மைப்படுத்தப்பட இருக்கிறது. ஒத்துழைப்பு வழங்க வேண்டிய 5 பகுதிகளில் சில : அடிப்படை விவசாய தகவல் பரிமாற்ற அமைப்பு உருவாக்குதல், மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் உணவுபொருளை அணுகுவதை உறுதிப்படுத்த தேவையான வியூகங்கள் போன்றவை ஆகும்.
Question 6
6.  ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தோருக்கான(United Nations Summit for Refugees and Migrants) மாநாடு எந்த நகரத்தில் நடைபெற்றது ?
A
சிட்னி
B
நியூயார்க்
C
பெர்லின்
D
புது தில்லி
Question 6 Explanation: 
அகதிகள் மற்றும் குடியேறுவோருக்கான முதலாவது ஐக்கிய நாடுகள் உச்சி மாநாடு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் நடைபெற்றது. அதில், 65 மில்லியன் அகதிகள், குடியேறுவோர் உயிர்களை காப்பாற்ற மற்றும் பொறுப்பை பகிர்ந்து கொள்ள 193 நாடுகளின் தலைவர்களால் "அகதிகள், குடியேறுவோர் நியூயார்க் பிரகடனம்" ஏற்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட ஒன்றாக இல்லாமல், அகதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்க,மனிதாபிமான உதவி வழங்க, மீள்குடியேற்றம் மற்றும் வேலையை அதிகரிக்க நாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றது. இவ்வுச்சி மாநாடு மனித இயக்க சவால்களை அறியும் ஒரு திருப்புமுனை கூட்டு முயற்சியாக கருதப்படுகிறது.
Question 7
7."Confluence: Festival of India" எனப்படும்  முதலாவது  இந்திய இசை மற்றும் நடன திருவிழா எந்த நாட்டில் தொடங்கியது?
A
ஆஸ்திரேலியா
B
அமெரிக்கா
C
பிரான்ஸ்
D
ரஷ்யா
Question 7 Explanation: 
முதலாவது(first-of-a-kind) இந்திய இசை மற்றும் நடன திருவிழா "Confluence: Festival of India" ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தொடங்கியது. இதனை சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா தொடங்கி வைத்தார். 10 வார விழாவின் நோக்கம், இந்தியாவின் உயர்ந்த மற்றும் பலதரப்பட்ட கலாச்சாரத்தை வெளிப்படுத்துவது ஆகும். திருவிழா மெல்போர்ன், பெர்த், பிரிஸ்பேன், கான்பெர்ரா மற்றும் அடிலெய்டு உட்பட 7 நகரங்களில் இந்திய அரசாங்கத்தால், ஆஸ்திரேலிய பக்க ஆதரவுடன் நடைபெற உள்ளது.
Question 8
8. 2016 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா ஒன் போட்டியில்  வெற்றி பெற்றவர்  யார் ?
A
நிகோ ரோஸ்பெர்க்
B
டேனியல் ரிக்கார்டோ
C
மேக்ஸ் வெர்ஸ்டாப்பேன்
D
லூயிஸ் ஹாமில்டன்
Question 8 Explanation: 
நிகோ ரோஸ்பெர்க், மெர்சிடஸின் ஒரு ஜெர்மன் ஃபார்முலா ஒன் வீரர். இவர் சிங்கப்பூரின் மெரினா பேயில் நடைபெற்ற 2016 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா ஒன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இவரது வாழ்க்கையில் F1 போட்டியில் இதுவரை 22 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் .சிங்கப்பூரில் முதல் பட்டம் இதுவேயாகும்.
Question 9
9. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தின் முதல் பெண் இயக்குனராக  (மார்க்கெட்டிங்) நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
காவ்யா கிருஷ்ணா
B
சுஹாசினி மெஹடின்
C
ஆனந்தி ராமலிங்கம்
D
திரிஷா கிருஷ்ணன்
Question 9 Explanation: 
ஆனந்தி ராமலிங்கம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தின் முதல் பெண் இயக்குனராக (மார்க்கெட்டிங்) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு முன்பு, இவர் பெங்களூரு BEL வளாகத்தில் Military Communication Strategic Business Unit (SBU)-ன் தலைப்பு பொது மேலாளராக இருந்தார்.
Question 10
10. “Rekha: The Untold Story” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ?
A
ராஜு பாரட்டான்
B
யாசர் உஸ்மான்
C
நீனா கோபால்
D
மைதிலி ராவ்
Question 10 Explanation: 
“Rekha: The Untold Story” என்ற புத்தகம், பாலிவுட் நடிகை ரேகாவின் வாழ்க்கை வரலாறு ஆகும். இதனை யாசர் உஸ்மான் எழுதியுள்ளார். இதில் ஆசிரியர், அவரது வாழ்க்கை நிகழ்வுகளையும், புத்தகத்தின் சில பகுதிகளில் கேமராவிற்கு பின்னால் உண்மையான ரேகா யார் என்பதையும் வெளிப்படுத்துகிறார்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Tags :

Tnpsc Tamil Current Affairs September 2016, Tnpsc Tamil Current Affairs 2016, Tnpsc Tamil Current Affairs 2017, Tnpsc Tamil Current Affairs October 2016, Tnpsc Tamil Current Affairs november 2016, Tnpsc Tamil Current Affairs december 2016, Tnpsc group 4 tamil current affairs, Tnpsc Portal current affairs, Tnpsc job current affairs

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!