Tnpsc Tamil Current Affairs 26th and 27th August 2016

Tnpsc Tamil Current Affairs 26th and 27th August 2016

Tamil Current Affairs 26th 27th August 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 26th 27th August 2016 is given below.

Tnpsc Tamil Current Affairs 26th and 27th August 2016
Tnpsc Tamil Current Affairs 26th and 27th August 2016
நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 26,27 -2016
 
1. 2016 ஆண்டிற்கான ஐரோப்பாவின் சிறந்த UEFA- வீரர் விருது யாருக்கு அளிக்கப்பட்டது ?
A.கிறிஸ்டியானோ ரொனால்டோ
B.லியோனல் மெஸ்ஸி 
C.அந்தோனியோ கிரீஷ்மேன்
D.கரேத் பேல்
 
விடை: A. கிறிஸ்டியானோ ரொனால்டோ
 
கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பானிஸ்ய  கிளப்பின் ரியல் மாட்ரிட் மற்றும் போர்ச்சுக்கல்லின் தேசிய அணிக்காக விளையாடும் போர்த்துகீசிய கால்பந்து வீரர். 2016 ஆண்டிற்கான  ஐரோப்பாவின் சிறந்த UEFA- வீரர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்த விருதினை இவர் 2 வது முறையாக பெறுகிறார். முன்னதாக  2014-ல் இந்த விருதினைப் பெற்றார். இவர் 2015-ம் ஆண்டில், ரியல் மாட்ரிட் அணிக்காக 35 கோல்கள் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 16 கோல்களை அடித்தார். இவர் யூரோ 2016 போட்டியில்  போர்ச்சுகல் தேசிய அணிக்காக  3 கோல்கள் அடித்தார்.
 
2.  குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க  “POCSO e-box” என்ற சேவையை பின்வரும் எந்த மத்திய அமைச்சகம் துவங்கியுள்ளது ?  
A.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
B.பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை 
C.உள்நாட்டலுவல்கள் 
D.சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
 
விடை: B.பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை 
 
[ POCSO -Protection of Children from Sexual Offenses ]. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தி,  சமீபத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்க POCSO  எனப்படும்  இணையவழி புகார் பெட்டிகளை புதுடெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார்.  இத்தகைய இணைய புகார் மேலாண்மை அமைப்பு மூலம் சரியான நேரத்தில் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிக்க முடியும் மேலும் 2012 POCSO சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு எளிதில் தண்டனை பெற்றுத்தர இயலும்.   தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முயற்சியால் இது துவங்கப்பட்டுள்ளது.
 
3. 2016 அன்னை தெரேசா சர்வதேச திரைப்பட விழா (MTIFF) பின்வரும் எந்த நகரத்தில் தொடங்கியது  ?
A.கொல்கத்தா
B.சென்னை
C.பெங்களூரு 
D.கொச்சி
 
விடை : A.கொல்கத்தா
 
அன்னை தெரேசா சர்வதேச திரைப்பட விழா (MTIFF) வின்  4வது பாதிப்பு   ஆகஸ்ட் 26,2016-ல் மேற்கு வங்கத்தில் துவங்கியது.  அரசு நடத்தும் நந்தன் மல்டிப்ளெக்ஸ்ஷில் இந்த 4 நாள்  திரைப்பட திருவிழா நடைபெற உள்ளது.  இதில் தெரேசா பற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 23 சிறந்த வெளிநாட்டு மற்றும் இந்திய படங்கள் திரையிடப்பட உள்ளது. இது கொல்கத்தா உயர்மறை அறக்கட்டளை மற்றும் SIGNIS இந்தியா (Indian chapter of World Catholic Association for Communication ) ஆகியோரால்  ஏற்பாடு செய்யப்பட்டது.  45 ஆண்டுகளாக கொல்கத்தா தெருக்களில் வறுமை மற்றும் நோய்வாய்ப்பட்ட ஏழைகளுக்காக  பணியாற்றிய பின்னர், 1997 ஆம் ஆண்டு   அன்னை தெரேசா காலமானார். ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியான அன்னை தெரேசாவை ஒரு துறவி என்று   2016 செப்டம்பரில்  வத்திக்கான் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்  பிரகடனம் செய்ய உள்ளார்.
 
4. 2016 சார்க் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் இந்திய பிரதிநிதிக் குழுவிற்கு தலைமை வகித்தவர் யார் ?
A.சுஷ்மா சுவராஜ்
B.சசிகாந்த தாஸ்
C.அமித் மித்ரா 
D.அருண் ஜேட்லி
 
விடை : B.சசிகாந்த தாஸ்
 
சசிகாந்த தாஸ்,  ஒரு பொருளாதார விவகார மந்திரி.  பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில்  ஆகஸ்ட்25-26-இல்  நடைபெற்ற  2016-ம் ஆண்டிற்கான சார்க் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா சார்பாக   இவர் கலந்து கொண்டார்.   (SAARC- South Asian Association for Regional Cooperation )
 
5.  ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமியபகுதிகளின் (ISIS ) ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர  “Operation Euphrates Shield”  எனும்  ராணுவ நடவடிக்கையினை  சிரியாவில் அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது ?
A.ஜோர்டன் 
B.இஸ்ரேல்
C.துருக்கி 
D.லெபனான்
 
விடை : C.துருக்கி 
 
துருக்கியின் எல்லையில் அமைந்துள்ள ஜெராபிள்ஸ்  என்ற நகரத்தை ஈராக் மற்றும் சிரிய (ISIS) இஸ்லாமிய அரசின்  பிடியில் இருந்து விடுவிக்கும் பொருட்டு துருக்கி அரசு  “Operation Euphrates Shield” என்ற ராணுவ நடவடிக்கையை எடுத்துள்ளது.  2011-ல் ஏற்பட்ட சிரிய நெருக்கடிக்குப்  பிறகு, சிரியாவின் பகுதியில் துருக்கி தலையீடு செய்வது இதுவே முதல் முறையாகும்.
 
6. துராந்த் கோப்பை எந்த விளையாட்டுகளுடன் தொடர்புடையது ?
A.கால்பந்து
B.கிரிக்கெட் 
C.கூடைப்பந்து 
 D.ஹாக்கி
 
விடை : A.கால்பந்து 
 
துராந்த் கால்பந்து கோப்பை போட்டியின்  128வது  பதிப்பு ஆகஸ்ட் 28, 2016ல் இருந்து செப்டம்பர் 11, 2016 வரை நடைபெற உள்ளது.  தற்போதைய பதிப்பில், அனைத்திந்திய கால்பந்துக் கூட்டமைப்பு இந்திய லீக்கில் இருந்து 8 அணிகளும்,  4 சர்விஸ்  அணிகளும் பங்கேற்கின்றன.  வெற்றிபெறும் அணிக்கு  ரூ 45 லட்சமும் , தோற்ற அணிக்கு  ரூ 20 லட்சமும் , அரை இறுதிக்கு நுழையும் ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ .5 லட்சமும்  ரொக்கப் பரிசுகளாக வழங்கப்பட உள்ளது.  துராந்த் கோப்பை இந்தியாவின் ஒரு மதிப்புமிக்க  கால்பந்து போட்டி மற்றும் ஆசியாவின் மிகப்பழமையான போட்டி ஆகும். இங்கிலாந்து கால்பந்து கூட்டமைப்பு கோப்பை மற்றும் ஸ்காட்லாந்து கால்பந்து சங்க கோப்பைக்குப் பிறகு  உலகின்  3வது பழமையான போட்டி இதுவே .
 
7. 2016 உலக இடர் குறியீட்டு ( World Risk Index )வரிசையில் இந்தியாவின் தரம் என்ன ?
A.77வது 
B.83வது 
C.67வது 
D.56வது 
 
விடை : A.77வது 
 
2016  உலக இடர் குறியீட்டு பட்டியலில் மொத்தமுள்ள 171 நாடுகளில் இந்தியாவின் தரம் 77 ஆகும். இந்த அறிக்கையை  ஜெர்மனியின்  ஸ்டட்கர்ட் பல்கலைக்கழகத்தின்  ஒத்துழைப்புடன் சுற்றுச்சூழல் மற்றும் மனித பாதுகாப்பிற்கான  ஐ.நா வின் பல்கலைக்கழகமும்,  Bündnis Entwicklung Hilft  நிறுவனமும்  சமீபத்தில் வெளியிட்டது. 171 நாடுகளில் ஏற்படும்  இயற்கை இடையூறுகள் மற்றும் சமுதாய பாதிப்புகளை  கருத்தில்கொண்டு பேரழிவு ஆபத்தானது மதிப்பீடு செய்யப்பட்டது. 
 
 
8. 2017 பிரவேசி பாரதிய திவாஸ் (Pravasi Bharatiya Divas)-ன்  மையக் கருத்து என்ன ?
A.Engaging Diaspora – The Indian Growth Story 
B.Redefined Engagement With Indian Diaspora
C. Apna Bharat Apna Gaurav: Connecting Across Generations
D.Connecting for a Shared Future: The Indian Diaspora, India and the Pacific 
 
விடை : B.Redefined Engagement With Indian Diaspora
 
2017-ம் ஆண்டிற்கான  பிரவேசி பாரதிய திவாஸ்-யின் 15வது பாதிப்பினை  கர்நாடக மாநிலம்  ஜனவரி 7-ல் இருந்து தொடர்ந்து 3 நாட்களுக்கு நடத்துகிறது. 1915-ஆம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார் மேலும்  வெளிநாடுகளில் இருக்கும் இந்திய சமூகத்தின் பங்களிப்பை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் நாள் PBS நாளாக கொண்டாப்பட்டு வருகிறது 
 
 
9. உலகின் முதல் சுய ஓட்டுநர் டாக்ஸி (self-driving taxi) சேவையை ஆரம்பித்துள்ள  நாடு எது ?
A.ஜப்பான் 
B.சிங்கப்பூர்
C.மலேஷியா 
D.சீனா
 
விடை : B.சிங்கப்பூர் 
 
உலகின் முதல் சுய ஓட்டுநர் டாக்ஸி சேவையை சிங்கப்பூர் சார்ந்த nuTonomy எனப்படும்  தன்னாட்சி வாகன சாஃப்ட்வேர் நிறுவனம் துவங்கியுள்ளது.  6 சிறிய கார்களை  கொண்டு இந்நிறுவனம் தன் சேவையை  தொடங்கியது.  சோதனை ஓட்டத்தின் பொழுது , மாற்றியமைக்கப்பட்ட ரெனால்ட் ஜோ மற்றும் மிட்சுபிஷிவின்  i -MiEV Electrics கார்களின் முன்புறத்தில் ஒரு ஓட்டுனரும் (சக்கரத்தை பின்னிழுக்க), கார்களின் கணினிகளை கண்காணிக்க  பின்பக்கம் ஒரு ஆராய்ச்சியாளரும் இருந்தனர் . ஒவ்வொரு காரிலும்  6 LiDAR இணைகள் பொருத்தப்பட்டுள்ளன.  (LiDAR  – ரேடார் போன்று செயல்படக்கூடிய  லேசர்கள்). தொடர்ந்து சுழல்கிற LiDAR ஒன்று கூரை மீது  பொருத்தப்பட்டுள்ளது. தடைகளை ஸ்கேன்  செய்ய மற்றும் போக்குவரத்து விளக்கின்  மாற்றங்களை  கண்டறிய டேஷ்போர்டில் இரண்டு கேமராக்கள் உள்ளன.
 
 
10. பிராந்திய ஒத்துழைப்புக்கான 19வது  தெற்காசிய (சார்க்) உச்சி மாநாடு 2016 எந்த நாட்டில் 
நடைபெற்றவுள்ளது  ?
A.மாலத்தீவு
B.பாகிஸ்தான் 
C.வங்காளம் 
D. பூடான்
 
விடை :  B.பாகிஸ்தான்
 
19வது  சார்க் மாநாடு  நவம்பர் 9 மற்றும் 10 தேதியில் பாகிஸ்தானில்  உள்ள இசுலாமாபாத்தில் நடைபெற உள்ளது . சார்க் உறுப்பு நாடுகள் மற்றும் 9 பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்கள். உச்சிமாநாட்டை வெற்றிகரமாக  நடத்த, பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு “சார்க் மாநாட்டு குழுவை”  சமீபத்தில்  அமைத்துள்ளது. சார்க் மாநாட்டில்  பங்குதாரர்கள்  நெருக்கமாக இணங்கி பணிபுரிய  உதவும் வகையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக  பாகிஸ்தானின் மூத்த தூதர் அம்ஜத் சியால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானுக்கான அடுத்த சார்க்  வேட்பாளர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!