Tnpsc Tamil Current Affairs 2nd September 2016
Tamil Current Affairs 2nd September 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 2nd September 2016 is given below as quiz format.
Tnpsc Tamil Current Affairs 2nd September 2016
Start
Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 2nd September 2016.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
1. இந்தியா சமீபத்தில் கப்பல் போக்குவரத்து தொடர்பாக எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது?
A | எகிப்து |
B | துனிசியா |
C | மொராக்கோ |
D | ஆப்கானிஸ்தான் |
Question 1 Explanation:
விடை : A.எகிப்து---
கடல்வழியில் ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவி வழங்கும் பொருட்டு, புது தில்லியில் இந்தியாவும் எகிப்தும் கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இரு நாட்டுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், வணிகர்களுக்கு கப்பல் மற்றும் பிற தொடர்புடைய கடல்வழி விஷயங்களில் உதவவும் மற்றும் ஆலோசனை வழங்கவும் இவ்வொப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா எல் சிசி, 3 நாள் இந்திய பயணத்தின் பொழுது இதில் கையெழுத்திட்டார். 2013 ல் அப்போதைய ஜனாதிபதி முகம்மது மோர்சி இந்தியாவிற்கு வருகை தந்தார். அவருக்குப்பின் வருகை தரும் நபர் இவர்.
Question 2 |
2. 2016 ASEAN -இந்தியா உச்சி மாநாடு, எங்கு நடைபெற உள்ளது ?
A | லாவோஸ் |
B | மியான்மர் |
C | சிங்கப்பூர் |
D | இந்தோனேஷியா |
Question 2 Explanation:
விடை : A.லாவோஸ்---
2016 ஆசியான்(ASEAN)-இந்தியா உச்சி மாநாட்டின் 14வது பதிப்பு மற்றும் 2016 கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின் 11வது பதிப்பு செப்டம்பர் 8 ம் தேதி Vientiane, Lao PDR-ல் நடைபெற உள்ளது. இதில் 10 ஆசியான் மற்றும் 18 கிழக்கு ஆசிய நாடுகளின் மாநில/மத்திய அரசாங்கத்தின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்தியாவின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். Lao மாநாட்டின் நோக்கம், ஆசியான்-இந்தியா இடையேயான ஒத்துழைப்பை மறு ஆய்வு செய்வது மற்றும் அரசியல்-பாதுகாப்பு, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு ஆகிய மூன்று தூண்களின் கீழ் எதிர்கால ஒத்துழைப்பை விவாதிப்பதும் ஆகும்.
Question 3 |
3. பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளவர் யார் ?
A | ஜோஸ் அலன்கர் |
B | மிஷேல் டெமெர் |
C | ஜோஸ் எட்வர்டோ கார்டோஸ் |
D | லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா |
Question 3 Explanation:
விடை : B.மிஷேல் டெமெர்
மிஷேல் டெமெர், பிரேசிலின் முன்னாள் துணைத் தலைவரான இவர் தற்போது பிரேசின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். இதற்கு முன் இருந்த ஜனாதிபதியான டில்மா ரூசெப், மத்திய பட்ஜெட்டில் நிதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டிற்காக, இவரை நீக்க செனட்டில் 61-20 என வாக்களிக்கப்பட்டது. டில்மா ரூசெப் குற்ற விசாரணையில் இருந்தபோது, 2016 மே முதலாகவே பிரேசிலின் தற்காலிக ஜனாதிபதியாக மிஷேல் இருந்தார்.
Question 4 |
4. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) INSAT-3DR செயற்கைக்கோளை எந்த வானூர்தியில் அனுப்பவுள்ளது ?
A | PSLV-F05 |
B | GSLV-F06 |
C | PSLV-F06 |
D | GSLV-F05 |
Question 4 Explanation:
விடை : D. GSLV-F05
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ),ஆந்திராவின் , ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து INSAT-3DR செயற்கைக்கோளை GSLV-F05 ராக்கெட் மூலம் அனுப்பவுள்ளது. INSAT-3DR ஒரு நவீன வானிலை செயற்கைக்கோள் மற்றும் இதன் பணிக்காலம் 8 ஆண்டுகள். இது வானிலையை கணிக்கவும் மற்றும் தேடல் மற்றும் மீட்பு தகவல்களை வழங்கவும் உதவும்.
Question 5 |
5. "Munnu: A Boy from Kashmir" என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A | கே. ஸ்ரீலதா |
B | ஸ்வாதி சதுர்வேதி |
C | மகேஷ் சாந்தாராம் |
D | மாலிக் சஜாத் |
Question 5 Explanation:
விடை : D.மாலிக் சஜாத்
"Munnu: A Boy from Kashmir" என்ற புத்தகம் மாலிக் சஜாத் என்பவரால் எழுதப்பட்டு வருகிறது. இந்த புத்தகம், ஒரு இளம் பையன் மோதல்கள் நிரம்பிய ஒரு தேசத்தில் வளர்கிறான் என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்பதற்கான கசப்பான, இதயத்துடிப்பை நிறுத்தும் காரணத்தை கூறுகிறது.
Question 6 |
6. SBI Mutual Fund(பரஸ்பர நிதி) யின் புதிய நிர்வாக இயக்குனர்(MD ) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக(CEO) நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A | சுனிலா கலாப்பட்டி |
B | அனுராதா ராவ் |
C | பி.கே.பரக்கடவு |
D | தினேஷ் குமார் காரா |
Question 6 Explanation:
விடை : B.அனுராதா ராவ் ....
அனுராதா ராவ், எஸ்பிஐ பரஸ்பர நிதியின் புதிய MD மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு முன்பு ராவ், எஸ்பிஐ-யின் புதிய வர்த்தக சேவைக்கான துணை நிர்வாக இயக்குநராக இருந்தார். இவருடன் போட்டியிட்ட SBI நிர்வாக இயக்குநர்(Associate & Subsidiaries) தினேஷ் குமார் காராவை வென்று இப்பதவிக்கு வந்தார்.
Question 7 |
7. பின்வரும் யாருக்கு கெளரவம் மிக்க அகாடமி விருது வழங்கப்பட உள்ளது ?
A | பிரடெரிக் வைஸ்மான் |
B | லியன் ஸ்டால்மாஸ்டர் |
C | ஜாக்கி சான் |
D | மேலே உள்ள அனைத்தும் |
Question 7 Explanation:
விடை : D.மேலே உள்ள அனைத்தும்...
ஜாக்கி சான், ஆக்ஷன் பட நடிகர் , எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தற்காப்பு கலைஞர். திரைப்படத் துறையில் இவரது அசாதாரண சாதனைகளை பாராட்டி, நவம்பர் 12, 2016 அன்று மோஷன் பிக்சர்ஸ் கலை மற்றும் அறிவியல் கழகம் இவருக்கு கவுரவமிக்க அகாடமி விருதை (அல்லது ஆஸ்கார்) வழங்க உள்ளது . இவருடன், கேஸ்டிங் டைரக்டர் லியன் ஸ்டால்மாஸ்டர் மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர் பிரடெரிக் வைஸ்மான் ஆகியோருக்கும் இவ்விருது வழங்கப்படவுள்ளது.
Question 8 |
8. சமீபத்தில் மறைந்த இஸ்லாம் கரிமோவ் , எந்த நாட்டின் ஜனாதிபதி ?
A | தஜிகிஸ்தான் |
B | உஸ்பெகிஸ்தான் |
C | கிர்கிஸ்தான் |
D | துர்க்மெனிஸ்தான் |
Question 8 Explanation:
விடை : B.உஸ்பெகிஸ்தான்..
உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி, இஸ்லாம் கரிமோவ் (78), சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட்டில் காலமானார். 1990 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருக்கும் உஸ்பெகிஸ்தானின் முதல் ஜனாதிபதி இவர் ஆவார்.
Question 9 |
9. Interview Island வனவிலங்கு சரணாலயம் (IIWS) பின்வரும் எந்த இந்திய எந்த மாநிலத்தில்/யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது ?
A | ஆந்திரப் பிரதேசம் |
B | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
C | கர்நாடகா |
D | அசாம் |
Question 9 Explanation:
விடை : B.அந்தமான் நிக்கோபார் தீவுகள்..
Interview Island வனவிலங்கு சரணாலயம் (IIWS), அந்தமான் நிக்கோபார் தீவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 99 சதுர கிமீ ஆகும். வட அந்தமான் தீவு மற்றும் மத்திய அந்தமான் தீவை பிரிக்கும் ஆஸ்டின் ஜலசந்திக்கு மேற்கே இந்த சரணாலயம் அமைந்துள்ளது.
Question 10 |
10. முதலாவது பிரிக்ஸ் திரைப்பட விழா பின்வரும் நகரங்களில் தொடங்கியது ?
A | மும்பை |
B | சென்னை |
C | அகமதாபாத் |
D | புது தில்லி |
Question 10 Explanation:
விடை : D.புது தில்லி....
செப்டம்பர் 2 முதல் 6 வரை புது தில்லியில் உள்ள சிரிபோர்ட் வளாகக்கூடத்தில், முதல் பிரிக்ஸ் திரைப்பட விழா நடைபெறும். 5 நாள் நடைபெறும் இந்த திரைப்பட விழா, உறுப்பு நாடுகளில் உள்ள திரைப்படத்துறை மக்கள் ஒன்றிணைய மற்றும் சினிமா,கலாச்சாரம் போன்றவற்றில் ஒத்துழைப்பை வழங்க ஒரு களமாக இருக்கும். மேலும் நடிகர்கள் , தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும்விதமாக விருதுகளும் வழங்கப்பட உள்ளது. இத்திருவிழா மக்களுக்கிடையே தொடர்பினை ஏற்படுத்த வழி வகுக்கும். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தொடர்பை உறுதி செய்யும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
Get Results
There are 10 questions to complete.
You have completed
questions
question
Your score is
Correct
Wrong
Partial-Credit
You have not finished your quiz. If you leave this page, your progress will be lost.
Correct Answer
You Selected
Not Attempted
Final Score on Quiz
Attempted Questions Correct
Attempted Questions Wrong
Questions Not Attempted
Total Questions on Quiz
Question Details
Results
Date
Score
Hint
Time allowed
minutes
seconds
Time used
Answer Choice(s) Selected
Question Text
All done
Need more practice!
Keep trying!
Not bad!
Good work!
Perfect!
September 3, 2016
0 1,613 Less than a minute