Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs 30th August 2016

Tnpsc Tamil Current Affairs 30th August 2016

Tnpsc Tamil Current Affairs 30th August 2016
Tnpsc Tamil Current Affairs 30th August 2016

Tamil Current Affairs 30th August 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 30th August 2016 is given below.

நடப்பு நிகழ்வுகள்  – ஆகஸ்ட் 30, 2016

 
1. மத்திய அரசிடம் எல்லைப் பாதுகாப்பு பற்றிய அறிக்கையை சமீபத்தில் எந்த குழு சமர்ப்பித்தது ?
A.எச் ஆர் நாகேந்திர குழு
B.என் கே சிங் குழு 
C.மதுகர் குப்தா குழு 
D.சைலேஷ் நகர் குழு
 
விடை : C.மதுகர் குப்தா குழு 
 
எல்லைப் பாதுகாப்பு குறித்து மதுகர் குப்தா குழு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.  இக்குழு எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும்  இந்திய-பாகிஸ்தான் எல்லையில் சண்டையில்  உள்ள இடைவெளிகள்  மற்றும் பலவீன பிரச்சனைக்கு தீர்வு காணுதல் ஆகியவற்றிற்காக  உருவாக்கப்பட்டது. இக்குழு அச்சுறுத்தல் குறித்தும், எல்லைப்பாதுகாப்பை வலுப்படுத்துதல் குறித்தும் விரிவான பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.
 
2. எந்த நிபுணர் குழு ‘Pellet gun’ களுக்கு மாற்று  எது என்ற அறிக்கையை சமர்ப்பித்துள்ளது ?
A.பி மேத்தா குழு 
B.டி வி எஸ் என் பிரசாத் குழு
C.நீரஜ் குமார் குப்தா குழு
D. டி பி ஷேகத்தார் குழு
 
விடை:  B.டி வி எஸ் என் பிரசாத் குழு
 
துப்பாக்கிகளில் உருண்டைகளுக்கு(Pellet Guns) மாற்றாக எதனை பயன்படுத்தலாம் என்ற அறிக்கையை T V S N  பிரசாத்  தலைமையிலான நிபுணர் குழு புது தில்லியில்  உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷியிடம்சமர்ப்பித்தது. சமீபத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த கலவரத்தில் Pellet குண்டுகளை பயன்படுத்தியதில் நிறைய உயிரிழப்பு மற்றும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. இதை கருத்தில் கொண்டு அதற்கு மாற்றாக எதை பயன்படுத்தலாம் என்று ஆராய்வதற்காக  இக்குழு அமைக்கப்பட்டது.
 
3. 2016 பிரிக்ஸ் சுற்றுலா மாநாடு இந்தியாவின்  எந்த மாநிலத்தில்  நடைபெறவுள்ளது ?
A.இமாசலப் பிரதேசம்
B.ஆந்திரப் பிரதேசம் 
C.உத்தரப் பிரதேசம் 
D.மத்தியப் பிரதேசம்
 
விடை :   D. மத்தியப் பிரதேசம்
 
சுற்றுலா மீதான  2016 பிரிக்ஸ் மாநாடு உள்-பிராந்திய சுற்றுலாவை  ஊக்குவிக்க செப்டம்பர் 1 முதல் மத்தியப் பிரதேசம் கஜுராஹோவில் நடைபெற உள்ளது.  2- நாள் நடைபெறும்  இந்நிகழ்வு, பலதரப்பட்ட அரசுகளுக்கிடையேயான  கருத்துக்கள், யோசனைகள் , குழு விவாதங்கள், தொழில்நுட்பம் ஆகிய கூறுகளை கொண்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே உட்-பிராந்திய சுற்றுலாவை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
 
4.”KBL-SMARTz” எனப்படும்  யு.பி.ஐ அடிப்படையிலான மொபைல் பயன்பாட்டை(மொபைல் ஆப்) பின்வரும் எந்த  வங்கி அறிமுகம் செய்துள்ளது ?
A.ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
B.பேங்க் ஆப் பரோடா 
C.கர்நாடகா வங்கி 
D.விஜயா வங்கி
 
விடை: C.கர்நாடகா வங்கி 
 
கர்நாடக வங்கி சமீபத்தில் “KBL-SMARTz” எனும்  மொபைல் பயன்பாட்டை National Payments Corporation of India (NPCI)-ன்  ஒருங்கிணைந்த செலுத்து இடைமுகம் (Unified Payments Interface) அடிப்படையில் அறிமுகம் செய்தது.  டிஜிட்டல் பணபரிமாற்ற முறையில் NPCI-ன்  ஒரு புதுமுயற்சி  இது ஆகும். இதன் மூலம்  யு.பி.ஐ உறுப்பினர் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு தகவல்கள் எதுவும் இன்றி  தங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தே பணம் செலுத்த,அனுப்ப மற்றும் சேகரிக்க முடியும். 
 
5. 2015-ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மன் விருது யாருக்கு வழங்கப்பட்டது ? 
A.கோவிந்த் மிஸ்ரா
B.பத்ம சச்தேவ் 
C.சுகந்த குமாரி
D.ஏ ஏ மணவாளன் 
 
விடை: B.பத்ம சச்தேவ் 
 
நன்கு அறியப்பட்ட ஆசிரியரான, பத்மா சச்தேவ் டோக்ரி மொழியில் தனது சுயசரிதையை  ‘Chitt-Chete’ என்ற பெயரில் எழுதினார். இந்த புத்தகத்திற்காக, 2015-ஆம் ஆண்டின் சரஸ்வதி சம்மன் விருது வழங்கப்பட்டது. புதுதில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் இவரை பாராட்டியுள்ளார். இவ்விருது கடந்த 10 வருடங்களில் வெளியிடப்பட்ட சிறந்த இந்திய மொழி இலக்கியத்திற்காக   இந்திய குடிமகனுக்கு வழங்கப்படுகிறது.  ஒரு சான்று, ஒரு தகடு தவிர ரூ 15 லட்சம் பரிசுத்தொகை இவ்விருதிற்காக வழங்கப்பட்டுள்ளது. 
 
6.ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?
A.ஆகஸ்ட் 28
B.ஆகஸ்ட் 29 
C.ஆகஸ்ட் 27 
D.ஆகஸ்ட் 30
 
விடை : B.ஆகஸ்ட் 29 
 
ஐக்கிய நாடுகள் சபையானது (ஐ.நா.), அணு ஆயுத சோதனையின்  விளைவு பற்றிய பொது விழிப்புணர்வு மற்றும் கல்வி அறிவு புகட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினத்தினை அனுசரிக்கிறது. இந்நாளின் நோக்கமானது, அணு ஆயுத சோதனையை முடிவுக்கு கொண்டு வருவதும்,  அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதுவும் ஆகும்.
 
7.இந்தியாவின் முதல் இராணுவ பாரம்பரிய இணையதளத்தை எந்த அமைப்பு துவங்கியுள்ளது ?
A.Magic Bus India Foundation
B.Glory Foundation 
C.Sports Coaching Foundation
D.Subroto Mukerjee Sports Education Society 
 
விடை :  B.Glory Foundation 
 
இந்தியாவின் முதல் இராணுவ பாரம்பரிய வலைத்தளம்   “coloursofglory.org”   சமீபத்தில் குளோரி அறக்கட்டளை மூலம் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள மக்களுக்கு , இந்திய நாட்டின் இராணுவ வரலாறு மற்றும் பாரம்பரியம் பற்றிய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை  நடத்த திட்டமிட்டுள்ளது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பெரும்பாலும்  கண்காட்சிகள், படங்கள், கருத்தரங்குகள் போன்று நடத்தப்பட இருக்கின்றன. 
 
 
8. வேளாங்கண்ணி திருவிழா இந்தியாவின் எந்த மாநிலத்தில் தொடங்கியது ?
A.கேரளா
B.ஆந்திரப் பிரதேசம் 
C.தமிழ்நாடு 
D.தெலுங்கானா
 
விடை : C.தமிழ்நாடு 
 
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி வருடாந்திர விழா தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினத்தில் ஆகஸ்ட் 29-ஆம் நாள் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த நீண்ட திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள்  பங்கேற்பார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. வேளாங்கண்ணி ஆண்டு முழுவதும்  மில்லியன் மக்களை கவர்கிறது. சுமார்  550 ஆண்டுகளுக்கு முன்பு, அன்னை வேளாங்கண்ணி கையில் குழந்தை இயேசுவுடன்  , நாகப்பட்டினத்திற்கு பால் எடுத்து செல்லும்  ஒரு ஏழை,அப்பாவி சிறுவனுக்கு காட்சியளித்தார். அதிலிருந்து, சாதி, சமயம், நிறம், தேசியம் கடந்து பல்வேறு மக்கள் இங்கு பிரார்த்தனை செய்ய வருகை தருகின்றனர்.    
 
9. இந்திய ரிசர்வ் வங்கி (RBI)யின்  2015-16 ஆண்டறிக்கையின்படி, 2017 நிதியாண்டில்  (FY 17) -ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP ) எவ்வளவு சதவீதம் என்று கணிக்கப்படுகிறது ?
A. 7.8 % 
B. 7.9
C. 8.0 %
D. 7.6 % 
 
விடை :  D. 7.6 % 
 
இந்திய ரிசர்வ் வங்கி (RBI)யின்  வருடாந்திர அறிக்கை 2015-16 படி, நிதியாண்டு 17-ல் (FY  17) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.6% ஆகும். இருப்பினும், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவானது,   கூட்டுறவு நிதி கூட்டாச்சிமுறை மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களில்  ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் என்று அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
 
10. எந்த நாடு 2016-ஆம் ஆண்டிற்கான  சார்க் புள்ளியியல் அமைப்புகளின் தலைவர்கள்  (Heads of  SAARC Statistical Organizations) கூட்டத்தினை நடத்துகிறது ?
A.பூடான் 
B.நேபாளம் 
C.இந்தியா 
D.பாகிஸ்தான்
 
விடை : C.இந்தியா 
 
2016 சார்க் புள்ளியியல் அமைப்புக்களின்  (SAARCSTAT)  தலைவர்கள்  கூட்டத்தின்  8ஆம் பதிப்பு ஆகஸ்ட் 29 அன்று புது தில்லியில் தொடங்கியது.  இந்த கூட்டத்தின் மையக்கருத்து  “Trade Statistics – Merchandise & Services” என்பதே ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!