Tnpsc
Tnpsc Tamil Current Affairs 6th and 7th September 2016
September 8, 2016
0 1,491 Less than a minute
Tnpsc Tamil Current Affairs 6th and 7th September 2016
Tamil Current Affairs 6th and 7th September 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you. TNPSC Tamil Current Affairs 6th and 7th September 2016 is given below as quiz format.
Tnpsc Tamil Current Affairs 6th and 7th September 2016
Start
Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 6th and 7th September 2016.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
1. 2016 ஆசியான்(ASEAN) உச்சி மாநாடு பின்வரும் எந்த நாடுகளில் தொடங்கியது ?
A | ஆஸ்திரேலியா |
B | தென் கொரியா |
C | ஜப்பான் |
D | லாவோஸ் |
Question 1 Explanation:
2016 ஆசியான் உச்சி மாநாட்டின் 28வது பதிப்பு லாவோசில் உள்ள Vientiane-ல் தொடங்கியது. இந்த உச்சி மாநாட்டில், ஆசியான் தலைவர்கள் "ASEAN Community Blueprints 2025" திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள முன்னேற்றத்தை பரிசீலிக்க உள்ளனர்.
Question 2 |
2. "Nuakhai" எனப்படும் விவசாய வெகுஜன திருவிழா இந்தியாவின் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
A | ஒடிசா |
B | ராஜஸ்தான் |
C | சிக்கிம் |
D | அசாம் |
Question 2 Explanation:
Kosali மக்களின் விவசாய வெகுஜன திருவிழா Nuakhai ஆகும். பருவத்தின் புதிய அரிசியை வரவேற்கும் விதமாக மேற்கு ஒடிசாவில் செப்டம்பர் 6, 2016 அன்று கொண்டாடப்பட்டது. இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பஞ்சமி திதி அன்று அதாவது விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் அனுசரிக்கப்படுகிறது. இது உணவு தானியங்களை வழிபாடு செய்யும் ஒரு பண்டிகை.
Question 3 |
3.சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN ) 2016-ம் ஆண்டிற்கான பாரம்பரிய ஹீரோஸ் (Heritage Heroes) விருது பெற்றவர் யார் ?
A | சத்யநாராயண் |
B | பிபூதி லஹ்கர் |
C | ராஜேஷ் ஜெயின் |
D | ஆனந்த் சர்மா |
Question 3 Explanation:
டாக்டர் பிபூதி லஹ்கர், இந்தியாவைச் சேர்ந்த ஒரு சுற்று சூழல் மற்றும் பாதுகாப்பு ஆர்வலர். ஹவாயில் உள்ள Honolulu-ல் நடைபெற்ற உலக பாதுகாப்பு காங்கிரஸ் மாநாட்டில் இவருக்கு இவ்விருது வழக்கப்பட்டது.சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் பாரம்பரிய ஹீரோஸ் விருது பெறும் முதல் ஆசிய நபர் மற்றும் அசாமின் முதல் தனிப்பட்ட நபர் என்ற பெருமையும் இவரை சேரும். சவாலான சூழ்நிலைகளில் உலக பாரம்பரிய இடங்களை பாதுகாக்கும் வித்தியாசமான முயற்சிகளை செய்வோரை ஊக்குவிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டுவருகிறது. டாக்டர் லஹ்கர், கடந்த இரண்டு சகாப்தங்களாக புல்வெளிகள், தாவரங்கள் மற்றும் மனாஸ் தேசியப் பூங்கா பகுதியில் உள்ள விலங்கினங்களை பாதுகாக்கும் பணியை செய்து வருகிறார் மற்றும் தற்போது Aaranyak எனும் அமைப்பின் மனாஸ் நிர்வாகியாகவும் பணியாற்றிவருகிறார் . Aaranyak என்பது வட கிழக்கு இந்தியாவில் பல்லுயிர் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசு சாரா நிறுவனம்(NGO) ஆகும்.
Question 4 |
4. தேர்வுப் படிவங்களில் ஆதார் எண்ணை இணைக்கவுள்ள முதல் இந்திய மாநிலம் எது ?
A | கேரளா |
B | பீகார் |
C | ஒடிசா |
D | கர்நாடகா |
Question 4 Explanation:
தேர்வுகளில் முதலிடம் பெறுவதில் ஏற்படும் ஊழல்களை களையும் முயற்சியாக, பீகார் பள்ளி தேர்வு வாரியம் (BSEB) தேர்வு படிவங்களில் ஆதார் எண்ணை இணைக்கவுள்ளது இதனால் போலிகள் குறையும். இந்தியாவிலேயே இதுபோன்ற முயற்சியை எந்த மாநில குழுவும் செயல்படுத்தவில்லை. இம்முயற்சிப்படி, மாணவர்கள் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் பொழுது தங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். அவ்வாறு ஆதார் எண்ணை சமர்ப்பிக்க தவறினால் அதற்கான வலுவான காரணத்தை பள்ளி தலைமை ஆசிரியர் முன் வைக்க வேண்டும். இது தேர்வு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை காட்டுவதோடு மட்டும் அல்லாமல் ஆவணங்களை எளிதாக அணுகவும் உதவும்.
Question 5 |
5. 2016 இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா ஒன் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றவர் யார் ?
A | செபாஸ்டியன் வெட்டெல் |
B | கிமி ரெய்க்கனென் |
C | நிகோ ரோஸ்பெர்க் |
D | லூயிஸ் ஹாமில்டன் |
Question 5 Explanation:
நிகோ ரோஸ்பெர்க், மெர்சிடிஸ் பார்முலா ஒன் அணியின் ஒரு ஜெர்மன் ஃபார்முலா ஒன் டிரைவர். 2016 இத்தாலியில் உள்ள மோன்சாவில் நடைபெற்ற இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா ஒன் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார்.
Question 6 |
6. 2016 பிரிக்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்ற படம் எது ?
A | Thithi |
B | Piku |
C | Between Valleys |
D | Kalushi |
Question 6 Explanation:
2016 பிரிக்ஸ் திரைப்பட விழாவின் முதல் பதிப்பில் சிறந்த திரைப்பட விருது Thithi திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. இது கன்னட மொழியில் வெளிவந்த தத்ரூபமான ஒரு நகைச்சுவை படம், இதனை எழுதி இயக்கியவர் ராம் ரெட்டி ஆவார். உள்ளூரில் புகழ்பெற்ற, மிகவும் சண்டையிடும் குணமுள்ள 101 வயதான செஞ்சுரி கவுடா என்பவரின் மரணத்தில் அவருடைய குலத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை மகன்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்பதை நகைச்சுவை பாணியில் கூறியுள்ளார்.
Question 7 |
7. “Bubble Pin” என்ற ஒரு படி பணம் செலுத்தும்(One step offline payment ) முறையை அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் கட்டண நிறுவனம் எது ?
A | mRupee |
B | Oxigen |
C | MobiKwik |
D | Paytm |
Question 7 Explanation:
MobiKwik சமீபத்தில் "Bubble Pin " என்ற ஒரு படி செலுத்த முறையை அறிமுகம் செய்துள்ளது, இன்டர்நெட் வசதி இல்லாத போதும் இதனை உபயோகிக்கலாம். கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிய பின், பயனாளர்கள் தங்கள் ஆப்பில் 'Play at Store' பட்டனை அழுத்தினால், 60 நொடி மட்டுமே காலாவதி உள்ள தனித்துவம் வாய்ந்த PIN ஒன்று பயனாளருக்கு அனுப்பப்படும். இதனை, கடையில் உள்ள விற்பனையாளரிடம் கூறினால் பண பரிமாற்றம் நிகழ்ந்து விடும். PIN ஆனது எண்கள் மற்றும் எழுத்துக்களின் கலவையாக இருக்கும். இதற்கு மொபைல் எண்கள் ஏதும் தேவை இல்லை இதனால் பண பரிமாற்றம் பாதுகாப்பானதாக இருக்கும். விரைவில் இந்தியா முழுவதும் சுமார் 25,000 ஆஃப்லைன் கடைகளில் பயனாளர்கள் MobiKwik-ன் 'Bubble Pin' வசதியை பயன்படுத்துவார்கள்.
Question 8 |
8. வெற்றிகரமாக தொழில் துவங்க, புதுவித யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்க, மத்திய அரசு "NIDHI" என்ற புதிய முயற்சியை துவங்கியுள்ளது. "NIDHI" என்பது எதனை குறிக்கிறது ?
A | National Imitation for Developing and Harnessing Innovations |
B | National Immigration for Developing and Harnessing Innovations |
C | National Initiative for Developing and Harnessing Innovations |
D | National Implementation for Developing and Harnessing Innovations |
Question 8 Explanation:
மத்திய அரசு சமீபத்தில், குடை திட்டத்தின் கீழ்,வெற்றிகரமாக தொழில் துவங்க, புதுவித யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்க "National Initiative for Developing and Harnessing Innovations" என்ற முயற்சியை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் சமூகத்தின் தேவைகளுக்கு தீர்வுகளை வழங்குவது மட்டுமின்றி செல்வம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான புதிய வழிவகைகளை உருவாக்க குறிவைக்கிறது. இத்திட்டம் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு நிதி , உள்கட்டமைப்பு , ஏனைய வழிகாட்டுதல்கள் போன்ற தேவைகளை பூர்த்தி செய்வதிலும் கவனம் செலுத்தவுள்ளது.
Question 9 |
9. இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையத்தின் (UIDAI,) பகுதி நேர தலைவராக சமீபத்தில் நியமிக்கபட்டவர் யார் ?
A | நிஷாந்த் பாட்டீல் |
B | ஜே சத்யநாராயணா |
C | அஜய் பூஷன் பாண்டே |
D | ஆனந்த் தேஷ்பாண்டே |
Question 9 Explanation:
ஜே சத்யநாராயணா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, இந்திய தனிப்பட்ட அடையாளஅட்டை ஆணையத்தின் (UIDAI) பகுதி நேர தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி இப்பதவியை ராஜினாமா செய்தபின் 2014 ல் இருந்து இப்பதவி காலியாகவே இருந்தது. இவரை தவிர, தொழில்நுட்ப வல்லுநர் ராஜேஷ் ஜெயின் மற்றும் ஆனந்த் தேஷ்பாண்டே ஆகியோர் UIDAI-யின் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Question 10 |
10. எந்த நாடு உலக சுகாதார அமைப்பால் (WHO), தொற்று நோய், தாய்வழி மற்றும் பிறந்த குழந்தைகளில் டெட்டனஸ் (MNT) இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது?
A | இலங்கை |
B | பூடான் |
C | இந்தியா |
D | மியான்மர் |
Question 10 Explanation:
உலக சுகாதார அமைப்பு (WHO), தொற்று நோய், தாய்வழி மற்றும் பிறந்த குழந்தைகளில் டெட்டனஸ் (MNT) இல்லாத நாடாக இந்தியாவை அறிவித்துள்ளது. சமீபத்தில் இலங்கையின் கொழும்புவில் நடந்த 69வது பிராந்திய குழு மாநாட்டில் இந்தியா "MNTE மற்றும் தொற்று நோய் இல்லாத இந்தியயாவுக்கான " WHO-ன் சான்றிதழை பெற்றது. 2012 WHO Neglected Tropical Diseases (NTD) roadmap-ன் கீழ், அதிக மக்கள் தொகையுள்ள பகுதியில் பரவும் நோய் என்று அறியப்பட்ட இவ்வகை தொற்று நோயை ஒழித்த முதல் நாடு இந்தியா ஆகும். தொற்று நோய், தாய்வழி மற்றும் பிறந்த குழந்தைகளில் டெட்டனஸ் (MNT) போன்றவற்றை இந்தியா ஒழித்ததை WHO அரும்பெரும் செயலாக குறிப்பிடுகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
Get Results
There are 10 questions to complete.
You have completed
questions
question
Your score is
Correct
Wrong
Partial-Credit
You have not finished your quiz. If you leave this page, your progress will be lost.
Correct Answer
You Selected
Not Attempted
Final Score on Quiz
Attempted Questions Correct
Attempted Questions Wrong
Questions Not Attempted
Total Questions on Quiz
Question Details
Results
Date
Score
Hint
Time allowed
minutes
seconds
Time used
Answer Choice(s) Selected
Question Text
All done
Need more practice!
Keep trying!
Not bad!
Good work!
Perfect!
September 8, 2016
0 1,491 Less than a minute