Tnpsc Tamil Current Affairs Quiz Questions 10th October 2016

Tnpsc Tamil Current Affairs 10th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 10th October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. 2016 உலக மனநல ஆரோக்கிய தினத்தின் மையக்கரு (Theme) என்ன ?
A
Psychological First Aid
B
Dignity in mental health
C
Depression: A Global Crisis
D
Health: Mental Will Power
Question 1 Explanation: 
உலகம் முழுவதும் மனநல சுகாதார பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் மன நல ஆரோக்கியத்திற்கு ஆதரவு தருவோரின் முயற்சிகளை ஒன்றிணைக்க ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ம் தேதி உலக மனநல ஆரோக்கிய தினம் அனுசரிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டிற்கான மையக்கரு "Psychological First Aid" என்பதாகும். மனநல ஆரோக்கியத்திற்காக பணிபுரியும் பங்குதாரர்கள் தங்கள் பணிகளையும், மக்களுக்கு மனநல சுகாதாரம் வழங்க இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பகிர்ந்துகொள்ள இந்த நாள் ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறது.
Question 2
2. எந்த மாநில அரசு, தனது மாநிலத்தை இரத்தசோகை இல்லாத மாநிலமாக மாற்ற "லலிமா அபியான்(Lalima Abhiyan)" என்ற திட்டத்தை துவங்கவுள்ளது ?
A
ஒடிசா
B
அசாம்
C
மத்தியப் பிரதேசம்
D
கேரளா
Question 2 Explanation: 
மத்தியபிரதேச மாநிலத்தை இரத்தசோகை இல்லாத மாநிலமாக மாற்ற அம்மாநில அரசு "லலிமா அபியான்(Lalima Abhiyan)" என்ற திட்டத்தை துவங்கவுள்ளது. இத்திட்டம் நவம்பர் 1, 2016 முதல் நடைமுறைபடுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இலவச இரும்பு ஃபோலிக் அமில மாத்திரைகள் அங்கன்வாடிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.
Question 3
3. 2016 சர்வதேச கீதை திருவிழா இந்தியாவின் எந்த மாநிலத்தில் நடக்கவுள்ளது ?
A
மத்தியப் பிரதேசம்
B
ஹரியானா
C
உத்தரப் பிரதேசம்
D
ராஜஸ்தான்
Question 3 Explanation: 
சர்வதேச அரங்கில் புனித கீதை புத்தகத்தின் நித்திய செய்தியை எடுத்து கூற, ஹரியானாவின் குருஷேத்ராவில் டிசம்பர் 6ம் தேதி 2016 சர்வதேச கீதை திருவிழா நடைபெறவுள்ளது. 5 நாள் நடைபெறும் இந்த விழாவை இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துவங்கி வைக்கவுள்ளார். இவ்விழா கொண்டாட்டத்தில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், இலக்கிய நிகழ்வுகளும் டிசம்பர் 10 வரை நடத்தப்படவுள்ளது. ஹரியானா முழுவதிலும் இருந்து சுமார் 18,000 மாணவர்கள் குருஷேத்ராவின் புனித பிரம்மா சரோவரில் கீதையின் ஸ்லோகங்களை ஓதிக் காண்பிக்க உள்ளனர்.
Question 4
4. இந்தியாவிற்கான சீனாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டவர் யார் ?
A
சன் வெய்டோங்
B
லுயோ ஜாஹுய்
C
மா குயாங்
D
லு யுசெங்
Question 4 Explanation: 
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்தியாவிற்கான சீனாவின் புதிய தூதுவராக லுயோ ஜாஹுய் என்பவரை நியமித்துள்ளார். இந்த பதவிக்கு முன்பு, லுயோ கனடாவிற்கான சீனாவின் தூதுவராக 2014- 2016 வரை பணியாற்றினார். இதற்கு முன் இந்தியாவிற்கான சீன தூதுவராக இருந்த லூ யுசெங் ஏப்ரல் 2016ல் புது தில்லியில் இருந்து கிளம்பியதை அடுத்து இப்பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டார்.
Question 5
5. “Half Lion: How P V Narasimha Rao Transformed India" என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது ?
A
ஆர் பி கவுர்
B
சாஜித் கான்
C
வினய் சீதாபதி
D
அசோக் சாவ்லா
Question 5 Explanation: 
“Half Lion: How P V Narasimha Rao Transformed India" என்ற புத்தகம் வினய் சீதாபதி என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இது, பொதுக்களத்தில் அதிகம் இல்லாத நரசிம்ம ராவ்வின் வாழ்க்கை பயண தடயங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட புத்தகம் ஆகும். மேலும் இப்புத்தகம், இந்தியாவின் அரசியல் பரிணாம வளர்ச்சிக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் இடையேயான இடைவெளியை நிரப்புகிறது.
Question 6
6. 2016 சீன ஓபன் பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் வென்றவர் யார் ?
A
அக்னிஸ்கா ராத்வான்ஸ்கா
B
பெட்ரா விடோவா
C
சிமோனா ஹலீப்
D
வீனஸ் வில்லியம்ஸ்
Question 6 Explanation: 
ஜெர்மனி டென்னிஸ் வீராங்கனை அக்னிஸ்கா ராத்வான்ஸ்கா, சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற 2016 சீன ஓபன் பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோஹன்னா கோண்டாவை 6–4, 6–2 என்ற புள்ளிகளில் தோற்கடித்து பட்டம் வென்றார்.
Question 7
7. 2016-ம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு பின்வரும் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
A
ஐகன் ஃபாமா மற்றும் ராபர்ட் ஷில்லர்
B
அங்குஸ் தியோடன் மற்றும் ஜீன் திரோலே
C
ரோத் மற்றும் லாய்ட் ஷேப்லி இவின்
D
ஆலிவர் ஹார்ட் மற்றும் பெங்ட் ஹோம்ஸ்டோர்ம்
Question 7 Explanation: 
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலிவர் ஹார்ட் மற்றும் பின்லாந்தை சேர்ந்த பெங்ட் ஹோம்ஸ்டோர்ம் ஆகிய இருவருக்கும் ஒப்பந்த(Contract Theory) கோட்பாட்டில் தங்கள் பங்களிப்பை ஆற்றியதற்காக 2016 ஆம் ஆண்டிற்கான பொருளியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்கை ஒப்பந்தங்கள் மற்றும் நிறுவனங்களை புரிந்து கொள்ள இவர்களின் கோட்பாடு மதிப்பு மிக்கதாக இருக்கிறது. அத்துடன் ஒப்பந்த வடிவமைப்பில் உள்ள சாத்தியமான ஆபத்துக்களை புரிந்து கொள்ளவும் உதவுகிறது. இவர்கள் 8m குரோனர் ($ 924,000) பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்வர். ;இது ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி மூலம் அறிவிக்கப்பட்டது.
Question 8
8. ஹரிகா துரோணவள்ளி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
பூப்பந்து
B
டேபிள் டென்னிஸ்
C
சதுரங்கம்
D
குத்துச்சண்டை
Question 8 Explanation: 
இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டரான ஹரிகா துரோணவள்ளி, சமீபத்தில் உலக நம்பர்.1 செஸ் வீரரான ஹௌ இபானை, 2016 ஐல் ஆஃப் மன் (Isle of Man - IOM) சர்வதேச செஸ் தொடரில் தோற்கடித்து 4 வது இடத்தில் கூட்டாக உள்ளார்.
Question 9
9. எந்த விளையாட்டு வீரர், 2016 எக்லாவ்ய( Ekalabya ) விருதை வென்றுள்ளார் ?
A
ரஹானே
B
பி.வி.சிந்து
C
மேரி கோம்
D
ஸ்ரபானி நந்தா
Question 9 Explanation: 
இந்திய ஸ்பிரிண்ட் வீரர் ஸ்ரபானி நந்தா தனது விளையாட்டில் சிறந்து விளங்கியதன் அங்கீகாரமாக 2016ம் ஆண்டின் 24வது எக்லாவ்ய( Ekalabya ) விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது சமீபத்திய சாதனைகள் மத்தியில், 2016 பிப்ரவரி மாதம் கவுகாத்தியில் நடைபெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீ போட்டியில் தங்கமும், 4 x 100மீ தொடர் ஓட்டம் மற்றும் 100 மீட்டரில் வெள்ளியும் வென்றார். இந்த விருது ஒடிஷாவை சேர்ந்த Indian Metals Public Charitable Trust (IMPaCT) எனும் அறக்கட்டளை மூலம் துவங்கப்பட்டது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது, ஒரிசா மாநிலத்தில் தலைசிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும். இதனுடன் ரொக்கமாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும்.
Question 10
10. 2016 சீன ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் வென்றவர் யார் ?
A
ஆண்டி முர்ரே
B
ஜோகோவிக்
C
ரபேல் நடால்
D
கிரிகோர் டிமிட்ரோவ்
Question 10 Explanation: 
ஸ்காட்டிஷ் தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே, தனது முதல் சீன ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியை வென்றுள்ளார் மற்றும் இது அவரது வாழ்கையில் 40வது பட்டம் ஆகும். சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற இறுதி போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ்வை 6-4, 7-6 என்ற கணக்கில் தோற்கடித்து இவர் வென்றுள்ளார்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.
Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!