Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 15th and 16th October 2016

Tnpsc Tamil Current Affairs 15th and 16th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 15th and 16th October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. எந்த குழு மத்திய அரசிடம் சரஸ்வதி நதி இருந்ததற்கான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது ?
A
எம் எல் மலாயா குழு
B
பாக்யா ஸ்ரீ குழு
C
N N வோரா குழு
D
கே எஸ் வல்டியா குழு
Question 1 Explanation: 
பேராசிரியர் கே.எஸ் வல்டியா தலைமையிலான நிபுணர் குழு சரஸ்வதி நதி இருந்ததற்கான தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. ஆய்வின்படி, சரஸ்வதி நதி புராணத்தில் மட்டும் கூறப்பட்டது அல்ல என்றும், அது இருந்தது உண்மை என்றும் கூறப்படுகிறது. இந்த அறிக்கை, சரஸ்வதி நதி இமயமலையின் அதிபத்ரியில் உருவாகி ராண் ஆஃப் கட்ச் மூலம் அரபிக் கடலில் கலக்கிறது என்ற யூகத்தை உறுதிபடுத்துகிறது.
Question 2
2. முதலாவது பிரிக்ஸ் U-17 கால்பந்து போட்டியில் எந்த நாடு வெற்றி பெற்றது?
A
இந்தியா
B
தென் ஆப்ரிக்கா
C
பிரேசில்
D
சீனா
Question 2 Explanation: 
கோவாவின் மார்கோவில் நடைபெற்ற முதலாவது பிரிக்ஸ் U-17 கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி, தென் ஆப்பிரிக்கா அணியை 5-1 என்ற கணக்கில் தோற்கடித்து பட்டத்தை தட்டிச் சென்றது.
Question 3
3. நீரஜ் கோயத் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
மல்யுத்தம்
B
குத்துச்சண்டை
C
சதுரங்கம்
D
கிரிக்கெட்
Question 3 Explanation: 
சமீபத்தில், இந்திய குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயத் புது தில்லியில், ஆஸ்திரேலியாவின் பென் கைட்டை தோற்கடித்து 2016 WBC Asia welterweight பட்டதை வென்றார். இது அவரது 2வது ப்ரோ(Pro Title) பட்டம் ஆகும். இதற்கு முன்னதாக இவர், 2015-ல் ஃபிலிபினோ நெல்சன் கல்ப்பை தோற்கடித்து பெல்ட் வென்றார். இந்த வெற்றியின்மூலம், Pro பட்டதை தக்கவைக்கும்(defend) முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் பெறுகிறார். இப்போட்டியை இந்திய தொழில்முறை குத்துச்சண்டை அமைப்பு(Professional Boxing Organisation of India) ஏற்பாடு செய்திருந்தது.
Question 4
4. 2016 ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) சர்வதேச கிராமப்புற பெண்கள் தினத்தின் மையக்கரு என்ன ?
A
Climate is changing: Food and agriculture must too
B
Realizing women’s rights to land and other productive resources
C
Prevention of all forms of violence against women and girls
D
Promote women leadership in agriculture
Question 4 Explanation: 
உலகம் முழுவதும் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியை அதிகரித்ததில், கிராமப்புற பெண்களின் முக்கியத்துவத்தினை அங்கீகரிக்க ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி ஐ.நா.வின் சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டிற்கான மையக்கரு "Climate is changing: Food and agriculture must too", இது வெப்பநிலை உயர்வினால் ஏற்படும் உணவு பாதுகாப்பின்மையின் முன் வரிசையில் உள்ள விவசாயிகள், மீன் பிடிப்பவர்கள் மற்றும் ஆடு மேய்ப்பவர்கள் மீது கவனம் செலுத்துகிறது. காலநிலை அமைப்பை குறைந்த அளவே கணிக்கமுடிகிறது மற்றும் காலநிலை தொடர்பான பேரழிவுகள் அடிக்கடி ஏற்படுகிறது.
Question 5
5. உலக மாணவர் தினம் (World Student Day - WAS) எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது ?
A
அக்டோபர் 16
B
அக்டோபர் 17
C
அக்டோபர் 15
D
அக்டோபர் 14
Question 5 Explanation: 
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் உயரிய விஞ்ஞானியான, டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் முக்கியத்துவத்தை குறிக்க அக்டோபர் 15 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக மாணவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இது உலகம் முழுவதுமுள்ள மாணவர்களின் மத்தியில் உள்ள பன்முகக் பன்முகத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் கொண்டாட்டம் ஆகும்.
Question 6
6. "சௌரியா ஸ்மாரக்(Shaurya Smarak)" எனும் போர் நினைவுச்சின்னம் இந்தியாவின் எந்த நகரத்தில்  அமைக்கப்பட்டுள்ளது ?
A
ஜெய்ப்பூர்
B
போபால்
C
கான்பூர்
D
மொஹாலி
Question 6 Explanation: 
சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி இந்திய வீரர்களுக்கு அர்ப்பணிக்கும் விதமாக "சௌரியா ஸ்மாரக்" எனும் போர் நினைவுச்சின்னதை மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் தொடங்கி வைத்தார். சௌரியா ஸ்மாரக் சுமார் 8,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது மற்றும் அவர்களின் வீரக்கதைகள் இந்த நினைவுச்சின்னத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது அவர்களின் வாழ்க்கை, போர், மரணம் மற்றும் ஆவி விடுதலை (மரணத்தின் மீதான வெற்றி) போன்ற பல்வேறு அனுபவங்களின் மூலம் ஒரு பயணமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது, அனைத்தும் நவீன வடிவமைப்பு அல்லாதவற்றின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Question 7
7. "ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோட்சவ்-2016" பின்வரும் எந்த நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது ?
A
புது தில்லி
B
புனே
C
உதய்பூர்
D
லக்னோ
Question 7 Explanation: 
இரண்டாவது ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோட்சவ் (RSM)-2016, புது தில்லியின் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின்(IGNCA) வளாகத்தில் அக்டோபர் 15 - 23 வரை நடைபெறும். இது, இந்தியாவின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தையும் அதன் அனைத்து பல்சுவையூட்டும் பரிமாணங்களான அதாவது கைவினைப்பொருட்கள், உணவு, ஓவியம், சிற்பம், புகைப்படம் எடுத்தல், ஆவணங்கள் மற்றும் அரங்கேற்றக் கலைகள்-நாட்டுப்புற, பழங்குடி, பாரம்பரிய மற்றும் சமகால கலைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் வெளிப்படுத்தும்.
Question 8
8.  2016 இந்தியா சர்வதேச பின்னல் கண்காட்சி(India International Knit Fair) பின்வரும் எந்த மாநிலங்களில் நடைபெற உள்ளது ?
A
கேரளா
B
குஜராத்
C
அசாம்
D
தமிழ்நாடு
Question 8 Explanation: 
43வது இந்திய சர்வதேச பின்னல் கண்காட்சி, 2016 அக்டோபர் 19-21 தேதிகளில் தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள இந்திய பின்னல் கண்காட்சி காம்ப்ளக்சில் நடைபெற்றவுள்ளது. இந்த 3 நாள் கண்காட்சியில், 2017 ஆம் ஆண்டின் இலையுதிர் / குளிர்காலம் மற்றும் இடை கோடைகாலத்திற்கு ஏற்ற பேஷன் ஆடைகளை காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. இக்கண்காட்சியில் ஆடைகளை வாங்க தென் அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, துபாய், பிரேசில், ஸ்பெயின், இத்தாலி, ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், காங் காங், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஸ்லோவாகியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து மக்கள் வரவுள்ளனர்.
Question 9
9. எந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி, சர்வதேச உணவு பாதுகாப்பு சங்கத்தின் (International Association Of Food Protection - IAFP) இளம் விஞ்ஞானி உதவித்தொகை விருதை வென்றுள்ளார் ?
A
ஷாலினி ஜெய்ஸ்வால்
B
கிர்த்திராஜ் குண்ட்லிக் கெய்க்வாட்
C
வீர் சந்த் ரத்தோர்
D
சுனில் சிங்வி
Question 9 Explanation: 
ஆக்சிஜன்மிக்க முக்கிய உணவு பொருட்களை சிறந்த முறையில் பேக் செய்யும் துறையில் புதிய ஆக்ஸிஜன் உறிஞ்சும் தொகுப்பை மேம்படுத்தும் பணியில் ஆராய்ச்சி செய்ததற்காக இந்திய வம்சாவளி விஞ்ஞானி கிர்த்திராஜ் குண்ட்லிக் கெய்க்வாட்டிற்கு சர்வதேச உணவு பாதுகாப்பு சங்கத்தின் (International Association Of Food Protection - IAFP) இளம் விஞ்ஞானி உதவித்தொகை விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது $ 2000 மற்றும் பதக்கத்தட்டை கொண்டுள்ளது. IAFP-யின் நோக்கமானது, உலகெங்கும் உள்ள சிறந்த இளம் உணவு பாதுகாப்பு விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதாகும்.
Question 10
10. “Half of What I Say”  என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ?
A
அனில் மேனன்
B
சுனிதா பாலகிருஷ்ணன்
C
அனாமிகா குமாரி
D
கிரண் தோஷி
Question 10 Explanation: 
“Half of What I Say” என்ற புத்தகம் அனில் மேனன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இது, தனிப்பட்ட அரசியல் மற்றும் சமூக எழுச்சியின் மத்தியில் சத்தியம் மற்றும் புனைக்கதை பற்றி கூறும் ஒரு கதை ஆகும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!