Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 18th October 2016

Tnpsc Tamil Current Affairs 18th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 18th October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. குழந்தை ஊட்டச்சத்தின்மைக்கு எதிராக போராட வங்கதேசத்திற்கு உலக வங்கி எவ்வளவு நிதி வழங்கியுள்ளது?
A
$ 5 பில்லியன்
B
$ 1 பில்லியன்
C
$ 4 பில்லியன்
D
$ 2 பில்லியன்
Question 1 Explanation: 
வங்கதேசத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு குழந்தை ஊட்டச்சத்தின்மைக்கு எதிராக போராட உலக வங்கி $1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கவுள்ளது. இந்த நிதி, போதுமான குழந்தை ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் உலக வங்கி, 43 துணை மாவட்டங்களில் ஆறு லட்சம் ஏழை குடும்பங்கள் இலக்கு என்ற நிபந்தனையின் பேரிலும் பணப்பரிமாற்றம் செய்யவுள்ளது.
Question 2
2. எந்த இந்திய வீரர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் (International Olympic Committee’s (IOC) Athletes’ Commission)  உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் ?
A
தேவேந்திர ஜஜாரியா
B
சாய்னா நேவால்
C
அபினவ் பிந்த்ரா
D
சாக்ஷி மாலிக்
Question 2 Explanation: 
இந்திய பாட்மிண்டன் வீரர் சாய்னா நேவால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் (International Olympic Committee’s (IOC) Athletes’ Commission) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கேலா ருக்கிரா தலைமையிலான விளையாட்டு வீரர்கள் 'கமிஷனில் 9 துணைத் தலைவர்கள் மற்றும் 10 உறுப்பினர்கள் உள்ளனர். முழங்கால் காயத்திலிருந்து மீண்டுவந்து பயிற்சி செய்து கொண்டிருந்ததற்கு பிறகு மதிப்பு மிக்க இக்குழுவில் சாய்னா நியமிக்கப்பட்டார்.
Question 3
3. தேசிய எஸ்சி / எஸ்டி மையம் மற்றும் MSME துறைக்கான சுற்றுச்சூழல் திட்டங்களில் பூஜ்யம் விளைவு(zero effect on environment scheme for MSME sector) ஆகியவை பின்வரும் எந்த நகரங்களில் தொடங்கப்பட்டது ?
A
ரோஹ்தக்
B
லூதியானா
C
சிம்லா
D
ஜபல்பூர்
Question 3 Explanation: 
பிரதமர் நரேந்திர மோடி, தேசிய எஸ்சி / எஸ்டி மையம் மற்றும் MSME துறைக்கான சுற்றுச்சூழல் திட்டங்களில் பூஜ்யம் விளைவு(zero effect on environment scheme for MSME sector) மையத்தினை பஞ்சாபின் லூதியானாவில் 2016 அக்டோபர் 18-ம் தேதி தொடங்கிவைத்தார். SC/ST பிரிவை சேர்ந்த சமூகத்தினர் தொழில் தொடங்கும் நோக்கில் இந்த மையம் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர், 225 தொழிலதிபர்களுக்கு MSME விருதும், மிகவும் நலிவடைந்த பிரிவினரின் பெண்களுக்கு வாழ்கையில் சம்பாதிக்கும் பொருட்டு 150 நூற்பு சக்கரங்களும் வழங்கவுள்ளார்.
Question 4
4. முதல் தேசிய பழங்குடியினர் திருவிழா பின்வரும் எந்த நகரங்களில் நடக்கவுள்ளது ?
A
அகர்தலா
B
கவுகாத்தி
C
புது தில்லி
D
இந்தூர்
Question 4 Explanation: 
அக்டோபர் 25, 2016 அன்று தில்லியில் முதல் தேசிய பழங்குடியினர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கவுள்ளார். இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் பழங்குடியினர் மத்தியில் ஒற்றுமை உணர்வை ஊக்குவிப்பது ஆகும். இத்திருவிழாவில் பழங்குடி கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை பெரிய அளவில் வெளிப்படுத்தி அதனை ஊக்குவிக்கவுள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1600 பழங்குடி கலைஞர்கள் மற்றும் 15000 பழங்குடி பிரதிநிதிகள் இத்திருவிழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Question 5
5. பின்வரும் யார் ஆயுத ஒழிப்பு குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டிற்கு இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் ?
A
அம்புஜ் சர்மா
B
அமன்தீப் சிங் கில்
C
வினோத் கே தாசரி
D
டி வெங்கட்ராமன்
Question 5 Explanation: 
1992 ஆண்டு தொகுதியின்(Batch) IFS (இந்திய வெளிநாட்டு சேவை) அதிகாரி அமன்தீப் சிங் கில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் ஆயுத ஒழிப்பு குறித்த மாநாட்டிற்கு இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Question 6
6. பின்வரும் எந்த இந்திய நிறுவனம், முதல் "Made In India" மின்சார பேருந்தை தயாரித்துள்ளது ?
A
டாடா மோட்டார்ஸ்
B
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
C
அசோக் லேலண்ட்
D
ஃபியட் இந்தியா ஆட்டோமொபைல்ஸ் லிமிடெட்
Question 6 Explanation: 
அசோக் லேலண்ட் லிமிடெட் நிறுவனம் இந்தியாவின் முதல் "Made In India" மின்சார பேருந்தை "Circuit" எனும் பெயரில் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சர்க்யூட் தொடர் வாகனங்கள் பல்வேறு நிலப்பகுதி, சாய்வு மற்றும் பயன்பாடு நிலைமைகளை சமாளிக்கும் வகையில் இந்திய தளத்திற்கு தேவையான அனைத்துவிதமான தொழில்நுட்பத்துடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து பூஜ்ய உமிழ்வு, மாசு வெளியீடு அல்லாத குறிப்பாக இந்திய சாலை மற்றும் பயணிகள் நிலைமைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. நகர மையங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த பட்ச செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவுகள் உள்ளவாறு மிகவும் எளிதாக வெகுஜன சந்தை தளத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் தீயை கண்டறிந்து அணைக்கும் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளன மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.
Question 7
7. பின்வரும் யார் 2015 மாத்ருபூமி இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் ?
A
பாலா நாராயணன் நாயர்
B
சுகுமார் அழிகோடு
C
சி ராதாகிருஷ்ணன்
D
எம் டி வாசுதேவன் நாயர்
Question 7 Explanation: 
நன்கு அறியப்பட்ட எழுத்தாளரான சி ராதாகிருஷ்ணன் இலக்கிய துறைக்கு ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக 2015 மாத்ருபூமி இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்விருதுடன் 2 லட்சம் ரூபாயும், ஒரு சான்றும், சிலையும் இவருக்கு வழங்கப்படும்.
Question 8
8. எந்த இந்திய வங்கி முதன்முதலாக Blockchain தொழில்நுட்பம் மூலம் வங்கி பரிவர்த்தனைகளை செயல்படுத்தியுள்ளது ?
A
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
B
எச்டிஎப்சி வங்கி
C
ஐசிஐசிஐ வங்கி
D
ஆக்ஸிஸ் வங்கி
Question 8 Explanation: 
ஐசிஐசிஐ வங்கி இந்தியாவிலேயே முதன்முதலாக Blockchain தொழில்நுட்பத்தின் மூலம் வங்கி பரிவர்த்தனைகளை செயல்படுத்தியுள்ளது. இந்த பணப்பரிவர்த்தனையை மேற்கு ஆசிய நிறுவனமான எமிரேட்ஸ் NBD உடன் ஒன்றிணைந்து செய்துள்ளது. Blockchain என்பது ஒரு டிஜிட்டல் லெட்ஜராகும், இதில் நடப்பு நேரத்தில் நிகழ்த்த வேண்டிய அனைத்து பரிவர்த்தனைகளும் பட்டியல் இடப்பட்டிருக்கும், இவை வலைபின்னலில் உள்ள பல்வேறு கணினிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு அவற்றின் பணிகள் முடிக்கப்படும். இது ஒரு பகிரப்பட்ட விரிதாள் போன்றதாகும்(Shared Spreadsheet).
Question 9
9.  “Jinnah Often Came To Our House” என்ற புத்தகத்தை எழுதியவர் யார் ?
A
நிரஞ்சன் குமார்
B
சித்ரா திவாகருனி
C
கிரண் தோஷி
D
அமிஷ் திரிபாதி
Question 9 Explanation: 
“Jinnah Often Came To Our House” என்ற புத்தகத்தின் ஆசிரியர் கிரண் தோஷி. 2016 The Hindu Prize -க்கு பரிந்துரைக்கப்பட்ட இப்புத்தகம் பாகிஸ்தானை உருவாக்கிய முஹம்மது அலி ஜின்னாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு கணநேர கண்ணோட்டத்தை வழங்குகிறது.
Question 10
10. தேசிய உணவு வலுவூட்டல்  உச்சி மாநாடு(The National Summit on Fortification of Food) சமீபத்தில் எந்த நகரத்தில் நடைபெற்றது ?
A
புது தில்லி
B
உதய்பூர்
C
போபால்
D
ராய்ப்பூர்
Question 10 Explanation: 
தேசிய உணவு வலுவூட்டல் உச்சி மாநாடு, நுண்ணூட்ட ஊட்டச்சத்தின்மை பிரச்சனைக்கு தீர்வு காண 2 நாட்கள் புதுதில்லியில் நடைபெற்றது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) நடத்திய இந்த மாநாட்டை சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுபிரியா படேல் தொடங்கி வைத்தார்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!