Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 19th and 20th October 2016

Tnpsc Tamil Current Affairs 19th and 20th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 19th and 20th October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. வாக்காளர் கல்வி பற்றிய முதலாவது சர்வதேச மாநாடு எந்த நாட்டில் தொடங்கியது ?
A
இந்தியா
B
அமெரிக்கா
C
ஐக்கிய ராஜ்யம்
D
பூடான்
Question 1 Explanation: 
வாக்காளர் கல்வி பற்றிய முதலாவது சர்வதேச மாநாடு புது தில்லியில் 2016 அக்டோபர் 20ம் தேதி தொடங்கியது. இதனை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டின் தலைப்பு "Voter Education for Inclusive, Informed and Ethical Participation" என்பதாகும். 3 நாள் மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர்.நசீம் ஜைதி தொடங்கி வைத்தார். இம்மாநாட்டின் நோக்கம், தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மூலம் சிறந்த நடைமுறைகள், கொள்கைகள் மற்றும் வாக்காளர் கல்விக்கான முயற்சிகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளுதல். 27 நாடுகள் மற்றும் 5 சர்வதேச அமைப்புக்கள் இந்நிகழ்வில் பங்கேற்கும். வாக்காளர் கல்வி மூலம் மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளில் உள்ளடக்கிய தகவல் மற்றும் ஒழுக்க தேர்தல் நடைமுறைகளை பலப்படுத்தும் தீர்மானத்தை அடைய இம்மாநாடு முயற்சிக்கிறது.
Question 2
2. சமீபத்தில் மறைந்த மேவா ராம்கோபின், எந்த நாட்டின் நன்கு அறியப்பட்ட காந்தியவாதி ?
A
பூடான்
B
தென் ஆப்பிரிக்கா
C
நேபாளம்
D
வங்கதேசம்
Question 2 Explanation: 
தென் ஆப்பிரிக்க போராட்டத்தின் வலிமைமிக்க நபர் மற்றும் முன்னாள் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான மேவா ராம்கோபின் (83) சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் மறைந்தார். இவர் மகாத்மா காந்தியின் பேத்தியும், மனித உரிமை ஆர்வலருமான இலா காந்தியின் கணவர். ராம்கோபின், 1904 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட Centre for Learning of Ubuntu and Chairperson of Phoenix Settlement Trust-ன் நிறுவனர் ஆவார்.
Question 3
3. “The Adivasi Will Not Dance” எனும் புத்தகம் யாரால் எழுதப்பட்டது ?
A
இ வி ராமகிருஷ்ணன்
B
பிரதீப் செபாஸ்டியன்
C
ஹன்ஸ்டா சோவேந்ரா சேகர்
D
மனு சக்ரவர்த்தி
Question 3 Explanation: 
ஹன்ஸ்டா சோவேந்ரா சேகர் என்பவரால் எழுதப்பட்ட “The Adivasi Will Not Dance” எனும் புத்தகம் 2016 The Hindu Prize-க்கு பரிந்துரைக்கப்பட்டது. இது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் Santhals எனும் பழங்குடி மக்களை வெளியேற்றி அந்நிலத்தில் அமைக்கப்பட்ட அனல் மின் நிலையம் ஒன்றை இந்திய குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வரும் வருகையை குறித்து கூறுகிறது.
Question 4
4. எந்த நீர்ஜெட் அதிவேகத் தாக்குதல் கிராப்ட் (Water Jet Fast Attack Craft - WJFAC) கார் நிக்கோபார் வகுப்பு கப்பல் சமீபத்தில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது ?
A
ஐஎன்எஸ் தார்முக்லி
B
ஐஎன்எஸ் கல்பேணி
C
ஐஎன்எஸ் கப்ரா
D
ஐஎன்எஸ் திஹாயு
Question 4 Explanation: 
315 டன் எடை கொண்ட ஐஎன்எஸ் திஹாயு இந்திய கப்பற்படையுடன் சேர்க்கப்பட்டு, கிழக்கு படைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 6வது நீர்ஜெட் அதிவேகத் தாக்குதல் கிராப்ட் (Water Jet Fast Attack Craft - WJFAC) கார் நிக்கோபார் வகுப்பு கப்பலான ஐஎன்எஸ் திஹாயுவை கொல்கத்தாவைச் சார்ந்த கப்பல் கட்டும் தளமான Garden Reach Shipbuilders and Engineers (GRSE) எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்குமுன் தயாரிக்கப்பட்டவைகளை விட, இது மேம்படுத்தப்பட்ட பதிப்பு மற்றும் அதிகபட்சம் 35 knots/ hour வேகத்தில் இயங்கக்கூடியது. இது கப்பல் தளபதி அஜய் காஷ்டவ் தலைமையில் விடப்பட்டுள்ளது, இதில் 4 அதிகாரிகள் மற்றும் 41 குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
Question 5
5. 28வது பொது கணக்காளர்கள் மாநாடு(Accountants General Conference) எந்த இந்திய நகரில் தொடங்கியது ?
A
கொல்கத்தா
B
புது தில்லி
C
சென்னை
D
பெங்களூர்
Question 5 Explanation: 
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதுதில்லியில் 28வது பொது கணக்காளர்கள் மாநாட்டை (Accountants General Conference) தொடங்கி வைத்தார். இந்த 2 நாள் மாநாட்டில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து பொது கணக்காளர்கள் பங்கேற்று சர்வதேச தணிக்கை மற்றும் கணக்குகளில் வழக்கமாக உள்ள சிறந்த நடைமுறைகளை மீளாய்வு செய்யவுள்ளனர். இந்த மாநாட்டை இந்தியாவின் கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) ஏற்பாடு செய்துள்ளது.
Question 6
6. “Sino-India Cooperation 2016” எனும்  2வது கூட்டு தந்திரோபாய பயிற்சி எந்த நகரத்தில் நடைபெற்றது ?
A
ஜெய்சால்மர்
B
லடாக்
C
கட்ச்
D
உதய்பூர்
Question 6 Explanation: 
“Sino-India Cooperation 2016” எனும் 2வது கூட்டு தந்திரோபாய பயிற்சி, இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே ஜம்மு காஷ்மீரின் கிழக்கு லடாக்கின் Chushul Garrison பகுதியில் உள்ள Border Personnel Meeting Hut-ல் நடைபெற்றது. மனிதாபிமான உதவி மற்றும் பூகம்ப நிவாரணம் குறித்த இந்த நீண்ட பயிற்சியில், இந்திய எல்லை கிராமம் ஒன்றை பூகம்பம் தாக்குவது போன்ற போலியான அமைப்பு உருவாக்கி, அதன்பின்னர், இணைப்புக் குழு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அனைவரையும் வெளியேற்றி மருத்துவ உதவி வழங்கியது. இந்திய அணியை பிரிகேடியர் ஆர் எஸ் ராமன் வழிநடத்தினார் மற்றும் சீன அணியை சர் கோல் பேன் ஜூன் வழிநடத்தினார்.
Question 7
7. 2016 குளோபல் பவர் சிட்டி(Global Power City Index) குறியீட்டில் எந்த நகரம் முதலிடத்தில் உள்ளது ?
A
டோக்கியோ
B
ரியோ டி ஜெனிரோ
C
லண்டன்
D
மும்பை
Question 7 Explanation: 
சமீபத்தில், ஜப்பான் சார்ந்த மோரி நினைவு அறக்கட்டளை நிறுவனம் வெளியிட்ட 2016 GPCI அறிக்கையின்படி, 2016 குளோபல் பவர் சிட்டி(Global Power City Index) குறியீட்டில் லண்டன் முதலிடம் வகிக்கிறது. பொருளாதாரம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கலாச்சாரம், அணுகுமுறை, சூழல் மற்றும் உயிர்த்திறன் ஆகிய ஆறு முக்கிய அளவீடுகளை கொண்டு உலகம் முழுவதிலும் உள்ள 42 முக்கிய நகரங்களுக்கு இது தரம் வழங்கியுள்ளது. வணிகம், கண்டுபிடிப்பு மற்றும் கலாச்சாரத்தில் உலகின் முன்னணி நகரங்கள் பட்டியலில் உள்ள ஒரே இந்திய நகரம் மும்பை (39வது தரத்துடன்) ஆகும்.
Question 8
8. எந்த இந்திய நகரம் முதன்முதலாக 2017 FIFA U-17 உலக கோப்பையை நடத்தும் இடங்களில் ஒன்றாக அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது ?
A
மொஹாலி
B
கொச்சி
C
சென்னை
D
கொல்கத்தா
Question 8 Explanation: 
2017 FIFA U-17 உலக கோப்பையை நடத்தும் இடங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய நகரமாக கொச்சி மாறியுள்ளது. 23 FIFA நிபுணர்கள் உள்ளடங்கிய உயர் அதிகார தூதுக்குழு ஜவஹர்லால் நேரு மைதானத்தை பார்வையிட்ட பின்னர் கொச்சியை, போட்டி நடத்தும் மைதானங்களில் ஒன்றாக உறுதிபடுத்தியுள்ளது. உலகளாவிய அளவில் ஒரு சர்வதேச கால்பந்து போட்டியை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
Question 9
9.“Driven: The Virat Kohli Story” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டுள்ளது ?
A
சந்தீப் பம்ஜை
B
ராஜ்குமார் சர்மா
C
விஜய் லோகபள்ளி
D
பிரதீப் சங்வான்
Question 9 Explanation: 
நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளர் விஜய் லோகபள்ளி, “Driven: The Virat Kohli Story” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். சமீபத்தில் புது தில்லியில் வெளியிடப்பட்ட இது, இந்திய டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லியின் வாழ்க்கை பற்றியது.
Question 10
10. புள்ளியியலுக்கான முதல் சர்வதேச பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
A
ரான் வாசர்ஸ்டெய்ன்
B
வில்லியம் ஜான்சன்
C
டேவிட் காக்ஸ்
D
சூசன் எல்லேன்பேர்க்
Question 10 Explanation: 
புள்ளியியலுக்கான முதல் சர்வதேச பரிசு டேவிட் காக்ஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது ஜூலை 2017 ஆம் ஆண்டு Marrakech-வில் நடைபெற உள்ள உலக புள்ளியியல் மாநாட்டில் இவருக்கு வழங்கப்பட இருக்கிறது. $75,000 பரிசு தொகை கொண்ட இவ்விருது புள்ளியியல் துறையில் மிக உயர்ந்த மரியாதையாக கருதப்படுகிறது. இது, புள்ளியியலை பயன்படுத்தி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனித நலனுக்கு தேவையான முக்கிய சாதனைகளை செய்யும் தனி நபர் அல்லது குழுக்களை அங்கீகரிக்கிறது. மேலும் இது, நவீன வாழ்க்கையில் வளர்ந்துவரும் புள்ளியியலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது. வாழும் ஒவ்வொரு நபரின் வாழ்க்கையையும் புள்ளிவிவரங்கள் எவ்வாறு பாதிக்கின்றது என்பதை எண்ணற்ற மற்றும் பல்வேறு வழிகளில் புரிந்து கொள்ள ஊக்குவிக்கிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!