Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 1st October 2016

Tnpsc Tamil Current Affairs 1st October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 1st October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. 2016 சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தின்(International Translation Day) மையக்கரு என்ன ?
A
Translate with respect for everyone
B
Enthusiasm in translation and interpreting
C
Translation and interpreting: connecting worlds
D
Working together with joy
Question 1 Explanation: 
ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டுமின்றி உலகிள்ள அனைத்து மக்கள் மத்தியில் மொழிபெயர்ப்பு தொழிலை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக உலகளாவிய மொழிபெயர்ப்பு சமூகத்தின் ஆதரவை காட்ட செப்டம்பர் 30ம் தேதி ஒவ்வொரு வருடமும் சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. 2016 சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தின்(International Translation Day) மையக்கரு Translation and interpreting: connecting worlds ஆகும்.
Question 2
2. பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் (Press Trust of India - PTI) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
விவேக் கோயங்கா
B
ரியாத் மேத்யூ
C
மகேந்திர மோகன் குப்தா
D
ஹார்முஸ்ஜி என் காமா
Question 2 Explanation: 
"மலையாள மனோரமா"வின் இயக்குனரான ரியாத் மேத்யூ, பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் புதிய தலைவராக (PTI) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஹார்முஸ்ஜி என் காமாவை வென்று இப்பதவிக்கு வந்தார்.
Question 3
3. நேரு நினைவு மியூசியம் மற்றும் நூலகத்தின்(Nehru Memorial Museum & Library - NMML) புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
சக்தி சின்ஹா
B
பானு சிங்
C
மகேஷ் ரங்கராஜன்
D
எம் எல் மேத்தா
Question 3 Explanation: 
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சக்தி சின்ஹா, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் (NMML) புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவி 2015 முதல் காலியாக இருந்தது.
Question 4
4. 2016 லதா மங்கேஷ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டது ?
A
வினோத் தவ்டே
B
முகமது சஃபி
C
உத்தம் சிங்
D
பிரபாகர் ஜாக்
Question 4 Explanation: 
குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர் உத்தம் சிங், இசைத் துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக மகாராஷ்டிரா அரசு அவருக்கு 2016 லதா மங்கேஷ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளது. இவ்விருதில் ஒரு சான்று, கோப்பை மற்றும் ரொக்கப் பணம் 5 லட்சம் அடங்கும்.
Question 5
5. 2015 மூர்த்திதேவி விருது யாருக்கு வழங்கப்பட்டது ?
A
சாந்தி பிரசாத் சாகு
B
கோலாகலுரி ஏனோக்
C
கபிலா வட்ஸ்யாயன்
D
சி ராதாகிருஷ்ணன்
Question 5 Explanation: 
தெலுங்கு ஆசிரியர், சிறந்த அறிஞர் மற்றும் பேராசிரியரான கோலாகலுரி ஏனோக், அவர் எழுதிய "அனந்த ஜீவனம்" நாவலுக்காக 29வது மூர்த்திதேவி விருதை பெற்றார். இந்த நாவல், ராயல்சீமாவில் சூறாவளியில் பலவீனமான, அடித்தட்டு மற்றும் சாதாரண மனிதனின் போராட்டத்தை சித்தரிக்கிறது.
Question 6
6. ஈட்டி எறிதலில் 60 மீட்டர் இலக்கை கடந்த முதல் இந்தியப்பெண் யார் ?
A
சீமா அண்டில்
B
அன்னு ராணி
C
எச் எம் ஜோதி
D
சிந்தூர் குஜார்
Question 6 Explanation: 
உத்திரபிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்ற 56வது திறந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் மீரட்டை சேர்ந்த அன்னு ராணி 60.01 மீ தூரம் எறிந்து அவரது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். இதன் மூலம் ஈட்டி எறிதலில் 60 மீட்டர் இலக்கை கடந்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார்.
Question 7
7. “All That Man Is” என்ற புத்தகத்தை எழுதியவர் யார் ?
A
டேவிட் ஷாலே
B
மிலிந்த் டிசோசா
C
லத்தீஷ் மோகன்
D
பி லங்கேஷ்
Question 7 Explanation: 
“All That Man Is” என்ற புத்தகம் டேவிட் ஷாலே என்பவரால் எழுதப்படட்டது. இந்த நாவல் பல சிறுகதைகளின் தொகுப்பாகும். ஆண்மையை பிரதிபலிக்கும் இந்த நாவல் 2016 மேன் புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Question 8
8. சமீபத்தில், இந்திய தாவர கணக்கெடுப்பு(Botanical Survey of India - BSI) அமைப்பு வெளியிட்ட “இந்தியாவின் அரியவகை வாஸ்குலார் தாவரங்கள்” பட்டியலில் எந்த மாநிலம் அதிக அரியவகை பூக்கும் தாவரங்களுடன் முதலிடத்தில் உள்ளது ?
A
கேரளா
B
தமிழ்நாடு
C
மணிப்பூர்
D
மகாராஷ்டிரா
Question 8 Explanation: 
இந்திய தாவர கணக்கெடுப்பு(Botanical Survey of India - BSI) அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட “இந்தியாவின் அரியவகை வாஸ்குலார் தாவரங்கள்” பட்டியலில் அதிக அரியவகை பூக்கும் தாவரங்களுடன் முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 410 இனங்களும் அதனை தொடர்ந்து கேரளாவில் 357 இனங்களும், மகாராஷ்டிராவில் 278 இனங்களும் உள்ளன.
Question 9
9. இந்தியன் நியூஸ்பேப்பர் சொசைட்டியின் (Indian Newspaper Society - INS) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் யார் ?
A
சோமேஷ் ஷர்மா
B
கிரண் பி வதோடரியா
C
பி வி சந்திரன்
D
ரவீந்திர குமார்
Question 9 Explanation: 
இந்தியன் நியூஸ்பேப்பர் சொசைட்டியின் (Indian Newspaper Society) 2016-17 ஆண்டின் புதிய தலைவராக Rashtradoot Saptahik செய்தித்தாளின் சோமேஷ் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், Grehalakshmi (மாத்ருபூமி குழுமம்) இதழின் பி வி சந்திரன் என்பவரை வென்று இப்பதவியை அடைந்தார். குறிப்பாக செய்தித்துறையின் மீதான ஆர்வத்தை பாதுகாக்கும் அழுத்தம் நிறைந்த ஒரு அமைப்பு INS ஆகும். இதன் தலைமையகம் புது தில்லியின் ரஃபி மார்க்கில் உள்ளது.
Question 10
10. "ஆபானேரி(Abhaneri)" திருவிழா, இந்தியாவின் எந்த மாநிலத்தில் தொடங்கியது ?
A
ஆந்திரப் பிரதேசம்
B
கேரளா
C
இமாசலப் பிரதேசம்
D
ராஜஸ்தான்
Question 10 Explanation: 
கிராமப்புற சுற்றுலாவை ஊக்குவிக்க, ராஜஸ்தானின் டுசா மாவட்டத்தில் உள்ள ஆபானேரி கிராமத்தில் ஆபானேரி(Abhaneri) திருவிழா தொடங்கியது. இந்த 2-நாள் திருவிழாவில் சந்த் போரி மற்றும் ஹர்ஷத் மாதா கோவிலில், மற்றவர்களுடன் இணைந்து Shehnai Vaadan, puppet show, Behrupia, Raavanhatha போன்ற கலைஞர்களும் கலைநிகழ்ச்சி நடத்த உள்ளனர். சுற்றுலாதுறை மற்றும் ராஜஸ்தான் மாநில அரசு டுசா மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இத்தகைய ஆண்டு நிகழ்ச்சியை நடத்துகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.
Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!