Tnpsc Tamil Current Affairs Quiz Questions 21st October 2016

Tnpsc Tamil Current Affairs 21st October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 21st October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. இந்தியாவில் நடுவர் தீர்ப்பை பலப்படுத்த மற்றும் அமலாக்க, முதலாவது உலக மாநாடு எந்த நகரத்தில் தொடங்கியது ?
A
கொச்சி
B
கொல்கத்தா
C
புது தில்லி
D
சென்னை
Question 1 Explanation: 
இந்தியாவில் நடுவர் தீர்ப்பை பலப்படுத்த மற்றும் அமலாக்க, முதலாவது உலக மாநாடு புது தில்லியில் தொடங்கியது. "மத்தியஸ்தம் மற்றும் அமலாக்கத்தை வலுப்படுத்தும் தேசிய முன்முயற்சி" என்ற தலைப்பில் நடைபெற்ற 3 நாள் மாநாடு, இந்தியாவில் வாதாடும் தீர்மானத்தின் முகத்தை மாற்ற நடக்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி துவங்கி வைத்த இந்த மாநாடு, வணிக நடுவர் தீர்வில் ஒரு தூண்டுதலை வழங்கும்.
Question 2
2. போலீஸ் நினைவு தினம் இந்தியாவில் எந்த நாளில் கொண்டாடப்படுகின்றது ?
A
அக்டோபர் 23
B
அக்டோபர் 25
C
அக்டோபர் 21
D
அக்டோபர் 22
Question 2 Explanation: 
1959 ஆம் ஆண்டு சீன எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர்நீத்த 10 போலீசாரின் தியாகங்களை நினைவுகூறும் வகையில் இந்தியா முழுவதும் அனைத்து போலீஸ் எல்லைகளிலும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி போலீஸ் நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.1959 அக்டோபர் 21ம் தேதி, சீன இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, 20 போலீஸ் பணியாளர்கள் மீது குண்டுகளை வீசினர். அதில் 10 பேர் உயிரிழந்தனர், 7 பேர் சீன கைதிகளாக அழைத்து செல்லப்பட்டனர் ,மீதமுள்ளோர் தப்பித்தனர். 1961 ஆம் ஆண்டிலிருந்து 33,000 க்கும் மேற்பட்ட போலீசார் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் சேவைக்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளார்கள்.
Question 3
3. சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டை சக்தி வாய்ந்த 'ஹெய்மா' சூறாவளி தாக்கியது ?
A
இந்தியா
B
மலேஷியா
C
இந்தோனேஷியா
D
பிலிப்பைன்ஸ்
Question 3 Explanation: 
மிக வலுவான ஹெய்மா சூறாவளி சமீபத்தில் பிலிப்பைன்ஸை தாக்கி பரந்த அழிவை ஏற்படுத்தியது. 225 கிமீ /மணி வேகத்தில் நீடித்த காற்று வீசியதில் மக்களின் தங்குமிடமான வீடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. பிலிப்பைன்ஸை அடுத்து, ஹெய்மா சூறாவளி சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் Shanwei அருகிலுள்ள Haifeng County-யில் நிலச்சரிவை ஏற்படுத்தியது.
Question 4
4. எந்த அமைச்சக்கம் ஸ்மார்ட் ரயில் நிலையங்கள் அமைக்க  இந்திய ரயில்வேயுடன் ஒப்பந்தம் செய்துள்ளது ?
A
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
B
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
C
மின்சார அமைச்சகம்
D
நகர அபிவிருத்தி அமைச்சகம்
Question 4 Explanation: 
நகர அபிவிருத்தி அமைச்சகம், ஸ்மார்ட் ரயில் நிலையங்கள் அமைக்க இந்திய ரயில்வேயுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்மார்ட் நகர வழிமுறைகளின் கீழ், நல்ல பயணிகள் வசதிகள், ரயில் நிலையங்களை எளிதில் அணுகும் வசதிகள், ரயில் நிலையங்களில் சிறந்த முறையில் இடத்தை பயன்படுத்துதல் ஆகியவற்றை பெற திரும்பவும் சீரமைக்கப்பட உள்ளது. அப்படியென்றால், ஒவ்வொரு ஸ்மார்ட் நகரம் மற்றும் AMRUT-ல் உள்ள ரயில் நிலையமும் அதனை ஒட்டியுள்ள 300 முதல் 800 ஏக்கர் நிலப்பரப்பும் மறுசீரமைக்கப்படும் என்று பொருள். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் மற்றும் இரண்டு அமைச்சுக்கள் சம்மதத்துடன் இதனை நீட்டிக்க முடியும்.
Question 5
5. மாணவர்களுக்காக Kaushalya SETU என்ற துவக்க முயற்சியை(initiative) எந்த மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது ?
A
ராஜஸ்தான்
B
உத்தரப் பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
ஒடிசா
Question 5 Explanation: 
மகாராஷ்டிரா அரசு, மாணவர்களுக்காக ‘Kaushalya SETU (Self-Employment and Talent Utilisation)’ எனும் திறன் மேம்பாட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. Kaushalya SETU திட்டத்தின் கீழ், State Board of Secondary & Higher Secondary Education பயிலும் மகாராஷ்டிரா மாணவர்களில் Class X or SSC தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்த திறன் மேம்பாட்டு திட்டத்தில் சேர்த்து கொள்ளப்படுவர், இதனால் அவர்கள் ஒரு வருடத்தை இழக்க வேண்டியதில்லை.
Question 6
6. “The Sleepwalker’s Dream” எனும் புத்தகம் யாரால் எழுதப்பட்டது ?
A
அம்பிகாகிரி ராய் சௌத்ரி
B
நளினிபாலா தேவி
C
துருபாஜோதி போரா
D
டிபி பாசு
Question 6 Explanation: 
கவுகாத்தி சார்ந்த அஸ்ஸாமி எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் துருபாஜோதி போரா என்பவர் “The Sleepwalker’s Dream” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இது, பிடிபடாமல் இருக்கும் சுதந்திரம் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் போராளிகள் கூட்டத்தின் பயணத்தை குறித்து கூறுகிறது.
Question 7
7. சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் (International Gymnastics Federation- IFG) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் யார் ?
A
எமிலியா ரோமாஞா
B
மோரினாரி வாடனபே
C
ஜார்ஜ் குயெல்ஸிக்
D
புருனோ கிராண்டி
Question 7 Explanation: 
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற உலகாளும் உறுப்பினர்கள் மாநாட்டில் சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் (International Gymnastics Federation- IFG) புதிய தலைவராக ஜப்பானை சேர்ந்த மோரினாரி வாடனபே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 20 ஆண்டுகளாக இப்பதவியில் இருந்த புருனோ கிராண்டி டிசம்பர் 2016-ல் ஓய்வு பெறும் நிலையில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், IFG தலைவராகும் முதல் ஆசியர் மற்றும் 1987-1994 வரை சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவராக இருந்த இச்சிரோ ஓகிமுராவிற்கு அடுத்து சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவராகும் முதல் ஜப்பானீஸ் என்ற பெருமையை வாடனபே பெறுகிறார்.IFG-யின் தலைமையகம் சுவிச்சர்லாந்தின் லாசன்னேவில் உள்ளது.
Question 8
8. சமீபத்தில் எந்த இத்தாலிய நகரம் தலாய் லாமா கெளரவ குடியுரிமை விருதை பெற்றது ?
A
ரோம்
B
புளோரன்ஸ்
C
நேபிள்ஸ்
D
மிலன்
Question 8 Explanation: 
திபெத்தின் நாடுகடத்தப்பட்ட ஆன்மீக தலைவர் லாம்பெர்ட்டோ பெர்டோலுக்கு, இத்தாலி நாட்டின் மிலன் நகரிலுள்ள Arcimboldi Theatre-ல் நடந்த ஒரு விழாவில் "மிலன் கவுரவ குடியுரிமை விருது" வழங்கப்பட்டது. பெர்டோல், மிலன் கவுன்சில் குழுவின் தலைவர்.
Question 9
9. எந்த நாடு உலக ரயில்வே  துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கோப்பையை (World Railway Shooting Championship Cup) வென்றுள்ளது ?
A
இந்தியா
B
ஜெர்மனி
C
பிரான்ஸ்
D
அமெரிக்கா
Question 9 Explanation: 
பிரான்ஷின் செயிண்ட் மேன்டிராயரில் நடைபெற்ற உலக ரயில்வே துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கோப்பை போட்டியில் இந்திய ரெயில்வே அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய ரயில்வே வெற்றி பெறுவது இதுவே முதல்முறை. இந்திய ரயில்வே அணி மொத்தம் 5 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட மொத்தம் 10 பதக்கங்களுடன் 15th USIC உலக ரயில்வே துப்பாக்கி சுடுதல் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. USIC என்பது சர்வதேச ரயில்வே விளையாட்டு சங்கம், இதன் நோக்கம் உலகின் பல பகுதிகளில் உள்ள ரயில்வே ஊழியர்கள் மத்தியில் துறைசார்ந்த விளையாட்டு பழக்கத்தை ஊக்குவிப்பதாகும்.
Question 10
10. சிறிய நகரங்களில் உள்ள மக்கள் பறக்கும்விதமாக, பிராந்திய விமான இணைப்பு திட்டத்தை ( Regional air Connectivity Scheme - RCS) எந்த மத்திய அமைச்சர் துவங்கி வைத்தார் ?
A
நரேந்திர மோடி
B
ராஜ்நாத் சிங்
C
அசோக் கஜபதி ராஜு
D
அருண் ஜேட்லி
Question 10 Explanation: 
மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, சிறிய நகரங்களில் உள்ள மக்கள் பறக்கும்விதமாக, பிராந்திய விமான இணைப்பு திட்டத்தை ( Regional air Connectivity Scheme - RCS) புது தில்லியில் அறிமுகம் செய்து வைத்தார். RCS திட்டம் “Ude Desh ka Aam Nagrik (UDAN) (Let the common man of the country fly)” என்றும் அழைக்கப்படுகிறது. RCS திட்டத்தின் கீழ், விமான நிறுவனங்கள் இணைப்பிற்காக பல்வேறு பெரிய விமான நிறுவனங்களின் Code Sharing-ல் நுழைய முழு சுதந்திரம் மற்றும் பல்வேறு விமான கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் பறக்க 3 ஆண்டுகள் பிரத்தியேக உரிமை பெற இயலும். பிராந்திய விமானங்களுக்கு விமான கட்டணங்கள் ஒரு மணி நேரத்திற்கு 2,500 ரூபாய் என வசூலிக்கப்பட இருக்கிறது. இத்திட்டம் ஜனவரி 2017-லிலிருந்து துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!