Tnpsc Tamil Current Affairs Quiz Questions 25th October 2016

Tnpsc Tamil Current Affairs 25th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 25th October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. உலக போலியோ தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது ?
A
அக்டோபர் 23
B
அக்டோபர் 24
C
அக்டோபர் 25
D
அக்டோபர் 26
Question 1 Explanation: 
போலியோமையலைடிஸ்-க்கு எதிராக போராடுவதை நினைவுகூறும் வகையில், உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அதன் கூட்டணி முகவர்கள் மூலம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24ம் நாள் உலக போலியோ தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம், போலியோ இல்லாத உலகம் மற்றும் அந்த இலக்கை அடைய அயராது உழைப்பவர்களின் முயற்சி ஆகியவற்றை கொண்டாட ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
Question 2
2. "மித்ரா சக்தி 2016" எனும் கூட்டு இராணுவ பயிற்சி, இந்தியாவிற்கும் எந்த நாட்டுக்கும் இடையே தொடங்கியது ?
A
ஆப்கானிஸ்தான்
B
இலங்கை
C
வங்காளம்
D
மியான்மர்
Question 2 Explanation: 
இந்தியா-இலங்கை இடையேயான "மித்ரா சக்தி 2016" எனும் கூட்டு இராணுவ பயிற்சியின் 4வது பதிப்பு அக்டோபர் 24ம் தேதி இலங்கையின் அம்பேபுஷ்ஷாவில் உள்ள சின்ஹா ரெஜிமெண்டல் சென்டரில் தொடங்கியது. இந்த பயிற்சி நவம்பர் 6, 2016 வரை நடைபெறும். இந்த பதிப்பின் முக்கிய கவனமானது, ஐ.நா.-வின் ஆணைப்படி, கிளர்ச்சி தடுப்பு (சிஐஏ) / பயங்கரவாத தடுப்பு (சி.டி) ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இணைந்து செயலாற்றும் தன்மையை அதிகரித்தல் ஆகும்.
Question 3
3. சர்வதேச வீட்டு சர்வே நெட்வொர்க் ( International Household Survey Network- IHSN) கருவியை  பயன்படுத்துவது பற்றிய முதல் பட்டறையை(workshop) எந்த மத்திய அமைச்சர் துவங்கி வைத்தார் ?
A
கல்ராஜ் மிஸ்ரா
B
ராம் விலாஸ் பாஸ்வான்
C
வெங்கையா நாயுடு
D
டி வி சதானந்த கவுடா
Question 3 Explanation: 
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சர் D.V. சதானந்த கவுடா புது தில்லியில் சர்வதேச வீட்டு சர்வே நெட்வொர்க் ( International Household Survey Network- IHSN) கருவியை அறிமுகப்படுத்தினார். மேலும் இதற்கென தனியே இணையதளத்தையும் அறிமுகம் செய்து வைத்தார். நிர்வாக அமைப்பு மற்றும் புள்ளியியல் கொள்கை உருவாக்கத்தில் ஒரு நல்ல ஒருங்கிணைப்பை உருவாக்கும் மேலாண்மை கருவியாக, தரமான அளவுகோலாக IHSN-யை பயன்படுத்த முடியும். இது சமீபத்திய போக்குகள் மற்றும் தரவு காப்பக முன்னேற்றம், சேமிப்பு மற்றும் பயனருக்கு உள்ள தொழில்நுட்ப கருவிகள் ஆகியவை பற்றியதாகும். மேலும் இது, தரவு தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
Question 4
4. 2016 ரியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற வருண் சிங் ஃபாட்டி, எந்த  விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
குண்டெறிதல்
B
உயரம் தாண்டுதல்
C
பூப்பந்து
D
ஈட்டி எறிதல்
Question 4 Explanation: 
2016 ரியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வருண் சிங் ஃபாட்டி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார். இவர் சமீபத்தில் இந்திய அரசின்(GoI), சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் வென்றவர்களுக்கான சிறப்பு விருதுகள் திட்டத்தின் கீழ், புது தில்லியில் நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) விஜய் கோயலிடமிருந்து ரொக்க பரிசாக ரூபாய் 30 லட்சம் பெற்றார்.
Question 5
5. “Born to Fly: Fighter pilot MP Anil Kumar teaches us there is no battle mind cannot win” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டுள்ளது ?
A
சன்னி ராஜ்புத்
B
நிதின் சாதே
C
மஞ்சு சர்மா
D
பி டி பிருந்தா
Question 5 Explanation: 
விமான தளபதி நிதின் சாதே, “Born to Fly: Fighter pilot MP Anil Kumar teaches us there is no battle mind cannot win” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகம், ஒரு விபத்துக்கு பின்னர் ஊனமுற்றபோதிலும் தனது செழிப்பான எழுத்துக்கள் மூலம் ஆயுதப்படைகளின் ஒரு ஐகான் ஆக விளங்கும் போர் விமானி எம்.பி. அனில் குமார் வாழ்க்கை பற்றியது. இது சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மூலம் வெளியிடப்பட்டது.
Question 6
6. இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் சமீபத்தில் வெளியிட்ட(Registrar General of India) தரவுப்படி, எந்த மாநிலத்தில் அனைத்து வயதினருக்கும் உயர்ந்த ஆயுள் எதிர்பார்ப்பு (highest life-expectancy) உள்ளது ?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
ஜம்மு காஷ்மீர்
D
மகாராஷ்டிரா
Question 6 Explanation: 
இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் சமீபத்தில் வெளியிட்ட(Registrar General of India) தரவுப்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் உயர்ந்த ஆயுள் எதிர்பார்ப்பு (highest life-expectancy) உள்ளது என கூறப்பட்டுள்ளது. RGI மாநிலவாரியாக இந்த ஆயுள் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது, அதன் படி சராசரி ஆண்டுகளை விட எவ்வளவு ஆண்டுகள் அதிகம் வாழ முடியும் என இது வரையறுக்கிறது. 0 (பிறப்பின்போது) , 1, 5, 10, 20, 30, 40, 50, 60 மற்றும் 70 ஆகிய வயதினருக்கான தரவுகளை இது கொண்டுள்ளது. இருந்தபோதிலும் ஒட்டு மொத்த ஆயுள் எதிர்பார்ப்பில் கேரளா முதலிடமும் அதனை தொடர்ந்து டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரும் உள்ளது.
Question 7
7. தேசிய ஒற்றுமை தினம் இந்தியாவில் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?
A
அக்டோபர் 26
B
அக்டோபர் 22
C
அக்டோபர் 20
D
அக்டோபர் 24
Question 7 Explanation: 
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ம் தேதி தேசிய ஒற்றுமை தினம் அனுசரிக்கப்படுகிறது. இது 1962 ஆம் ஆண்டில் சீனா, இந்தியாவை தாக்கிய தேதி ஆகும்.
Question 8
8. உர்ஜா கங்கை எரிவாயு குழாய் இணைப்பு(Urja Ganga gas pipeline) திட்டம், இந்தியாவின் எந்த நகரத்தில்  தொடங்கப்பட்டது ?
A
பாட்னா
B
வாரணாசி
C
கவுகாத்தி
D
ராஞ்சி
Question 8 Explanation: 
பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரில் ரூபாய் 51,000 கோடி மதிப்புள்ள உர்ஜா கங்கை எரிவாயு குழாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் நோக்கமானது, வாரணாசியில் வாழும் மக்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சமையல் எரிவாயு வழங்குவதாகும். அதன் பின்னர் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவுள்ளது. 800 கி.மீ தூரம் அமைக்கப்படவுள்ள இந்த எரிவாயு குழாய் மூலம் 50,000 வீடுகள் மற்றும் 20,000 வாகனங்கள் முறையே PNG மற்றும் CNG கேஸ் பெற முடியும்.
Question 9
9. 2016 ஃபார்முலா 1 அமெரிக்கா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில்(2016 Formula 1 United States Grand Prix) வெற்றி பெற்றவர் யார் ?
A
டேனியல் ரிக்கார்டியோ
B
நிகோ ரோஸ்பெர்க்
C
செபாஸ்டியன் வெட்டல்
D
லூயிஸ் ஹாமில்டன்
Question 9 Explanation: 
இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் ஃபார்முலா ஒன் பந்தய ஓட்டுனர் லூயிஸ் ஹாமில்டன், மெர்சிடஸ் ஏஎம்ஜி பெட்ரோனாஸ் சார்பாக கலந்துகொண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில் உள்ள Circuit of the Americas மைதானத்தில் நடைபெற்ற 2016 ஃபார்முலா 1 அமெரிக்கா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில்(2016 Formula 1 United States Grand Prix) வெற்றி பெற்றுள்ளார்.
Question 10
10. வியட்நாம் போர் எதிர்ப்பு செயற்பாட்டாளர்(anti-Vietnam war activist) டாம் ஹேடன்(Tom Hayden) சமீபத்தில் மறைந்தார், இவர் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
A
அமெரிக்கா
B
ரஷ்யா
C
ஜெர்மனி
D
பிரான்ஸ்
Question 10 Explanation: 
அமெரிக்க சமூக மற்றும் அரசியல் ஆர்வலர் டாம் ஹேடன் (76), சமீபத்தில் கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் இறந்தார். வியட்நாம் போர் எதிர்ப்பு, சிவில் உரிமைகள், தீவிர அறிவார்ந்த கொள்கைகளுக்காக செயலாற்றுபவர் ஆகியவற்றில் முக்கிய பங்கு ஆற்றியதன் மூலம் இவர் அறியப்பட்டார்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!