Tnpsc Tamil Current Affairs Quiz Questions 28th September 2016

Tnpsc Tamil Current Affairs 28th September 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 28th September 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் (Bureau of Police Research and Development -BPR&D) தலைமையிடம் எங்குள்ளது ?
A
ஹைதராபாத்
B
புது தில்லி
C
சென்னை
D
பெங்களூரு
Question 1 Explanation: 
போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (பிபிஆர் & டி) பணியகத்தின் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. இது சமீபத்திய செய்திகளில் வர காரணம், மாநில மற்றும் யூனியன் பிரதேச சிறைச்சாலை தலைவர்கள் பங்குபெறும் சிறைச்சாலை மறுசீரமைப்பு குறித்த 5வது தேசிய மாநாட்டை BPR&D செப்டம்பர் 29,2016 ஆம் தேதி புது தில்லியில் நடத்தவுள்ளது. மத்திய உள்நாட்டலுவல்கள் இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் மாநாட்டை தொடங்கிவைக்கிறார். இந்த 2-நாள் மாநாடு ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாற மற்றும் பிறரின் அனுபவத்தில் இருந்து கற்று கொள்ள ஒரு தளமாக திகழும். இது அவர்கள் தங்கள் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும். முதல் முறையாக, மத்திய சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகளில் உள்ள சிறைக்கண்காணிப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
Question 2
2. பேரிடர் அபாய குறைப்பு குறித்த 2016 ஆசிய அமைச்சர்கள் மாநாட்டை (Asian Ministerial Conference on Disaster Risk Reduction-AMCDRR) எந்த நாடு நடத்துகிறது ?
A
மியான்மார்
B
வியட்நாம்
C
தாய்லாந்து
D
இந்தியா
Question 2 Explanation: 
பேரிடர் அபாய குறைப்பு குறித்த 2016 ஆசிய அமைச்சர்கள் மாநாட்டை (Asian Ministerial Conference on Disaster Risk Reduction-AMCDRR) இந்திய அரசாங்கம் நவம்பர் மாதம் புதுதில்லியில் நடத்துகிறது. இதனை இந்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாய குறைப்பு அலுவலகத்துடன் (UNISDR) இணைந்து நடத்தவுள்ளது. பேரிடர் அபாய குறைப்பை செயல்படுத்த அரசியல் சம்மந்தபட்டோர் மற்றும் பங்குதாரர்களின் அர்ப்பணிப்பை உறுதி செய்ய 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய பகுதிகளில் நடத்தப்படும் மாநாடே AMCDRR(Asian Ministerial Conference on Disaster Risk Reduction) ஆகும்.
Question 3
3. “Kunjamma Ode to a Nightingale: M.S. Subbulakshmi” என்ற புத்தகத்தை எழுதியவர் யார் ?
A
சிவன் பிள்ளை
B
அண்ணா மணி
C
அலமேலு தாஸ்
D
லட்சுமி விஸ்வநாதன்
Question 3 Explanation: 
“Kunjamma Ode to a Nightingale: M.S. Subbulakshmi” என்ற புத்தகத்தின் ஆசிரியர் லட்சுமி விஸ்வநாதன் ஆவார். இதில் ஆசிரியர், எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை, அவரது இசை, அவரது பக்தி மற்றும் கடவுளால் அவருக்கு அருளப்பட்ட கொடை குறித்து நடுநிலையாக எழுதியுள்ளார். இப்புத்தகம், டாக்டர் எம் எஸ் சுப்புலட்சுமியின் இசை வாழ்கையை சில சுவாரஸ்யமான தகவல்களுடன் விரிவாக கூறுகிறது.
Question 4
4. 2017 FIFA U17 உலக கோப்பை போட்டியை எந்த நாடு நடத்தவுள்ளது ?
A
பிரேசில்
B
இந்தியா
C
தென் ஆப்ரிக்கா
D
ரஷ்யா
Question 4 Explanation: 
இந்தியா, 2017 FIFA U17 உலக கோப்பை போட்டியை அக்டோபர் 2017-ல் நடத்தவுள்ளது.இந்தியாவில் நடைபெறும் முதல் FIFA போட்டி இதுவேயாகும். இது செய்திகளில் வர காரணம், சமீபத்தில் கோவாவின் மார்கோவாவில் உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழு(LOC) "2017 FIFA U17 உலகக் கோப்பை இந்தியா" விற்கான அதிகாரபூர்வ சின்னத்தை வெளியிட்டது. இந்தியாவின் உயர்ந்த மற்றும் பலதரப்பட்ட கலாச்சாரங்களை கொண்டாடும் விதமாக சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய உறுப்பாக இந்தியப் பெருங்கடல், ஆலமரம், காத்தாடி மற்றும் நட்சத்திரபிரகாசங்களும், தேசிய அடையாளமாக அசோகா சக்ராவும் இடம்பெற்றுள்ளது.
Question 5
5. 2016 உலக ரேபிஸ் தினத்தின் (World Rabies Day) கருப்பொருள்(Theme) என்ன ?
A
Rabies: Defeat this horrifying disease
B
Rabies- Educate, Vaccinate, Eliminate
C
End Rabies by campaigning
D
End Rabies Together
Question 5 Explanation: 
வெறிநாய்கடி தடுப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் இந்த கொடூரமான நோயை தோற்கடிப்பதில் உள்ள முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்த செப்டம்பர் 28ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக ரேபிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. ரேபிஸ் நோயிற்கு முதன்முதலில் தடுப்பூசி கண்டுபிடித்த, பிரெஞ்சு வேதியியலாளர் மற்றும் நுண்ணுயிரியலாளர் லூயிஸ் பாஸ்டியரின் நினைவு நாளை நினைவுகூறும் வகையில் ரேபிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டின் ரேபிஸ் தின கருப்பொருள்(Theme) “Rabies- Educate, Vaccinate, Eliminate” ஆகும்.
Question 6
6. 2016 பிரிக்ஸ் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சந்திப்பு எந்த இந்திய நகரில் நடைபெற்று வருகிறது ?
A
உதய்பூர்
B
கொச்சி
C
புது தில்லி
D
ஹைதராபாத்
Question 6 Explanation: 
வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி கலந்தாலோசிக்க, 2016 பிரிக்ஸ் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சந்திப்பு செப்டம்பர் 27- 28, 2016 அன்று புது தில்லி நடைபெற்றது. சமூக பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகிய ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
Question 7
7. 2016-17 உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் (Global Competitiveness Index - GCI) இந்தியாவின் தரம்  என்ன?
A
66வது
B
47வது
C
39வது
D
88வது
Question 7 Explanation: 
உலக பொருளாதார அமைப்பு (WEF - World Economic Forum) வெளியிட்ட உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் (GCI) 138 நாடுகளில் 39வது நாடாக இந்தியா இருக்கிறது. GCI அறிக்கையின்படி, மேம்படுத்தப்பட்ட பண, நிதி கொள்கைகள் மற்றும் குறைந்த எண்ணெய் விலை காரணமாக இந்தியப் பொருளாதாரமானது நிலைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் G20 நாடுகள் மத்தியில் உயர்ந்த வளர்ச்சி அடைந்ததாகவும் கருதப்படுகிறது. இந்தியா இன்னமும் தொழிலாளர், நிதி சந்தை, வரி கட்டுப்பாடுகள், உற்பத்தி, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப தயார்நிலை போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. பட்டியலில் முதலிடத்தில் சுவிட்சர்லாந்தும் அதனை தொடர்ந்து சிங்கப்பூர், அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளும் உள்ளன.
Question 8
8. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், கார்பன் சமநிலை அந்தஸ்தை (carbon neutral status) பெற்றுள்ள முதல் இந்திய விமான நிலையம் எது ?
A
வீர சவார்க்கர் சர்வதேச விமான நிலையம்
B
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்
C
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்
D
சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்
Question 8 Explanation: 
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், கார்பன் சமநிலை அந்தஸ்தை அடைந்துள்ள முதல் இந்திய விமான நிலையம் புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆகும். இதன் மூலம், டில்லி விமான நிலையத்தின், விமானநிலைய கார்பன் அங்கீகாரம் “Level 3+, Neutrality” ஆக உயர்த்தப்பட்டுள்ளது.“Level 3+, Neutrality” அங்கீகாரம் என்பது உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் மிக உயர்மட்டத்தில் உள்ள சாதனையாகும். 2016 செப்டம்பர் 27 ம் தேதி கனடாவின் மாண்ட்ரீயலில் நடைபெற்ற விமானநிலைய கார்பன் அங்கீகார சான்றிதழ் வழங்கல் விழாவின் போது சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் (ACI) மூலம் புது தில்லி விமான நிலையத்திற்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டது. ஒரு ஆண்டு முழுவதும் நிகர கார்பன் வெளியேற்றம் பூஜ்யமாக இருக்கும் போது கார்பன் சமநிலை அந்தஸ்து வழங்கப்படும் அதாவது விமான நிலையம் உமிழும் மற்றும் உட்கொள்ளும் கார்பன் அளவு சமமாக இருக்கும். தில்லி சர்வதேச விமான லிமிடெட் (DIAL), GMR குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
Question 9
9. சமீபத்தில் மறைந்த நன்கு அறியப்பட்ட கவிஞர், சையத் சம்சுல் ஹக் எந்த நாட்டை சேர்ந்தவர் ?
A
இந்தியா
B
வங்கதேசம்
C
பாகிஸ்தான்
D
ஆப்கானிஸ்தான்
Question 9 Explanation: 
செழிப்பான வங்காள கவிஞர், நாடக ஆசிரியர் மற்றும் கட்டுரையாளரான சையத் சம்சுல் ஹக் (81), சமீபத்தில் வங்கதேசத்தின் டாக்காவில் காலமானார். அவரது குறிப்பிடத்தக்க பணிகள் Ekoda Ek Rajjey, Boishakhey Rochito Ponktimala, Birotihin Utsab, Protidhwonigon மற்றும் Opor Purush இவற்றுள் அடங்கும். இவர் எழுதிய மகத்தான அழகுள்ள எண்ணற்ற தேசபக்தி பாடல்கள் 1971 விடுதலைப் போர் போராளிகளை ஈர்த்தது.
Question 10
10. அண்மையில் மறைந்த ஷிமோன் பெரஸ், எந்த நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக இருந்தார் ?
A
பாலஸ்தீனம்
B
இஸ்ரேல்
C
ஈரான்
D
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
Question 10 Explanation: 
முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் மற்றும் ஜனாதிபதியான ஷிமோன் பெரஸ்(93) சமீபத்தில் இஸ்ரேலிலுள்ள ரமாத் கன்னில் காலமானார். இஸ்ரேலின் மிக சிறந்த மூத்த குடிமகனான இவர், 1993-ல் ஒரு நீடித்த மாற்ற முடியாத இடைக்கால அமைதி உடன்படிக்கையை அமைத்தற்காக மறைந்த முன்னாள் பிரதமர் இட்சாக் ராபின் மற்றும் மறைந்த பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் ஆகியோருடன் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டார். இவர் 1948 ஆம் ஆண்டு நாட்டின் ஸ்தாபகமாக இருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு முக்கிய வளர்ச்சியிலும் ஒரு பகுதியாக இருந்தார்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.
Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!