Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 2nd and 3rd October 2016

Tnpsc Tamil Current Affairs 2nd and 3rd October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 2nd and 3rd October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. 2016 ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச முதியோர் தினத்தின் மையக்கரு என்ன ?
A
Longevity: Shaping the Future
B
Take A Stand Against Ageism
C
The Growing Opportunities & Challenges of Global Ageing
D
Leaving No One Behind: Promoting a Society for All
Question 1 Explanation: 
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச முதியோர் தினம், வயதானவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமுதாயத்தை உருவாக்குவதில் முதியோர்கள் ஆற்றிய பங்களிப்பை பாராட்டவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2016 ஆம் ஆண்டிற்கான மையக்கரு "Take A Stand Against Ageism" என்பதாகும்.
Question 2
2. "Chaba" எனும் சக்தி வாய்ந்த சூறாவளி பின்வரும் எந்த நாட்டை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ?
A
ஜப்பான்
B
நியூசிலாந்து
C
அமெரிக்கா
D
ஐக்கிய ராஜ்யம்
Question 2 Explanation: 
மிக வலுவான Chaba சூறாவளி 290 கிமீ வேகத்தில் ஜப்பானின் தெற்கு தீவுகளை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளி மனித உயிரை அச்சுறுத்தக்கூடிய ஒன்றாகவும் Ryukyu தீவுகள் மற்றும் பிரதான ஜப்பான் முழுவதும் பொருட்சேதத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
Question 3
3. 2017 இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளவர் யார் ?
A
கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான்
B
மக்தௌம் பின் ரஷீத் அல் மக்தௌம்
C
ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்
D
சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான்
Question 3 Explanation: 
அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஜனவரி 26, 2017 அன்று இந்தியாவின் 68வது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.
Question 4
4. எந்த இந்திய-அமெரிக்க பேராசிரியருக்கு, அமெரிக்க ஆடியோலாஜி அகாடமி 2016 ஆம் ஆண்டின் “Jerger Future Leaders of Audiology” என்ற பெயரை வழங்கியுள்ளது?
A
வினயா மஞ்சையா
B
மதுமிதா குமாரி
C
நிதி சர்மா
D
நிஷாந்த் பிரகாஷ்
Question 4 Explanation: 
டெக்சாஸ் லாமர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய-அமெரிக்க இணை பேராசிரியர் டாக்டர்.வினயா மஞ்சையாவிற்கு அமெரிக்க ஆடியோலாஜி அகாடமி 2016 ஆம் ஆண்டின் “Jerger Future Leaders of Audiology” என்ற பெயரை வழங்கியுள்ளது. பல்வேறு தொழில்முறை ஒலிஆராய்ச்சியாளர்களை உறுப்பினர்களாக கொண்ட உலகின் மிகப்பெரிய அமைப்பு அமெரிக்க ஆடியோலாஜி அகாடமி ஆகும். இதன் உறுப்பினர்கள் கல்வி, ஆராய்ச்சி மூலம் கேட்கும் திறன் குறித்த சேவைகளை வழங்குகின்றனர் மேலும் கேட்கும் திறன், ஒழுங்கின்மை கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளனர். ஆடியோலாஜி என்பது அறிவியலின் ஒரு பிரிவு, இது கேட்கும் திறன், சமநிலை, ஒழுங்கின்மை கோளாறுகள் குறித்த படிப்பாகும்.
Question 5
5. ஸ்வட்ச் பாரத் குறும்பட விழாவில் (Swachh Bharat Short Film Festival - SBSFF) எந்த குறும்படத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது ?
A
Chembuku Moodindi
B
Murga
C
Sarkarmi Rati Wadho
D
Nahna Doot
Question 5 Explanation: 
மகாராஷ்டிராவை சேர்ந்த இளம் திரைப்பட இயக்குனர் கட்யயன் சிவபுரி இயக்கிய "Murga" என்ற குறும்படத்திற்கு ஸ்வட்ச் பாரத் குறும்பட விழாவில் (Swachh Bharat Short Film Festival - SBSFF) முதல் பரிசு வழங்கப்பட்டது. இக்குறும்படம் சுத்தமான இந்தியா திட்ட யோசனையை ஊக்குவிக்கிறது. இதில் தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்ளாத குடிமகன் மற்றும் குழந்தைகளை "Murga" என்ற பெயரில் உருவகப்படுத்துகிறது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி, வெங்கையா நாயுடு கட்யயனுக்கு ஒரு சான்றிதழ் மற்றும் 10 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசை வழங்கினார்.
Question 6
6. உடலியல் அல்லது மருத்துவத்திற்கான 2016 நோபல் பரிசு வென்றுள்ளவர் யார் ?
A
ஷின்யா யமனாகா
B
யூ யூ தூ
C
யோஷினோரி ஒஷுமி
D
கிறிஸ்டியன் டி டுவ்
Question 6 Explanation: 
autophagy(தன்னைத்தானுண்ணல்) தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக ஜப்பானிய விஞ்ஞானி டாக்டர் யோஷினோரி ஒஷுமிக்கு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான 2016 நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. autophagy என்பது அடிப்படை செயல்முறையான உயிரணு பாகங்களை மறு சுழற்சி செய்தல், அதன் தரம் குறைதல் ஆகும். டாக்டர் ஒஷுமியின் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாகும் ஏனெனில் புற்றுநோய் முதல் முதல் பெர்கின்ஸ் வரை பல்வேறு நோய்களில் என்ன தவறாக செல்கிறது என்பதை விளக்க இது உதவுகிறது. இப்பரிசு சுவீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள காரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில், நோபல் கவுன்சில் மூலம் வழங்கப்பட உள்ளது.
Question 7
7.பின்வரும் யார்  21-வது இந்திய சட்ட ஆணைக்குழுவின்(Law Commission of India) முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் ?
A
அபய் பரத்வாஜ்
B
ஏ பி ஷா
C
எஸ் சிவகுமார்
D
ஆர் எம் லோதா
Question 7 Explanation: 
புதுதில்லி இந்திய சட்ட நிறுவன பேராசிரியர் எஸ் சிவகுமார், 21-வது இந்திய சட்ட ஆணையத்தின்(LCI - Law Commission of India) முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசால் அமைக்கப்பட்ட 21-வது இந்திய சட்ட ஆணையம் செப்டம்பர் 1, 2015 தொடங்கி ஆகஸ்ட் 31, 2018 வரை 3 ஆண்டுகளுக்கு செயல்படும். இதுவரை இந்த ஆணையம் எந்த ஒரு அறிக்கையையும் சமர்பிக்கவில்லை. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி, பல்பீர் சிங் சவுகான் இக்குழுவின் தலைவர் ஆவார்.
Question 8
8. உலக சைவ நாள் (WVD - World Vegetarian Day) எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது ?
A
அக்டோபர் 7
B
அக்டோபர் 3
C
அக்டோபர் 4
D
அக்டோபர் 1
Question 8 Explanation: 
மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ வாழ்க்கையை மேம்படுத்தும் சாத்தியங்களை ஊக்குவிக்க அக்டோபர் 1 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக சைவ நாள்(WVD - World Vegetarian Day) அனுசரிக்கப்படுகிறது.
Question 9
9. பின்வரும் எந்த நாணயம்,  அதிகாரப்பூர்வமாக சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) இருப்பு நாணயங்களில் ஒன்றாக புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது ?
A
தினார்
B
ரூபல்
C
யுவான்
D
ரூபாய்
Question 9 Explanation: 
சீன நாணயம் "யுவான்" அதிகாரப்பூர்வமாக சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) உலக இருப்பு நாணயங்களின் ஒரு உறுப்பினராக மாறிவிட்டது. இதன் மூலம், IMF-லிருந்து கடன் பெறும் நாடுகளின் நாணயமதிப்பை தீர்மானிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்பு உரிமை (SDR) கூடையில் அமெரிக்காவின் டாலர், யூரோ, யென் மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட் உடன் யுவான் நாணயமும் இணைந்து விட்டது. 1999 ஆம் ஆண்டு SDR -ல் யூரோ இணைந்ததற்கு பிறகு தற்போது யுவான் இணைகிறது. சீனா இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொருளாதார சீர்திருத்தங்களை ஆழப்படுத்தும் மேலும் உலக வளர்ச்சியை ஊக்குவிக்க துறைகளை திறக்கும்.
Question 10
10. “Far and Away:Reporting From the Brink of Change” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ?
A
ஸ்டீவ் டோநோகு
B
சல்மான் ருஷ்டி
C
ஆண்ட்ரூ சாலமன்
D
யோசுவா ஹெம்மர்
Question 10 Explanation: 
“Far and Away:Reporting From the Brink of Change” என்ற புத்தகத்தினை ஆண்ட்ரூ சாலமன் என்பவர் எழுதியுள்ளார். இது சிறு சிறு செய்திகள் மற்றும் பயண எழுத்துகள் அடங்கிய பெரிய, ஆடம்பரமான தொகுப்பாகும். மேலும் இது காதல், வீடு குறித்த நிச்சயமின்மை மற்றும் சில நேரங்களில் சுதந்திரத்தை கற்றுகொள்ள வேண்டும் என்று எச்சரிக்கும் சுதந்திர கொண்டாடங்களின் மூலம் கவரப்பட்டு எழுதப்பட்டது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.
Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!