Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 2nd November 2016

Tnpsc Tamil Current Affairs 2nd November 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 2nd November 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board of Direct Taxes) புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் யார் ?
A
சுஷில் சந்திரா
B
கௌசல் சர்மா
C
ஜுனைட் கான்
D
கே.வி. பதக்
Question 1 Explanation: 
1980 ஆம் ஆண்டு தொகுதியின்(Batch) இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரியான சுஷில் சந்திரா, வருமான வரித்துறை கொள்கைகளை வகுக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் ( Central Board of Direct Taxes - CBDT) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ராணி சிங் நாயரின் இடத்தை இவர் நிரப்பியுள்ளார். இப்பதவிக்கு முன்னர் சந்திரா, நேரடி வரிக்கான மத்திய வாரிய உறுப்பினர் (Investigation) ஆக பணியாற்றினார். கொள்கைகளை வகுக்கும் மற்றும் நேரடி வரி, வருமான வரித்துறை தொடர்பான நிர்வாக சிக்கல்களுக்கு பொறுப்புடைய CBDT, தலைவரை தவிர்த்து 6 உறுப்பினர்களை கொண்டுள்ளது.
Question 2
2. பின்வரும் எந்த மாநிலங்கள்,  இந்தியாவில் "திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத(Open Defecation Free)" மாநிலங்களாக மாறியுள்ளன ?
A
கேரளா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம்
B
கேரளா, இமாசலப் பிரதேசம், சிக்கிம்
C
இமாசலப் பிரதேசம், கேரளா, திரிபுரா
D
சிக்கிம், இமாச்சல பிரதேசம், அசாம்
Question 2 Explanation: 
Swachh Bharat Mission – Gramin திட்டத்தின் கீழ், கேரளா அதன் அடித்தள நாளில் (Foundation Day) (நவம்பர் 1,2016) "திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத(Open Defecation Free)" 3வது மாநிலமாக மாறியுள்ளது. இதன் மூலம், அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலங்களில் இந்த நிலையை அடைந்துள்ள முதல் மாநிலம் கேரளா ஆகும். கேரளாவிற்கு முன்னதாக ODF நிலையை அடைந்த மாநிலங்கள் இமாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகும்.
Question 3
3. 2016 ஃபார்முலா 1 மெக்ஸிகன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டம் வென்றுள்ளவர் யார் ?
A
டேனியல் ரிக்கார்டியோ
B
செபாஸ்டியன் வெட்டல்
C
லூயிஸ் ஹாமில்டன்
D
நிகோ ரோஸ்பெர்க்
Question 3 Explanation: 
மெக்ஸிகோ நகரின் Autodromo Hermanos Rodríguez-ல் நடைபெற்ற 2016 ஃபார்முலா 1 மெக்ஸிகன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பிரிட்டிஷ் ஃபார்முலா ஒன் பந்தய ஓட்டுநர் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.
Question 4
4. சமீபத்தில் மறைந்த எம் என் சர்மா, எந்த இந்திய நகரின் முதல் தலைமை கட்டிட கலைஞர் ?
A
கொல்கத்தா
B
சென்னை
C
புது தில்லி
D
சண்டிகர்
Question 4 Explanation: 
சண்டிகரின் முதல் தலைமை கட்டிட கலைஞர் எம் என் சர்மா(93) சமீபத்தில் சண்டிகரில் காலமானார். இவர் சமீபத்தில் “Making of Chandigarh: Le Corbusier and After” என்ற புத்தகத்தை எழுதினார், இதில் சண்டிகர் நகர உருவாக்கத்தின் நிகழ்வுகளை காலவரிசையாக கொண்டு வருகிறார். சண்டிகரின் முதல் தலைமை கட்டிட கலைஞரான இவர், பழம்பெரும் சுவிஸ்சில் பிறந்த பிரஞ்சு நாட்டு கட்டிட கலைஞர் Le Corbusier-உடன் நெருங்கி பணிபுரிந்தார். சாதாரண மனிதனுக்கு ஏற்ற சிறந்த சூழலை உருவாக்கியதற்காக 1973-ல் Institute of Life (France) விருது உட்பட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை அவரது மதிப்புமிக்க பங்களிப்பிற்காக பெற்றுள்ளார்.
Question 5
5. அனைவருக்கும் வீட்டுவசதியை உறுதி செய்ய “Parippida Mission” என்ற திட்டத்தை எந்த மாநில அரசு துவங்கியுள்ளது ?
A
கேரளா
B
கர்நாடகா
C
தமிழ்நாடு
D
அசாம்
Question 5 Explanation: 
கேரளா அரசு, 2016 நவம்பர் 1 அன்று அதன் 60வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் கல்வி, சுகாதாரம், வீடுகள் மற்றும் கழிப்பிட வசதிகள் ஆகிய துறைகளில் 'Parippida Mission', 'Haritha Keralam', 'Ardram' மற்றும் 'Life' என்ற 4 முக்கிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.அரசாங்கம் 'Parippida Mission' திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீட்டுவசதியை உறுதி செய்கிறது, 'Ardram' திட்டம், விலைவாசியை உயர்த்தாமல் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்மொழிகிறது. குறைந்த பட்சம் 1000 பள்ளிகள், 'Life' திட்டத்தின் கீழ் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் மேலும் இது வாழ்க்கைதிறன் நிலைமைகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தும். 'Haritha Keralam' என்றால் 'பசுமை கேரளா' என்று பொருள், இது கழிவு அகற்றலில் சிறந்த முறைகளை கண்டறிய முயற்சிக்கிறது மற்றும் கரிம காய்கறி விவசாயம், காடு மற்றும் நீர் வளங்களை பாதுகாப்பதை பிரபலப்படுத்துகிறது. அனைத்து திட்டங்களுக்கும் 5 ஆண்டு காலக்கெடு வைக்கப்பட்டுள்ளது.
Question 6
6. 2016 மிஸ் எர்த்(Miss Earth) கிரீடத்தை வென்ற கேத்ரீன் எஸ்பின்(Katherine Espin), எந்த நாட்டை சேர்ந்தவர் ?
A
பிலிப்பைன்ஸ்
B
ஈக்வடார்
C
கொலம்பியா
D
வெனிசுலா
Question 6 Explanation: 
பிலிப்பைன்ஸ்சில் உள்ள Mall of Asia Arena-வில் ஈக்வடார் நாட்டை சேர்ந்த கேத்ரீன் எஸ்பின்(Katherine Espin) 2016 மிஸ் எர்த்(Miss Earth) ஆக கிரீடம் சூட்டப்பட்டார். மதிப்புமிக்க இந்த பிறநாட்டு அழகு தலைப்பிற்காக உலகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட 83 போட்டியாளர்களுடன் “Empowered to make a Change” என்ற தலைப்பில் போட்டியிட்டார்.
Question 7
7. FIFA உலக கோப்பையின் கோப்பையை (World Cup trophy) வடிவமைத்த சில்வியோ காஸ்ஜானிகா(Silvio Gazzaniga), எந்த நாட்டை சேர்ந்தவர் ?
A
பிரான்ஸ்
B
ஜெர்மனி
C
இத்தாலி
D
பிரேசில்
Question 7 Explanation: 
1971 ஆம் ஆண்டு FIFA உலக கோப்பையின் கோப்பையை வடிவமைத்த மற்றும் உருவாக்கிய இத்தாலிய சிற்பி சில்வியோ காஸ்ஜானிகா(95)(Silvio Gazzaniga), சமீபத்தில் இத்தாலியின் மிலன் நகரில் காலமானார். மேலும் இவர் "Mr Cups " என்றும் அழைக்கப்படுகிறார், UEFA Cup மற்றும் UEFA Super Cup கோப்பைகளையும் வடிவமைத்தார் இவரே. FIFA World Cup கோப்பை, 18 காரட் திட தங்க கோப்பை மற்றும் சுமார் 6 கிலோ (அல்லது 13 பவுண்டுகள்) எடை கொண்டது. இரு வீரர்கள் முதுகில் உலகை சுமந்து கொண்டு தங்கள் கைகளை அகற்றி நீட்டி மகிழ்ச்சி கொள்ளும் தருணத்தை இக்கோப்பை சித்தரிக்கிறது.
Question 8
8. 2016 உலக சேமிப்பு தினத்தின் மையக்கரு(Theme) என்ன ?
A
A global celebration for saving
B
Shining a light on what people value
C
Saving, investment and planning for retirement
D
Grabbing hold of your financial future
Question 8 Explanation: 
நவீன பொருளாதாரத்திற்கும் தனி நபருக்கும் சேமிப்பு எவ்வளவு அவசியம் என்பது குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்க அக்டோபர் 31 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக சேமிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் சேமிப்பின் முக்கியத்துவம் மற்றும் ஒவ்வொரு வைப்புத்தொகையாளரும் அதன் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்காற்றுகின்றனர் என்ற முக்கிய தலைப்புகளில் கவனம் செலுத்தவுள்ளனர். 2016 ஆம் ஆண்டுக்கான மையக்கரு 'Grabbing hold of your financial future' ஆகும்.
Question 9
9. "Sampriti-2016" கூட்டு இராணுவ பயிற்சி இந்தியாவிற்கும், எந்த நாட்டுக்கும் இடையே நடத்தப்படும் ?
A
மியான்மர்
B
வங்க தேசம்
C
இத்தாலி
D
வெனிசுலா
Question 9 Explanation: 
"Sampriti-2016" எனும் கூட்டு இராணுவ பயிற்சி இந்தியாவிற்கும், வங்கதேசத்திற்கும் இடையே வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள தன்கைல் நகரில் நவம்பர் 5 முதல் 18 வரை நடத்தப்படும். இந்த பயிற்சியானது, இரு நாட்டு படைகளும் கூட்டிணைந்து கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் உருவகப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி மேற்கொள்ளும் இறுதி பயிற்சியுடன் நிறைவடையும்.
Question 10
10. "Immortal " என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ?
A
அஜய் கோட்டியன்
B
கிருஷ்ணா உதயசங்கர்
C
நிகிதா தேஷ்பாண்டே
D
உமாங் ஜேத்வா
Question 10 Explanation: 
“Immortal: Death is certain for all who are born…or is it? என்ற புத்தகம் கிருஷ்ணா உதயசங்கர் என்பவரால் எழுதப்பட்டது. மஹாபாரதத்தில் சபிக்கப்பட்ட அழிவற்ற போர்வீரனான அஸ்வத்தம்மன், பேராசிரியர் பரத்வாஜ் என்ற போர்வையில் பூமியில் அலைந்து திரியும் கதை இது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!