Tnpsc Tamil Current Affairs Quiz Questions 30th September 2016

Tnpsc Tamil Current Affairs 30th September 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 30th September 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. உயிரி பொருளாதாரம் (Bioeconomy) மீதான தேசிய மிஷன் இந்தியாவின் எந்த நகரத்தில் தொடங்கப்பட்டது ?
A
ஷில்லாங்
B
கவுகாத்தி
C
கொச்சி
D
புது தில்லி
Question 1 Explanation: 
உயிரி வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சி நிறுவனம்(Institute of Bio-resources and Sustainable Development - IBSD), உயிரி பொருளாதாரம் (Bioeconomy) மீதான தேசிய மிஷனை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் மேகாலயாவின் ஷில்லாங்கில் முன்னெடுத்துள்ளது. இப்பணியின் நோக்கம், உயிர் வளங்களை பயன்படுத்துவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவதாகும். பணி அறிவு சார்ந்த அணுகுமுறைகள் மூலம் உணவு, உயிர் சார்ந்த பொருட்கள் மற்றும் உயிர் ஆற்றல் ஆகியவற்றுக்கு புதுப்பிக்கத்தக்க உயிரியல் ஆதாரங்களை நிலையாக பயன்படுத்துவதில் இந்த மிஷன் கவனம் செலுத்தவுள்ளது.
Question 2
2. இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் (Boxing Federation of India) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் யார் ?
A
அஜய் சிங்
B
ராகேஷ் தக்ரான்
C
சுஷ்மிதா ஜோதி
D
ரோஹித் ஜெய்நேன்த்ரா ஜெயின்
Question 2 Explanation: 
ஸ்பைஸ்ஜெட் விமான தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான அஜய் சிங், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின்(Boxing Federation of India) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Question 3
3. இஸ்ரோ, எந்த ராக்கெட் வாகனம் மூலம் வானிலை செயற்கைக்கோளான SCATSAT-1 யை  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ?
A
PSLV-C36
B
PSLV-C34
C
PSLV-C35
D
PSLV-C37
Question 3 Explanation: 
கடல் மற்றும் காலநிலை தொடர்பான ஆய்வுகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் SCATSAT-1 எனும் வானிலை செயற்கைகோளை PSLV-C35 ராக்கெட் மூலம் ஆந்திரபிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஒரு செயற்கைகோளின் பகுதியை இருவேறு சுற்றுப்பாதையில் செலுத்தும் முதல் PSLV ராக்கெட் இதுவேயாகும். SCATSAT-1 செயற்கைகோளின் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். SCATSAT-1 தவிர, புவி கூர்நோக்கு, தொலை உணர்வு மற்றும் தொழில்நுட்ப விளக்கம் ஆகியவற்றிற்காக அல்ஜீரியாவின் 3 சிறிய செயற்கைகோள்களும், அமெரிக்க நிறுவனத்தின் உயர்தெளிவுடன் படம் பிடிக்கும் வணிகரீதியிலான ஒரு மைக்ரோ செயற்கைக்கோளும், விண்வெளி குப்பைகளை குறைக்கும் முயற்சிக்காக கனடாவின் NLS-19 நானோ செயற்கைக்கோளும், IIT- மும்பை மற்றும் பெங்களூர் PES பல்கலைக்கழகத்தின் இரண்டு செயற்கைகோள்களும் இதில் அனுப்பப்பட்டுள்ளன.
Question 4
4. "Tianyan" எனப்படும் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி எந்த நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது ?
A
அமெரிக்கா
B
ஜெர்மனி
C
சீனா
D
ஆஸ்திரேலியா
Question 4 Explanation: 
"Tianyan" எனப்படும் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை கிசோவ் மாகாணத்தில் சீனா நிறுவியுள்ளது. இந்த ரேடியோ தொலைநோக்கி Five-hundred-metre Aperture Spherical Telescope (FAST) என்றும் அழைக்கப்படுகிறது. FAST-ன் நோக்கமானது, பிரபஞ்ச வளர்ச்சியின் விதிகளைப் கண்டறிதல் ஆகும். மேலும் இது, விண்மீன் சார்ந்த ரேடியோ உமிழ்வு, ஈர்ப்பு அலைகள், கிரக நாகரீகங்களின் திறனுள்ள சிக்னல்களை பற்றிய படிப்பிற்கும் பயன்படுத்தப்படும்.
Question 5
5. பிங்கி பல்ஹாரா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
செஸ்
B
குத்துச்சண்டை
C
ஜூடோ
D
குராஷ்
Question 5 Explanation: 
இந்தியாவை சேர்ந்த பிங்கி பல்ஹாரா, வியட்நாமின் தா நங்கில் நடைபெற்ற 2016 ஆசிய பீச் விளையாட்டுப்போட்டியின் 5வது பதிப்பில், குராஷ் மகளிர் 52 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் அரையிறுதியில் வியட்நாமின் Nguyen Thi Thanh Thuy உடன் தோல்வியுற்ற பிறகு இப்பதக்கம் வென்றார். இப்போட்டியில் வியட்நாமின் Nguyen Thi Thanh Thuy தங்க பதக்கமும், மற்றொரு வியட்நாம் வீராங்கனை Nguyen Thi Quynh வெள்ளி பதக்கமும் வென்றனர். குராஷ் என்பது மல்யுத்ததின் பழமையான வடிவம் ஆகும். இதன் பிறப்பிடம் உஸ்பெகிஸ்தான்.
Question 6
6. முதல் பிரிக்ஸ் U17 கால்பந்து போட்டி இந்தியாவின் எந்த மாநிலத்தில் நடைபெறவுள்ளது ?
A
மகாராஷ்டிரா
B
தமிழ்நாடு
C
அரியானா
D
கோவா
Question 6 Explanation: 
முதல் பிரிக்ஸ் U17 கால்பந்து போட்டி கோவாவில் 2016 அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது. சமீபத்தில் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்(தனி பொறுப்பு) BRICS U-17 கால்பந்து போட்டிக்கான சின்னத்தின்(Logo) Tagline-யை வெளியிட்டார். Tagline “India for Football” ஆனது, விளையாட்டில் உள்ள உத்வேகத்தை அடையாளப்படுத்த பொருத்தமான ஒன்றாக உள்ளது.
Question 7
7. சர்வதேச கடல்படுக்கை ஆணையத்தின் (International Seabed Authority - ISA) தலைமையகம் எங்குள்ளது ?
A
நியூயார்க்
B
பெர்லின்
C
கிங்ஸ்டன்
D
ஜெனீவா
Question 7 Explanation: 
சமீபத்தில், மத்திய புவிஅறிவியல் அமைச்சகமானது (MoES), இந்திய பெருங்கடலில் Poly-Metallic Sulphides (PMS) குறித்த ஆய்வுபயணம் மேற்கொள்ள சர்வதேச கடல்படுக்கை ஆணையத்துடன் (ISA) 15 வருட ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இந்த 15 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், இந்திய பெருங்கடலில் ஒதுக்கப்பட்ட பகுதியில் PMS ஆய்விற்கு இந்தியாவிற்கு பிரத்தியேக உரிமைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இது சீனா, கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட மற்ற நாடுகள் தீவிரமாக இருக்கும் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் இருப்பையும் அதிகரிக்கும். கடல்சார் சட்டங்களுக்கு உட்பட்டு அதன் கீழ் அமைக்கப்பட்ட நிறுவனம் ISA ஆகும் இதில் இந்தியாவும் இரு உறுப்பு நாடாக உள்ளது. இதன் தலைமையகம் ஜமைக்காவின் கிங்க்ஸ்டனில் உள்ளது.
Question 8
8. 2026 ஆசிய விளையாட்டுப்(2026 Asian Games) போட்டியினை எந்த நாடு நடத்தவுள்ளது ?
A
சீனா
B
இந்தியா
C
ஜப்பான்
D
இந்தோனேஷியா
Question 8 Explanation: 
ஆசிய ஒலிம்பிக் குழு (OCA - Olympic Council of Asia) சமீபத்தில், 2026 ஆசிய விளையாட்டுப்போட்டிகள் ஜப்பான் மூலம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே, 2018 ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெறும் என்றும், 2022 ஆசிய விளையாட்டு சீன நகரமான Hangzhou-ல் நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டு விட்டது.
Question 9
9. சமீபத்தில் மறைந்த அர்னால்ட் பால்மர், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
கோல்ப்
B
கிரிக்கெட்
C
மல்யுத்தம்
D
டேபிள் டென்னிஸ்
Question 9 Explanation: 
புகழ்பெற்ற கோல்ப் வீரரான அர்னால்ட் பால்மர்(81), சமீபத்தில் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் காலமானார். கோல்ப் ராஜா என்றழைக்கப்படும் இவர், 1960களில் ஜாக் நிக்கலாஸ் மற்றும் கேரி பிளேயருடன் இணைந்து “The Big Three” யின் ஒரு பகுதியாக விளங்கினார். ஜாக் நிக்கலாஸ் மற்றும் கேரி பிளேயர் ஆகிய இருவரும் உலகம் முழுவதிலும் விளையாட்டை பரவலாக பிரபலப்படுத்துவது மற்றும் வணிகப்படுத்துதலில் கவனம் செலுத்தினர்.
Question 10
10. மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின்(Central Industrial Security Force - CISF) புதிய இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
எம் மகாதேவன்
B
ஆர் கே பச்நந்தா
C
ஓ பி சிங்
D
குமார் சக்தி சேகர்
Question 10 Explanation: 
1983-தொகுதி(Batch) உத்தரப் பிரதேச அதிகாரி ஓ பி சிங், மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின்(Central Industrial Security Force - CISF) புதிய இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனவரி 2020 வரை இப்பதவியில் நீடிப்பார். CISF என்பது இந்தியாவிலுள்ள முக்கிய சிவில் விமான நிலையங்கள் மற்றும் அணு மற்றும் விண்வெளி மையங்களை பாதுகாக்கும் துணை ராணுவப்படை ஆகும். முன்னதாக இவர், தேசிய பேரிடர் படையின்(NDRF) டி.ஜி.யாக பணியாற்றினார்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.
Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!