Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 3rd November 2016

Tnpsc Tamil Current Affairs 3rd November 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 3rd November 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. கல்வி மற்றும் கற்றலில் ICT தோற்றத்தை தத்தெடுப்பதற்கான சர்வதேச கருத்துக்களம்( International Forum on Adopting an ICT Perspective to Education and Learning) எந்த நகரில் தொடங்கியது ?
A
புது தில்லி
B
புனே
C
பெங்களூரு
D
சென்னை
Question 1 Explanation: 
கல்வி மற்றும் கற்றலில் ICT தோற்றத்தை தத்தெடுப்பதற்கான சர்வதேச கருத்துக்களம்( International Forum on Adopting an ICT Perspective to Education and Learning) புது தில்லியில் அக்டோபர் 31-ம் தேதி தொடங்கியது, இது நவம்பர் 4, 2016 வரை நடைபெறும். இந்த கருத்துக்களத்தை International Bureau of Education (IBE) அமைப்பும், கூகிள் உடன் இணைந்து UNESCO-வும் நடத்துகின்றன. இந்த சர்வதேச நிகழ்ச்சியில் ஜர்பைஜான், போட்ஸ்வானா, எகிப்து, காபோன், இந்தியா, லித்துவேனியா, ஓமன், சீசெல்சு, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இந்த களம் குறிப்பாக UNESCO உருவாக்கிய General Education Quality Analysis Framework (GEQAF)-யை செயல்படுத்தும் நாடுகளை கவனம் செலுத்த உள்ளது.
Question 2
2. எந்த வங்கி ஊதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, வீட்டுக் கடன் மிகைப்பற்று வசதியை(home loan overdraft facility) தொடங்கியுள்ளது ?
A
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
B
ஐசிஐசிஐ வங்கி
C
ஆக்சிஸ் வங்கி
D
ஹெச்டிஎப்சி வங்கி
Question 2 Explanation: 
ஐசிஐசிஐ வங்கி, ஊதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு “ICICI Bank Home Overdraft” வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம், வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட தேவைக்காக சொத்துக்களை(Against Property) வைத்து ரூ. 1 கோடி வரை கடன் பெற இயலும். Home Overdraft வசதியில் குறைந்தபட்ச கடன் தொகை ரூ. 5 லட்சம் மற்றும் அதிகபட்ச கடன்தொகை ரூ. 1 கோடி. வாடிக்கையாளர்கள் மொத்த தொகையில், குறைந்தபட்சம் 10% -யை கால கடனாகவும்(Term Loan), மிகை பற்றாக அதிகபட்சமாக 90%-யையும் பெற முடியும்.
Question 3
3. இந்திய ரயில்வேயின் "Swachh Rail Mission" திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
நிதின் பாட்டீல்
B
பிந்தேஸ்வர் பதக்
C
வர்ஷா சர்மா
D
நிஷாந்த்
Question 3 Explanation: 
ரயில் நிலையங்ககளில் தூய்மையை ஊக்குவிக்கும் இந்திய ரயில்வேயின் "Swachh Rail Mission" திட்டத்தின் தூதராக பிந்தேஸ்வர் பதக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முயற்சி, ரயில்வேயில் தூய்மையை செயல்படுத்த உதவும். பிந்தேஸ்வர் பதக், இந்தியா-சார்ந்த சமூக சேவை அமைப்பான Sulabh International-இன் நிறுவனர். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் சில முக்கிய இரயில் நிலையங்களை சுத்தம் செய்யும் பணி Sulabh International-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முன்னோட்ட திட்டத்தில், Sulabh நிறுவனம் ஐந்து முக்கிய இரயில் நிலையங்களில் சுத்தம் மற்றும் பராமரிப்பு பணியை செப்டம்பரில் தொடங்கியது. அந்த ரயில் நிலையங்களாவன : கோரக்பூர், பழைய தில்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத் மற்றும் குவாலியர்.
Question 4
4. தென் கொரியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
A
யிம் ஜாங்-யோங்
B
யுங் யோங்-குக்
C
கிம் பியூங்-ஜூன்
D
சோய் ஸூன் சில்
Question 4 Explanation: 
தென் கொரியாவின் புதிய பிரதமராக கிம் பியூங்-ஜூன், நவம்பர் 02, 2016 ம் தேதி நியமிக்கப்பட்டார். இவர், Hwang Kyo-ahn-னின் இடத்தை நிரப்புகிறார். ஜனாதிபதி Park Geun-hye, அவரது நிர்வாகத்தில் நம்பிக்கையை மீண்டும் கொண்டுவரும் முயற்சியாக , 2016 இடையில் தென் கொரிய அரசியலில் ஊழல் செய்த பிரதமரான Hwang Kyo-ahn-யை பதவியில் இருந்து நீக்கினார்.
Question 5
5. உலக சைவ உணவு பழக்கம் நாள்(World Vegan Day) எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது ?
A
நவம்பர் 2
B
நவம்பர் 4
C
நவம்பர் 1
D
நவம்பர் 3
Question 5 Explanation: 
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ம் தேதி விற்பனை கூடங்கள் அமைத்தும், போட்லக்ஸ் நடத்தியும், சைவ உணவு பழக்கம் நன்மையளிக்கும் வகையில் மனிதர்கள், மனிதர் அல்லாத மிருகங்கள் மற்றும் இயற்கை சூழல் ஆகியவற்றிற்காக நினைவு மரங்களை நட்டும் உலக சைவ உணவு பழக்கம் நாள்(World Vegan Day) அனுசரிக்கப்படுகிறது.
Question 6
6. 2016 பஹ்ரைன் சர்வதேச ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் வென்றவர் யார் ?
A
பிரதுல் ஜோஷி
B
விக்னேஷ் தேவ்லேகர்
C
ரோஹன் கபூர்
D
ஆதித்யா ஜோஷி
Question 6 Explanation: 
இந்திய பாட்மிண்டன் வீரர் பிரதுல் ஜோஷி, பஹ்ரைனில் உள்ள செகய்யாவில் நடைபெற்ற 2016 பஹ்ரைன் சர்வதேச ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் ஆதித்யா ஜோஷியை 21-17, 12-21, 21-15 என்ற புள்ளிகளில் தோற்கடித்து பட்டம் வென்றார்.
Question 7
7. “Saur Sujala Yojana” என்ற திட்டம் இந்தியாவின் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது ?
A
மத்தியப் பிரதேசம்
B
ராஜஸ்தான்
C
சட்டிஸ்கர்
D
சிக்கிம்
Question 7 Explanation: 
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் “Saur Sujala Yojana” என்ற திட்டத்தை சட்டிஸ்கரின் நயா ராய்ப்பூரில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம், விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் பாசன குழாய்கள் மானிய விலையில் வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்திய முதல் மாநிலம் சட்டிஸ்கர் ஆகும். இத்திட்டத்தின் கீழ், ரூ 3.5 லட்சம் மற்றும் ரூ 4.5 லட்சம் மதிப்புள்ள சூரிய சக்தியில் இயங்கும் 3HP மற்றும் 5HP திறன் கொண்ட பாசன குழாய்கள் மார்ச் 31, 2019-க்குள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். பயனாளிகளுக்கு மானிய விலையில் குழாய்கள் கிடைக்கும்.
Question 8
8. சமீபத்தில் வெளியிடப்பட்ட 'ஃபோர்ப்ஸ் ஃபேப் 40' மிகவும் மதிப்புமிக்க இந்திய விளையாட்டு வீரர்கள் பட்டியலில் எந்த வீரர் முதலிடத்தில் உள்ளார் ?
A
சாக்ஷி மாலிக்
B
சானியா மிர்சா
C
பி.வி.சிந்து
D
மகேந்திர சிங் தோனி
Question 8 Explanation: 
சமீபத்தில் ஃபோர்ப்ஸ் ஃபேப் 40 வெளியிட்ட மதிப்புமிக்க இந்திய விளையாட்டு வீரர்கள் பட்டியலில், இந்தியாவின் ODI, T20 கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலிடத்தில் உள்ளார். சுவிஸ் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், மதிப்புமிக்க உலக விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஃபோர்ப்ஸ் ஃபேப் 40 பட்டியல் தனித்தன்மை வாய்ந்தது, இது பல்வேறு செயல்முறைகளை பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளையாட்டுகள், விளையாட்டு வீரர்கள், அணிகள் மற்றும் நிகழ்வுகளின் தர மதிப்பை கணக்கிடுகிறது மற்றும் உலகின் மிக துல்லியமான பட்டியல்களில் இது ஒன்றாகும்.
Question 9
9. எந்த இந்திய மாநிலம், முதன் முதலாக அதன் அனைத்து மாவட்டங்களிலும் இணைய காவல் நிலையங்களை(cyber police stations)  தொடங்க இருக்கிறது ?
A
மத்தியப் பிரதேசம்
B
அசாம்
C
மகாராஷ்டிரா
D
ஒடிசா
Question 9 Explanation: 
இந்தியாவில் முதன்முறையாக மகாராஷ்டிரா மாநிலம், இணைய குற்றவாளிகளை(cyber criminals) கண்டுபிடிக்க அதன் அனைத்து மாவட்டங்களிலும் இணைய காவல் நிலையங்களை(cyber police stations) தொடங்க இருக்கிறது. மாவட்ட அளவில் சைபர் குற்றங்கள் தொடர்பான எந்த ஒரு குற்றமும் இந்த காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும். இன்னும் சில நகரங்களில் கூடுதல் இணைய காவல் நிலையங்கள் அமைக்கபட உள்ளது. மேலும் காவல்துறை கமிஷனர் மற்றும் ரேஞ்ச் ஐஜி அலுவலகங்களிலும் சைபர் போலீஸ் நிலையங்கள் அமைக்கபட உள்ளது.
Question 10
10. “Harp” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டுள்ளது ?
A
நிதி டால்மியா
B
நவீனா விஜயன்
C
அனிதா நாயர்
D
சுரேஷ் மேனன்
Question 10 Explanation: 
“Harp” என்ற புத்தகம் நிதி டால்மியா என்பவரால் எழுதப்பட்டுள்ளது. அசோக் என்பவர், தான் என்ன ஆக வேண்டும், அவரிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதற்கிடையே அகப்பட்டு கிடக்கும் கதையை கூறுகிறது. இது முழுக்க முழுக்க ஒருவரின் வாழ்க்கையுடன் தொடர்புடையது, நம்மில் பலர் அந்த நிலையில் இருந்திருப்போம் அல்லது இருப்போம்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.
Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!