Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 4th November 2016

Tnpsc Tamil Current Affairs 4th November 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 4th November 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. எந்த நாடு புகையிலை கட்டுப்பாடு குறித்த 7வது அமர்வு மாநாட்டை(Conference of Parties (COP7)) நடத்தவுள்ளது ?
A
இந்தியா
B
அமெரிக்கா
C
பிரான்ஸ்
D
நேபாளம்
Question 1 Explanation: 
இந்தியா, புகையிலை கட்டுப்பாடு குறித்த 7வது அமர்வு மாநாட்டை(Conference of Parties (COP7)) நவம்பர் 7-12, 2016ல் இருந்து உத்திரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள India Exposition Mart-யில் நடத்தவுள்ளது. இந்த மாநாடு, மற்ற நாடுகளில் இருந்து கற்றுக்கொள்ளவும், புகையிலை நுகர்வை பரிசோதிக்க இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை வெளிப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும். 180 நாடுகளில் இருந்து 1500 க்கும் அதிகமான பிரதிநிதிகள் மற்றும் இவர்களுடன், ஜெனீவாவின் WHO FCTC செயலகத்துடன் அதிகாரபூர்வ தொடர்பு கொண்ட பிற கண்காணிப்பாளர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Conference of Parties (COP) மாநாடு இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். WHO Framework Convention on Tobacco Control (FCTC) என்பது, அனைத்து மக்களுக்கும் மிக உயர்ந்த தரமான சுகாதார உரிமையை அங்கீகரிக்கும், முதல் உலகளாவிய ஆதாரம் சார்ந்த பொது சுகாதார உடன்படிக்கையாகும்.
Question 2
2. “Pradhan Mantri Surakshit Matritva Abhiyan” திட்டம், எந்த மத்திய அமைச்சரால் புது தில்லியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது ?
A
மேனகா காந்தி
B
எம். வெங்கையா நாயுடு
C
நரேந்திர மோடி
D
ஜகத் பிரகாஷ் நட்டா
Question 2 Explanation: 
கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார வசதிகளை மேம்படுத்த, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா “Pradhan Mantri Surakshit Matritva Abhiyan” திட்டத்தை சமீபத்தில் புது தில்லியில் அறிமுகம் செய்து வைத்தார். இத்திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு இலவச சுகாதார பரிசோதனைகளும், மாதத்தின் ஒவ்வொரு 9-ஆம் தேதி இலவசமாக தேவையான சிகிச்சைகளும் வழங்கப்படும். இத்திட்டம், இந்தியா முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கும் பொருந்தும்.
Question 3
3. எந்த பாலிவுட் பிரபலத்திற்கு,  2016 துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் (DIFF) வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபட உள்ளது ?
A
அமிதாப் பச்சன்
B
யாஷ் ராஜ் சோப்ரா
C
ரேகா
D
ஜீதேந்தரா
Question 3 Explanation: 
2016 டிசம்பர் 7-14 இல் நடைபெறவுள்ள துபாய் சர்வதேச திரைப்பட விழாவின் (DIFF) 13-வது பதிப்பில், பாலிவுட் நடிகை ரேகாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.
Question 4
4. மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய 'ஜங்கிள்  சஃபாரி(Jungle Safari)' இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
A
மத்தியப் பிரதேசம்
B
சட்டிஸ்கர்
C
ராஜஸ்தான்
D
உத்தரப் பிரதேசம்
Question 4 Explanation: 
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சட்டிஸ்கர் மாநிலத்தின் நயா ராய்ப்பூரில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய 'ஜங்கிள் சஃபாரி(Jungle Safari)'யை தொடக்கி வைத்தார். கிட்டத்தட்ட 800 ஏக்கரில் இந்த நந்தன்வன் மிருகக்காட்சி சாலை மற்றும் சஃபாரி உள்ளது. நினைவுச்சின்ன மண்டலம், பார்க்கிங் மண்டலம், நிர்வாக மண்டலம், நீர் மண்டலம், காத்திருக்கும் மண்டலம், மிருகக்காட்சி மண்டலம், சபாரி மண்டலம், மேலாண்மை மண்டலம் என 8 மண்டலங்களாக இந்த ஜங்கிள் சஃபாரி பிரிக்கப்பட்டுள்ளது. இது, இயற்கை சூழலில் சுதந்திரமாக நடமாடும் காட்டு விலங்குகளை கொண்டுள்ளது. சூழல்-நட்பு வாகனங்கள்(eco-friendly vehicles) மூலம், பார்வையாளர்கள் இயற்கை அழகு மற்றும் வனவிலங்குகளின் வாழ்கையை பார்வையிட அழைத்து செல்லப்படுவார்கள். இந்த ஜங்கிள் சஃபாரிக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 10,000 பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர். புலிகள், சிங்கங்கள், கரடிகள் மற்றும் பிற காட்டு விலங்குகளை இந்த சஃபாரியில் காண முடியும். மேலும், இந்த சஃபாரி, தாவரம் உண்ணும் விலங்குகள் மற்றும் மாமிசம் உண்ணும் விலங்குகள் என தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
Question 5
5. மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க LinkedIn நிறுவனம், எந்த மத்திய அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது ?
A
Ministry of Skill Development and Entrepreneurship
B
Ministry of Home Affairs
C
Ministry of Women and Child Development
D
Ministry of Human Resource Development
Question 5 Explanation: 
இந்திய மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க LinkedIn நிறுவனம், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, All India Council for Technical Education (AICTE)-ல் இணைக்கப்பெற்ற அனைத்து இந்திய கல்லூரிகளும் LinkedIn நிறுவனத்தின் ‘Placements’ தயாரிப்புகளை ஏற்றுக்கொள்ளும். இந்த வேலைவாய்ய்பு தயாரிப்புகள், மாணவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் எந்த கல்லூரியில் இருந்தாலும் ஆன்லைன் மதிப்பீடு சோதனைகள் செய்து, இந்தியாவின் 35-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை நேரடியாக அணுக உதவும். இது அனைத்து மாணவர்களுக்கும் வேலைக்கான ஒரு விளையாட்டு களத்தை வழங்குகிறது.
Question 6
6. 2016 சர்வதேச இந்திய திரைப்பட விழாவில்(IFFI), வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்படவுள்ள Kwon Taek Im எந்த நாட்டவர் ?
A
ஜப்பான்
B
தைவான்
C
தென் கொரியா
D
மலேஷியா
Question 6 Explanation: 
புகழ் பெற்ற தென் கொரிய இயக்குனர் Kwon Taek Im, கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் (IFFI) 47-வது பதிப்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளார். 2016 IFFI விழாவில் தென்கொரியா மிகவும் கவனிக்கத்தக்க நாடாக இருக்கும். ஏனெனில், இவ்விழாவில் தென் கொரிய படங்கள் திரையிடப்படும் மற்றும் நன்கு அறியப்பட்ட திரைப்பட நடிகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
Question 7
7. பிடார்கனிகா(Bhitarkanika) தேசிய பூங்கா இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
A
அசாம்
B
ஒடிசா
C
திரிபுரா
D
அருணாசலப் பிரதேசம்
Question 7 Explanation: 
ஒடிஷாவின் கென்ட்ராபரா(Kendrapara) மாவட்டத்தில் பிடார்கனிகா(Bhitarkanika) தேசிய பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா மிகவும் ஆற்றல் வாய்ந்த அதே நேரத்தில் உடையக்கூடிய தனித்துவமான சுற்றுசூழல் கொண்டது. டெல்டா, நதி முகப்பு, கடல், சதுப்பு நிலக் காடுகள், பறவை விலங்கினங்கள், ஊர்வன, நீர்நில வாழ்வன மற்றும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் ஆகியவை பூங்காவின் பல்லுயிரில்(Biodiversity) பங்களிக்கிறது. இது சமீபத்திய செய்திகளில் வரக்காரணம், யுனெஸ்கோ மூலம் நியமிக்கப்பட்ட, International Union for Conservation of Nature (IUCN) அமைப்பின் 2 உறுப்பினர்களை கொண்ட தொழில்நுட்ப மதிப்பீடு பணிக்குழு இந்த பூங்காவை பார்வையிட்டது. இந்த வருகையின் நோக்கம், பூங்காவின் தனித்துவமான சதுப்புநில சுற்றுச்சூழலின் பல்லுயிரின் ground-zeroவை மதிப்பீடு செய்வதற்காகும்.
Question 8
8. இந்தியத் தேர்தல் ஆணையம், வெளிநாடுவாழ் இந்திய குடிமக்கள் மத்தியில் உள்ள விழிப்புணர்வு நிலையை  மதிப்பீடு செய்ய ஆன்லைன் கணக்கெடுப்பை (Online Survey) எந்த நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தொடங்கியுள்ளது ?
A
Maulana Azad National Institute of Technology
B
Dakshina Bharat Hindi Prachar Sabha
C
Dr. B. R. Ambedkar National Institute of Technology
D
Tata Institute of Social Sciences
Question 8 Explanation: 
இந்தியத் தேர்தல் ஆணையம், வெளிநாடுவாழ் இந்திய குடிமக்கள் மத்தியில் வாக்குப்பதிவு, வாக்களிக்கும் முறை பற்றிய விழிப்புணர்வு நிலையை அறிய மற்றும் அவர்கள் வாக்களிக்க விரும்பும் முறை பற்றி கருத்துகள் கேட்க, மும்பையை சேர்ந்த Tata Institute of Social Sciences நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஆன்லைன் கணக்கெடுப்பை(Online Survey) தொடங்கியுள்ளது. இந்த தனிப்பட்ட கணக்கெடுப்பின் நோக்கம், வெளிநாட்டு வாக்காளர்களின் பதிவு மற்றும் பங்கேற்பு விகிதங்களை ஆய்வு செய்வது மற்றும் தீர்மானிப்பதாகும். இந்த கணக்கெடுப்பு தகவல்களை பெறுவதற்கு மட்டுமின்றி, அவர்களின் வாக்களிக்கும் விருப்ப முறைகளை அரசு அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. இந்த கணக்கெடுப்பை www.everyvotecounts.in என்ற இணைய முகவரியில் பார்க்கலாம்.
Question 9
9. பேரிடர் அபாய குறைப்பு மீதான ஆசிய அமைச்சர்கள் கூட்டத்தின்  7வது பதிப்பு (Asian Ministerial Conference on Disaster Risk Reduction -AMCDRR) எந்த நகரத்தில் தொடங்கியது ?
A
அகர்தலா
B
புனே
C
கவுகாத்தி
D
புது தில்லி
Question 9 Explanation: 
பேரிடர் அபாய குறைப்பு மீதான ஆசிய அமைச்சர்கள் கூட்டத்தின் 7வது பதிப்பை (Asian Ministerial Conference on Disaster Risk Reduction -AMCDRR) பிரதமர் நரேந்திர மோடி புது தில்லியில் நவம்பர் 3-ஆம் தேதி துவக்கி வைத்தார், இது நவம்பர் 5, 2016 வரை நடைபெறும். இந்த மாநாடு, ஆசிய பிராந்தியத்தில் ஒரு கட்டமைப்பை செயல்படுத்த மற்றும் அதன் முன்னேற்றத்தை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை திட்டமிட வழிவகுக்கும். இந்திய அரசு (GOI), ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாய குறைப்பு அலுவலகத்துடன் (UNISDR) இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மாநாட்டின் நோக்கம், Sendai மாநாட்டில் அரசாங்கங்கள் மற்றும் பங்குதாரர்கள் உறுதிபூண்டவற்றை தேசிய மற்றும் உள்ளூர் நடவடிக்கைகளாக மாற்றுவதாகும். பேரிடர் அபாய குறைப்பை செயல்படுத்துவதில் அரசியல் மற்றும் பங்குதாரர்களின் அர்ப்பணிப்பை உறுதி செய்ய, ஆசிய பிராந்தியத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை AMCDRR மாநாடு நடைபெறும்.
Question 10
10. “Aware and Care” சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம் எந்த மாநில அரசால் தொடங்கப்பட்டது ?
A
உத்தரப் பிரதேசம்
B
கேரளா
C
பஞ்சாப்
D
கர்நாடகா
Question 10 Explanation: 
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சமீபத்தில் 100 தகவல் கல்வி தொடர்பாடல் (Information Education Communication (IEC)) மொபைல் வேன்களை கொடியசைத்து “Aware and Care” சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இந்த IEC வண்டிகளின் அடிப்படை நோக்கமானது, புற்றுநோய், ஹெபடைடிஸ் சி, கர்ப்பவாய்ப் புற்றுநோய் ஆகிய நோய்கள் பற்றி மக்களுக்கு தெரிவிப்பது மற்றும் இந்த நோய்கள் பாதிக்கப்பட்டு ஆரம்ப கட்டங்களில் உள்ள நோயாளிகளை குணப்படுத்த முயற்சி எடுப்பதாகும். மேலும் இந்த சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம், சுற்றுப்பகுதியில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றி மக்களுக்கு உணர்வூட்டும் நோக்கத்தோடு டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற நோய்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தவுள்ளது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.
Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!