Tnpsc Tamil Current Affairs Quiz Questions 7th October 2016

Tnpsc Tamil Current Affairs 7th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 7th October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. எந்த இந்திய துப்பாக்கி சுடும் வீரர், 2016 ISSF உலக கோப்பையில்  50 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில்  வெள்ளி வென்றுள்ளார் ?
A
ககன் நரங்
B
ரோஞ்சன் சோதி
C
ஜித்து ராய்
D
அபினவ் பிந்த்ரா
Question 1 Explanation: 
இந்திய துப்பாக்கி சுடும் வீரர் ஜித்து ராய், இத்தாலியின் போலோக்னாவில் நடந்த 2016 ISSF உலக கோப்பை 50 மீட்டர் பிஸ்டல் இறுதிஆட்டத்தில் வெள்ளி வென்றார். இதே நிகழ்வில் சீனாவின் வெய் பாங் தங்கமும், இத்தாலியின் கயுசெப்போ கியோர்டானோ வெண்கலமும் வென்றனர்.
Question 2
2. “The Ministry of Utmost Happiness” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டு வருகிறது ?
A
அருந்ததி ராய்
B
விக்ரம் சேத்
C
கிரண் தேசாய்
D
அரவிந்த் அடிகா
Question 2 Explanation: 
“The Ministry of Utmost Happiness” என்ற புத்தகம் அருந்ததி ராயால் எழுதப்பட்டு வருகிறது. இது ஜூன் 2017-ல் வெளியிடப்படவுள்ளது. கட்டுக்கதை சார்ந்த இந்த நாவல், ஹமிஷ் ஹாமில்டன் இங்கிலாந்து மற்றும் பெங்குயின் இந்தியா மூலம் வெளியிடப்பட இருக்கின்றது.
Question 3
3. பின்வரும்  எந்த பிரமுகர் 2016 அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளார் ?
A
மார்ட்டி அஹ்டிசாரி
B
ஜூவான் மானுவல் சாண்டோஸ்
C
ஷின்சோ அபே
D
ஷிரின் எபாடி
Question 3 Explanation: 
6 மில்லியன் மக்களை இடம்பெயர செய்த மற்றும் குறைந்தது 2,20,000 கொலம்பியா மக்களின் உயிர்களை பலிகொண்ட, நாட்டின் 50 ஆண்டு கால உள்நாட்டு போரை தனது உறுதியான முயற்சிகள் மூலம் முடிவுக்கு கொண்டு வந்ததற்காக 2016 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி ஜூவான் மானுவல் சாண்டோஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது. பெரும் கஷ்டங்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் இருந்தபோதிலும் சமாதானதை பெறுவதற்காக தங்கள் நம்பிக்கையை கைவிடாது உழைத்த கொலம்பியா மக்களுக்கும், சமாதான முன்னெடுப்புகளில் பங்களிப்பை அளித்தோருக்கும் கிடைத்த காணிக்கையாக இந்த பரிசு பார்க்கப்படுகிறது.
Question 4
4. 2016 காமன்வெல்த் நிதி அமைச்சர்கள் மாநாடு பின்வரும் எந்த நகரங்களில் நடைபெற்றது ?
A
ஜெனீவா
B
புது தில்லி
C
லண்டன்
D
வாஷிங்டன்
Question 4 Explanation: 
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியை தலைமையகமாக கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) காமன்வெல்த் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பாக தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில், “Economics of Climate Change and Financing Climate Adaptation and Mitigation” மற்றும் “International Taxation-a Commonwealth Conversation around the Panama Papers” ஆகிய இரு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. இது தவிர, ஜேட்லி BRICS’ Contingent Reserve Arrangement (CRA) ஆளும் கவுன்சில் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார். CRA என்பது குறுகிய கால சமநிலை பண அழுத்தத்திற்கு பதிலாக நீர்மைதன்மை மற்றும் முன்னெச்சரிக்கை வழிகள் மூலம் உதவி வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பு ஆகும்.
Question 5
5. பின்வரும் எந்த இந்தியா மாநில முதல்வருக்கு 2016-ம் ஆண்டின் நிலையான வளர்ச்சிக்கான தலைமை விருது (Sustainable Development Leadership Award - SDLA) வழங்கப்பட்டுள்ளது ?
A
ஓக்ரம் ஐபாபி சிங்
B
டி ஆர் ஜெய்லாங்
C
பவன் சாம்லிங்
D
நவீன் பட்நாயக்
Question 5 Explanation: 
சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி மூலம் சிக்கிமை இந்தியாவின் முதல் மற்றும் ஒரே இயற்கை விவசாய மாநிலமாக மாற்றிய அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங்கின் தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டியூட் (The Energy and Resources Institute - TERI) நிறுவனம் அவருக்கு 2016-ம் ஆண்டின் நிலையான வளர்ச்சிக்கான தலைமை விருது (Sustainable Development Leadership Award - SDLA) வழங்கியுள்ளது. புது தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாட்டில் (World Sustainable Development Summit - WSDS) ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மூலம் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.
Question 6
6. பின்வரும் எந்த மாநிலத்தில் இந்தியாவின் முதல் மருத்துவப்பூங்கா அமைக்கப்படவுள்ளது ?
A
உத்தரப் பிரதேசம்
B
தமிழ்நாடு
C
ஒடிசா
D
அருணாசலப் பிரதேசம்
Question 6 Explanation: 
இந்தியாவின் முதல் மருத்துவ தொழில்நுட்ப உற்பத்தி பூங்காவை(Medipark) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டில் 330.10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்க HLL Care (mini ratna Public Sector Undertaking (PSU) ) நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருத்துவ பூங்கா திட்டம் மூலம் குறைந்த செலவில் உயர்தர உபகரணங்களை உள்ளூரிலே உற்பத்தி செய்ய இயலும். இதன் விளைவாக சரியான விலையில் சுகாதார விநியோகம், குறிப்பாக டயக்னோஷ்டிக் வசதிகளை பல்வேறு மக்களுக்கு வழங்க முடியும். இது அடுத்த 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Question 7
7. இளம் வாக்காளர்களை பதிவு செய்வதற்கு, இந்திய தேர்தல் ஆணையம் பின்வரும் எந்த சமூக வலைப்பின்னல் தளத்தின் ஒத்துழைப்பை நல்கியுள்ளது ?
A
இன்ஸ்டாகிராம்
B
பேஸ்புக்
C
ட்விட்டர்
D
யூ டுயூப்
Question 7 Explanation: 
இந்திய தேர்தல் ஆணையம் அதன் முதல் முயற்சியாக, 2017- ல் தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களில் உள்ள இளம் வாக்காளர்களை பதிவு செய்வதற்கு பேஸ்புக்குடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த வாக்காளர் பதிவின் நோக்கம் இளைஞர்களை ஜனநாயக கடமையை ஆற்றவதில் பங்கேற்க ஊக்குவிப்பதே ஆகும். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட பேஸ்புக் பயனர்களின் நியூஸ்பீடில் அக்டோபர் 6 முதல் 9 வரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான நினைவூட்டல் தோன்றும். அதில் ‘Register Now’ பொத்தானை அழுத்துவதன் மூலம் பயனர்கள் தேசிய வாக்காளர் சேவைகள் தளத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள். பதிவு செய்வதற்கு அவர்கள் அதில் வழி நடத்தப்படுவர்.
Question 8
8. பின்வரும் எந்த இந்திய நகரம், பேரிடர் அபாய குறைப்பு  (Asian Ministerial Conference on Disaster Risk Reduction - AMCDRR) மீதான 2016 ஆசிய கூட்டத்தை நடத்தவுள்ளது ?
A
லக்னோ
B
அகமதாபாத்
C
புது தில்லி
D
புனே
Question 8 Explanation: 
இந்திய (GOI) அரசாங்கம், புது தில்லியில் நவம்பர் 2-3ம் தேதி பேரிடர் அபாய குறைப்பு (Asian Ministerial Conference on Disaster Risk Reduction - AMCDRR) மீதான 2016 ஆசிய கூட்டத்தை நடத்தவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாய குறைப்பு அலுவலகத்துடன் (United Nations Office for Disaster Risk Reduction (UNISDR)) இணைந்து நடத்தவுள்ள இம்மாநாட்டினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கவுள்ளார். இந்த மாநாட்டின் நோக்கம், Sendai மாநாட்டில் அரசாங்கங்கள் மற்றும் பங்குதாரர்கள் உறுதிபூண்டவற்றை தேசிய மற்றும் உள்ளூர் நடவடிக்கைகளாக மாற்றுவதாகும்.
Question 9
9. எந்த குழு காவிரி ஆற்றுப்படுகை(Cauvery basin) சூழ்நிலையை மதிப்பீடு செய்ய ஏற்படுத்தப்பட்டிருக்கிறது ?
A
எம் என் ராவ் குழு
B
கே.கே. பால் குழு
C
ஜி.எஸ் ஜா குழு
D
ரகுவீர் போஸ் குழு
Question 9 Explanation: 
நீர்வள, நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புத்துணர்வு அமைச்சகம், கர்நாடகாவில் காவிரி ஆற்று படுகை மற்றும் தமிழ்நாட்டின் உட்பகுதியின் நிலையை அறிய உயர்மட்ட தொழில்நுட்ப குழு ஒன்றை அமைத்துள்ளது. மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ் ஜா, காவிரி கண்காணிப்பு குழுவிற்கு தலைமை தாங்குவார் மற்றும் அக்டோபர் 17, 2016 அன்று இக்குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
Question 10
10. 2016 பிரிக்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மூத்த அதிகாரபூர்வ கூட்டம் (Science & Technology Senior Official Meeting) இந்தியாவின்  எந்த நகரத்தில் நடைபெற்றது ?
A
புது தில்லி
B
ஜெய்ப்பூர்
C
போபால்
D
உதய்பூர்
Question 10 Explanation: 
பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அமைக்க மற்றும் நீண்டு பார்வையை வழங்க ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 6வது பிரிக்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மூத்த அதிகாரபூர்வ கூட்டம் (Science & Technology Senior Official Meeting) நடைபெற்றது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.
Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!