Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

Tnpsc Tamil Current Affairs Quiz Questions 8th and 9th October 2016

Tnpsc Tamil Current Affairs 8th and 9th October 2016

Congratulations - you have completed Tnpsc Tamil Current Affairs 8th and 9th October 2016. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1. சமீபத்தில் மறைந்த ஹெய்ஸ்னம் கன்ஹைலால்(Heisnam Kanhailal), எந்த துறையுடன் தொடர்புடையவர் ?
A
நாடகக்கலை
B
அறிவியல்
C
விளையாட்டு
D
அரசியல்
Question 1 Explanation: 
மணிப்பூரைச் சார்ந்த புகழ்பெற்ற நாடகக்கலை கலைஞர் ஹெய்ஸ்னம் (75) கன்ஹைலால், சமீபத்தில் மணிப்பூரின் இம்பாலில் காலமானார். கன்ஹைலால், நாடகக்கலை ஆய்வகமான "கலாக்சேத்ரா மணிப்பூர்" எனும் அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார். இந்த அமைப்பு ஏற்கனவே இருக்கும் நாடக மொழியில் புதிய சொல்லதிகாரத்தை ஆராய ஏற்படுத்தப்பட்டது. இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடக துறையில் பல சோதனை முயற்சிகளை செய்து தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார். மேலும் அதனை தனது சொந்த ஊருக்கு ஏற்ப வழங்கியுள்ளார்.
Question 2
2. Bathukamma திருவிழா இந்தியாவின் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது ?
A
கர்நாடகா
B
தெலுங்கானா
C
ஜார்க்கண்ட்
D
கேரளா
Question 2 Explanation: 
Bathukamma என்பது தெலுங்கானாவின் இந்து மத பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் ஒரு மலர் திருவிழா ஆகும். இந்த 9 நாள் திருவிழா, சரத் ருத்வின் துவக்கத்தை குறிப்பிடுகிறது. இந்த வருடம், தெலுங்கானா பெண்கள் Batukamma பாரம்பரிய விழாவில் அதிகளவில் பங்குபெற்று ஒரு புதிய உலக சாதனையை ஏற்படுத்தி இருக்கின்றனர். மாநிலத்தின் செழுமை மற்றும் கடவுளின் கருணை, ஆசீர்வாதம், மகிழ்ச்சி ஆகியவற்றை வேண்டி ஹைதராபாத்தின் லால் பகதூர் மைதானத்தின் மையத்தில் அமைக்கப்பட்ட 20 அடி பதுகம்மா மலர் போன்ற செட்டில்(Set) 9,292 பெண்கள் தங்கள் வழக்கமான நடனத்தை ஆடினர். இந்த கண்கவர் நிகழ்ச்சியானது மதிப்பு மிக்க கின்னஸ் புத்தகத்தில் தெலுங்கானா மாநிலத்திற்கு ஒரு இடத்தை பெற்று தந்துள்ளது.இதன் மூலம், ஓணம் பண்டிகையில் 5,211 கேரளா பெண்கள் கலந்து கொண்ட உலக சாதனையை தெலுங்கானா பெண்கள்(9292 பெண்கள் பங்கேற்பு) முறியடித்தனர்.
Question 3
3. இந்திய விமானப் படை ( Indian Air Force ) தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது ?
A
அக்டோபர் 9
B
அக்டோபர் 7
C
அக்டோபர் 8
D
அக்டோபர் 10
Question 3 Explanation: 
இந்திய விமானப்படை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சமீபத்தில், புனேவின் கதக்வாஸ்லா அருகில் உள்ள தேசிய பாதுகாப்பு மையத்தில்(National Defence Academy), இந்திய விமானப்படை தனது 84வது ஆண்டு நிறைவு விழாவை அக்டோபர் 8, 2016 அன்று பாரம்பரிய ஆடம்பரத்துடனும் கேளிக்கையுடனும் கொண்டாடியது. இந்திய வான்வெளியை பாதுகாக்கும் மற்றும் ஒரு மோதலின் போது வான்வழி போர் நடத்தும் ஒரு முக்கியப் பொறுப்பை பெற்றுள்ள IAF, உலகின் 4 வது பெரிய விமான படை ஆகும். இது அதிகாரபூர்வமாக 1932 அக்டோபர் 08 அன்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் துணை விமானப்படையாக துவங்கப்பட்டது. பின்னாளில், 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக "ராயல் இந்திய விமானப்படை" என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுந்திரம் பெற்ற பிறகு இப்படை இந்திய அரசாங்கத்திற்காக பணியாற்றியது. 1950-ல் இந்தியா குடியரசு ஆனபின் பெயருக்கு முன்னால் உள்ள "ராயல்" நீக்கப்பட்டு 'இந்திய விமானப்படை' என்று அழைக்கப்பட்டது.
Question 4
4. இந்தியாவின் முதலாவது சர்வதேச நடுவர் தீர்ப்பு மையம் எந்த நகரில் அமைக்கப்பட்டுள்ளது ?
A
புனே
B
மும்பை
C
புது தில்லி
D
கொச்சி
Question 4 Explanation: 
இந்தியாவின் முதலாவது சர்வதேச நடுவர் தீர்ப்பு மையம் அக்டோபர் 8, 2016 அன்று மும்பை, மகாராஷ்டிராவில் திறக்கப்பட்டது. பல்வேறு நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு இடையேயான உலகளவிலான பூசல்களில் உதவும் மும்பை சர்வதேச நடுவர் தீர்ப்பு மையத்தினை (The Mumbai Centre for International Arbitration - MCIA) மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார். உலகத்தரம் வாய்ந்த இந்த வசதி, நாடுகடந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் செயலாக்கத்தில் வெளிப்படையான தன்மை, பொறுப்பு மற்றும் நம்பகத்தன்மையை கொண்டுவரும். இப்போது வரை, இந்தியாவிற்கு மிக அருகிலுள்ள நடுவர் மையமாக சிங்கப்பூர் இருக்கிறது.
Question 5
5. Biopharmaceutical Competitiveness & Investment (உயிரி மருத்தக போட்டி மற்றும் முதலீடு- BCI) மதிப்பாய்வில் இந்தியாவின்  தரம் என்ன ?
A
28 வது
B
33 வது
C
10 வது
D
19 வது
Question 5 Explanation: 
Biopharmaceutical Competitiveness & Investment (BCI) மதிப்பீட்டின்படி, 28 நாடுகளில் 100க்கு 59 மதிப்பெண்ணுடன் இந்தியா 19வது இடத்தில் உள்ளது. அறிவியல் திறன்கள் மற்றும் உள்கட்டமைப்பு, மருத்துவ ஆராய்ச்சி நிலைமைகள் மற்றும் மாதிரி அமைப்புகள் ஆகிய இரு ஸ்டார்ட் ஆப் பகுதிகளை தவிர கிட்டத்தட்ட அனைத்து அளவீடுகளிலும் இந்தியா மிகக்குறைந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளது. பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், அதனை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் சுவிச்சர்லாந்தும் உள்ளன. இந்த தர வரிசையானது, Pharmaceutical Research and Manufacturers of America நிறுவனத்தின் 3வது BCI பதிப்பின் ஒரு பகுதியாகும் இது Pugatch Consilium மூலம் செயல்படுத்தப்பட்டது. இது அறிவுசார்ந்த பயோமெடிக்கல் கண்டுபிடிப்பு மற்றும் அதன் பாதுகாப்பை சார்ந்தது போன்று தெரிகிறது.
Question 6
6. 2016 உலக தபால் தினத்தின் (World Post Day - WPD) மையக்கரு என்ன ?
A
Tell us about the world you want to grow up in
B
Write a letter describing how music can touch lives
C
The Post: Delivering for People and Businesses Daily
D
Innovation, Integration and Inclusion
Question 6 Explanation: 
சுவிட்சர்லாந்தின் பெர்னில் 1874 ஆம் ஆண்டு உலக அஞ்சல் ஒன்றியம்(Universal Postal Union) துவங்கப்பட்டதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 ஆம் தேதி உலக அஞ்சல் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2016-ம் ஆண்டிற்கான மையக்கரு “Innovation, Integration and Inclusion” என்பதாகும்.
Question 7
7. கியான் தர்ஷன்(Gyan Darshan) சேனல்களை ஒளிபரப்ப தூர்தர்ஷன்(Doordarshan) எந்த கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது ?
A
ஐஐடி பாம்பே (IIT BOMBAY)
B
அமிட்டி பல்கலைக்கழகம் (AMITY)
C
இந்திராகாந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகம் (IGNOU)
D
ஐஐஎம் அகமதாபாத் (IIM Ahmedabad )
Question 7 Explanation: 
4 கியான் தர்ஷன்(Gyan Darshan) கல்வி சேனல்களை ஒளிபரப்ப தூர்தர்ஷன்(Doordarshan) சமீபத்தில் இந்திராகாந்தி தேசிய திறந்த பல்கலைக்கழக (IGNOU) கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. கியான் தர்ஷன் எனும் கல்வி தொலைகாட்சி சேனல்கள், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் (MIB), பிரசார் பாரதி, இஸ்ரோ, IGNOU ஆகியவற்றுடன் இணைந்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வி ஊடகப்பிரிவு துவங்கியுள்ள ஒரு முன்னெடுப்பாகும். இந்த சேனல்களை GSAT-10 செயற்கைகோளிற்கு Up-link செய்ய IGNOU நிறுவனம் புதிய உரிமம் ஒன்றை பெற வேண்டும். தகவல் மற்றும் ஒளிபரப்பு(I & B) அமைச்சகத்தின் Uplink மற்றும் Downlink வழிமுறைகளின்படி, தற்போதைக்கு புதிய உரிமம் வழங்க வாய்ப்பில்லை.
Question 8
8. 2016 ஃபார்முலா ஒன் ஜப்பனீஸ் கிராண்ட் பிரிக்ஸ்சில் வென்றவர் யார் ?
A
கிமி ரெய்க்கனென்
B
நிகோ ரோஸ்பெர்க்
C
மேக்ஸ் வேர்ஷ்டப்பென்
D
செபாஸ்டியன் வெட்டேல்
Question 8 Explanation: 
ஜப்பானின் மீ ப்ரிபெக்சரில் நடைபெற்ற 2016 ஃபார்முலா 1 எமிரேட்ஸ் ஜப்பனீஸ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், மெர்சிடிஸ் பார்முலா ஒன் அணியின் ஜெர்மன் ஃபார்முலா ஒன் ஓட்டுனர் நிகோ ரோஸ்பெர்க் பட்டம் வென்றுள்ளார்.
Question 9
9. P R ஸ்ரீஜேஷ் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
A
பூப்பந்து
B
கிரிக்கெட்
C
ஹாக்கி
D
டேபிள் டென்னிஸ்
Question 9 Explanation: 
இந்திய ஹாக்கி வீரர் மற்றும் இந்திய தேசிய அணியின் கோல்கீப்பரான பரட்டு ரவீந்திரன் ஸ்ரீஜேஷ், 2016 அக்டோபர் 20 முதல் 30 வரை மலேஷியாவின் குவாந்தானில் நடைபெற உள்ள 4 வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி (ACT) போட்டியில் 18-பேர் கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணியை வழிநடத்த உள்ளார்.
Question 10
10. “Old Path White Clouds: Walking in the Footsteps of the Buddha” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ?
A
பி வி நரசிம்மராவ்
B
வினய் சீடபாடி
C
திக் நாட் ஹான்
D
தலாய் லாமா
Question 10 Explanation: 
“Old Path White Clouds: Walking in the Footsteps of the Buddha” என்ற புத்தகத்தினை திக் நாட் ஹான் என்பவர் எழுதியுள்ளார். இது கெளதம புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை எடுத்துரைக்கும் அழகான காவியமாக உள்ளது. இப்புத்தகம் புத்தரின் வாழ்கையை 80 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறிதளவு ஸ்வஸ்தியின் கண்கள் வழியாகவும், சிறிதளவு எருமை மேய்க்கும் சிறுவன் வழியாகவும், மற்றொரு பகுதியை புத்தரின் கண்கள் வழியாகவும் மெதுவாகவும் நிதானமாகவும் ஊடுருவி செல்கிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.
Download as PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!