Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Samacheer NotesTnpsc

தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் Notes 9th Social Science

9th Social Science Lesson 3 Notes in Tamil

3. தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

அறிமுகம்

  • பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ்ப் பண்பாடு தோன்றிவிட்டது. தமிழகத்து வணிகர்களுடன் கடலோடிகளும் கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்புகளையும் பண்பாட்டுத் தொடர்புகளையும் கொண்டிருந்தனர்.
  • வெளிநாட்டு வணிகர்கள் கடல்வடியே தமிழகத்திற்கு வந்துபோயினர். வெளிநாட்டினருடன் ஏற்பட்ட பண்பாட்டுத் தொடர்புகளும், வணிக நடவடிக்கைகளும் , தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் வாழ்க்கைமுறைகளும் இணைந்து தமிழ்நாட்டில் முதல் நகரமயமாதல் உருவானது.
  • தலைநகரங்களும் துறைமுகப்பட்டினங்களும் தோன்றின. நாணயங்களும் பணமும் புழக்கத்திற்கு வந்தன.
  • ‘தமிழ் பிராமி’ என்ற வரிவடிவத்தில் தமிழ் மொழி முதன்முதலில் எழுதப்பட்டது. ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. செம்மொழித் தமிழ்ச் செய்யுள்கள் இயற்றப்பட்டன.

தொடக்க காலத் தமிழ்ச் சமூகம் கூறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகள்

  • தொன்மைக்கால தமிழர்களின் வரலாற்றை அறிவியல் பூர்வமாக மீட்டுருவாக்கம் செய்வதற்குப் பல வகையான சான்றுகள் உதவுகின்றன. அவையாவன:
  1. செவ்வியல் தமிழ் இலக்கியங்கள்
  2. கல்வெட்டுகள்
  3. தொல்லியல் அகழாய்வுச் சான்றுகள் மற்றும் பண்பாட்டுப் பொருள்கள்
  4. தமிழ் அல்லாத மற்றும் அயல்நாட்டினரின் இலக்கியக் குறிப்புகள்

செவ்வியல் தமிழ் இலக்கியங்கள்

  • தொல்காப்பியம், பதினென் மேல்கணக்கு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் , ஐம்பெருங்காப்பியங்கள் ஆகியவை சங்க காலத்தில் தோன்றிய செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் ஆகும். இவை சங்க கால மக்களின் வாழ்க்கை முறையை நன்கு அறிய உதவுகின்றன.

தொல்காப்பியம்

  • தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் தமிழின் பழமையான இலக்கண நூலாகும். இந்நூலின் முதலிரண்டு பகுதிகள் தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுக்கின்றன.
  • மூன்றாவது பகுதி மக்களின் சமூக வாழ்க்கைக்காண இலக்கணத்தை வரையறுக்கிறது.
  • பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினென் மேல்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • தமிழில் தோன்றிய இலக்கியங்களில் காலத்தால் முற்பட்ட இலக்கியங்கள் இவை பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் காலத்தால் பிந்தையவை.

எட்டுத்தொகை

1. நற்றிணை 2. குறுந்தொகை

3. பரிபாடல் 4. பதிற்றுப்பத்து

5. ஐங்குறுநூறு 6. கலித்தொகை

7. அகநானூறு 8. புறநானூறு

பத்துப்பாட்டு நூல்களாவன

  1. திருமுருகாற்றுப்படை
  2. பொருநராற்றுப்படை
  3. பெரும்பாணாற்றுப்படை
  4. சிறுபாணாற்றுப்படை
  5. முல்லைப்பாட்டு
  6. நெடுநல்வாடை
  7. மதுரைக் காஞ்சி
  8. குறிஞ்சிப் பாட்டு
  9. பட்டினப்பாலை
  10. மலைபடுகடாம்

பதினெண் கீழ்க்கணக்கு:

  • வாழ்வியல் அறநெறிகளை எடுத்து இயம்புகின்ற பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
  • அவற்றுள் முதன்மையானது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள். 1330 குறட்பாக்களைக் கொண்ட திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று மூன்று பால்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

ஐம்பெருங்காப்பியங்கள்

காப்பியங்கள் என்பவை கவிதை நயமுடைய செய்யுள்வடிவிலான நீண்ட இலக்கியப் படைப்புகளாகும். அவை:

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. சீவகசிந்தாமணி
  4. வளையாபதி
  5. குண்டலகேசி

கல்வெட்டுச் சான்றுகள்

  • கல்வெட்டுகளைக் குறித்து படிப்பது ‘கல்வெட்டியல்’ ஆகும். கல்வெட்டுகள் போலவே செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் போன்றவற்றிலும் தகவல்கள் பொறிக்கப்பட்டிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
  • மொழியின் வரிவடிவம் தோன்றிய காலமே வரலாற்றின் தொடக்க காலம் எனலாம். அதற்கு முற்பட்டது வரலாற்றுத் தொடக்கத்துக்கு முந்தைய காலம் எனப்படும்.
  • தமிழகத்தில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட மொழியின் வரிவடிவத்திற்குத் தமிழ் பிராமி என்று பெயர்.
  • கற்பாறைகளிலும், குகை வாழிடங்களிலும், சுடுமண் கலங்களிலும், நாணயங்கள், முத்திரைகள், மோதிரங்கள் போன்ற அணிகலன்களிலும் தமிழ் பிராமி எழுத்துகள் காணப்படுகின்றன.

தமிழ் பிராமி கல்வெட்டுகள்

  • தமிழ்நாட்டில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கற்பாறைகளிலும் குகைவாழிடங்களிலும் காணப்படுகின்றன.
  • சமணத் தூறவிகள் இக்குகைகளைப் பெரும்பாலும் தமது வாழிடங்களாகக் கொண்டிருந்தனர். இயற்கையாக அமைந்த மலைக்குகைகளின் விளிம்பில், மழைநீர் வழிந்து வெளியேறுவதற்காகச் சிறிய பகுதியை வெட்டு கொடுங்கை அல்லது வாரி போன்று செதுக்கியிருந்தனர். அதற்குக் கீழேதான் பெரும்பாலான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
  • குகைகளின் உட்புறத்தில் வழுவழுப்பான படுக்கைகளைப் பாறைகளிலேயே செதுக்கி உருவாக்கியிருந்தனர். உலகியல் வாழ்வைத் துறந்து, குகைகளில் வாழ்ந்த துறவிகளுக்கு அரசர்களுக்கு வணிகர்களும் இயற்கையாக அமைந்த குகைகளை வாழிடங்களாக மாற்றி உதவினர்.
  • தமிழ்நாட்டில் மாங்குளம், முத்துப்பட்டி, புகலூர், அரச்சலூர், கொங்கர்புளியங்குளம், ஜம்பை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள குகைவாழிடங்களில் தமிழ் பிராமி கல்வெட்டுகளை இன்றும் காணலாம்.
  • பெரும்பாலான குகை வாழிடங்கள் பண்டைக்கால வணிக வழிகளில் அமைந்துள்ளன.

நடுகற்கள்

  • போர்க்களத்திலும் ஆநிரை கவரும் சண்டைகளிலும் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன.
  • முல்லை நில வாழ்க்கையில் மக்களின் சிறப்பான செல்வ வளமாகக் கால்நடைகள் இருந்தன. அருகருகே வாழ்ந்த இனக்குழுவினர் மற்ற குழுவினரின் கால்நடைகளைக் கவர்ந்து தாமதாக்கிக் கொள்வதற்காகச் சண்டையிட்டுள்ளனர்.
  • முல்லை நில மக்களின் தலைவன் எதிரிகளை எதிர்த்துப் போரிட்டுக் கால்நடைகளைக் கவர்ந்து வருவதுண்டு. இதை எதிர்த்து போரிடுபவரும் உண்டு. அப்போது இறந்துபடும் வீரர்களைத் தியாகிகளாகப் போற்றி அவர்களின் நினைவாக நடுகற்களை நிறுவினர்.
  • போர்க்களம் காட்சிகளையும், நடுக்கற்களைக் குறித்தும், அவற்றை வழிபட்ட முறைகளைக் குறித்தும் சங்க இலக்கியங்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நடுகற்கள் நடப்படுவதற்கான வழிமுறைகள் குறித்து தொல்காப்பியம் விரிவாக எடுத்துரைக்கிறது.
  • தேனி மாவட்டத்தின் புலிமான்கொம்பை, தாதாப்பட்டி ஆகிய இடங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் பொற்பனைக்கோட்டை என்ற இடத்திலும் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட சங்க கால நடுகற்கள் காணப்படுகிம்ன்றன.
  • சங்ககாலத்தைச் சார்ந்த நடுகற்களில் உருவம் அல்லது சிலைகள் காணப்படவில்லை.
  • சங்க காலத்திற்குப் பிறகும், பல்லவர் காலத்திலும் நடப்பட்ட நடுகற்கள் முல்லை நிலப்பகுதிகளில் பெரிதும் காணப்படுகின்றன.
  • குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் என்ற ஊரினைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக இத்தகைய நடுகற்களைக் காணலாம்.
  • யாருடைய நினைவாக அந்த நடுகற்கள் நடப்பட்டனவோ, அந்த வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு வீரர் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

புலிமான் கோம்பை நடுகற்கள்

தேனி மாவட்டத்தின் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ள ஊர் புலிமான்கோம்பை (புள்ளீமான் கோம்பை) ஆகும். 2006ஆம் ஆண்டில் இந்த ஊரிலிருந்து தமிழ் பிராமி கல்வெட்டுகளுடன் கூடிய அரிய நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன. புலிமான்கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் ஒன்றில் கீழ்க்கண்ட செய்தி காணப்படுகிறது.

“கூடல்ஊர் ஆகோள் பெடு தியன் அந்தவன் கல்”

இதன் பொருள்: “கூடலூரில் ஆநிரை கவர்ந்தபோது நடந்த பூசலில் கொல்லப்பட்ட தீயன் அந்தவனின் கல்”

கல்வெட்டுகள்

  • வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த சுடுமண் கலங்களில் மக்களின் பெயர்கள் தமிழ் பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.
  • அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், கீழடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களிலும் இத்தகைய சுடுமண் பொறிப்புகள் காணப்படுகின்றன.
  • மேலும், எகிப்ய்து நடடின் பெரேனிகே (Berenike), குசேர் அல் காதிம் (Quseir al Qadhim) ஆகிய இடங்களிலும், ஓமன் நாட்டின் கோர் ரோரி (Khor Rori) என்ற இடத்திலும் தமிழ் பிராமி எழுத்துக்களில் மக்களின் பெயர் பொறித்த சுடுமண் கலங்களின் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

  • இதன் பண்டைத் தமிழர்கள் மேற்கு ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள ரோமானியப் பேரரசுப் பகுதிகளுக்கும் சென்று வணிகத்தில் ஈடுபட்டிருந்தது குறித்து அறியமுடிகிறது.
  • ஒரு பொருள் தமக்கு உரிமையானது என்பதைக் குறிப்பதற்காகவே அதன் மீது மக்கள் தம் பெயர்களைப் பொறித்து வைத்தனர்.
  • சுடுமண் கலங்களில் காணப்படும் பெரும்பாலான பெயர்கள் தமிழிலும், சில பெயர்கள் பிராகிருத மொழியிலும் உள்ளன.
  • கப்பல்களில் அல்லது வண்டிகளில் பொருள்களை எடுத்துச் செல்லும்போது இவற்றை அடையாளம் காண்பதற்கும் தங்களது பெயர்களை எழுதினர்.

பிராகிருதம்: மௌரியர் காலத்தில் வடஇந்தியாவில் பொதுமக்களால் பேசப்பட்ட மொழிகள்.

தொல்லியல் ஆய்வும் பண்பாட்டுப் பொருள்களும்

  • பண்டைய மக்கள் பயன்படுத்திய தொல்பொருள்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் ஆராய்வது தொல்லியல் (Archaeology) ஆய்வாகும்.
  • மக்களின் பண்டைய வாழிடங்களில் முறையாகத் தோண்டி வெளிக்கொணரப்படும் பொருள்கள் அறிவியல்பூர்வமான நுண்ணாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன.
  • மக்கள் வாழ்ந்திருந்த கட்டடங்களின் சான்றுகள், அவர்கள் பயன்படுத்தியப் பொருள்கள் போன்றவை குவிந்து கிடக்கும் இத்தகைய பழங்கால வாழ்விடங்களைத் தமிழ்நாட்டில் நத்தம், மேடும் கோட்டை என்று அழைக்கின்றனர்.
  • பண்டைக்காலத்தில் அந்த இடங்களில் மக்கள் எவ்வாறு வாழ்ந்திருந்தனர் என்பதை அகழாய்வின் மூலம் அறியமிடுகிறது.

தொல்லியல் அகழாய்வுக் களங்கள்

  • தொல்லியல் அகழாய்வுப் (excavation) பணி என்பது என்பது பண்டைக்கால சமூகத்தின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ளும் நோக்கில் முறைப்படி ஓர் இடத்தை அகழ்ந்து, சான்றுகளாகக் கிடைத்த பொருள்களை முறையாகத் திரட்டி ஆராய்வதாகும்.
  • வரலாற்றின் தொடக்கக் காலத்தைச் சேர்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வழியாகச் சங்க கால மக்களின் வாழ்க்கை முறை குறித்த சான்றுகள் கிடைத்துள்ளன.

  • தமிழ்நாட்டின் அரிக்கமேடு, அழகன்குளம், கீழடி, கொடுமணல், உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, வசவசமுத்திரம் ஆகிய இடங்களிலும், கேரளத்தின் பட்டணம் என்ற இடத்திலும் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளிலிருந்து சங்க கால மக்களின் வாழ்க்கை முறைக்கான பலவகையான தொல்லியல் சான்றுகள் கிட்டியுள்ளன.
  • புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு என்ற இடம் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையினர் அகழாய்வு செய்த சங்க காலத் துறைமுகப்பட்டினம் ஆகும்.
  • பிரிட்டனைச் சேர்ந்த சர் இராபர்ட் எரிக் மாட்டிமர் வீலர், பிரான்சைச் சேர்ந்த ஜே.எம். கசால், நம் நாட்டின் ஏ,கோஷ், கிருஷ்ண தேவா ஆகிய தொல்லியல் அறிஞர்கள் இங்கே அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
  • சரக்குக் கிடங்கு, தொட்டிகள், உறைகிணறுகள், தெரு ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் அங்கே இருந்தமையை அவர்கள் கண்டறிந்து வெளிப்படுத்தினர்.
  • பழங்கால மக்கள் வாழ்ந்த இடங்களையும் நினைவுச் சின்னங்களையும் நிர்வாகம் செய்யும் அமைப்பு இந்தியத் தொல்லியல் தூறை ஆகும். இது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.
  • தமிழக அரசின் கீழ் தமிழ்நாடு தொல்லியல் துறை இயங்குகிறது. இந்தியாவில் உள்ள தொல்லியல் பொருட்களைப் பாதுகாப்பதற்கு இந்தியக் கருவூலம் மற்றும் புதையல் சட்டம் (1878), பழங்காலப் பொருட்கள் மற்றும் கலைக் கருவூலங்கள் சட்டம் (1972),. பழமைவாய்ந்த நினைவுச்சின்னங்கள், தொல்லியல் ஆய்வுக் களங்கள் மற்றும் எஞ்சிய பொருட்கள் சட்டம் (1958) ஆகியவை வகுக்கப்பட்டுள்ளன.

பண்பாட்டுப் பொருள்கள்

  • செங்கற் கட்டுமானங்கள், மணிகள், சங்கு வளையல்கள், அணி புடைப்பு மணிகள் (Cameo) , செதுக்கு வேலைப்பாடுகள் கொண்ட பொருள்கள் (intaglio) போன்றவற்றைத் தொல்லியலாளர்கள், அகழாய்வுமேற்கொண்ட இடங்களில் கண்டறிந்தனர்.

  • தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட சுடுமண் பாண்ட ஓடுகளும், பல வகை நாணயங்களும் அங்கே கிடைத்துள்ளன. இத்தொல்பொருள்கள், அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகள், கலைகள், கைவினைத் திறன், தொழிலகங்கள் ஆகியவை குறித்து அறிந்துகொள்ள உதவுகின்றன.
  • அணி புடைப்புமணிகள் (Cameo) என்பவை, விலையுயர்ந்த நவமணிகளின் மேற்புறத்தில் வேலைப்பாடு மிக்க உருவங்கள் செதுக்கப்பட்டவையாகும்.
  • செதுக்கு வேலைப்பாடுடைய பொருள்களில் (Intaglio) உருவங்கள் உட்குழிவாகச் செதுக்கப்பட்டிருக்கும்.

நாணயங்கள்

  • முதன்முதலாக, சங்க காலத்தில்தான் செலாவணிக்குரிய பொருளாக நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன.
  • சேர, சோழ, பாண்டிய அரசர்களின் நாணயங்கள், முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், ரோமானிய நாணயங்கள் ஆகியவை சங்க காலம் குறித்து அறிந்துகொள்ள உதவும் மற்றொரு வகையான சான்றாகும்.
  • கொடுமணல், போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களில் முத்திரை பொறித்த நாணயங்கள் கிடைத்துள்ளன.
  • ரோமானிய நாணயங்கள் தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் மண்டலத்தில் செறிந்து காணப்படுகின்றன.
  • அழகன்குளம், கரூர், மதுரை ஆகிய இடங்களிலும் அவை கிடைத்துள்ளன. சில சமயம் மதிப்புயர் செல்வமாகவும் (Treasure) நாணயங்கள் பாதுகாக்கப்பட்டன. மேலும் பலவற்றை உருக்கி அவர்கள் அணிகலன்களும் செய்திருக்கலாம்.

  • கட்டி வடிவிலான (ingots) தங்கம், வெள்ளி போன்ற மதிப்பு மிக்க உலோகங்கள் புல்லியன்(bullion) என்று அழைக்கப்படுகிறது.
  • தொடக்க காலத்தில் இந்தியாவுஇல் முத்திரை பொறித்த நாணயங்களே பயன்படுத்தப்பட்டன.
  • பெரும்பாலும் வெள்ளியில் செய்யப்பட்ட அவற்றில் எண்ணற்ற குறியீடுகள் முத்திரைகளாகப் பொறிக்கப்பட்டிருகின்றன.

தமிழ் அல்லாத பிற மொழிச் சான்றுகளும் வெளிநாட்டினரின் குறிப்புகளும்

  • தமிழ் அல்லாத பிறமொழிச் சான்றுகளும் தொடக்க காலத் தமிழ்ச் சமூகம் குறித்த அரிய தகவல்களைத் தருகின்றன.
  • பண்டைத் தமிழ்ச் சமூகம் உலகெங்கிலும் விரிந்த தொடர்புகளைக் கொண்டிருந்ததைத் தமிழ் அல்லாத சான்றுகள் மிகவும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

அர்த்த சாஸ்திரம்

  • மௌரியர் காலத்தில் வாழ்ந்த கௌடில்யர் என்ற சாணக்கியர் இயற்றிய அர்த்த சாஸ்திரம் என்ற நூல் பொருளாதாரம் குறித்தும் ஆட்சிமுறைமை குறித்தும் எடுத்துரைக்கிறது.
  • ‘பாண்டிய காவாடகா’ என்ற அந்நூலின் குறிப்பு பாண்டிய நாட்டில் கிடைத்த முத்துக்கள், கடற்பொருள்களைக் குறிப்பதாக இருக்கலாம்.

மகாவம்சம்

  • இலங்கையின் புத்த சமய வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்ற நூல் பாலி மொழியில் எழுதப்பட்டது.
  • தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இருந்த வணிகர்கள் குறித்தும் குதிரை வணிகர்கள் குறித்தும் இந்நூல் குறிப்பிடுகிறது.
  • முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் காலவரிசையில் விவரிக்கும் குறிப்பு வரலாற்றுக் குறிப்பு (chronicle) எனப்படும்.

எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ் (Periplus of Erythrean Sea)

  • எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ் என்பது பண்டைய கிரேக்க நூலாகும். இந்நூலின் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை.
  • பெரிப்ளஸ் என்றால் கடல் வழிகாட்டி என்று பொருள். மாலுமிகள் இவ்வழிகாட்டிகளைக் கடற்பயணத்திற்குப் பயன்படுத்தினர்.
  • செங்கடலைச்ச் சுற்றியுள்ள கடற்பரப்பே எரித்திரியன் கடல் ஆகும்.
  • முடிறி, தொண்டி, குமரி, கொற்கை ஆகிய சங்ககாலத் துறைமுகப்பட்டினங்கள் குறித்தும் சேர, பாண்டிய அரசர்கள் குறித்தும் இந்த நூலில் குறிப்புகள் உள்ளன.

பிளினியின் ‘இயற்கை வரலாறு’

  • ரோமானியரான மூத்த பிளினி என்பவர் ‘இயற்கை வரலாறு’ என்ற நூலை எழுதினார்.
  • லத்தீன் மொழியில் எழுதப்பட்ட இந்நூல், ரோமானியப் பேரரசின் இயற்கை வளங்கள் குறித்து விவரிக்கிறது.
  • இந்தியாவுடன் நடைபெற்ற மிளகு வணிகம் குறித்துக் குறிப்பிடும் பிளினி, வடகிழக்கு ஆப்பிரிக்காவில் அருகில் உள்ள ஓசலிஸ் (Ocealis) துறைமுகத்திலிருந்து பருவக் காற்று (தென்மேற்குப் பருவக்காற்று) சரியாக வீசினால் நாற்பது நாள்களில் இந்தியாவை அசைந்துவிடலாம் என்று கூறியுள்ளார்.
  • கேரளக் கடற்கரையில் இருந்த பக்காரே (Bacare) தூறைமுகத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • பக்காரே துறைமுகத்தின் தற்காலப் பெயர் என்னவென்று தெரியவில்லை. இந்தியாவுடன் நடைபெற்ற மிளகு வணிகத்தினால் ரோமானிய நாட்டுச் செல்வம் கரைந்தது குறித்துப் பிளினி ஆதங்கப்படுகிறார்.
  • இதன் மூலம் மிளகுக்கு இருந்த மதிப்பையும், பெருமளவிற்கு மிளகு தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியானதையும் அறியமுடிகிறது.

தாலமியின் புவியியல்

  • இரண்டாம் நூற்றாண்டில் நிலவிய ரோமானியப் பேரரசின் புவியியல் அமைப்பு விவரங்கள், நிலப்படம் ஆகியவற்றைக் கொண்ட ஆவணமே தாலமியின் புவியியல் என்ற நூலாகும்.
  • இதில் காவிரிப்பூம்பட்டினம் (Khaberis Emporium), கொற்கை (Korkoi), கன்னியாகுமரி (Komaria), முசிறி (Muziris) ஆகிய துறைமுகப்பட்டினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பியூட்டிங்கேரியன் அட்டவணை (Peutingerian Table)

  • பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் ஆகும். இதில் பண்டைய தமிழகமும் முசிறி துறைமுகமும், மேலும் பல இடங்களும் குறிக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: இங்கு இலங்கைத் தீவு Taprobane எனவும், முசிறி துறைமுகம் முசிறிஸ் எனவும் குறிக்கப்பட்டுள்ளது.

வியன்னா பாப்பிரஸ்

  • வியன்னா பாப்பிரஸ் என்பது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க ஆவணமாகும். இதில் முசிறியில் நடைபெற்ற வணிகம் தொடர்பான குறிப்பு உள்ளது.
  • தற்போது இந்த ஆவணம் ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில், ஆஸ்திரிய தேசிய நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பாப்பிரஸ் அருங்காட்சியகத்தில் உள்ளது. இது வணிகர்களுக்கு இடையேயான எழுத்துப்பூர்வமான ஓர் உடன்படிக்கை ஆகும்.
  • ஹெர்மாபோலோன் (Hermapollon) என்ற பெயருடைய கப்பல், ரோமானிய நாட்டிற்கு ஏற்றுமதியான மிளகு, தந்தம் போன்ற சரக்குகள் குறித்த பட்டியல் இந்த ஆவணத்தில் காணப்படுகின்றன.
  • பாப்பிரஸ் என்பது பண்டைய எகிப்தில் பாப்பிரஸ் என்ற நாணலிலிருந்து தயாரிக்கப்பட்ட தாள் ஆகும். அக்காலத்தில் எழுதுவதற்கு இதைத்தான் பயன்படுத்தினர்.

சங்க காலம்

  • சங்க காலம் அல்லது வரலாற்றுத் தொடக்க காலம் தென்னிந்திய வரலாற்றின் சிறப்புமிக்க காலமாகும். இலக்கியங்கள், தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ளிட்ட எழுத்துப்பூர்வமான சான்றுகள் கிடைத்துள்ளதால் சங்க காலம், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து மாறுபட்டுச் சிறப்புடன் விளங்குகிறது.
  • சங்க இலக்கியத் தொகுப்பு, அக்கால மக்களின் வாழ்க்கைமுறை குறித்தும் அறிய உதவுகின்றது.

காலமுறைமை

  • சங்க காலத்தை காலவரையறை செய்வதில் அறிஞர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
  • சங்க கால இலக்கியம் பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும், பொ.ஆ.மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகப் பெருவாரியான அறிஞர்களிடம் கருத்துக்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • அசோகருடைய கல்வெட்டுகளில் காணப்படும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்த தகவல்களும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும், கிரேக்க , ரோமானிய குறிப்புகளும் இக்காலவரம்பை உறுதிப்படுத்துகின்றன.
  • சங்கச் செய்யுள்கள் வரலாற்றின் தொடக்கக் காலத்தில் இயற்றப்பட்டவை எனவும், பின்னரே அவை தொகை நூல்களாகத் தொகுப்பட்டன எனவும் கருதப்படுகிறது.

அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய வரிவடிவத்திற்கு அசோகன் பிராமி என்று பெயர்.

திணை

  • தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் திணை என்ற கருத்து விவரிக்கப்பட்டுள்ளது.
  • திணை என்பது குறிப்பிட்ட இயற்கை நிலவமைப்பையும், அதன் வாழ்வியல் முறைகளையும் குறிப்பதாகும்.
  • சங்கச் செய்யுள்கள் திணை அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. மனித வாழ்க்கையையும், இயற்கையோடு மனிதர்கள் கொண்டிருந்த நெருக்கமான உறவையும் அவை படம் பிடித்துக் காட்டுகின்றன.
  • சங்க காலச் செய்யுள்களை பொருண்மை அடிப்படையில் பொதுவாக அகத்திணைப் பாடல்கள் என்றும் புறத்திணைப் பாடல்கள் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
  • அகத்திணை என்பது காதல் வாழ்வையும் குடும்ப வாழ்வையும் குறிக்கும்.
  • புறத்திணை என்பது வாழ்வின் பிற அம்சங்களையும் குறிப்பாக, போர், வீரம் முதலிய பொருள்களைப் பேசுகிறது.

ஐந்திணை: ஐந்து திணைகள் அல்லது ஐந்து வகை நிலப்பகுதிகள்.

  • ஐந்திணை என்பது தமிழ்நாட்டின் வகையான நிலப்பகுதிகளைக் குறிக்கும். இந்த ஐந்து வகை நிலங்களும் தனித்த பண்புகள் கொண்டவை.
  • ஒவ்வொரு திணைக்கும் தனியே கடவும், தொழில் , மக்கள் , பண்பாடு போன்றவை உண்டு. இந்த வகைப்பாடி ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் உண்மையான வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிப்பதை அறிஞர்கள் பலர் விளக்கியுள்ளனர்.

ஐவகை நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், செய்தல், பாலை ஆகும்.

  • மலையும் மலைச் சார்ந்த பகுதிகளும் குறிஞ்சி
  • காடும் காடு சார்ந்த பகுதிகளும் முல்லை
  • வயலும் வயல்வெளி சார்ந்த பகுதிகளும் மருதம்
  • கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் நெய்தல்
  • வறண்ட நிலப்பகுதி பாலை

சங்ககால அரசியல்: பண்டைய தமிழக அரசியல் நிலை

  • சங்க காலத்திற்கான அடித்தளம் இரும்புக் காலத்தில் வேர் கொண்டது. இரும்புக் காலத்தில் மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தர்.
  • தலைவர்கள் அந்நிலப்பகுதிகளைத் தமது ஆளுகையின்கீழ் கொண்டு வந்தனர். இவ்வாறு உருவான தலைவர்களில் இருந்தே வரலாற்றின் தொடக்கக் காலத்தில் வேந்தர்கள் தோன்றினார்கள்.
  • வேளிர்கள் என்போர் சங்க காலத்தின் குறுநில மன்னர்கள் ஆவர்.
  • மௌரியப் பேரரசர் அசோகர் கலிங்கத்தையும் (ஒடியா) ஆந்திரம், கர்நாடகத்தின் சில பகுதிகளையும் படையெடுத்து வென்றார்.
  • தற்காலத்திய ஒடியா , கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் காணப்படும் அசோகரது கல்வெட்டுகள் தமிழகத்திலும் கேரளத்திலும் காணப்படவில்லை.
  • எனவே, மௌரியர்களின் மேலாட்சிக்கு உட்படாத சுதந்திரமான ஆட்சியாளர்களாகத் தமிழக வேந்தர்கள் விளங்கினார்கள். இதை அசோகரின் கல்வெட்டுச் செய்திகளும் உறுதிப்பெடுத்துகின்றன.

மூவேந்தர்

  • சங்க கால ஆட்சியாளர்களில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களே முன்னிலையில் இருந்தனர்.
  • அக்காலத்தைய பெரு நகரங்களும் துறைமுகப்பட்டினங்களும் மூவேந்தரின் ஆளுகைக்குக் கீழேயே இருந்தன.

சேரர்

  • அசோகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ள சேரர் தற்காலத்துக் கேரளத்தையும், தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியையும் ஆட்சிபுரிந்தனர்.
  • அவர்களது தலைநகராக வஞ்சியும், துறைமுகப்பட்டினங்களாக முசிறியும் தொண்டியும் இருந்தன.
  • தமிழ்நாட்டில் தற்போதுள்ள கரூர்தான் வஞ்சி என்று சிலரும், கேரளத்தில் உள்ள திருவஞ்சைக்களம்தான் வஞ்சி என்று வேறு சிலரும் கூறுகின்றனர்.
  • சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து சேர அரசர்கள் குறித்தும் அவர்களுடைய நாட்டில் எல்லைகளைக் குறித்தும் பேசுகிறது.
  • சேரர்கள் பனம்பூ மாலை அணிந்தனர். கரூரை அடுத்த புகலூரிலும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் சேர மன்னர்களின் மூன்று தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது. மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் கரூரில் கிடைத்துள்ளன.
  • சிலப்பதிகாரத்தின் பாட்டுடைத் தலைவியான கண்ணகிக்குக் கோயில் எழுப்பிய சேரன் செங்குட்டுவன் குறித்து சிலப்பதிகாரம் விரிவாகக் கூறுகிறது.
  • சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்பது மரபு வில்லும் அம்பும் சேரர்களின் இலச்சினையாகும்.

சோழர்

  • காவிரி வடிநிலப்பகுதியையும் தமிழ்நாட்டின் வடபகுதிகளையும் ஆண்ட சோழர்களுக்கு உறையூர் தலைநகராக இருந்தது.
  • காவிரி ஆறு வங்கக் கடலில் கலக்கும் பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டினம் அவர்களுடைய துறைமுகப்பட்டினமாக விளங்கியது.
  • கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற சங்க காலப் புலவர் காவிரிப்பூம்பட்டினம் குறித்து பட்டினப்பாலை என்ற நெடிய பாடலை இயற்றியுள்ளார்.
  • காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிகத்தைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
  • சோழ மன்னர்களில் தலை சிறந்தவராக போற்றப்படும் கரிகால் சோழன், காவிரி ஆற்றின் நீர்ப்பெருக்கைத் திறம்படப் பயன்படுத்திப் பாசன வசதிகளைப் பெருக்கிப் பெரும் நிலப்பரப்பில் விவசாயம் தழைக்க வகைசெய்த பெருமைக்குரியவர் ஆவார்.
  • பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் (பொ.ஆ.பி. 10 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை) உச்சத்தை எட்டிய பாசனநீர் மேலாண்மைக்குக் கரிகால்சோழன் ஆட்சியில்தான் வித்திடப்பட்டது.
  • பாண்டியரையும் சேரரையும் ஏனைய குறுநில மன்னர்களையும் எதிர்த்துக் கரிகாலன் போரிட்டார்.
  • சோழர்களின் இலச்சினை புலி. அவர்கள் சதுரவடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றின் முகப்பில் புலியின் உருவமும் மறுபுறத்தில் யானை மற்றும் புனிதச் சின்னங்களும் காணப்படுகின்றன.

பாண்டியர்

  • பாண்டியர்கள் குறித்தும் அசோகரது கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென்தமிழகத்தை அவர்கள் ஆண்டனர்.
  • தமிழ்ச் சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் பாண்டிய அரசர்களைப் போற்றுகின்றன.
  • மாங்குளத்தில் கண்டறியப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகள் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடுகின்றது.
  • நெடியோன், முடத்திருமாறன், பாலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆகியோர் குறிப்பிடத்தக்க பாண்டிய மன்னர்கள். பாண்டியர்களின் இலச்சினை மீன் ஆகும்.

வேளிர் / குடித்தலைமை

  • தமிழகத்தை ஆட்சிபுரிந்த மூவேந்தர்களைத் தவிரப் பல குறுநில மன்னர்களும் சிறிய பகுதிகளில் குடித்தலைமை ஏற்றிருந்தனர்.
  • குறுநில மன்னர்கள் வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர். வேளிரில் கடையேழு வள்ளல்களான பாரி, காரி, ஓரி , நள்ளி, பேகம், ஆய், அதியமான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் வள்ளல் தன்மையைச் சங்க இலக்கியம் விரிவாகப் பேசுகின்றது.
  • புலவர்களொடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த வேளிர்களின் கொடைத்திறம் இலக்கியங்களில் போற்றப்படுகின்றது.
  • வேளிரில் சிலர் மூவேந்தர்களோடு துணைநின்று அவர்களுக்காகப் போர் புரிந்தனர். வேறு சில வேளிர்கள் மூவேந்தரை எதிர்த்தும் போரிட்டுள்ளனர்.

சங்ககாலச் சமூகம்

  • இரும்புக் காலத்தைச் சேர்ந்த பல சமுதாயங்கள் பழங்குடிச் சமுதாயங்களாக இருந்தன.
  • சில, ஒரு குடித்தலைமையின் கீழ் ஒன்றுபட்டு வாழ்ந்திருந்தன. சங்க காலச் சமூகமும், பழங்குடி குலத்தலைமைச் சமுதாயத்திலிருந்து ஒரு பெரும்பரப்பை ஆட்சி செய்யும் மன்னர் ஆட்சிமுறைக்கு மாறிக்கொண்டிருந்தது.

சமூகப்பிரிவுகள்

  • சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் சமூகப் பிரிவுகள் வேரூன்றத் தொடங்கின.
  • பாணர், பரதவர், எயினர், உழவர், கானவர், வேட்டுவர், மறவர் போன்ற குழுக்கள் குலம் அடிப்படையிலான சமுதாயங்களாக (clan based communities) இருந்தனர். அரசர்களும் குலத்தலைவர்களும் உயர்பிரிவினராகக் கருதப்பட்டனர்.
  • அந்தணர்கள் என்று அறியப்பட்ட பூசாரிகளும் இருந்தனர். கைவினைத் தொழில் புரிந்த பானை செய்வோர், உலோகவேலை செய்வோர் போன்ற பிரிவினர் சமூகத்தில் இருந்தனர்.
  • வடஇந்தியாவில் காணப்பட்ட சாதி அமைப்பு தமிழகத்தில் வேரூன்றவில்லை. மாறாக ஐவகை நிலச் சூழல் மற்றும் செய்தொழில் அடிப்படையில் சமூகக் குழுக்களாகக் காணப்பட்டனர்.
  • சங்க காலச் சமூகத்தினர் ஒரு வரம்புக்குட்பட்டே பொருள் நுகர்ச்சியில் ஈடுபட்டனர். எனினும் அரசர்களும், குலத்தலைவர்களும், வணிகர்களும் செழிப்பான வாழ்வில் திளைத்தனர்.
  • சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் மத்தியில் வறுமை நிலவியது. பல நிலங்களுக்குச் சென்ற இசைவாணர்களாகிய பாணர்கள், செல்வம் படைத்தோரைப் பாடிப் பரிசில் பெற்று வாழ்க்கை நடத்தினர்.
  • வேளாண் வளர்ச்சியும், கால்நடை வளர்ப்பும் இயற்கை வளங்களையும் வனவிலங்குகளையும் ஓரளவுக்குப் பாதித்திருக்க வேண்டும்.
  • வேட்டையாடி உயிர்பிழைத்த சில பிரிவினர் வனப்பகுதியில் வாழக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது காலப்போக்கில் உடல் உழைப்புத் தொழிலாளர்களாக மாறியிருக்கலாம்.
  • நன்செய் வேளாண் பகுதிகளில் வேளாண் வளர்ச்சிக்காகச் சில குறிப்பிட்ட சமூகப்பிரிவினர் பெருமளவுக்கு உடல் உழைப்பைத் தந்தனர்.

பெண்கள்

  • சங்க இலக்கியங்களில் தாய், தலைவி, செவிலித்தாய், தோழி என்று பற்பல இடங்களில் மகளிர் குறித்த செய்திகள் பலவாறு கூறப்படுகின்றன.
  • பாணர் குலப் பெண்கள், நாட்டிய மகளிர், பெண்பாற் புலவர்கள், அரச மகளிர் ஆகியோர் குறித்தும் ஐவகை நிலப்பகுதிகளைச் சார்ந்த பெண்கள் குறித்தும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
  • வெண்ணி என்ற ஊரைச் சார்ந்த வெண்ணிக்குயத்தியார் பெண்பாற் புலவராகக் கண்டறியப்படுகிறார்.
  • மகளிர் திணைப்புனம் காத்தல் குறித்தும், உமணர் குல மகளிர் உப்பு விற்றது குறித்தும் சங்கச் செய்யுள்கள் குறிப்பிடுகின்றன. இதன் மூலம் பெண்கள் முதல்நிலை உற்பத்தியில் ஈடுபட்டதை அறியலாம்.
  • பெண்கள் தங்கள் கணவரோடு உயிர்துறக்க முன்வந்ததை அக்கால இலக்கியங்களில் சில இடங்களில் காணலாம்.

பொருளாதாரம்

  • திணைக் கோட்பாடு விளக்குவது போலவே சங்க காலப் பொருளாதாரம் பல வகைப்பட்டதாக இருந்தது.
  • வேளாண்மை, கால்நடைவளர்ப்பு, வணிகம், பணப்பரிமாற்றம், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் என்று மக்கள் வாழ்ந்த நிலங்களுக்கு ஏற்றவாறு தொழில்களும், அவை சார்ந்து பொருளாதாரமும் இருந்தன. வணிகம் கடல் கடந்து பலநாடுகளுடன் நடைபெற்றிருக்கீறது.

வேளாண் உற்பத்தி

  • சங்க கால மக்களின் உயிர்வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதில் வேளாண்மையே முதலிடத்தில் இருந்தது. நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன.
  • நன்செய் நிலத்திலும் புன்செய் நிலத்திலும் பயிர்தொழில் நடைபெற்றது. ஆற்றுவடிநீர்ப் பகுதிகளிலும் குளம், ஏரி போன்ற நீர் நிலைகளால் பாசனவசதி பெற்ற பகுதிகளிலும் நெல் பயிரிடப்பட்டது.
  • தானியங்கள் புன்செய் நிலத்தில் பயிரிடப்பட்டது. செந்நெல், வெண்ணெல், ஐவனநெல் எனப் பலவகையான நெல்கள் குறித்து இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
  • ஆதிச்சநல்லூரிலும், பொருந்தல் என்ற இடத்திலும் மேற்கண்ட அகழாய்வுகளில் தாழிகளுடன் நெல்லும் கிடைத்துள்ளது.
  • வனப்பகுதிகளில், இடம்விட்டு இடம் மாறி சாகுபடி செய்யும் முறை புனம் எனப்பட்டது.

கால்நடை வளர்ப்பு: பசு, எருமை, காளை உள்ளிட்ட மாடுகள், வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வளர்த்தல் மூலம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கினர்.

கைவினை மற்றும் தொழிற்கூடங்கள்

  • கைவினைத் தயாரிப்புகளும், மிக நுண்ணிய வேலைப்பாடுடைய தொல்பொருள்களும் நகரவாழ்வின் முக்கியான அடையாளங்களாகும்.
  • சங்க காலத்தில் பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் இருந்தனர். பொருள் உற்பத்தி செய்யும் அமைப்புகள் தொழிற் கூடங்கள் ஆகும்.

மட்கலங்கள் செய்தல்

  • மட்கலங்களைச் செய்வது பரவலாக எல்லா இடங்களிலும் காணப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வுக்குப் பலவிதமான மட்கலங்கள் தேவையாக இருந்தன. கரியநிறத்தவை, செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டவை (Russet –coasted) , கருப்பு-சிவப்பு நிறத்தவை என்று பலவிதமான மட்கலங்கள் தயாரிக்கப்பட்டன.

இரும்பு உருக்குத் தொழில்

  • இரும்பைக் கொண்டு கருவிகள் செய்வதும் முக்கியமான தொழிலாக இருந்திருக்கிறது. பல்வேறு இடங்களில் இரும்பை உருக்கும் உலைகளும் இருந்தன.
  • அகழாய்வு மேற்கொண்ட பல இடங்களில் கொல்லுலைகள், உருக்கு உலைகள் ஆகியன இருந்த தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • கொடுமணலிலும், குட்டூரிலும் இரும்பு உருக்கு உலைகள் அகழாய்வில் வெளிப்பட்டுள்ளன.
  • இரும்பில் கருவிகள் செய்தோர் குறித்து சங்க இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன. உழுகருவிகளும், வாள், ஈட்டி, கத்தி போன்ற படைக்கருவிகளும் தயாரிக்கப்பட்டன.

கல்லில் செய்த அணிகலன்கள்

  • சங்க காலத்து மக்கள் பலவிதமான அணிகலன்களை அணிந்து தங்களை அழகுபடுத்திக் கொண்டனர்.
  • எளிய மக்கள் பூக்களையும் இலை தழைகளையும் சூடிக்கொண்டதுடன் , சுட்ட களிமண், உலோகம் ஆகியவாற்றிலும் அணிகலன்கள் செய்து அணிந்தனர்,
  • செல்வர்கள் செம்பு, தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்த நகைகளில் நவமணிகளையும் பதித்து அழகுபடுத்தி அணிந்தனர்.
  • செவ்வந்திக்கல் (amethyst), செம்மணிக்கல் (carnelian) போன்றவற்றில் இருந்தும் அழகிய வேலைப்பாடுடைய அணிகலன்கள் செய்யப்பட்டன.
  • துளையிடும் கருவிகளின் வைரத்தைப் பயன்படுத்திக் துளையிட்டு, மணிக்கற்களை அழகுறக் கோத்து மாலைகளாக அணிந்தனர்.
  • பெருங்கற்கால நினைவுச் சின்னங்களில் பொறிப்பு(etching) வேலைகள் நிரம்பிய செம்மணிகளும் காணப்படுகின்றன.

தங்க ஆபரணங்கள்

  • தங்கத்தாலான அணிகலன்களைச் சங்க கால மகளிர் பரவலாக அணிந்தனர். ரோமானியர்களின் நாணயங்களைக் கொண்டும் நகைகள் செய்யப்பட்டன.
  • கேரளத்தின் பட்டணத்தில் பொன்னை உருக்கும் உலைகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன,.
  • பெருங்கற்காலத்தைச் சேர்ந்த அகழாய்வுக் களங்களாக சுத்துக்கேணி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் ஆகிய இடங்களிலும், அரிக்கமேடு, கீழடி , பட்டணம் ஆகிய பழங்கால நகரங்களிலும் தங்க அணிகலன்கள் கிடைத்துள்ளன.

கண்ணாடி மணிகள்

  • கண்ணாடி மணிகளைச் செய்யும் முறையை அக்கால மக்கள் அறிந்திருந்தனர். சிலிக்கா மற்றும் பிற பொருள்களை உலையிலிட்டு உருக்கி நீண்ட சிறிய குழல்களாக்கிப் பின்னர் அவற்றைச் சிறுசிறு மணிகளாக நறுக்கினர்.
  • கண்ணாடி மணிகள் பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டன. அரிக்கமேட்டிலும், கடலுருக்கு அருகில் குடிக்காடு என்ற ஊரிலும் கண்ணாடி மணி செய்யும் தொழிலகங்கள் இருந்துள்ளன.
  • விலை உயர்ந்த நவமணிக் கற்களை வாங்க இயலாதவர்கள் கண்ணாடி மணிகளை அணிந்திருக்கலாம் எனத் தெரிகிறது,

முத்துக்குளித்தலும் சங்கு வளையல்களும்

  • கீழடி அகழாய்வின்போது ஒரு முத்து கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சங்குகளை அரிந்து வளையல் செய்யும் தொழிலும் சங்க காலத்தில் சிறப்புற்றிருந்தது. பாம்பன் கடல்பகுதிகளில் சங்குகளைச் சேகரித்தனர்.
  • கைவினைக் கலைஞர்கள் அவற்றை அழகுற அறித்து எழிலான வளையல்களைச் செய்தனர்.
  • முழுமையான சங்குகளும், உடைந்த வளையல்களும் பல தொல்லியல் இடங்களில் கிடைத்துள்ளன.
  • பெண்கள் சங்கு வளையல்கள் அணிந்திருந்தது குறித்துச் சங்க இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.

துணி நெசவு

  • துணி நெசவு இன்னொரு முக்கியத் தொழிலாகும். நூல் நூற்கும் கதிர்களும் துண்டுத் துணிகளும் கொடுமணலில் கிடைத்திருக்கின்றன.
  • கலிங்கம் மற்றும் பிறவகைத் துணிவகைகள் குறித்து இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. பெரிப்ளஸ் என்ற நூலில் தமிழகத்தில் துணிகள் நெய்யப்பட்டது குறித்த தகவல் உள்ளது.

நூல் நூற்கும் கதிர் (Spindle whorl) பருத்தியிலிருந்து நூலை எடுப்பதற்கு நூல் நூற்கும் கதிர் பயன்படுகிறது.

பண்டமாற்றம் வணிகம், வணிகர்கள் வணிகப் பெருவழிகள்

  • நெல் முதலான தனியங்கள், கால்நடைவளர்ப்பு, கைவினைப் பொருள் தயாரிப்பு போன்றவை குறித்து அறிந்தோம்.
  • ஆனால் மக்கள் வாழ்ந்த இடங்களிலும் எல்லாப் பொருள்களையும் தயாரிக்க இயலாது.
  • ஓரிடத்தில் கிடைகின்ற மூலப்பொருள்களும், வளமும், தொழில் நுட்பக் கலைஞர்களும் மற்ற இடங்களில் கிடைப்பதில்லை.
  • எடுத்துக்கட்டாக, மலைப் பகுதிகளில் கடல் மீனும் உப்பும் கிடைக்காது
  • கடற்கரையின் மணற்பகுதிகளில் நெல் முதலான தானியங்ளைப் பயிரிட முடியாது.
  • ஓரிடத்தில் கிடைக்கும் பொருள்களை மற்ற இடங்களில் உள்ளவர்கள் தம்மிடம் உள்ள பொருள்களைக் கொடுத்து மாற்றிக்கொள்வார்கள்.
  • இதற்குப் பண்டமாற்று என்று பெயர்.
  • இவ்வாறாகத்தான் வணிகம் தோன்றியது.
  • வணிகர்கள் குழுவாகச் சென்றும் வணிகம் செய்தனர்
  • இவ்வணிகத்தின் வழியாக பலவிதமான பொருள்களை மக்கள் பயன்படுத்த முடிந்தது.

வணிகர்கள்

  • தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் ஆளப்படுகின்றன.
  • பொன் வணிகர்கள்,துணி வனிகர்கள் என்று குறிப்பிட்ட பண்டத்தை மட்டும் வியாபாரம் செய்த வணிகர்களும் இருந்தனர்
  • உப்பு வணிகர்கள் உமணர்கள் எனப்பட்டனர்.
  • அவர்கள் தம் குடும்பத்தோடு மாட்டு வண்டியில் சென்று வணிகம் செய்தனர்.

போக்குவரத்து முறைகள்

  • நன்கு வடிவமைக்கப்பட்ட யவனர்களின் கப்பல் தங்கம், பிற உலோகக் காசுகளுடன் முசிறித் துறைமுகத்திற்கு வந்து மிளகை ஏற்றிச் சென்றதாக அகநானூற்றின் 149 ஆம் செய்யுள் கூறுகிறது.
  • மாட்டுவண்டிகளும் விலங்குகளும் சரக்குப் போக்குவரத்திற்கும் பயன்பட்டன.
  • தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களும் வணிக வழிகளால் இணைக்கப்பட்டன.
  • கடற்பயணம் மேஏகொள்ள உதவிய கலம், பரி, ஓடம், தோணி, தெப்பம், நாவாய் போன்றவை கடற்போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது குறித்து இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பண்டமாற்றமும் நாணயங்களும்

  • பண்டமாற்றுமுறை மூலமாகவே மக்களிடையே பெருமளவில் பரிமாற்றம் நடைபெற்றது.
  • அரிசியைக் கொடுத்து மீனைப் பெற்றனர்.
  • உப்பு வலைமதிப்புடையதாகக் கருதப்பட்டது.
  • எனவே ஒரு குற்றிப்பிட்ட அளவு உப்புக்கு அதே அளவு அரிசி பரிமாற்றிக் கொள்ளப்பட்டது.
  • சங்க கால சேர, சோழ, பாண்டிய மற்றும் மலையமான் ஆகிய அரசர்களின் நாணயங்கள் பெருமளவு கிடைத்திருப்பதைக் கொண்டு, அவை பரவலாகப் புழக்கத்தில் இருந்தன என்று அறியமுடிகிறது.

தமிழகமும் வெளிநாட்டுத் தொடர்புகளும்

  • கிழக்கிலும் மேற்கிலும் பல வெளிநாடுகளுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர்.
  • ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று வீசும் சமயத்தில் மேலைக்கடலான அரபிக்கடலைக் கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்நன.
  • மிளகு போன்ற நறுமணப் பொருள்களும், யானைத் தந்தம், நவமணிகள் உள்ளிட்ட அரிய பொருள்களும் திமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆயின.
  • தங்கம்,வெள்ளி,செம்பு உள்ளிட்ட உலோகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன.
  • கிரேக்க, ரோமனிய, மேற்கு ஆசிய மக்கள் உள்ளிட்ட மேற்கத்தியர்கள் யவனர் என்று அழைக்கப்பட்டனர்.
  • யவனர் எனும் சொல் கிரேக்கப் பகுதியான ‘அயோனியா’ விலிருந்து வந்தது.

தமிழ்நாட்டிலிருந்து செங்கடல் கரைக்கு

  • செங்கடல் கடற்கரையில் உள்ள பெர்னிகே துறைமுகத்தில் ஏழரை கிலோ மிளகு இருந்த இந்தியப் பானையும், தேக்கு மரப்பலகைத் துண்டுகளும், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த (தமிழக) பானை ஓடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன.
  • செங்கடல் கடற்கரையில் பெர்னிகே துறைமுகத்திற்கு வடபகுதியில் உள்ள இன்னொரு துறைமுகம் குசேர் அல் காதிம் என்பதாகும்.
  • இந்த இடத்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட மூன்று சுடுமண் பாண்டத் துண்டுகள் கண்டறியப்பட்டன.
  • அவற்றில் பனை ஓறி, கண்ணன்(கணன்),சாத்தன்(சாதன்)என எழுதப்பட்டுள்ளது.
  • ‘பெரும் பத்தன் கல்’ என்ற பெயரில் தாய்லாந்து நாட்டைல் உள்ள குவான் லுக் பாட் என்ற இடத்தில் அரிய கல் ஒன்று கிடைத்துள்ளது.
  • இக்கல், பெரும்பத்தன் என்பவரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
  • மேலும் அவர் ஒரு பொற்கொல்லராக இருக்க வேண்டும்.
  • அந்தக்கல் தங்கத்தின் தரத்தை அறிய உதவும் உரைகல் ஆகும்.
  • தென்கிழக்கு ஆசியாவைத் தமிழ் இலக்கியங்கள் சுவர்ணபூமி என்று குறிப்பிடுகின்றன.

நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் தோற்றம்

  • சங்க காலத்தில்தான் தமிழ்நாட்டில் நகரங்கள் முதன்முறையாக உருப்பெற்றன.
  • சாலைகளும் குடியிருப்புப் பகுதிகளும் கொண்ட திட்டமிட்ட நகரங்களில் செங்கற்களால் ஆன கட்டிடங்கள் கட்டப்பட்டன.
  • வீடுகளுக்குக் கூரையாக ஓடுகள் வேயப்பட்டன.
  • உறைகிணறுகளும் சேமிப்புக் கிடங்குகளும் இருந்தன.
  • சில நகரங்கள் துறைமுகப்பட்டின்ங்களாகவும், கைவினைத் தொழில் மையங்களாகவும் இருந்தன.
  • கிழக்குக் கடற்கரையில் அமைந்த அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், அழகங்குளம், கொற்கை ஆகிய நகரங்களும், கேரளத்தின் பட்டணம் என்ற நகரும் துரைமுகங்களாகவும் விளங்கியவை.
  • காஞ்சிபுரம், உறையூர், கரூர், மதுரை, கொடுமணல் ஆகிய நகரங்கள் உள்நாட்டு வணிக மையங்களகத் திகழ்ந்தன.
  • இம்மையங்களில் பல வகைப்பட்ட பொருள்களும் பண்டங்களும் உற்பத்தி செய்யப்பட்டுப் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் இந்த நகரங்கள் அளவில் பெரியவை.
  • நகரங்களைத் தவிர எண்ணற்ற சிற்றூர்களிலும் மக்கள் வாழ்ந்திருந்தனர்.
  • வெண்கலப் பொருள்கள், மணிகள், சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், தமிழ் பிராமி எழுத்துக்களில் மக்களின் பெயர் பொறித்த மட்கலங்கள் போன்றவை இந்த இடங்களில் கிடைத்துள்ளன.

பட்டணம், கேரளா

  • கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வடக்குப் பரவூர் என்ற ஊரை ஒட்டிய வடக்கேகரா என்ற சிற்றூரின் அருகே பட்டணம் அமைந்துள்ளது.
  • மேலை நாடுகளோடும் கீழை நாடுகளோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்த பழங்காலத்துறைமுகம்தான் பட்டணம்

.

கொடுமணல்

  • கொடுமணல், தமிழ்நாட்டில் ஈரோடுக்கு அருகில் உள்ளது.
  • சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் கொடுமணம்தான் இவ்வூர் எனக் கருதப்படுகிறது.
  • பெருங்கற்கால முதுமக்கள் தாழிகளும் இரும்பு, மணிக்கற்கள், சங்கு வேலைப்பாடுகள் குறித்த சான்றுகளும் இங்கே கிடைத்துள்ளன.
  • தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட 300க்கும் மேற்பட்ட மட்கலப் பொறிப்புகள் இந்த ஊரில் கிடைத்துள்ளன.

கீழடி

  • மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் சிலைமான் என்ற ஊருக்கு அருகில் கீழடி உள்ளது.
  • இங்கே பள்ளிச் சந்தைத்திடல் என்று அழைக்கப்படும் பரந்த தென்னந்தோப்பில் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையினர் மேற்கொண்ட அகழாய்வுகளின் மூலம் சங்க காலத்து நகரம் புதையுண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • செங்கற் கட்டுமானங்கள் கழிவுநீர் வழிகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட மட்கல ஓடுகள், செம்மணிக்கற்களலான அணிகள், முத்து, இரும்பு பொருள்கள், விளையாட்டுப்பொருள்கள், கண்ணுக்கு மை தீட்டும் செப்புக் கம்பி போன்றவை கண்டறியப்பட்டுள்ளன
  • இன்னும் அகழாய்வுகளை மேற்கொண்டால், கைத்தொழில் முறைகள் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் பல தகவல்கள் வெளிவரும்,

நகர்மையம் என்பது என்ன?

  • திட்டமிட்ட வடிவமைப்பும் , செங்கல் கட்டுமானங்களும் கொண்ட மக்கள் வசிப்பிடமே நகரம் ஆகும்.
  • வேளாண்மை, கால்நடைவளர்ப்பு அல்லாத ஏனைய தொழில்களில் ஈடுபடுகின்ற மக்கள் அவ்விடங்களில் பெருமளவில் வாழ்வார்கள்.
  • நகரங்களில் பற்பல உற்பத்திப் பணிகள் நடைபெறும்.

நம்பிக்கைகளும் வழிபாட்டுமுறையும்

  • சங்க காலச்சமூகம் மற்றும் பொருளாதார அமைப்பில் பன்மைத்துவம் காணப்படுவது போலவே மக்களின் வழிபாட்டு முறைகளிம் பன்மைத்துவம் காணப்படுகிறது.
  • ஆவி வழிபாடு, மூதாதையார் வழிபாடு, வீரர்கள் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு போன்றவை சங்க காலத்தில் இருந்தன.
  • ஐந்திணைகளூக்கும் உரிய வழிபட்டு கடவுள்களைத் தொல்காப்பியம் சுட்டுகிறது.
  • குறிஞ்சிக்கு முருகன், முல்லைக்குத் திருமால், மருதத்திற்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன், பாலைக்குக் கொற்றவை என்று தொல்காப்பியர் கூறுகிறார்.
  • எனினும் மக்கள் வீரமரணம் எய்திய வீரர்களையும், தமது குல மூதாதையர்களையும் அதிக அளவில் வழிபட்டனர்.
  • இயற்கைக்கு மீறிய ஆற்றல் கொண்ட அணங்கு குறித்துச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.
  • குகைகளில் காணப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் மூலம் சமண சமயம் வழக்கில் இருந்தமை தெரிகிறது.
  • வேள்விகள் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
  • சில இடங்களில் புத்த சமயமும் இருந்தது.
  • வெவ்வேறு குழுக்கள் வேறுவேறான வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தனர்.

நுண்கலைகள்

  • சங்க காலத்தில் பலவகையான கலைகளும் செழித்திருந்தன.
  • சமய சடங்குகளின் போது நிகழ்த்தப்படும் ஆட்டங்களில் ஒரு வகைக்கு வெறியாட்டம் என்று பெயர்.
  • செய்யுள் இயற்றல், இசைக்கருவிகளை இசைத்தல், நடனமாடுதல் ஆகியவற்றைப் பலரும் அறிந்திருந்தனர்.
  • சங்க காலத்து உணவு முறைகள் குறித்து இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
  • மகளிர் தம் கண்களுக்கு மைதீட்டுவதற்குச் செம்பினால் ஆன மெல்லிய குச்சிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
  • இக்குச்சிகள் பல அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இதனால் தோற்றப் பொலிவிலும் அவர்கள் அக்கறை கொண்டிருந்தனர் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!