Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

மக்களின் புரட்சி Book Back Questions 8th Social Science Lesson 4

8th Social Science Lesson 4

4] மக்களின் புரட்சி

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மத்திய இந்தியாவில் புரட்சி ஜான்சியின் ராணி இலட்சுமிபாய் அவர்களால் வழி நடத்தப்பட்டது. இந்தியாவின் மாபெரும் தேசபக்தர்களுள் அவரும் ஒருவர். சர் ஹக்ரோஸ் ஜான்சியை ஆக்கிரமித்தார். ஜான்சியிலிருந்து தப்பிய இராணி லட்சுமிபாய், குவாலியரில் படையை தலைமையேற்று வழிநடத்திய தாந்தியா தோபேவுடன் இணைந்தார். ஆனால் ஆங்கிலப் படை ஜீன் 1858இல் குவாலியரை கைப்பற்றியது. போரில் ராணி லட்சுமிபாய் கொல்லப்பட்டார். தப்பிய தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். ஆங்கில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி 1857 புரட்சியில் கலந்து கொண்ட தலைவர்களில் மிகவும் துணிச்சலானவர் இராணி லட்சுமிபாய் ஆவார்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

(அ) 1519

(ஆ) 1520

(இ) 1529

(ஈ) 1530

2. பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்

(அ) பூலித்தேவன்

(ஆ) யூசுப்கான்

(இ) கட்டபொம்மன்

(ஈ) மருது சகோதரர்கள்

3. காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?

(அ) மதுரை

(ஆ) திருநெல்வேலி

(இ) இராமநாதபுரம்

(ஈ) தூத்துக்குடி

4. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?

(அ) பாஞ்சாலங்குறிச்சி

(ஆ) சிவகங்கை

(இ) திருப்பத்தூர்

(ஈ) கயத்தாறு

5. வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?

(அ) நாகலாபுரம்

(ஆ) சிவகிரி

(இ) சிவகங்கை

(ஈ) விருப்பாச்சி

6. “திருச்சிராப்பள்ளி பிரகடனம்” யாரால் வெளியிடப்பட்டது?

(அ) மருது பாண்டியர்கள்

(ஆ) கிருஷ்ணப்ப நாயக்கர்

(இ) வேலு நாச்சியார்

(ஈ) தீரன் சின்னமலை

7. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?

(அ) திண்டுக்கல்

(ஆ) நாகலாபுரம்

(இ) புதுக்கோட்டை

(ஈ) ஓடாநிலை

8. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?

(அ) மத்திய இந்தியா

(ஆ) டெல்லி

(இ) கான்பூர்

(ஈ) பரெய்லி

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. கிழக்குப்பகுதி பாளையங்கள் ____________ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

2. விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் __________ உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்.

3. கட்டபொம்மனின் முன்னோர்கள் ___________ பகுதியைச் சார்ந்தவர்கள்.

4. ____________ தமிழர்களால் “வீர மங்கை” எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார்.

5. ___________ “சிவகங்கையின் சிங்கம்” என அழைக்கப்படுகிறார்.

6. 1857ஆம் ஆண்டு புரட்சியை ___________ என்பவர் “முதல் இந்திய சுதந்திரப் போர்” என விவரிக்கிறார்.

பொருத்துக:

1. டெல்லி – கன்வர் சிங்

2. கான்பூர் – கான் பகதூர் கான்

3. ஜான்சி – நானா சாகிப்

4. பரெய்லி – லட்சுமி பாய்

5. பீகார் – இரண்டாம் பகதூர் ஷா

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்.

2. சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவார்.

3. 1799 அக்டோபர் 17ஆம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

4. திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர் ஆவார்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

I. வேலூர் புரட்சி 1801ஆம் ஆண்டு ஏற்பட்டது.

II. நான்காம் மைசூர் போருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்.

III. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக இருந்தார்.

IV. ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.

(அ) I & II சரி

(ஆ) II & IV சரி

(இ) II & III சரி

(ஈ) I, II & IV சரி

தவறான இணையைக் கண்டறிக:

அ) மருது பாண்டியர் – எட்டயபுரம்

ஆ) கோபால நாயக்கர் – திண்டுக்கல்

இ) கேரளவர்மன் – மலபார்

ஈ) துண்டாஜி – மைசூர்

மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி:

அ) கட்டபொம்மன்

ஆ) ஊமைத்துரை

(இ) செவத்தையா

(ஈ) திப்பு சுல்தான்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. (1529) 2. பூலித்தேவன் 3. இராமநாதபுரம் 4. கயத்தாறு 5. சிவகங்கை

6. மருது பாண்டியர்கள் 7. ஓடாநிலை 8. மத்திய இந்தியா

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. கட்டபொம்மன் 2. அரியநாதர் 3. ஆந்திரா 4. வேலுநாச்சியார் 5. சின்ன மருது

6. வி. டி. சவார்க்கர்

பொருத்துக: (விடைகள்)

1. டெல்லி – இரண்டாம் பகதூர்ஷா

2. கான்பூர் – நானா சாகிப்

3. ஜான்சி – லட்சுமி பாய்

4. பரெய்லி – கான் பகதூர் கான்

5. பீகார் – கன்வர் சிங்

சரியா தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. சரி

2. தவறு

சரியான விடை: சிவசுப்பிரமணியம் என்பவர் கட்டபொம்மனின் அமைச்சர் ஆவார்.

3. சரி

4. சரி

பின்வரும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையைக் குறிப்பிடவும்: (விடைகள்)

1. ii & iii சரி

தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்: (தவறான ஒன்று)

1. மருது பாண்டியர் – எட்டயபுரம்

சரியான விடை: மருது பாண்டியர் – சிவகங்கை

மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி: (மாறுபட்டது)

(இ) திப்பு சுல்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!