Book Back QuestionsTnpsc

அணு அமைப்பு Book Back Questions 9th Science Lesson 11

9th Science Lesson 11

11] அணு அமைப்பு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

1920-ஆம் ஆண்டு அணுவின் உட்கருவில் நடுநிலைத்தன்மை உடைய துகள் ஒன்று உள்ளது என ரூதர்போர்டு தீர்மானித்தார். ஜேம்ஸ் சாட்விக் நியூட்ரானைக் கண்டறிந்தார். இவர் ரூதர்போர்டின் மாணவன்.

அணுவின் அடிப்படைத் துகள்களான புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் நீங்கலாக, அணுவின் உட்கருவில் உள்ள பிற அடிப்படைத் துகள்களாவன: மெசான்கள், நியூட்ரினோக்கள், ஆன்டிநியூட்ரினோக்கள், பாசிட்ரான்கள்.

அணு எண் “Z” வடிவத்தில் ஏன் வடிவமைக்கப்பட்டுள்ளது? “Z” என்றால் ஸ்ஸாஃல் (Zahl) ஜெர்மானிய மொழியில் ‘எண்’ என்று பொருள். ‘Z’ என்பதை அணுஸ்ஸாஃல் (atom Zahl) அல்லது அணு எண் எனலாம். ‘A’ என்கின்ற குறியீடு M, ஜெர்மானிய மொழியில் மாசென்ஸ்ஸால் (massenzahl) என்கிற குறியீட்டுக்குப் பதிலாக, ACS வழிமுறையில், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கணக்கீடு 1: ஒரு தனிமத்தின் அணுவின் நிறை எண் 39, நியூட்ரான்களின் எண்ணிக்கை 20 எனில் அதன் அணு எண்ணைக் கணக்கிடு, மற்றும் அத்தனிமத்தின் பெயரைக் கண்டுபிடி.

தீர்வு: நிறை எண் = அணு எண் + நியூட்ரான்களின் எண்ணிக்கை.

அணு எண் = நிறை எண் – நியூட்ரான்களின் எண்ணிக்கை = 39 – 20 = 19. அணு எண் 19-ஐக் கொண்ட தனிமம் பொட்டாசியம் ஆகும்.

புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் இணைக்கும் விசையானது ஈர்ப்பு விசையைக் காட்டிலும் மிகவும் வலிமையானது. இது யுகாவா விசை என அழைக்கப்படுகிறது.

அணுக்கள் மிக நுண்ணிய நிறை எண்களைப் பெற்றுள்ளதால் அவற்றை கிராமில் அளவிட முடியாது. ஆவை amu (அணு நிறை அலகு) என்றும் அளவிடப்படுகின்றன. இதன் புதிய அலகு U. அணுவின் உருவ அளவு நானோமீட்டர் என்ற அலகினால் அளவிடப்படுகின்றது (1 nm = 10-9 m). அணுக்கள் மிகவும் நுண்ணிய பொருளாக உள்ளதால் அவை ஸ்கேனிங் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் (SEM) மூலம் பார்வையிடப்படுகின்றன.

கணக்கீடு 2: அலுமினயம் அணுவின் (13 எலட்ரான்கள்) எலக்ட்ரான் பகிர்வைக் கணக்கிடுக.

தீர்வு: K – ஆர்பிட் = 2 எலக்ட்ரான்கள்.

L – ஆர்பிட் = 8 எலக்ட்ரான்கள்.

M – ஆர்பிட் – 3 எலக்ட்ரான்கள்.

ஃ அலுமினியத்தின் எலக்ட்ரான் அமைப்பு 2, 8, 3.

கணக்கீடு 3: மெக்னீசியம் மற்றும் சல்ஃபரின் இணை திறனைக் குறிப்பிடு.

தீர்வு: மெக்னீசியத்தின் எலக்ட்ரான் வடிவமைப்பு 2, 8, 2

அதனால் அதன் இணைதிறன் 2.

சல்ஃபரின் எலக்ட்ரான் வடிவமைப்பு 2, 8, 6 அதனால் அதன் இணைதிறன் 2.

கட்டை விரல் விதியைப் பயன்படுத்தி t என்பது மேலே எனவும், b என்பது கீழே எனவும் கொள்வோம். ஐசோடோப்புகள்: மேலே உள்ள நிறை எண் மாறியிருத்தல்; ஐசோபார்கள்: கீழே உள்ள அணு எண் மாறியிருத்தல்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. தவறான ஒன்றைக் கண்டுபிடி

(அ) 8O18, 9F19

(ஆ) 18Ar40, 7N14

(இ) 14Si30, 15P31

(ஈ) 20Cr40, 19K39

2. நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது.

(அ) ஒரு அயனி

(ஆ) ஒரு ஐசோடோப்

(இ) ஒரு ஐசோபார்

(ஈ) வேறு தனிமம்

3. நியூக்ளியான் குறிப்பது

(அ) புரோட்டான் + எலக்ட்ரான்

(ஆ) நியூட்ரான் மட்டும்

(இ) எலக்ட்ரான் + நியூட்ரான்

(ஈ) புரோட்டான் + நியூட்ரான்

4. 35Br80-ல் உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

(அ) 80, 80, 35

(ஆ) 35, 55, 80

(இ) 35, 35, 80

(ஈ) 35, 45 35

5. பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு

(அ) 2, 8, 9

(ஆ) 2, 8, 1

(இ) 2, 8, 8, 1

(ஈ) 2, 8, 8, 3

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், உட்கருவினை நிலையான சுற்றுப்பாதையில் சுற்றுகின்றன.

2. ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு வெவ்வேறு அணு எண்களைக் கொண்டது.

3. எலக்ட்ரான்கள் மிகச்சிறிய அளவு நிறை மற்றும் மின்சுமை கொண்டவை.

4. ஆர்பிட்டின் அளவு சிறிதாக இருந்தால், அதன் ஆற்றல் குறைவாக இருக்கும்.

5. L-மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 10.

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. கால்சியம் மற்றும் ஆர்கான் இணை ____________க்கு எடுத்துக்காட்டு.

2. ஒரு ஆற்றல் மட்டத்தில் நிரப்பப்படும் அதிக பட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ___________

3. ____________ ஐசோடோப் அணு உலையில் பயன்படுகின்றது.

4. 3Li7 -ல் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை ___________

5. ஆர்கானின் இணைதிறன் ____________

பொருத்துக:

1. டால்டன் – ஹைட்ரஜன் அணு மாதிரி

2. சாட்விக் – நியூக்ளியஸ் கண்டுபிடிப்பு

3. ரூதர்போர்ட் – முதல் அணுக்கொள்கை

4. நீல்ஸ்போர் – பிளம்புட்டிங் மாதிரி

– நியூட்ரான் கண்டுபிடிப்பு

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. 18Ar40, 7N14 2. ஒரு ஐசோடோப் 3. புரோட்டான்+ நியூட்ரான் 3. 35, 45, 35 4. 2, 8, 8, 1

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. சரி

2. தவறு

சரியான விடை: ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு ஒரே அணு எண்களைக் கொண்டது.

3. சரி

4. சரி

5. தவறு

சரியான விடை: L-மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை – 8.

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஐசோபார்கள் 2. (2n2) 3. யுரேனியம் 4. நான்கு 5. பூஜ்யம்

பொருத்துக: (விடைகள்)

1. டால்டன் – முதல் அணுக் கொள்கை

2. சாட்விக் – நியூட்ரான் கண்டுபிடிப்பு

3. ரூதர்போர்ட் – நியூக்ளியஸ் கண்டுபிடிப்பு

4. நீல்ஸ்போர் – ஹைட்ரஜன் அணு மாதிரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button