Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

அன்றாட வாழ்வில் தாவரங்கள் Book Back Questions 6th Science Lesson 19

6th Science Lesson 19

19] அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

உலக உணவு தினம் அக்டோபர் 16. அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பையும் சத்துணவின் தேவையையும் வலியுறுத்தி இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண் நிறுவன அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு இத்தினத்தினைக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் பற்றி உனது ஆசிரியரிடம் கேட்டு அறிந்து கொள்.

உலகளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.

இந்தியாவில் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒடிசா, பீகார், உத்திரப்பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய ஏழு மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகின்றது. மேற்கு வங்காளம் மட்டும் இந்திய சணல் உற்பத்தியில், 50 விழுக்காடு உற்பத்தி செய்கிறது.

மரக்கட்டைகளிலிருந்து மெல்லியதாகச் சீவி எடுக்கப்படுகின்ற மரத்தகடுகளை உரிய வகையில் ஒன்றின் மேலொன்று அடுக்கடுக்காக ஒட்டி உருவாக்கப்படுவதே ஒட்டுப்பலகை (Ply Wood) ஆகும். இது ஒருவகைக் கூட்டு மரப் (Composite Wood) பலகை ஆகும்.

பாலக்கீரை: மூட்டு முடக்குவாதம் என்பது அனைத்து வயதினருக்கும் மூட்டு மற்றும் முழங்கால் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். இந்த நோய்க்கான மருந்தினை பாலக்கீரையிலிருந்து தற்போது மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவன (CDRI – Central Drug Research Institute – Lucknow) விஞ்ஞானிகள் நானோ உருவாக்கத்தின் (Nano Formulation) மூலம் உருவாக்கியுள்ளனர்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

(அ) வாத்து

(ஆ) கிளி

(இ) ஓசனிச்சிட்டு

(ஈ) புறா

2. இயற்கையான கொசு விரட்டி

(அ) ஜாதிக்காய்

(ஆ) மூங்கில்

(இ) இஞ்சி

(ஈ) வேம்பு

3. பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

(அ) உருளைக்கிழங்கு

(ஆ) கேரட்

(இ) முள்ளங்கி

(ஈ) டர்னிப்

4. பின்வருவனவற்றுள் எது வைட்டமின் ‘C’ குறைபாட்டைப் போக்குகிறது?

(அ) நெல்லி

(ஆ) துளசி

(இ) மஞ்சள்

(ஈ) சோற்றுக் கற்றாழை

5. இந்தியாவின் தேசிய மரம் எது?

(அ) வேப்பமரம்

(ஆ) பலா மரம்

(இ) ஆலமரம்

(ஈ) மாமரம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _____________ஆம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

2. ____________ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.

3. நான் தமிழ்நாட்டின் மாநில மரம். நான் யார்? ______________

4. _______ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்குகிறது.

5. அவரைக் கடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ணக் கூடிய விதைகள் _________ எனப்படுகின்றன.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப்படுகின்றன.

2. பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றன.

3. அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது.

4. கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று.

5. கரும்புத் தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகிறது.

IV.பொருத்துக:

1. நார்தரும் தாவரம் – அ] கிருமி நாசினி

2. வன்கட்டை – ஆ] நறுமணப் பொருள்

3. வேம்பு – இ] சணல்

4. ஏலக்காய் – ஈ] தானியம்

5. கம்பு – உ] தேக்கு

V. ஓப்பிடுக:

1. மாம்பழம் : கனி : : மக்காச்சோளம் : ______________

2. தென்னை : நார் :: ரோஜா : ________

3. தேனீக்கள் : மகரந்தச் சேர்க்ககையாளர் :: மண்புழு : _____________

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஓசனிச்சிட்டு, 2. வேம்பு, 3. உருளைக்கிழங்கு, 4. நெல்லி, 5. ஆலமரம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. 16, 2. பருத்தி, 3. பனைமரம், 4. துளசி, 5. பருப்புகள்

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. அலங்காரதாவரங்கள், 2. சரி, 3. செம்பருத்தி, 4. ஏற்றது, 5. சரி

IV.பொருத்துக:

1. இ, 2. உ, 3. அ, 4. ஆ, 5. ஈ

V. ஓப்பிடுக:

1. தானியம், 2. மலர், 3. மண்வளம் அதிகரிப்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!