Book Back QuestionsTnpsc

அன்றாட வாழ்வில் வேதியியல் Book Back Questions 7th Science Lesson 17

7th Science Lesson 17

17] அன்றாட வாழ்வில் வேதியியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

வ.எண் புதிய ஓ.ஆர்.எஸ் கிராம்/லிட்டர் சதவீதம் % புதிய ஓ.ஆர்.எஸ் mno/லிட்டர்
1 சோடியம் குளோரைடு 2.6 12.683 சோடியம் 75
2 குளுக்கோஸ் 13.5 65.854 குளோரைடு 65
3 பொட்டாசியம் குளோரைடு 1.5 7.317 குளுக்கோஸ் 75
4 ட்ரைசோடியம் சிட்ரேட், ஷட்ரோட் 2.9 14.146 பொட்டாசியம் 20
5 சிட்ரேட் 10
6 மொத்தம் 20.5 100.00 மொத்த சவ்வூடு பரவல் 245

சளி மற்றும் புளு போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்வதில்லை.

மயக்க மூட்டிகள்: 1860இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் கோகோ இலைகளிலிருந்து கோகைன் என்ற முதல் மயக்க மூட்டும் மருந்தினைப் பிரித்தெடுத்தார்.

கிருமி நாசினி: குளோரோசைலெனோல் மற்றும் டெர்பென்கள் ஆகியவை சேர்ந்த கலவையாகும்.

அயோடின் (Tincture): அயோடின் + 2 to 3% ஆல்ஹகால் – நீர் கலந்த சோப்பு கரைசல், ஐயோடஃபார்ம் பினாலிக் கரைசல்கள், எத்தனால் மற்றும் போரிக் அமிலம் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்.

இயற்கை ஆண்டிசெப்டிக் : பூண்டு, மஞ்சள், சோற்று கற்றாலை, வெங்காயம், முள்ளங்கி.

தீப்பிடித்தலின் வேதிவினை: ஆக்ஸிஜன் + வெப்பம் + எரிபொருள் = தீ.

மெழுகுவர்த்தியின் மேலே உள்ள காற்று எரிவதால் மெழுகுவர்த்தி சுடர் உருவாகிறது. வெப்பசலனக் கொள்கையின்படி சுடரின் மேல் எரியக்கூடிய காற்றின் அடர்த்தியானது சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் அடர்த்தியை விட குறைவாக இருப்பதால் சுடரானது எப்பொழுதும் மேல் நோக்கி இருக்கின்றது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நிமோனியா, மற்றும் மூச்சுக் குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து __________

(அ) ஸ்ட்ரெப்டோமைசின்

(ஆ) குளோரோம்பெனிகால்

(இ) பென்சிலின்

(ஈ) சல்பாகுனிடின்

2. ஆஸ்பிரின் ஒரு _____________

(அ) ஆண்டிபயாடிக்

(ஆ) ஆண்டிபைரடிக்

(இ) மயக்க மருந்து

(ஈ) சைக்கீடெலிக்

3. __________ என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது.

(அ) அமில நீக்கி

(ஆ) ஆண்டிபைரடிக்

(இ) வலிநிவாரணி

(ஈ) ஆண்டிஹிஸ்டமின்

4. ஒரு பொருள் தீப்பிடிக்க தேவையான மிகக் குறைந்த வெப்ப நிலை அதன் ___________ என அழைக்கப்படுகிறது.

(அ) கொதிநிலை

(ஆ) உருகுநிலை

(இ) சிக்கலான வெப்பநிலை

(ஈ) எரிவெப்ப நிலை

5. மெழுகுவர்த்தியின் சுடரில் வெப்பமான பகுதி எது ___________

(அ) நீலம்

(ஆ) மஞ்சள்

(இ) கருப்பு

(ஈ) உள் பகுதி

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பென்சிலின் முதன்முதலில் கண்டுபிடித்தவர் _____________

2. உலக ORS தினம் ____________

3. எரிதல் என்பது ஒரு வேதிவினை, இதில் பொருள் ___________ உடன் வினைபுரிகிறது.

4. நீரில் நனைந்த காகிதத்தின் எரிவெப்ப நிலை _____________

5. எண்ணெய்யால் உற்பத்தி செய்யப்படும் நெருப்பை ___________ ஆல்கட்டுப்படுத்த முடியாது.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. சளி மற்றும் புளு போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் மருந்துகள் வேலை செய்யும்.

2. வலி நிவாரணி என்பது காய்ச்சலின் போது வெப்ப நிலையைக் குறைக்கும் பொருட்கள்.

3. அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குகின்றன.

4. எரிதலுக்கு ஆக்ஸிஜன் அவசியம்.

5. மரம் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் காற்றுமாசுபடுகிறது.

பொருத்துக:

1. ஆண்டிபைரடிக் – வலியைக் குறைக்கும்.

2. வலி நிவாரணி – உடல்வெப்ப நிலையைக் குறைக்கும்.

3. ஆன்டாசிட் – தன்னிச்சையான எரிப்பு

4. பாஸ்பரஸ் – ORS தீர்வு

5. கார்பன் டை ஆக்சைடு – சுவாச பிரச்சனைக்கு வழி வகுக்கிறது.

ஒப்புமை தருக:

1. சுடரின் உள்மண்டலம்: ___________, சுடரின் வெளிமண்டலம்: ____________

2. டிஞ்சர்: _____________ ; ஹிஸ்டமைன்: ____________

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. பென்சிலின் 2. ஆண்டிபைரடிக் 3. அமிலநீக்கி 4. எரிவெப்பநிலை

5. நீலம்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங் 2. (ஜீலை 29) 3. ஆக்ஸிஜனேற்ற காரணி

4. (4510F) 5. தண்ணீர்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறானதைத் திருத்தி எழுதுக: (விடைகள்)

1. தவறு

சரியான விடை: சளி மற்றும் புளு போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆண்டியாடிக்குகள் மருந்துகள் வேலை செய்யவதில்லை

2. தவறு

சரியான விடை: உடம்பெல்லாம் தனப்பு என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருட்கள்.

3. தவறு

சரியான விடை: அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குவதில்லை.

4. சரி

5. சரி

பொருத்துக: (விடைகள்)

1. ஆண்டிபைரடிக் – உடல்வெப்பநிலையைக் குறைக்கும்

2. வலி நிவாரணி – வலியைக் குறைக்கும்

3. ஆன்டாசிட் – தீர்வு

4. பாஸ்பரஸ் – தன்னிச்சையான எதிர்ப்பு

5. கார்பன் டை ஆக்ஸைடு – சுவாக பிரச்சனைக்கு வழி வகுக்கிறது

ஒப்புமை தருக: (விடைகள்)

1. குறைந்த வெப்பம் (கருப்பு), அதிக வெப்பம் (நீலம்)

2. நிறமி நாசினி, ஒவ்வாமை பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button