Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

அளவீடுகள் Book Back Questions 6th Science Lesson 1

6th Science Lesson 1

1] அளவீடுகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்கு தெரியுமா?

பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு. எனவே, அங்கு எடை குறைவாக இருக்கும். ஆனால், இரண்டிலும் நிறை சமமாகவே இருக்கும். நிலவின் ஈர்ப்புவிசை புவியின் ஈர்ப்பு விசையைப்போல ஆறில் ஒரு பங்கு இருப்பதால், நிலவில் ஒரு பொருளின் எடை பூமியில் உள்ளதைவிட ஆறு மடங்கு குறைவாகவே இருக்கும்.

முற்காலத்தில் மக்கள் பகல் நேரத்தைக் கணக்கிட, மணல் கடிகாரம் மற்றும் சூரியக்கடிகாரத்தைப் பயன்படுத்தினர். தரையில் நடப்பட்ட ஒரு குச்சியின் நிழலினைக் கொண்டும் நேரத்தைக் கணக்கிட முடியும். மணல் நிரப்பப்பட்ட, சிறிய துளை உடைய பாத்திரத்தைக் கொண்டும் காலத்தைக் கணக்கிடலாம். அந்தப் பாத்திரத்திலுள்ள மணலானது கீழே விழ ஆரம்பிக்கும். இதனைப் பயன்படுத்தி காலத்தைக் கண்கிடலாம்.

ஒடோமீட்டர் என்பது தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள், 1790ல் ஃபிரெஞ்சு நாட்டினரால் உருவாக்கப்பட்டது. தற்காலத்தில் நீளத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் அளவுகோல், பதினாறாம் நூற்றாண்டில் வில்லியம் பெட்வெல் என்ற அறிவியல் அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உள்ள எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தில் பிளாட்டினம் – இரிடியம் உலோகக் கலவையிலான படித்தர மீட்டர் கம்பி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த மீட்டர் கம்பியின் நகல் ஒன்று டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1 கிலோகிராம் என்பது ஃபிரான்ஸில் உள்ள செவ்ரெஸ் என்ற இடத்தில் சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தால் 1889 முதல் வைக்கப்பட்டுள்ள, பிளாட்டினம் – இரிடியம் உலோகக் கலவையால் ஆன ஒரு உலோகத் தண்டின் நிறைக்குச் சமம்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது

(அ) மீட்டர் அளவுகோல்

(ஆ) மீட்டர் கம்பி

(இ) பிளாஸ்டிக் அளவுகோல்

(ஈ) அளவு நாடா

2. 7 மீ என்பதை சென்டி மீட்டரில் மாற்றினால் கிடைப்பது

(அ) 70 செ.மீ

(ஆ) 7 செ.மீ

(இ) 700 செ.மீ

(ஈ) 7000 செ.மீ

3. அளவிடப்படக்கூடிய அளவிற்கு __________ என்று பெயர்

(அ) இயல் அளவீடு

(ஆ) அளவீடு

(இ) அலகு

(ஈ) இயக்கம்

4. சரியானதைத் தேர்ந்தெடு:

(அ) கி.மீ > மி.மீ > செ.மீ > மீ

(ஆ) கி.மீ > மி.மீ > செ.மீ > கி.மீ

(இ) கி.மீ > மீ > செ.மீ > மி.மீ

(ஈ) கி.மீ > செ.மீ > மீ > மி.மீ

5. அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும்போது, உனது கண்ணின் நிலை ___________ இருக்க வேண்டும்.

(அ) அளவிடும் புள்ளிக்கு இடதுபுறமாக

(ஆ) அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக

(இ) புள்ளிக்கு வலது புறமாக

(ஈ) வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. SI அலகு முறையில் நீளத்தின் அலகு ___________

2. 500 கிராம் = _______________ கிலோகிராம்.

3. டெல்லிக்கும், சென்னைக்கும் இடையில் உள்ள தொலைவு ____________ என்ற அலகால் அளவிடப்படுகிறது.

4. 1 மீ = ______________ செ.மீ

5. 5 கி.மீ = ____________ மீ.

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக: தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக:

1. ஒரு பொருளின் நிறையை 126 கி.கி. எனக் கூறலாம்.

2. ஒருவரின் மார்பளவை மீட்டர் அளவு கோலைப் பயன்படுத்தி அளவிட முடியும்.

3. 10 மி.மீ என்பது 1 செ.மீ ஆகும்.

4. முழம் என்பது நீளத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் நம்பகமான முறை ஆகும்.

5. SI அலகு முறை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

IV. ஓப்புமையின் அடிப்படையில் நிரப்புக:

1. சர்க்கரை : பொதுத்தராசு :: எலுமிச்சைச் சாறு : ______________

2. மனிதனின் உயரம் : செ.மீ :: கூர்மையான பென்சில் முனையின் நீளம் : ______________

3. பால் : பருமன் :: காய்கறிகள் : ____________

V. பொருத்துக:

1. முன்கையின் நீளம் – அ. மீட்டர்

2. நீளத்தின் SI அலகு – ஆ. விநாடி

3. நானோ – இ. 103

4. காலத்தின் SI அலகு – ஈ. 10-9

5. கிலோ – உ. முழம்

VI. பின்வரும் அலகுகளை ஏறு வரிசையில் எழுதுக:

1 மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லி மீட்டர்

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. அளவு நாடா, 2. 700 செ.மீ, 3. இயல் அளவீடு, 4. கி.மீ > மீ > செ.மீ > மி.மீ, 5. அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மீட்டர், 2. அரை, 3. கிலோமீட்டர், 4. 100 செ.மீ, 5. 5000

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக: தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக:

1. சரி, 2. அளவிடும் நாடா, 3. சரி, 4. தோராயமான, 5. சரி

IV. ஓப்புமையின் அடிப்படையில் நிரப்புக:

1. அளவு ஜாடி, 2. மில்லிமீட்டர், 3. நிறை

V. பொருத்துக:

1. உ, 2. அ, 3. ஈ, 4.ஆ, 5. இ

VI. பின்வரும் அலகுகளை ஏறு வரிசையில் எழுதுக:

1 மில்லி மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 மீட்டர், 1 கிலோ மீட்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!