Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

அளவீட்டியல் Book Back Questions 7th Science Lesson 1

7th Science Lesson 1

1] அளவீட்டியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

கணக்கு 1: ஒரு மீட்டர் பக்க அளவு கொண்ட 10 சதுரங்களை கொண்ட பொருளொன்றின் பரப்பளவு என்ன?

தீர்வு: ஒரு சதுரத்தின் பரப்பளவு = பக்கம் x பக்கம் = 1 மீ x 1 மீ = 1 மீ2 = 1 சதுர மீட்டர். 10 சதுரங்களை கொண்ட பொருளொன்றின் பரப்பளவு = 1 சதுர மீட்டர் x 10 = 10 சதுர மீட்டர். (பரப்பளவு என்பது சதுர மீட்டரில் குறிக்கப்பட்டாலும், பரப்பு சதுர வடிவமாக இருக்க வேண்டிய அவசியமில்லை).

ஒரு சதுர மீட்டர் என்பது ஒரு மீட்டர் பக்க அளவு கொண்ட சதுரம் ஒன்றினுள் அடைப்படும் பரப்பாகும்.

கணக்கு 2: கீழே தரப்பட்டுள்ள ஒழுங்கான வடிவமுள்ள பொருள்களின் பரப்பளவைக் காணவும்: (π = 22/7 எனக் கொள்க).

(அ) 12 செ.மீ நீளமும் 4 செ.மீ அகலமும் கொண்ட செவ்வகம்

(ஆ) 7 செ.மீ ஆரம் கொண்ட வட்டம்

(இ) 6 செ.மீ அடிப்பக்கமும் 8 செ.மீ உயரமும் கொண்ட முக்கோணம்

தீர்வு: (அ) செவ்வகத்தின் பரப்பு = நீளம் x அகலம் = 12 x 4 = 48 செ.மீ2

(ஆ) வட்டத்தின் பரப்பு = π x r2 = (22/7) x 7 x 7 = 154 செ.மீ2

(இ) முக்கோணத்தின் பரப்பு = (1/2) x அடி x உயரம் = (½) x 6 x 8 = 24 செ.மீ2

கணக்கு 3: (அ) 3 செ.மீ பக்க அளவுள்ள கனசதுரம்

(ஆ) 3 மீ ஆரமும் 7 மீ உயரமும் கொண்ட உருளை ஆகியவற்றின் கனஅளவினைக் காணவும். (π = 22/7 எனக் கொள்ளவும்.)

தீர்வு: (அ) கனசதுரத்தின் கனஅளவு = பக்கம் x பக்கம் x பக்கம் = 3 x 3 x 3 = 27 செ.மீ3 (அ) கன செ.மீ.

(ஆ) உருளையின் கனஅளவு = π x r2 x உயரம் = (22/7) x 3 x 3 x 7 = 198 மீ3

திரவங்களின் பருமனை அளக்க வேறு சில அலகுகளும் பயன்படுத்தப்படுகின்றன அவற்றுள் சில கேலன் (Gallon), அவுன்ஸ் (Ounce) மற்றும் குவார்ட் (Quart). 1 கேலன் = 3785 ml, 1 அவுன்ஸ் = 30 ml, 1 குவார்ட் = 1 l.

சமையல் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் போன்றவை பார்ப்பதற்கு நீரைவிட அடர்த்தி மிகுந்தவைகளாகத் தோற்றமளித்தாலும், அவற்றை விட நீர் அதிக அடர்த்தி கொண்டது. விளக்கெண்ணெயின் அடர்த்தி 961 கி.கி./மீ3. விளக்கெண்ணெய்யில் ஒரு துளி நீரை இடும்பொழுது, நீர்த்துளி மூழ்கும். ஆனால், நீரில் ஒரு துளி விளக்கெண்ணைய்யை இடும் பொழுது, அது மிதந்து நீரின் மீது ஒரு படலத்தை உருவாகும். எனினும், சில எண்ணெய் வகைகள் நீரை விட அதிக அடர்த்தி கொண்டவை.

கணக்கு 4: 280 கி.கி நிறை கொண்ட ஒரு திட உருளையின் கனஅளவு 4 மீ3. அதன் அடர்த்தியைக் காண்க.

தீர்வு: உருளையின் அடர்த்தி (D) = உருளையின் நிறை (M) / உருளையின் கன அளவு (V) = 280/4 = 70 கி.கி./மீ3.

கணக்கு 5: இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பெட்டியின் பருமன் 125 செ.மீ3. அதன் நிறையைக் காண்க. (இரும்பின் அடர்த்தி = 7.8 கி/செ.மீ3)

தீர்வு: அடர்த்தி = நிறை/கனஅளவு. எனவே, நிறை = அடர்த்தி/கனஅளவு = 125 x 7.8 = 975 கி.

கணக்கு 6: தாமிரத்தால் செய்யப்பட்ட ஒரு கோளத்தின் நிறை 3000 கி.கி. தாமிரத்தின் அடர்த்தி 8900 கிகி./மீ3. எனில், கோளத்தின் பருமனைக் காண்க.

தீர்வு: அடர்த்தி = நிறை/கனஅளவு. எனவே, கன அளவு = நிறை/அடர்த்தி = 3000/8900 = 0.34 மீ3.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

(அ) நிறை

(ஆ) நேரம்

(இ) பரப்பு

(ஈ) நீளம்

2 பின்வருவனவற்றுள் எது சரி?

(அ) 1L = 1 cc

(ஆ) 1 L = 10 cc

(இ) 1 L = 100 cc

(ஈ) 1 L = 1000 cc

3. அடர்த்தியின் SI அலகு

(அ) கி.கி/மீ2

(ஆ) கி.கி/மீ3

(இ) கி.கி/மீ

(ஈ) கி/மீ3

4. சம நிறையுள்ள இரு கோளங்களின் கன அளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்

(அ) 1:2

(ஆ) 2:1

(இ) 4:1

(ஈ) 1:4

5. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

(அ) தொலைவு

(ஆ) நேரம்

(இ) அடர்த்தி

(ஈ) நீளம் மற்றும் நேரம்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருட்களின் பருமனை அளக்க ___________ விதி பயன்படுகிறது.

2. ஒரு கன மீட்டர் என்பது __________ கன சென்டிமீட்டர்

3. பாதரசத்தின் அடர்த்தி ___________

4. ஒரு வானியல் அலகு என்பது ___________

5. ஓர் இலையின் பரப்பை __________ பயன்படுத்தி கணக்கிடலாம்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் கனஅளவு எனப்படும்.

2. திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.

3. நீர் மண்ணெண்ணெயை விட அடர்த்தி அதிகம் கொண்டது

4. இரும்பு குண்டு பாதரசத்தில் மிதக்கும்.

5. ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையில் மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகம் கொண்டப் பொருள் எனப்படும்.

பொருத்துக:

1.

வரிசை – 1 வரிசை – 2

1. பரப்பு – அ. ஒளி ஆண்டு

2. தொலைவு – ஆ. மீ3

3. அடர்த்தி – இ. மீ2

4. கன அளவு – ஈ. கி.கி

5. நிறை – உ. கி.கி./மீ3

2.

வரிசை – 1 வரிசை – 2

1. பரப்பு – அ. கி/செமீ3

2. நீளம் – ஆ. அளவிடும் முகவை

3. அடர்த்தி – இ. பொருளின் அளவு

4. கன அளவு – ஈ. கயறு

5. நிறை – உ. தள வடிவ பொருள்

சரியான வரிசையில் எழுது:

1. 1 L, 100 cc, 10 L, 10 cc.

2. தாமிரம், அலுமினியம், தங்கம், இரும்பு.

ஒப்புமை தருக:

1. பரப்பு: மீ2:: கன அளவு: ___________

2. திரவம்: லிட்டர்:: திடப்பொருள்: __________

3. நீர்: மண்ணெண்ணெய்:: ___________: அலுமினியம்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

உங்களது விடையைப் பின்வருமாறு தேர்ந்தெடுத்து எழுதுக:

(அ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

(ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

1. கூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.

காரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.

2. கூற்று: மரக்கட்டை நீரில் மிதக்கும்.

காரணம்: நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம்.

3. கூற்று: ஓர் இரும்பு குண்டு நீரில் மூழ்கும்.

காரணம்: நீர் இரும்பை விட அடர்த்தி அதிகமுடையது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. பரப்பு 2. 1L = 1000 CC 3. கிகி/மீ3 4. (1 : 2) 5. நீளம் மற்றும் நேரம்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஆர்க்கிமிடிஸ் 2. (100000) 3. (13600 கிகி/மீ3)

4. (149.6×106 கிமீ (or) 149.6×மில்லியன் கிமீ (or) 1.496×1011மீ 5. வரைபடத்தாளை

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக. தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக: (விடைகள்)

1. சரி

2. சரி

3. சரி

4. சரி

5. தவறு

சரியான விடை: ஓரலது பருமனில் அதிக எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகமுடைய பொருள் எனப்படும்

பொருத்துக: (விடைகள்)

1.

1. பரப்பு – மீ2

2. தொலைவு – ஒளி ஆண்டு

3. அடர்த்தி – கிகி/மீ3

4. கனஅளவு – மீ3

5. நிறை – கிகி

2.

1. பரப்பு – தள வடிவ பொருள்

2. நீளம் – கயிறு

3. அடர்த்தி – கி/செமீ3

4. கன அளவு – அளவிடும் அளவு

5. நிறை – பொருளின் அளவு

பின்வருவனவற்றை சரியான வரிசையில் எழுதவும்: (விடைகள்)

1. 10 cc, 100 cc, 1 l, 10 l

2. அலுமினியம், இரும்பு, தாமிரம், தங்கம்.

ஒப்புமையைக் கொண்டு நிரப்புக: (விடைகள்)

1. கனமீட்டர் 2. கிலோகிரோம் 3. இரும்பு

கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து, சரியானவற்றைத் தேர்வு செய்க.

1. கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

2. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு

3. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!