இந்தியாவும் அண்டை நாடுகளும் Notes 12th Political Science Lesson 10 Notes in Tamil

12th Political Science Lesson 10 Notes in Tamil

இந்தியாவும் அண்டை நாடுகளும்

அறிமுகம்

 • இந்தியா நீளமான கடல் மற்றும் நில எல்லைகளை கொண்டுள்ளது. ஆப்கானீஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், பூடான், சீனா, மியான்மர், மாலத்தீவு, நேபாளம் , இலங்கை போன்றவை இந்தியாவுடன் எல்லைகளாக கொண்டுள்ளன. அணிசேராக் கொள்கை அல்லது இராணுவ மோதல்களில் ஈடுபடாமை ஆகியவற்றை தனது அயல்நாட்டு கொள்கையாகக் கொண்டுள்ளது.
 • புவியியல் ரீதியாக எல்லை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை இந்தியா சந்தித்து வருகிறது. மேலும் அண்டை நாடுகளின் கொள்கைகளின் தாக்கமும், இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்துவதும் என்பது உண்மையாகும்.
 • விடுதலை பெற்றதிலிருந்து இந்தியா அண்டை நாடுகளுடன் நல்ல உறவுமுறைகளை ஏற்படுத்த முயற்சி செய்த வண்ணமே உள்ளது. ஆனாலும் சில அண்டை நாடுகள் எதிர்மறை நிலையை பின்பற்றி வருவதால் சண்டைகளும், பிரச்சனைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
 • அண்டை நாடுகளுடனான உறவுகளில், ஐந்து அம்சம் கொண்ட பஞ்சசீலக் கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது.

இந்திய –ஆப்கானிஸ்தான் உறவுகள்

 • ஆப்கானிஸ்தானுடன் நட்பூறவை மேம்படுத்த 1947இல் இருந்து இந்தியா தன்னுடைய கொள்கைத் திட்டத்தை மேம்படுத்தியும் செயல்படுத்தியும் வருகிறது. 1950இல் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் “நட்புறவை ஒப்பந்தத்தை” ஏற்படுத்திக் கொண்டது.
 • ஆப்கானிஸ்தான் மன்னர் ஜாஹிர் ஷாவின் ஆட்சிக் காலம் இந்தியாவிற்கான நட்பு உறவில் சிறந்த காலமாக கருதப்பட்டது. 1979இல் சோவியத் ஆக்கிரமிப்பிற்கு முன்பாகவே, பல்வேறு ஒப்பந்தங்களின் வாயிலாகவும், நெறிமுறைகளின் மூலமாகவும், சோவியத் ஆதரவு அரசாங்கங்களுடன் இந்தியா நட்புறவை வளர்ந்து வந்துள்ளது.
 • இந்தியாவுடனான ஆப்கானிஸ்தானின் உறவு 1979இல் இருந்து 1989 வரை தடைப்பட்டிருந்தாலும், இந்தியா பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பங்கு பெற்று ஆப்கானிஸ்தானின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

 • ஆப்கானிஸ்தானில் 1990-களின் மத்தியில் தாலிபான்களின் ஆட்சி உறுதியானதால், தாலிபானுக்கு எதிரான அமைப்புகளுடன் இந்தியா கைகோர்த்து நர்பூறவை வளர்த்தது.
 • ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப இந்தியா அல்லும் பகலும் பாடுபட்டு நன்மதிப்பை சம்பாதித்தது. ஆனாலும் ஆப்கானிஸ்தானில் நிலவிய நிலையற்ற சூழ்நிலையினால் இந்தியாவின் கொள்கைகள் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் தடைப்பட்டன.

 • மேலும், வடக்கு நாடுகளின் கூட்டணியுடனும், மண்டல நாடுகளுடனும் சேர்ந்து தாலிபான்களின் ஆட்சியை நீர்த்துப் போக இந்தியா பாடுபட்டது.
 • ஈரான், ரஷ்யா, தஜிகிஸ்தான் போன்ற நாடுகளுடன் கைகோர்த்து, இந்தியா வடக்கு நாடுகளின் கூட்டணிக்கு வேண்டிய பொருள் வளங்களை அளித்து வலிமைப்படுத்தியது.
 • 2001 முதல், பல்வேறு வளர்ச்சி திட்டங்களிலும், மனிதாபிமான அடிப்படையிலும் ஆப்கான் நாட்டின் மேம்பாட்டில் இந்தியா ஈடுபட தொடங்கியது. இவை மட்டுமல்லாது, ஆப்கான் நாட்டின் குடிமக்கள் மற்றும் ராணுவத்திற்கு ஆயுத பயிற்சியையும் அளித்தும் உறவுமுறையை பலப்படுத்தியது. ஆப்கானிஸ்தானில், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்குமான உறவுமூரை போட்டி “பெரும் சவாலாக” உலக அரசில் கருதப்படுகிறது.
 • 2005 ஆம் ஆண்டு, இந்தியா சார்க் மண்டல அமைப்பில், ஆப்கானிஸ்தான், உறுப்பினராக சேர்வதற்கு வழி மொழிந்தது. 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி ஆப்கானிஸ்தான் உறுப்பினராக இணைந்தது.

இந்திய-ஆப்கானிஸ்தான் ராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு

 • ஆப்கானிஸ்தான், இந்தியாவின் இயற்கையான நட்புறவு நாடாகும். ஏனெனில், பாகிஸ்தானின் விருப்பங்களை அறியவும், நடப்பு நிகழ்வுகளை அறியவும் ஆப்கானிஸ்தானை வரையறையில்லாத நட்பு நாடாக இந்தியா போற்றியது. மேலும் ஆப்கானிஸ்தான் ராணுவம் சார்ந்த உறவுமுறையை இந்தியாவுடன் செயல்படுத்தியதை, பாகிஸ்தான் தடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது.
 • இது அல்லாது, மனிதாபிமான உதவிகளை செய்ததின் மூலமாக, பாரபட்சமில்லாத உறவு முறையையும் இந்தியா தோற்றுவித்தது.
 • பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அடிப்படை இந்திய சமூக கட்டமைப்பில் பல்வேறு அழிவு ரீதியான நடவடிக்கைகள் அரங்கேற்றுவதற்கு வழிவகுத்தது.

இந்திய –ஆப்கானிஸ்தான் பொருளாதார உறவுகள்

 • ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய கனிம வளங்களான இரும்புத்தாது, லித்தியம், குரோமியம், இயற்கை வாயு மற்றும் பெட்ரோலியத்தின் மொத்த மதிப்பீடு சுமார் ஒரு ட்ரில்லியன் முதல் மூன்று ட்ரில்லியன் டாலர்கள் ஆகும்.

 • ஆப்கானிஸ்தானில் மட்டும் இந்திய முதலீடு சுமார் மூன்று பில்லியன் டாலர்கள் இருப்பதால் இந்தியர்களையும் அவர்களது முதலீட்டையும் காப்பது தலையாய கடமையாக உள்ளது.
 • முக்கிய ஏற்றுமதி பொருள்களாக பருப்புகள், மின்சாதனங்கள், பால் பொருள்கள், தேன், ரப்பர் பொருள்கள், மருந்துகள் மற்றும் ஆடைகள், இதர இயந்திர பொருள்கள் விளங்குகின்றன.
 • மேலும் இறக்குமதி பொருள்களாக பழங்கள், உலர் பருப்பு/ பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள், விலைமதிப்புள்ள கற்கள் ஆகியன உள்ளன.
 • 2003இல் இந்திய-ஆப்கான் வணிகத்தை முன்னேற்றும் பொருட்டு முன்னுரிமை வாணிப ஒப்பந்தத்தில் இவ்விரு நாடுகளும் கையெழுத்திட்டன. இதன் மூலம் சுமார் 38 வகை இறக்குமதி பொருள்களுக்கு, 50-லிருந்து 100 விழுக்காடு வரை வரிச்சலுகைகளை இந்தியா அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
 • மேலும் 2011இல் இந்தியா, ஆப்கான் நாட்டிலிருந்து இறக்குமதியாகக் கூடிய அனைத்தும் பொருள்களுக்கும் (மது மற்றும் புகையிலை பொருள்கள் தவிர) அடிப்படை சுங்க வரியை நீக்கியது.
 • இதன் மூலம் மேற்கூறிய அனைத்து பொருள்களுமே இந்திய சந்தையில் சுலபமாக விற்பதற்கு வழி வகுத்தது. ஆப்கானிஸ்தானின் மிக முக்கிய சந்தையாக இந்தியா விளங்குவது, இதன் மூலம் அறியலாம்.
 • ஈரானில் அமைந்திருக்க கூடிய “சபாஹர்” தூறமுகத்தின் மூலம் ஆப்கானிலிருந்து இந்தியாவிற்கும், ஏனைய மற்ற நாடுகளுக்கும் வாணிபம் எளிதாக மேற்கொள்ள வழி செய்யலாம்.
 • சமீபத்தில் சபாஹர் துறைமுகத்தில் 85 மில்லியன் அமெரிக்கா டாலர் செலவில் வர்த்தக போக்குவரத்து மையம் ஒன்றை இந்தியா, அமைத்தது மற்றொரு மைல் கல்லாகும்.

இந்திய –ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு உறவுகள்

 • ஆப்கான் தாலிபான்களையும், அவர்களின் அச்சுறுத்தல்களையும் 1990-களில் இந்தியா மிகப்பெரிய சவாலாகவே பார்த்தது. மேலும் பாகிஸ்தானும், பல்வேறு தீவிரவாத குழுக்களான லஷ்கர் –இ-தொய்பா, ஹர்கத்-வுல்-முஜாஹிதீன்/ஹர்ஹத் –வுல்- அன்சார் மற்றும் ஹர்ஹத் –வுல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி போன்றவைகளை வளர்த்தும், இந்தியாவில் செயல்பட வைத்தும் வந்தன.
 • மேற்கூறிய அனைத்து தீவிரவாத குழுக்களும், ஆப்கானிஸ்தானில் பயிற்சிப் பெற்று அல்-கொய்தாவின் நீட்சியாகவே இந்தியாவில் செயல்பட்டன. ஆப்கானிஸ்தான், தீவிரவாதத்தின் சொர்க்க பூமியாக செயல்பட்டது.
 • இந்தியாவிற்கு மாபெரும் அச்சுறுத்தலாகவே இருந்தது. மேலும் தீவிரவாத கொள்கைகளும் செயல்பாடுகளும் ஆப்கானில் பரவியதால், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது பங்கமாக விளைந்தது.
 • பாகிஸ்தானுடனான ஆப்கனிஸ்தானின் ராணுவம் சார்ந்த உறவுமுறைகளில் பாகிஸ்தானை பலப்படுத்தியும், இந்தியாவை செயலிழக்கவும் செய்தன. ஆப்கானிஸ்தானில் பல்வேறு தீவிரவாத குழுக்களை அதன் எல்லைப் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் செயல்பட வைத்தது. பாகிஸ்தான் , முக்கிய நகரமாக ‘லோயா பாக்டியா’ ஆகும்.
 • தங்க பிறை எனப்படும் ஈரான், ஆப்கான் மற்றும் பாகிஸ்தானின் ‘தங்க நிலாஅ விளைவானது’ மாபெரும் பிரச்சனையாகவே இருந்தது. முக்கியமாக போதைப்பொருள் விஷயங்களில் பஞ்சாப் அதிகமாக பாதிக்கப்பட்டது. ஈரான் மற்றும் சிரியாவின் பாதிப்பானது ஆப்கான் நாட்டில் கண்கூடாகவே தெரிந்தது.

ஆப்கானிஸ்தானில் இந்திய வளர்ச்சி திட்டங்கள்

 • ஸ்டோர் அரண்மனையை அதே நகரத்தில் மீட்டெடுப்பது.
 • ஹபீபியா உயர்நிலை பள்ளியை தலைநகரத்தில் கட்டுவது, அதற்குண்டான நிதிஉதவி அளிப்பது.
 • ஆப்கான் தேசிய விவசாய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை காந்தஹாரில் நிறுவுவதில் நிதியளிப்பது.
 • காபீலில் சிம்ட்டாலா துணை மின் நிலையம் அமைப்பது.
 • காந்தஹாரில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது. ஆப்கானின் கிரிக்கெட் வீரர்கள், இந்திய மைதானத்தை தங்களின் சொந்த மைதானதமாக நினைக்க வைப்பது.
 • காந்தஹாரில் குளிர்சாதன கிடங்கை உருவாக்குவது.
 • தொலைபேசி தகவல் பரிமாற்ற அலுவலகங்களை நியமிப்பது. தேசிய தொலைக்காட்சி வலைத்தளங்களை உருவாக்குவது.
 • சில மண்டலங்களில் குழாய் கிணறுகளை தோண்டுவது.
 • இந்தியா, பேருந்துகள், ஹெலிஜாப்டர்கள் மற்றும் அவசர ஊர்திகளையும் இலவசமாக அளித்துள்ளது.

இந்திய-ஆப்கானிஸ்தான் ராணுவம் சார்ந்த ஒப்பந்தம்

 • 2011-இல் ஆப்கானிஸ்தானுடன் ராணுவம் சார்ந்த தொடர்பை ஒப்பந்தத்தின் மூலமாக உறுதி செய்த முதல் நாடு இந்தியாவாகும். அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு உடன்பட்டு, இந்தியா குறைந்த அளவிலேயே நட்புறவை கொண்டிருந்தது. மேலும் இந்திய-ஆப்கானிஸ்தான் உடனான நட்பூறவை, பாகீஸ்தானின் பாதிப்பில்லாத வகையில் மட்டுமே நோக்கியது.
 • இந்திய-பாகிஸ்தான் –ஆப்கானிஸ்தான் முத்தரப்பு நட்புறவானது, பரஸ்பரம் தனித்தன்மையானது என்பதை இந்தியா உறுதியாக்கியது.
 • 1965 மற்றும் 1971 இந்தியாவிற்கு எதிராக போர்களில் ஆப்கான் தனித்து நின்று கொண்டது. காஷ்மீர் பிரச்சனையிலும் பொதுப்படையாக ஆப்கானிஸ்தான் இந்தியாவை ஆதரிக்க தயங்கியது. டியூரண்ட் எல்லை சர்ச்சையில் இந்தியா தனித்து நின்றது.
 • அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் அதன் நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றில் பங்கு இருந்தால் மட்டுமே ஆப்கானீஸ்தானில் நிலைத்தன்மை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியா உணர்கிறது.
 • ஆப்கானிஸ்தானில் மண்டல மற்றும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது. இது தீவிரவாதத்தின் மேலாதிக்கத்திற்கு ஒரு சாத்தியமான கூறாகும் மற்றும் ஜூன் 2012 இல் ஆப்கானிஸ்தானில் டெல்லி முதலீட்டு உச்சி மாநாடு போன்ற முன்னோடி நிகழ்வுகளின் மூலம் அதன் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
 • ஆப்கானிஸ்தானில் அமைதிக்கான திறவுகோலைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்து, ஆசியாவின் இதயமான இந்தியா எல்லைக்குள் இந்த செயல்பாட்டின் மூலம் வணிக நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது.
 • பலதரப்பு ரீதியாக, ஆப்கானிஸ்தான் –இந்தியா-அமெரிக்க முத்தரப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் -இந்தியா- ஈரான் முத்தரப்பு போன்ற பல்வேறு பேச்சுவார்த்தை மூலம் ஆப்கானிஸ்தானில் ஒரு உரையாடலைத் தொடங்க இந்தியா உதவுகிறது.
 • அவை
 • சமாதானத்தையும், செழிப்பையும், பாதுகாப்பதற்கான பொதுவான இலக்கைத் தொடர்ந்து வேறுபட்ட உலக நாடுகளின் சர்வதேச அமைப்புகளுடன் மீதான சர்வதேச ஒத்துழைப்புக்கும், ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட பல்வேறு சர்வதேச மாநாடுகளுக்கும் இந்தியா தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது. இதில் ஜூலை 2012இல் நடந்த டோக்கியோ மேம்பாட்டு மாநாடு மற்றும் 2014 டிசம்பரில் லண்டன் மாநாடு போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.
 • 2015 இல் ஆப்கானிஸ்தானின் இராணுவத்திற்கு, Mi-25 ரக ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கியது. தாக்குதல் பெரிய அளவில் நடத்த ஏதுவான இவ்வகை ஹெலிகாப்டர்களை பரிசாக அளித்தது, பாகீஸ்தானின் எதிர்ப்பை சம்பாதித்தது.
 • மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் , ஆப்கான் போர் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தியா ஒத்துக்கொண்டது.

எதிர்கால ஒத்துழைப்பு

 • இந்தியாவின் வளர்ச்சிக்கான வழிமுறைகள், ஆப்கான் மக்களிடையே மிகுந்த வரவேற்பையும், ஒத்துழைப்பையும் உருவாக்கியுள்ளது. ஆனாலும் ஒரு சக்தி பொருந்திய அதே சமயத்தில் மென்மையான நாடு என்ற தன்மையை கொண்டிருப்பதால் ஒரு சில எல்லை கூறுக்களுக்குள்ளேயே செயல்பட வேண்டியுள்ளது.
 • சில நேரங்களில் மென்மையான நாடாகவே தொடர்வதா அல்லது அதிரடியாக ஆற்றலை வெளிப்படுத்துவதா என்பதில் இந்தியாவிற்கு தயக்கங்கள் உண்டு.
 • தாலிபான்களுடனான உறவை ஒருபோதும் நேரடியாக வைத்து கொள்ளாத நிலையில் இருந்தாலும், ஆப்கானிஸ்தான் அரசுடன் செய்து கொண்ட அத்துணை ஒப்பந்தங்களையும் இந்தியா தயங்காமல் பின்பற்றியது.
 • பல்வேறு ஆப்கான் குழுமங்களுடன் வலுவான உளவுத்துறை நிறுவனங்களின் மூலமாக ஒரு வழிமுறையை ஏற்படுத்தியதன் மூலம் இந்திய விருப்பங்கள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அங்குள்ள மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
 • ஆப்கான் மக்களுடனான நல்லணக்கத்தை எப்போதும் இந்தியா வளர்க்க பாடுபட வேண்டும். மேலும் உலக வர்த்தக மற்றும் மண்டலக் கழகங்களும் பேச்சு வார்த்தையின் மூலம் தாலிபான் மற்றும் கடந்த ஆண்டு ஆப்கான் மக்களிடையேயான பிரச்சனைகளை சரிசெய்யும் வகையில் வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அரசமைப்பு, மக்களாட்சி சட்டத்தின் ஆட்சி, பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான உரிமைகள் யாவும் நிலைப்படுத்தவும் இந்தியா முயற்சிக்க வேண்டும்.
 • தாலிபான்களின் குறைகளிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். மேலும் ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடன் கலந்து ஆலோசித்து தாலிபான்களின் கோரிக்கைகளில் கவனம் செலுத்துவது, அவை அவர்களின் சொந்த பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் விளைவிக்க கூடியது என்பதை புரிய வைக்க வேண்டியது போன்றவை இந்தியாவின் கடமை எனலாம்.

இந்திய –பாகிஸ்தான் உறவுகள்

 • இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 70 ஆண்டுகளாக அண்டை நாடுகளாக, நிலப்பரப்பு, கலாச்சாரம், மதம், மொழி மற்றும் தத்துவம் போன்றவைகளை பகிர்ந்து கொள்ளும் பழமைக்கால நாகரிகங்களாகும்.
 • இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது பெருமளவில் இடப்பெயர்வும் அதனை தொடர்ந்து மத கலவரமும், நடந்தபோது , லட்சக்கணக்கில் முஸ்லீம்கள் பாகிஸ்தானிற்கும், அதே அளவில் இந்துக்களும், சீக்கியர்களும், இந்தியாவிற்கு வந்தடைந்தனர். இப்பிரிவினையின் தொடர்ச்சியாக, இரு நாடுகள் பல போர்கள் மூலமாகவும், அதன் விளைவாக தீவிரவாதமும் எதிர்விளைவை உண்டாக்கி பகைமை நாடுகளாக மாறியது.

காஷ்மீர் பிரச்சனை

 • இவ்விரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளில், முக்கியமானதாக காஷ்மீர் விளங்குகிறது. 1947இல் விடுதலைக்கு பிறகு நடைபெற்ற மூன்று போர்களில் இரண்டு போர்களுக்கு மேற்கூறிய காரணமே முன்னிலை வகிக்கிறது. இந்திய சுதந்திர சட்டத்தின்படி, எடுக்கப்பட்ட கொள்கை முடிவான பிரிவினை திட்டத்தின்படி, காஷ்மீர் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைய முழு சுதந்திரம் பெற்றது.
 • ஆரம்பகால கட்டத்தில் தனி சுதந்திர நாடாக அமைய ஆசைப்பட்ட காஷ்மீர் மஹாராஜா ஹரிசிங், அக்டோபர் 1947இல் பழங்குடியினரின் தாக்குதலால் இந்தியாவுடன் இணைய சம்மதித்தார். அப்போது ஆரம்பித்த போரில், இந்தியா, ஐக்கிய நாட்டு சபையின் தலையீட்டை கோரியது.
 • இப்போரானது, ஜனவரி 1, 1949இல் ஐக்கிய நாட்டு சபையின் தலையீட்டில் முடிவுக்கு வந்து , ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் படையின் ஆதரவுடன் “போர் நிறுத்தம்” மேற்கொள்ளப்பட்டது. இதுவே இந்திய-பாகிஸ்தானின் முதல்போர் ஆகும்.
 • காஷ்மீருக்காக நடைபெற்ற நீண்ட போராகவும், செலவு குறைவான போராகவும் இது விளங்கியது. ஏனெனில் இருதரப்பு நாடுகளும் உபயோகப்படுத்திய துப்பாக்கி உபகரணங்கள் மிகக் குறைவே. இதன் தொடர்ச்சியாக காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு, இருநாட்டின் இராணுவமும் மதிக்கும்படியான எல்லைக்கோடு அமைந்தது. மேலும் மூன்று பாகம் பாகிஸ்தானின் எல்லையில் அமையப் பெற்றது.

 • ஐக்கிய நாடுகள் சபை, ‘பொது வாக்கெடுப்பை’ சிபாரிசு செய்தது. இவ்வாக்கெடுப்பின் மூலம் காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைவதற்கு உரிமை அளிக்கப் பெறுகிறது. ஆனால் அவ்வாறு நடைபெறுவதற்கு முன்னர் இரு நாடுகளும் “ராணுவமல்லாத பகுதியாக” காஷ்மீர் இருப்பதற்கு சம்மதிக்கவில்லை.
 • ஜூலை, 1946இல் இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஐக்கிய நாட்டு சபையின் பரிந்துரையை நிறைவேற்றின. இந்திய-பாகிஸ்தானுக்கிடையேயான இரண்டாவது போர் 1965இல் நடைபெற்றது.
 • இவ்வாறு நடந்த போர்களில் 1971இல் நடந்தது மட்டுமே முன் பிரகடனம் செய்யப்பட்டு நடந்தது. ஏனைய போர்கள் யாவுமே எல்லையில் நடந்த சிறு சர்ச்சைகளாக பாவிக்கப்படுகின்றன.
 • சுதந்திரம் அடைந்ததிலிருந்தே இவ்விரு நாடுகளும், போர்களை நிறுத்தி அமைதிக்காக பாடுபட வேண்டும் என்ற கொள்கையை நிலைநிறுத்திக் கொண்டன.

 • அதன் பிறகு 1999 இல் இந்தியா பாகிஸ்தானின் படை பலத்தோடு கார்கில் போரில் ஈடுபட்டது. அச்சமயத்தில் இவ்விரு நாடுகளுமே அணு ஆயுத நாடுகளாக தங்களை பறைசாற்றி கொண்டன. 1989-லிருந்து பிரிவினைவாதிகள் இந்தியாவிற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டதனால், பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.
 • இன்றைய இந்திய-பாகிஸ்தான் உறவுகள் “மூன்று முக்கியமான பிரச்சனைகளை மையமாக வைத்து இயங்குகிறது. காஷ்மீர், தீவிரவாதம் மற்றும் பொருளாதார உறவுகள், இம்மூன்று பிரச்சனைகளுமே, ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தாலும், தெற்கு ஆசியாவின் அமைதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்யமுடியாததாலும். பங்களாதேஷை இழந்ததாலும், இந்தியாவை தீவிரவாதத்தின் மூலம் சீர்குலைக்க, பாகிஸ்தான் முனைகிறது.

சிம்லா ஒப்பந்தம் (1972)

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமான அமைதி உடன்படிக்கை 1972, ஜூலை 2ஆம் நாளன்று ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரமான சிம்லாவில் கையெழுத்தானது. 1971இல் நடைபெற்ற பங்களாதேஷின் சுதந்திரப் போரின் தொடர்ச்சியாக இந்நிகழ்வு நடந்தது. பங்களாதேஷ் முன்பு கிழக்கு பாகிஸ்தானாக, பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்தது. இந்தியா-பங்களாதேஷின் கூட்டணி நாடாக சேர்ந்து, அப்போது இந்திய-பாகிஸ்தான் போராக 1971இல் அறிவிக்கப் பெற்றது. இரு நாட்டு அரசாங்கங்களும் தங்களின் நாடாளுமன்றங்களின் துணையோடு ஒப்புதல் பெற்றன. இவ்வொப்பந்தம் பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோ மற்றும் இந்திய பிரதமர் இந்திரா காந்தியாலும் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேஷ் தூதரக உறவு மேற்கொள்வதற்கு ஏதுவாக பாகிஸ்தான் கையெழுத்திட்டது.

370-வது உறுப்பை திரும்பப்பெறல்

2019 ஆகஸ்ட் 5, அன்று இந்திய குடியரசுத்தலைவர் உறுப்பு 370(1)க்கு (ஜம்மு மற்றும் காஷ்மீர் தொடர்பாக) ஒப்புதல் அளித்தார். இதன்படி, உறுப்பு 370-ன் கீழ் உள்ள அனைத்து சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும், விதி 370(1)ன் கீழே சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த திருத்தங்களின் கீழ், இந்திய அரசமைப்பின் அனைத்து விதிகளும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்துமாறு மாற்றப்பட்டுள்ளது.

இந்திய-பாகிஸ்தான் உறவுகளில் முக்கிய பிரச்சினைகள்

 1. சியாச்சின்

 • 1984 இல் இருந்து இந்திய-பாகிஸ்தான் போர் படைகள், உலகிலே மிகவும் உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலையில் தங்களது எல்லைகளை பாதுகாத்து அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க போராடும் நிலையில், மிஞ்சியது ஏமாற்றமே ஆகும்.

துல்லியத் தாக்குதல்

துல்லியத் தாக்குதல் –பாகிஸ்தான் அடுக்கடுக்கான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவின் குறைந்த பாதிப்புள்ள செயல்முறை திட்டமே “துல்லியத் தாக்குதல்” என அழைக்கப்படுகிறது.

 • இவ்வகை தாக்குதல் குறிப்பிட்ட இராணுவ தளவாடங்களை குறிவைப்பது.
 • குடிமை பகுதிகளுக்கு குறைந்த சேதாரத்தை அளிப்பது.
 • குறைந்த அல்லது மனித சேதமில்லாத தாக்குதல்கள்.

2. நீர் பங்கீட்டு பிரச்சனை

 • காஷ்மீரிலிருந்து உருவாகும் ஆறுகள் பாகிஸ்தானின் “சிந்து நதி” ஆற்று படுகைக்கு செல்லும் பட்சத்தில் நீர் பகிர்வதில் கருத்து ஒற்றுமையின்மை எழுகிறது. 1960இல் ஒப்பந்தம் செய்யப்பட்ட சிந்து நதி உடன்படிக்கையின்படி, மூன்று கிழக்கு ஆறுகளிலிருந்து வரும் நீர் இந்தியாவிற்கும், மேற்கு ஆறுகள் மூன்றிலிருந்து வரக்கூடிய நீர் பாகிஸ்தானிற்கும் உபயோகப்படுத்தலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா நீர்வரத்து வரும் வழியில் அணைகளை கட்டி நீரைதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதாக, பாகிஸ்தான் தரப்பு குற்றம் கூறுகிறது. இதை இந்தியா மறுக்கிறது.

3.  சர் கிரிக் பிரச்சினை

 • காஷ்மீர் மற்றும் சியாச்சின் மட்டுமல்லாது சில பல முக்கிய பிரச்சனைகளும் இவ்விரு அணுஆயுத சக்தி நாடுகளை சுற்றி வலம் வருகின்றன. 70 ஆண்டுகளாக சர் கிரிக் பிரச்சனை தீர்வின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
 • சர் கிரிக் என்பது 96 கி.மீ நீர் பிரச்சனையாக ‘கட்சி வளைகுடா’ பகுதியில் அமைந்துள்ளது. இதன் உண்மையான பெயர் பான்கங்காவாகும்.
 • பிரிட்டிஷ் பிரதிநிதி சர் கிரிக்கின் நினைவாக பெயர் மாற்றமாகியுள்ளது. கிரிக் என்பதுஅரபி கடலில் குஜராத்தில் அமைந்துள்ள கட்ச் மண்டலத்தையும், பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தையும் பிரிக்கின்ற ஒரு பகுதியாகும். கட்ச்சையும், சிந்து மாகாணத்தையும் பிரிக்கின்ற கடல் எல்லையே இந்த பிரச்சனைக்கு காரணியாகும்.
 • சுதந்திரத்திற்கு முன்பு, இம்மாகாணங்கள் மும்பையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆனால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, கட்ச் இந்தியாவின் பகுதியாகவும், சிந்து பாகிஸ்தானின் மாகாணமாகவும் பிரிந்தது. இடம் மற்றும் எல்லை தொடர்பான பிரச்சனை மட்டுமல்லாது இவ்விடம் மீன் வளம் அதிகமுள்ள பகுதியாக திகழ்கிறது.
 • இதுமட்டுமல்லாது சர் கிரிக் நீர் நிலையில், இயற்கை வாயு மற்றும் எண்ணெய் வளம் மிகுந்து இருப்பதனால் இவ்விரு நாடுகளும் தீர்வு காணமுடியாமல் முடிவில்லாத பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர்.
காலவரிசை இந்திய- பாகிஸ்தான் உறவுகள்
வ.எண் ஆண்டு முக்கிய நிகழ்வுகள்
1 1947 பிரிட்டன் பிரிவினை கொள்கையின் வாயிலாக இந்தியாவையும் பாகிஸ்தானையும் முறையே ஆகஸ்ட் 15, 14 தேதிகளில் மதசார்பற்ற நாடுகளாக விடுதலை அளித்து காலனியாதிக்கத்திலிருந்து விலக்கியது.
2 1947 -48 இந்தியாவும் பாகிஸ்தானும் பாகிஸ்தானின் பழங்குடியினர் ஆரம்பித்த தாக்குதலால், முதல் போரை சந்திக்க நேரிட்டது.
3 1954 ஜம்மு –காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைவதற்கு உண்டான ஒப்புதல், மாநில சாசனச் சட்ட குழுவின் மூலமாக நிறைவேற்றப்பட்டது.
4 1963 1962 இந்திய-சீனப்போரை தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் சுவரன் -சிங்கிற்கும், பாகிஸ்தானின் சுல்பிகர் அலி பூட்டோவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
5 1964 1963 பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா-வில் முறையிட்டது.
6 1965 இந்தியா, பாகிஸ்தான் இரண்டாவது போர்
7 1966 1966, ஜனவரி 10 நாளன்று இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும், பாகிஸ்தான் அதிபர் அயூப்கானும் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பொருளாதார மற்றும் தூதரக உறவுகளை மீட்பதற்கு உறுதி கொண்டனர்.
8 1971 மூன்றாவது முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் கிழக்கு பாகிஸ்தான் பிரச்சனைக்காக போரில் ஈடுபட்டனர்.
9 1972 பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவும், இந்திய பிரதமர் இந்திரா காந்தியும் சிம்லாவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
10 1974 காஷ்மீர் சட்டசபை, அம்மாநிலத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக உறுதியளித்து கொண்டன.
11 1988 இரு நாடுகளும் தங்களது அணு ஆயுத தளங்களை தாக்காமல் இருப்பதற்கு உறுதியளித்து கொண்டன.
12 1989 காஷ்மீரில் ஆயுத எதிர்ப்புக்கு நடவடிக்கைகள் தொடங்கியது.
13 1992 ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கு இரு நாடுகளும் கூட்டு பிரகடனத்தில் கையெழுத்திட்டன.
14 1998 பொக்ரானில் இந்தியா ஐந்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டது. இதை எதிர்த்து பாகிஸ்தான் சாகை குன்றுகளில் ஆறு அணுஆயுத சோதனைகளை நடத்தியது.
15 1999 இந்திய பிரதமர் வாஜ்பாயும் , பாகிஸ்தான் பிரமர் நவாஸ் ஷெரீப்பும் லாகூரில் சந்தித்தனர்.
16 2001 38 நபர்கள் காஷ்மீர் சட்ட சபை அருகே கொல்லப்பட்டதை தொடர்ந்து எல்லைக்கோட்டில் பதட்டம் அதிகமாகியது.
17 2007 பிப்ரவரி 18-ல் இந்திய-பாகிஸ்தான் இடையேயான ரயில் பானிப்பட் அருகே (டெல்லிக்கு வடக்கு) குண்டு வைத்து தகர்க்கப்பட்டதில் 68 பேர் உயிரிழந்தனர்.
18 2012 நவம்பரில் பாகிஸ்தான் குடிமகனான கசாப் தூக்கிலிடப்பட்டார். மும்பை தாக்குதலின் தீவிரவாதியான இவர் சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்னால் தூக்கிலிடப்பட்டார்.
19 2016 பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் செப்டம்பர் மாதம் இந்தியாவில் துல்லியத் தாக்குதலை மேற்கொண்டது.
20 2019 பிப்ரவரி 26இல் இந்தியா, பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது குழுவின் தீவிரவாத முகாம்களை வான்வழி தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது

கிளர்ச்சியாளர் தாக்குதலின் பட்டியல்

 • ஜம்மு-காஷ்மீரின் சட்டசபையில் தாக்குதல்

2001, அக்டோபர் 1, அன்று சட்டசபையின் அருகே கார் குண்டு வெடித்ததில் 27 நபர்கள் உயிரிழந்தனர். இதற்கு காஷ்மீர் பிரிவினைவாதிகள் குற்றம் சாட்டப்பட்டனர். இந்திய நாடாளுமன்ற தாக்குதல் டிசம்பர் 2001-க்கு நிகராக நடைபெற்ற தாக்குதல் போன்றதாகும்.

 • அப்துல் ஹானி படுகொலை

அனைத்து கட்சி ஹீரியத் தலைவர் அப்துல் ஹானி அடையாளம் தெரியாத நபர்களால் ஸ்ரீநகரில் படுகொலை செய்யப்பட்டார். படுகொலையின் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்தை எதிர்த்து அம்மாநிலம் முழுவதும் போராட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் நடத்தினர். போதுமான பாதுகாப்பு அவருக்கு தரப்படவில்லை என்பதே மக்களின் ஆதங்கமாக காரணம் கூறப்பட்டது.

 • 2008 மும்பை தாக்குதல் (26/11)

நவம்பர் 2008இல் லஷ்கர்-இல்-தொய்பாவின் பத்து உறுப்பினர்கள் 12 இடங்களில் துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வைத்தல் நிகழ்வுகளை நான்கு நாட்களாக அரங்கேற்றினர். உலக அரங்கையே அதிரவைத்த இக்கோரசம்பவம் 26 நவம்பரில் தொடங்கி 29 நவம்பரில் முற்றுப்பெற்றது. இச்சம்பவத்தில் 174 நபர்கள் உயிரிழந்தனர், 300 நபர்கள் படுகாயமுற்றனர். தாக்குதல் நடத்திய 9 தீவிரவாதிகளும் இறந்தவர்களில் உள்ளடக்கம்.

 • 2016 யூரி தாக்குதல்

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் உள்ள யூரியில் 18 செப்டம்பர் 2016 அன்று நடந்த பயங்கர தாக்குதலில் 18 நபர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு , 20 நபர்கள் படுகாயமடைந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில், யூரி தாக்குதல் கடுமையான விளைவை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.

 • 2019 புல்வாமா தாக்குதல்

2019 பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் ராணுவப் படை வாகனங்கள், தற்கொலை தீவிரவாதிய வாகனம் மோதியதில் அவ்விடத்திலேயே 38 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் படுகொலை செய்யப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இக்கோரச் சம்பவத்தில் பயங்கரவாதியும் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் இஸ்லாமிய தீவிரவாத குழுவான ஜெய்ஷ்-இ-முகமது நிகழ்வுக்கு பொறுப்பேற்றது.

இந்திய-பங்களாதேஷ் உறவுகள்

 • பங்களாதேஷ் இந்தியாவின் அண்டை நாடுகளில் முக்கியமான அங்கமாகவும், பங்குதாரர்களில் இன்றியமையாததாகவும் , வடகிழக்குப் பகுதியில் நிலைத்தன்மையின் ஆதாரமாகவும், தென்கிழக்கு ஆசியாவிற்குப் பாலமாகவும் அமைந்துள்ளது. “கிழக்கு நோக்கி கொள்கை”க்கு முக்கியமான காரணியாகவும் அமைந்துள்ளது.
 • 1970இல் பாகிஸ்தானிய தேசிய தேர்தலில் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை பெற்றது. ஆனால் மேற்கு பாகிஸ்தான் அந்த வெற்றியை அங்கீகரிக்காமல், அவாமி லீக் கட்சியினரை மிகவும் மோசமான அணுகுமுறையில் அடக்கியது.
 • இந்நிலைமை கிட்டத்தட்ட போர்க்களம் போன்ற சூழ்நிலையை கிழக்கு பாகிஸ்தானில் உருவாக்கி “முக்தி வாஹினி” என்ற சுதந்திர இயக்க குழு உருவாக வழிவகுத்தது.
 • கலவரம் பெருகும் பட்சத்தில் அகதிகளாக பெருவாரியான மக்கள் இந்தியாவில் தஞ்சமைடைந்தனர். இதனால் பங்களாதேஷ் சுதந்திர இயக்கத்திற்கு இந்தியா தன்னால் இயன்றவரை பயிற்சி மற்றும் ஆயுதங்கள் என்று உதவி செய்தது. பாகிஸ்தானின் திடீர் தாக்குதல், இந்தியாவை கிழக்குப் பாகிஸ்தான் நோக்கி போரை தொடங்குவதற்கு வழிகாட்டியது. டிசம்பர் 1971இல் பங்களாதேஷ் சுதந்திரம் பெற்று தனிநாடாக மாறியது.

 • புதிய நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்தியாவிற்கு அண்டை நாடுகளின் உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.
 • ஜனவரி 1972இல் ஷேக் முஜிப்பூர் ரஹ்மான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு, இந்திய-பங்களாதேஷ் உறவுகளில் பொற்காலமாக விளங்கியது. மேலும் இந்திய-பங்களாதேஷ் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

பங்களாதேஷ் உடன் வரலாற்று ரீதியான உறவு முறைக்கு அடித்தளமாக 1947-க்கு முன்பாக அமைந்த இந்தியாவின் நிலப்பரப்பில் பார்க்கலாம். இரு நாட்டு மக்களின் கலாச்சாரம், மதம் மற்ரும் மொழி ஆகியவையிடையே பல்வேறு ஒற்றுமைகளைக் காணலாம். இவ்விரு நாடுகளின் தேசிய கீதமும் கவிஞர் “ரவீந்திரநாத் தாகூரால்” எழுதப்பட்டதாகும். பங்களாதேஷின் உருவாக்கம் இந்தியாவின் மூலமாக என்பது தெற்காசிய நாடுகளின் மைல்கல் சாதனையாகும்.

இந்திய-பங்களாதேஷ் உறவுகளில் சவால்கள்

 1. பராக்கா தடுப்பணைகள்
 • பல்வேறுபட்ட இந்தியா-பங்களாதேஷ் உறவுகளின் பிரச்சனைகளில் மேற்கு வங்காளத்தில் உள்ள பராக்கா அணை முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த அணை பங்களாதேஷிலிருந்து இரண்டு மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஹீக்ளி ஆற்றை சுத்தப்படுத்துவதற்கு, அதில் வண்டல்மண் தேங்காமல் இருப்பதற்கும், பராக்கா தடுப்பணை உபயோகமாக உள்ளது.
 • மேலும் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா துறைமுகம் இயங்கவும், தொழில் துறை மற்றும் விவசாயம் தழைக்கவும் இந்த அணை பயன்பாட்டில் உள்ளதாக இந்தியத் தரப்பு கூறுகிறது. ஆனாலும் 1970-களிலிருந்து இந்த அணை தொடர்பான பிரச்சனைகள் இவ்விரு நாடுகளை மட்டுமல்லாது, உலக அரங்கின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

2. டீஸ்டா நதி நீர் பங்கீடு

 • டீஸ்டா காங்சே பனிப்பாறையிலிருந்து கிட்டத்தட்ட 7,068 மீ (23,189 அடி) உயரத்தில் கிழக்கை நோக்கி, சிக்கிம், மேற்குவங்காளம் மற்றும் பங்களாதேஷிற்கு பாயக்கூடியதாக உள்ளது. இந்த நதியானது பங்களாதேஷுக்கு நுழையும் பொழுது, பிரம்மபுத்திரா நதியோடு கலந்து பின் வங்காளவிரிகுடாவில் முடிகிறது.
 • 1979இல் மேற்கு வங்காள அரசு தடுப்பணையை இதன் குறுக்கே கட்டியபோது இப்பிரச்சனை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பாக பங்களாதேஷ் அரசு, “அந்நாட்டின் நெற்களஞ்சியமான” ராக்பூர் மாகாணம் பாதிப்பதாக வாதிட்டது.
 • 1983-ல் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனாலும் பங்களாதேஷுக்கு தேவையான நீரை இந்தியாவால் வழங்கிட முடியவில்லை. அரசியல் ரீதியாக நீர் பங்கீட்டு பிரச்சனை இன்றளவிலும் தீர்க்கமுடியாததாக உள்ளது.

இந்திய-பங்களாதேஷ் எல்லைக்கோடு

 • இந்திய-பங்களாதேஷ் எல்லைக் கோடானது 2,979 கி.மீ நீளத்தையும், 1,116 கி.மீ. ஆற்று வழியையும் உள்ளடக்கியது. இவ்வெல்லை 54 ஆறுகளையும் உள்ளடக்கியது, பிரம்மபுத்திரா உட்பட இந்தியாவின் மேற்கு வங்காளம், மேகாலயா, மிசோரம், அசாம் மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்கள் பங்களாதேஷிடம் 4,096 கி.மீ எல்லையை பகிர்ந்து காணப்படுகின்றன.
 • திரிபுரா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், பங்களாதேஷ், மியான்மர், பூடான் மற்றும் சீனா போன்ற நாடுகளால் சூழப்பட்டும், ஒரே நில மார்க்கம் அசாம் மற்றும் மேற்கு வங்காளம் மூலமாக மட்டுமே அமைந்துள்ளது. இதன் பிரதான பள்ளியாக மேற்குவங்காளத்தின் சிலிகுரி அமைந்துள்ளது.

3. நியூ மூர் தீவு

 • நியூ மூர் தீவு அல்லது தென் தளபதி என்பது வங்காள விரிகுடாவில் இருக்கும் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தீவாகும். இத்தீவு கங்கை-பிரம்மபுத்திரா டெல்டாவில் அமைந்துள்ளதாகும்.
 • 1970இல் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவான புயலால் இத்தீவு உண்டானது. இந்திய-பங்களாதேஷ்ற்கு கடந்த 20 ஆண்டுகளாக இருந்த இத்தீவு பிரச்சனை , 2010 இல் கடல் மட்ட உயர்வால் விடை கண்டது. இந்த நியூ மூர் தீவு சுந்தரவன பகுதிகளால் முழுமையான மூழ்கியுள்ளது.
 • செயற்கைக்கோள் படங்களும், கடல் ரோந்து படைகளின் தீர்மானமான முடிவுகளின் வழியாக பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.
 • இத்தீவில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு இருப்பதாக வந்த செய்தியினால் இந்தியாவும், பங்களாதேஷும் பரஸ்பரம் போட்டி போட்டுக் கொண்டன. மேலும் கடல் மட்டம் அதிகமாகும்போது மூர் தீவு காணாமல் போவதும், நீர் மட்டம் குறையும் போது தெரிவதும், வழக்கமாக காணப்படுகிறது.
 • மூர் தீவில் மக்கள் வசிக்காத போதிலும், அதில் நிரந்தர குடியேற்றங்கள் அல்லது நிலையங்கள் எதுவும் இல்லை என்றாலும், இந்தியாவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பதைப் பற்றிய ஊகங்களால், இந்தியாவும் பங்களாதேஷும் அதன் மீது உரிமைக் கோரின.

தீர்மானம்

நிரந்தர நடுவர்மன்றம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது, பங்களாதேஷிற்கு ஆதரவாக உள்ளது. ஜூலை 2014இல் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி வங்காள விரிகுடாவில் 19,467 ச.கி.மீ. பங்களாதேஷிற்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டது. 25,000 ச.கி.மீ. பிரச்சனைக்குரிய வங்காள விரிகுடாவில், மூர் தீவானது இந்தியாவிற்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.

4. சக்மா அகதிகள் பிரச்சனை

 • சிட்டகாங்க் மலை குன்றுகளில் வாழும் சக்மா மற்றும் ஹஜாங்க் குழுமங்கள் 1964-65 இல் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் ஆவர். கர்னாபுவி ஆற்றின் குறுக்கே “கப்தாய் அணை” கட்டும்போது மேற்கூறியவர்கள், தங்களின் பூர்வக்குடி பகுதிகளை இழந்து அகதிகளாக மாறினார்கள்.
 • மேலும் அவர்கள் வேறு மதத்தினராய் இருந்ததாலும், வங்காள மொழியை பேசாததாலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளானார்கள். இதனால் இந்தியாவில் தஞ்சம்புக விரும்பினார்கள்.
 • இந்திய அரசாங்கம், அருணாச்சலப்பிரதேசத்தில் இம்மக்களுக்கு முகாம்களை உருவாக்கி இடம் தந்தது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக சக்மா அகதிகள் இம்முகாம்களிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 2011இல் மக்கள் கணக்கெடுப்பின்படி, அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 47,471 சக்மா அகதிகள் வாழ்கிறார்கள்.

5. எல்லை பிரச்சனை

 • பங்களாதேஷும், இந்தியாவும் 4096 கி.மீ தங்கள் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இவ்வெல்லையானது மொத்தம் ஐந்து மாநிலங்கள், மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரமை கடந்து செல்கிறது.
 • பங்களாதேஷ்ற்கும் , இந்தியாவிற்கும் இடையில் மொத்தம் 162 உறைவிடங்கள் காணப்படுகின்றன, இந்த எல்லை உறைவிடங்கள் பெரும்பாலும் கடத்தல் காரர்களுக்கு ஏதுவான நிலையில் உள்ளன.
 • தேசிய எதிர்ப்பு பொருள்கள், ஆள் கடத்தல் மற்றும் கிளர்ச்சிகாரர்களுக்கு, இந்த எல்லையானது சொர்க்க பூமியாக அமைந்துள்ளது.
 • இதனால் எல்லை பாதுகாப்பு என்பது இரு நாடுகளுக்குமே பெரும் சவாலாக உள்ளது. பல்வேறு பேச்சுவார்த்தைகளின் மூலம் 50 உறைவிடங்கள் இந்தியாவிற்கும், 111 பங்களாதேஷ்ற்கும் பிரிக்கப்பட்டுள்ளது.
 • எல்லைகள் பிரிக்கப்பட்டாலும், ஆயுத கடத்தல், ஆள் கடத்தல், போதை பொருள் மற்றும் தீவிரவாதம் போன்றவைகள் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு பிரச்சனைகளாக தொடர்கின்றன.

வர்த்தகம் மற்றும் இணைப்பு

 • இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் நிதானமாக உயர்நிலையை நோக்கி எட்டிக்கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இது 17 சதவீதமாக உயர்ந்துள்ளது.
 • பேருந்து மற்றும் ரயில் சேவைகள் டாக்காவிற்கும், கொல்கத்தாவிற்கும் இடையே தொடங்கப்பட்டுள்ளது.
 • இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, அசுகஞ்-சகிகன்ஜ் குஷியாரா ஆற்றிலும், ஜமுனா ஆற்றின் சிராஜ்காங்-டைக்காவா நீட்சியும் வளர்ச்சி அடைவதற்கு, இரு நாட்டினிடையே இணைப்பு ஏற்படுத்துவதற்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணைப்பானது பெருவாரியான சரக்கு பொருள்கள் வடகிழக்கு பகுதிகளுக்கு செல்ல ஏதுவாகவும், அதற்கு உண்டான செலவு குறைவாகவும் அமையுமாறு உள்ளது. மேலும் இப்பாதையானது சிலிகுரி “இரு நாடுகளின் எல்லைகளுக்கருகே அமைந்துள்ள குறுகிய இந்திய நிலப்பரப்பில்” கூட்ட நெருக்கடியை குறைப்பதாகவும் உள்ளது.
 • இரு நாடுகளுக்குமான இணைப்பு பாதை பரஸ்பரம் முக்கியமானதாக கருதப்படுகிறது. பயணிகள் மற்றும் சரக்கு இரயில் போன்றவைகள் இரு நாடுகளின் வளர்ச்சிக்குத் துணை புரிகிறது.
 • துணை மண்டல ஒத்துழைப்பிற்கு டாக்காவுடனான கூட்டு முயற்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. டாக்கா, பூடான், பர்மா, இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளின் நட்புறவு பலப்படுத்தலும் இதற்கு அவசியமாகிறது. கிழக்கு ஆசியாவிற்கும் வங்காள விரிகுடா நாடுகள் வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில் டாக்கா நடவடிக்கை எடுத்தலும் அவசியமாகிறது.
 • ஆசிய புவி அரசியலில் தற்போதைய முக்கிய அம்சமாக போக்குவரத்தும், இணைப்பு பாதையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2016இல் சீன குடியரசுத்தலைவர் ஜீ ஜின்பிங் பங்களாதேஷ் வருகை புரிந்தபோது, அந்நாடு “ஒரே பாதை ஒரே சாலை முன்னெடுப்பு” திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முன்வந்தது.
 • சீனாவின் முதலீடு பன்மடங்காக, பல ஆண்டுகளாக பங்காளதேஷில் இருந்து வருகிறது. சிட்டாகாங்கில் ஆழ்கடல் துறைமுகம் உட்பட “ஒரே பாதை ஒரே சாலை முன்னெடுப்பு” திட்ட கொள்கையின் மூலம் மற்ற அனைத்து வளர்ச்சி திட்டங்களும் சிறியதாகி, இந்தியாவின் நட்புறவிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

மின்னாற்றல் ஒத்துழைப்பு

 • இரு நாடுகளின் மின்னாற்றல் பகிர்வு, நேர்மையாகவும் வலிமையாகவும் இருந்து வரும் நிலையில் திரிபுரா மாநிலத்திலிருந்து பங்களாதேஷ்ற்கு 160 மெகா வாட், 2013-லிருந்து மேற்கு வங்காளத்திலிருந்து 500 மெகா வாட் தொடர்ந்து அனுப்பப்படுகிறது.
 • மேற்கொண்டு 100 மெகா வாட் ஆற்றல் கேட்கும் நிலையில் அடுத்த வரக்கூடிய காலக்கட்டங்களில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

தற்காப்பு ஒத்துழைப்பு

 • இந்தியா-பங்களாதேஷ் இராணுவ உடன்படிக்கை என்பது இரு நாடுகளுக்கிடையேயான நீண்ட நாளைய கனவாகவே இருந்து வருகிறது. தகவல் பரிமாற்றம், கூட்டுப் பயிற்சி, பாதுகாப்பு வலிமைப்படுத்தல், இவையாவும் உள்ளடக்கம் ஆகும். ஆனாலும் சீனாவிற்கு, பங்களாதேஷ், மிகப்பெரிய கூட்டாளியாக இருப்பதனால், இந்தியா சற்றும் கவனமாக முடிவெடுத்தல் அவசியமாகிறது.
 • இந்தியா உடனான பாதுகாப்பு உறவு, உறுதியாக பங்களாதேஷிற்கு உலக அரங்கில் நன்மையை ஏற்படுத்தும். அதேபோல் இந்தியாவிற்கு, பங்களாதேஷ் உடனான வலிமையான இராணுவ நட்புறவே, கிழக்கு துணை கண்டத்தில் அமைதியையும், வளத்தையும் ஏற்படுத்தும்.
 • இராணுவ நட்புறவின் அடித்தளமாக சம இறையாண்மையும் புவிப்பரப்பு உண்மை நிலவரமும் இருக்கும் பட்சத்தில் தொலை தூர வலிமையான நட்புறவு நாடாக மாறுவதற்கு வாய்ப்பு இரு நாடுகளுக்கிடையே காணப்படுகிறது.
 • இந்தியா-பங்களாதேஷ் உறவுகள் மூன்று “டி” (3T) –க்களில் அமைந்துள்ளதாக காணப்படுகிறது.
 1. தீவிரவாதத்தை சமாளித்தல்
 2. வாணிபம் மற்றும் போக்குவரத்து
 3. டீஸ்டா ஒப்பந்தம்.
 • புது தில்லி மற்றும் டாக்கா இடையே வளர்ந்து வரும் பரஸ்பர நம்பிக்கையும், அரசியல் ஆறுதலும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் பிரச்சினைகளைத் தீர்த்து உறவை முன்னெடுத்து கொண்டு செல்வோம் என்று நம்ப வேண்டும்.
 • இந்தியாவின் வடகிழக்கு பகுதிக்கு இது அவசியமானது. மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும் தீர்வாகின்றபட்சத்தில் இந்திய துணைக் கண்டத்திற்கும், வடகிழக்கு பகுதிக்கும் , கிழக்கு ஆசிய மண்டலத்திற்கும் இரு நாட்டு உறவுகள் நன்மை பயக்கும்.

இந்திய-சீன உறவுகள்

 • நவீன வரலாற்று பின்னணி கொண்ட இந்தியா சீனா உறவுகள் சீனா 1949இல் கம்யூனிச நாடாக மாறியதிலிருந்து தொடங்குகிறது. சீனா மக்கள் குடியரசை அங்கீகரித்த முதல் நாடும் இந்தியாவே ஆகும்.
 • எனினும் 1950ஆம் ஆண்டு திபெத்தை சீன ராணுவம் ஆக்கிரமித்தபோது இந்தியா அதனை சந்தேகத்துடன் பார்த்தபோது, இந்த ஆரம்ப கால நல்லுறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை.
 • இந்தியரும்-சீனரும் சகோதரர்கள் என்ற அங்கீகாரம் இந்தியாவின் அச்சத்தை சிறிதளவு போக்கியது, இந்த எல்லா முன்னேற்றங்களும் 1962ஆம் ஆண்டு சீனா போரின் மூலம் தொலைந்து போயின.
 • இந்திய-சீன உறவுகளை நாம் விரிவாக மூன்று அம்சங்களைக் கொண்டதாக வகைப்படுத்தலாம். அவைகள், எல்லைப் பிரச்சனை, பொருளாதார நலன் மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஒத்துழைப்பு என்பதாகும்.
 • இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டும் மிக நீண்ட வரலாற்று பின்னணிக் கொண்ட நாகரிகரீதியான (Civilization) சக்திகள் ஆகும். புத்த மார்க்கமானது நூல் வடிவத்திலும், பண்பாட்டு வடிவிலும் இந்தியாவில் இருந்து சீனா சென்றது. பாஹியான், யுவான் சுவாங் போன்றவர்கள் பண்டைய இந்தியாவை ஆய்வு செய்ய வந்த புகழ்பெற்ற சீனப் பயணிகள் ஆவர்.

எல்லைப் பிரச்சனை

 • இந்தியா மற்றும் சீனா ஏறத்தாழ 4056 கிலோ மீட்டர் நீள எல்லையைப் பகிர்ந்துக் கொள்கின்றன. இந்த எல்லை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை, கிழக்கு பூடானுடனான எல்லை, உத்திரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசங்களுடனான மைய எல்லை மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளான சின்கியாங் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகள் போன்றவையாகும்.
 • இந்திய-சீன எல்லையானது மெக்மோகன் கோடு (McMohon) எற எல்லைக்கோட்டினால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர் பிரிட்டிஷ் அமைச்சரவையில் இந்தியாவிற்கான வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஹென்ரி மெக் கோகன் என்பவர் நினைவாக வைக்கப்பட்டது. இந்த எல்லை வரையறையானது 1914ஆம் ஆண்டு சிம்லாவில் நடைபெற்ற மாநாட்டில் பிரிட்டிஷ் இந்தியா, சீனா மற்றும் திபெத் பிரதிநிதிகளால் தீர்மானிக்கப்பட்டது.
 • இந்த எல்லைக்கோடானது வடக்கே திபெத் பீடபூமி மற்றும் தெற்கே இந்திய குன்றுகள் ஆகியவற்றிக்கிடையே ஊடுருவிச் செல்லும் இயற்கையான எல்லைக்கோடு என்பதைக் கருத்திற்கொண்டு வரையப்பட்டதாகும். இந்த எல்லைக்கோடானது அனைத்துப் பிரதிநிதிகளாலும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
 • இந்திய-சீன எல்லைப் பிரச்ச்னை ஒரு நூற்றாண்டு காலமுடையதாக இருந்தது. அதன் உடனடிக் காரணம் 1950ஆம் ஆண்டு சீனா திபெத்தை இணைத்து கொண்டதாகும். சீனா திபெத்தை ஆக்கிரமிப்பு செய்ததற்கான காரணம், வரலாற்று அடிப்படையிலான இணைப்பு மற்றும் முதன்மையானதாக, ராணுவம் சார்ந்த கணக்கீட்டின் அடிப்படையில் (Strategic Calculation) எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் தெரிகிறது.

 • திபெத் எப்பொழுது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதோ, அன்று முதல் சீனா இந்தியாவின் பல பகுதிகளை தங்களுடையது என கேட்க ஆரம்பித்தது.
 • 1950 ஆம் ஆண்டுகளில் இருந்து இரண்டு நாடுகள் பேசி வந்தபோதிலும், எல்லைகளைப் பற்றித் தெளிவான அடையாளத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.
 • அதுமட்டுமல்லாமல், அடிக்கடி எல்லைத் தாண்டிய ஊடுருவல் இருப்பதாக தகவல் இருக்கிறது. 1961ஆம் ஆண்டுக்குள்ளாக எல்லைகளை உறுதியாக நிறுவுவது மற்றும் “முன்னெடுக்கும் கொள்கையை” ஆரம்பித்து வைத்தது, பிரச்சனைக்குரிய பகுதிகளில் ராணுவ (காவல்) நிலைகளை நிறுவுவது என இந்தியாவால் தீர்மானிக்கப்பட்டது.
 • இந்தியாவின் இந்த நடவடிக்கையால் சீனாவுடன் இணக்காமாக இணைந்து செல்ல முடியவில்லை. 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் சீனா லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்தியது. இந்தப் போரானது 31 நாட்கள் மட்டுமே நீடித்தது. இருந்தபோதிலும், இந்தியாவிற்கு நீண்டகால அவமானத்தை ஏற்படுத்தியது.
 • நீண்ட உள்நாட்டுப்போர் 1949ஆம் ஆண்டில் முடிவடைந்தவுடன், சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியானது நிறுவப்பட்டது. சீனா திபெத்தை என்றும் தனது மாகாணமாக கருதியது மற்றும் அதனை செஞ்சீனத்துடன் இணைக்க முற்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சியானது அதனை ஒரு தன்னாட்சி மாகாணமாக நடத்தியது. இறையாண்மை அரசாகிய திபெத் சோசலிச சீனாவுடன் இணக்கமாகச் செல்ல முடியவில்லை. திபெத்திய பிரச்சினை, குறிப்பாக திபெத்திய தலைவர் தலாய்லாமா மற்றும் அவரது மக்களுக்கு புகலிடம் வழங்குவது இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பிளவுக்கு ஒரு காரணமாக இருந்தது.

இந்திய –சீனப் போர் 1962

 • சீனா திபெத்தை ஆக்கிரமிக்கும் என்று அறிவித்தவுடன் இந்தியா, நடக்க இருக்கும் திபெத் சிக்கல் பற்றி பேச்சுவார்த்தைக் குறித்த எதிர்ப்பு கடிதம் ஒன்றை அனுப்பியது. மேலும் சீனா இன்னும் அதிகப் படைகளை அக்ஷாய்சின் எல்லையில் மிகவும் மூர்க்கமாக குவித்தது.
 • 1954ஆம் ஆண்டு இந்தியாவும் சீனாவும் பரஸ்பர அமைதியாக இணைந்திருப்பது என்ற ஐந்து கோட்பாடுகளை கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டன. அந்த விதிகளின் அடிப்படையில் திபெத்தில் சீனாவின் ஆட்சியை இந்தியா ஒத்துக்கொண்டது.
 • ஜூலை மாதம் 1954ஆம் ஆண்டில் நேரு இந்தியா வரைபடத்தில் திருத்தம் செய்வது குறித்து எல்லா எல்லை பகுதிகளின் தீர்க்கமான எல்லைகளைக் கேட்டு ஒரு நினைவூட்டும் கடித்ததை எழுதியிருந்தார். எனினும் கிட்டத்தட்ட 1,20,000 சதுர கிலோ மீட்டர் இந்திய ந்ல்லை வரைப்படத்தில் பிழையிருப்பதாக, சீன மக்கள் குடியரசின் முதல் பிரதமரான சூ-யென் –லாய் பதிலளித்தார்.
 • மார்ச், 1959ஆம் ஆண்டு தலாய்லாமா தப்பி ஒடியதால் இந்தியா அவருக்கு அடைக்கலம் கொடுத்து வைத்ததை சீனா மக்கள் குடியரசின் தலைவர், மாசேதுங் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதினார். திபெத்தில் உள்ள லாசா கிளர்ச்சிக்கு இந்தியாதான் காரணம் என்று மாவோ கூறியபோது, இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் அதிகரித்தது.

 • திபெத்தில் சீனாவின் கட்சிக்கு இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது என்று எண்ணமானது இந்திய –சீனப் போருக்கு மிக முக்கியமான காரணமாகும்.
 • சொங்கா கணவாயில் அக்டோபர் , 1959ஆம் ஆண்டு இரண்டு இராணுவத்தினருக்கு இடையே நடந்த சண்டையில் பல இந்திய காவல் துறையினர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் போரின் ஆற்றல் இந்தியாவிற்கு இன்னும் முழுமையாக வரவில்லை என்பதை நேரு உணர்ந்தார். நமது நாடு பிரச்சினைகளை பாதுகாக்கும் பொருட்டு எல்லையில் இருந்து பின்வாங்கியது.
 • 1962ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி, லடாக் பகுதியில் சீனமக்கள் விடுதலைப்படை படையெடுத்து, அது வடக்கு கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மெக்மோகன் எல்லைக்கோட்டைக் கடந்தது.
 • போர் ஆரம்பிக்கும் தருவாய் வரை, இந்தியத் தரப்பு போர் துவங்காது என்று நம்பியிருந்தது, மற்றும் அது சிறிய அளவு தயாரிப்புடனே இருந்தது. அப்பகுதியில் இந்தியா இரண்டு படைப் பிரிவுகளை மட்டும் நிறுத்தியிருந்தது. சீனாவோ முன்று படைப்பிரிவுகளை நிறுத்தியிருந்தது.
 • 1962ஆம் ஆண்டில், உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகள் போரில் குதித்தன. இந்திய-சீனப்போர் 2000 உயிர்களை பலிவாங்கியது. காரகோரம் மலையின் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 4270 மீட்டர் (14,000 அடி) உயரத்தில் இந்த துன்பகரமான சம்பவம் நடைபெற்றது.
 • நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துபோன பிறகு, இந்தியாவின் சார்பாக அமெரிக்கா தலையிடும் அச்சுறுத்தல் காரணமாக, இருதரப்பும் 1962ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி போர் நிறுத்தத்தை முறையாக அறிவித்தன. “சீனா தற்சமயம் வைத்துள்ள மெக்மோகன் எல்லையில் வடக்கு பகுதியிலிருந்து விலகி கொள்வதாக அறிவித்தது”.
 • இவ்வாறு 1962ஆம் ஆண்டு இந்தியா-சீனப்போர் முடிவுக்கு வந்தது. இந்த பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க அணிசேரா நாடுகள் கொழும்புவில் மாநாடு நடத்தப்பட்டது.
 • இன்றைய நாட்களில் கூட 1962ஆம் ஆண்டு இந்திய-சீனப் போர் விரிவான விவாதத் தலைப்பாகவே இருக்கிறது. இந்தப் போரின் விளைவாக இந்திய-சீனாவிற்கு இடையே ஒரு புதிய எல்லைக்கோடு தோன்றியது, இது உண்மையான கட்டுப்பாடு கோடு (LAC) எனப்படுகிறது.
 • 1993ஆம் ஆண்டு, உண்மையான எல்லைக்கோடு நெடுகிலும் அமைதியையும், சமாதானத்தையும் பராமரிக்க, இந்திய-சீன எல்லைப் பகுதியின் மீது, பிரதமர் நரசிம்ம ராவ் சீனப் பயணத்தின் போது ஒரு உடன்படிக்கையானது கையெழுத்தானது.

ஆறு நாடுகள் அடங்கிய கொழும்பு மாநாடு (டிசம்பர் 10, 1962)

 • இந்திய-சீனா இடையே தொடரும் போர் பற்றி பேசுவது தொடர்பாக சிறிமாவோ பண்டாரா நாயக்கா கூட்டிய கூட்டம்தான் கொழும்பு மாநாடு என்பதாகும். இது பர்மா, கம்போடியா, எகிப்து, கானா மற்றும் இந்தோனேஷியா நாட்டுத்தலைவர்கள் அனைவரையும் ஒன்றாகக் கொண்டுவந்து, இரண்டு நாடும் ஆசிய நாடுகளுக்கிடையே உள்ள சிக்கல்களை தீர்க்க ஏற்பாடு செய்தது.
 • இந்தியா பேச்சுவார்த்தைகளை துவங்குவதின் ஆரம்பத்தில் கொழும்பு மாநாட்டின் கோட்பாடுகளை அதன் ஆரம்பம் முதல் கோட்பாடு ரீதியாக ஏற்றுக்கொண்டது.

பொருளாதார உறவுகள்

 • 1980ஆம் ஆண்டுகளின் மத்தியிலிருந்து, நெருக்கமான இருதரப்பு பொருளாதார உறவுகள், இந்திய-சீனாவிற்கு இடையே ஆரம்பமானது. இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் துவக்கி வைத்த பேச்சுவார்த்தை செயல்முறை, பொதுவான வர்த்தக நலன்களைப் பற்றி கண்டறிய உதவியாக இருந்தது.
 • இந்தியாவும்-சீனாவும் 1984ஆம் ஆண்டு ஒரு வர்த்தக உடன்படிக்கையினை எட்டின, இது அவைகளுக்கு இடையே “மிகவும் சாதகமான தேசம்” (MFN) என்ற தகுதியினை அளித்தது. 1992ஆம் ஆண்டு முதல் இந்திய மற்றும் சீனா முழு அளவிலான வர்த்தக உறவில் ஈடுபட்டுவருகிறது.
 • சீனப் பொருள்கள் ஏற்றுமதியாவதற்கு இந்தியா ஏழாவது மிகப்பெரிய நாடாகவும், சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியா 27-வது பெரிய நாடாகவும் இருக்கிறது. சீனாவிற்கு ஏற்றுமதியாவதில் முதன்மையாக இருக்கும் பொருள்கள் வைரம், பருதி இழை, இரும்புத் தாது, தாமிரம் மற்றும் கரிம வேதிப் பொருள்கள் போன்றவையாகும்.
 • இந்தியாவிற்கு ஏற்றுமதியாகும் சீனாவின் முக்கியமானவைகள் மின்னணு எந்திரங்கள், உபகரணங்கள், உரங்கள், சீன கரிமப் பொருள்கள் உள்ளிட்டனவையாகும்.
 • 2017ஆம் ஆண்டு மார்ச் வரையிலான மொத்த சீன முதலீடானது 4.91 பில்லியன் அமெரிக்கா டாலராகும் மற்றும் சீனாவில் இந்தியாவின் 2017ஆம் ஆண்டு , மார்ச் வரையிலான மொத்த முதலீடு 705 மில்லியன் அமெரிக்கா டாலரை எட்டியது.

சர்வதேச ஒத்துழைப்பு

 • சர்வதேச அரங்கத்தில், இந்தியா-சீனா ஆகிய இரண்டும் வளங்களுக்கான போட்டியாளர்கள் ஆவர். புதிய சக்தியாக தோன்றி வரும் இந்த இரண்டு ஆசிய நாடுகள், வளரும் நாடுகளில் செய்யப்படும் முதலீடுகள் எல்லாம் இந்திய-சீனப் பொருளாதாரத் தேவைகளை எதிர்கொள்வதற்கே ஆகும்.
 • பரவலான போட்டி இருந்த போதிலும், இந்தியாவும் சீனாவும் தங்களின் உண்மையான நலன்களை ஒன்றுக்கொன்று பேணிக்கொண்டன. இரண்டு நாடுகளும் பல்-முனை உலக ஒழுங்கை ஆதரிக்கின்றன மற்றும் வெளியுறவுக் கொள்கையில் மேற்கத்திய நாடுகளின் தலையீட்டை எதிர்க்கின்றன. இதனோடு, சீனாவும்-இந்தியாவும் மிகப் பரந்த அளவிலான குறிப்பாகப் பருவநிலை மாற்றம், வர்த்தகப் பேச்சுவார்த்தை, ஆற்றல் பாதுகாப்பு, உலக நிதி நெருக்கடி போன்றவற்றின் மீதான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றன.
 • இந்தியாவும்-சீனாவும் உலக வர்த்தக அமைப்பில் வளர்ந்த நாடுகளிடம் இருந்து வளரும் நாடுகளுக்கு அனுகூலமான கூடுதல் ஆதாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
 • இந்த இன்றியமையாத பணிகளுடன், கூடுதலாக இந்தியாவும், சீனாவும் மிக முதன்மையான சர்வதேச அமைப்புகளான “பிரிக்ஸ்” (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா) ஈ.ஏ.எஸ் (E.A.S) (தென் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு), எஸ்.சி.ஒ. (S.C.O) (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) ஆகியவற்றில் ஒரு உறுப்பினராக இருக்கின்றது.

இந்திய-இலங்கை உறவுகள்

 • இந்திய-இலங்கை இரு நாடுகளும் முறையே 1947, 1948இல் விடுதலை பெற்றலிருந்தே வலிமையான நட்புறவை போற்றி வந்திருக்கின்றன. ஆனாலும் இலங்கையில் உள்நாட்டு பூசல் மற்றும் அரசியல், போன்றவை இந்நட்புறவை பாதிக்கும் வகையில் பல பிரச்சனைகள் நடந்தேறியுள்ளன.
 • பிரதான காரணமாக இன வேற்றுமை விளங்குகிறது. இலங்கையில் தமிழர் இனத்திற்கும், சிங்கள இனத்திற்கும் உள்ள பிரச்சனைகள் எப்போதும் இவ்விரு நாடுகளுக்கிடையே எதிர்மறையான தடைகளை வைத்தன.
 • பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளும் வட மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் இனத்தாலும் இந்தியா இலங்கை உறவுகள் நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய-இலங்கை உறவுகளுக்கிடையேயான முக்கிய பிரச்சினைகள்

 • இந்தியா இலங்கை உறவுகளில் ஆழமாக பதிந்த ஆரம்பநிலை பிரச்சனையாக இலங்கை குடியுரிமைச் சட்டம் 1948 விளங்குகிறது. இதன்படி விவசாய தமிழர்கள் அல்லது மலைவாழ் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது.
 • இப்பிரச்சனை இரு நாடுகளின் உறவிகளிலும் பெரிய விரிசல் வரக் காரணியாக ஆரம்பத்திலிருந்து இருந்து வந்தது. மேலும் இப்பிரச்சனையை இலங்கை, சீனாவைக் கொண்டு சமாளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது, மேலும் விரிசல் பெரிதாகக் காரணமாக அமைந்தது.
 • மேலும் இந்தியப் பெருங்கடல் கூட்டணியில் இலங்கை இணைபிரியாத நாடாக விளங்கியது. இக்கூட்டணியில் அயல்நாடு என்பதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டது.
 • நான்காம் ஈழப்போர் முடிந்ததிலிருந்து, இந்திய-இலங்கை உறவுகள் ஆக்கப்பூர்வமாகவும் நேர்மறையாகவும், அமையத் துவங்கியது. சமீப காலத்தில் வாணிபம் பன்மடங்காக உயர்ந்துள்ளது.
 • ஆனாலும் பல்வேறு பிரச்சனைகள் இரு நாடுகள் இடையேயும் தீர்க்கப்படாததாக உள்ளன. அகதிகள் பிரச்சனைத் தீர்க்கப்படாமலேயே உள்ளது. இலங்கை அகதிகள் நாடு திரும்புதல், அரசியல் தீர்மானத்தை நம்பியே உள்ளது.
 • இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் வங்காள விரிகுடாவில் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் வழக்கமாக உள்ளது. இப்பிரச்சனைக்கு பல தீர்வுகள் காணப்பட்டன.
 • ஆழ்கடல் மீன் பிடித்தல், கட்சத்தீவை குத்தகைக்கு விடல், இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் ஒருநாள் விட்டு ஒரு நாளாக மீன் பிடித்தல் போன்றவை தீர்வுகளாக முடிவு செய்யப்பட்டன. ஆனாலும் மேற்கூறிய தீர்மானங்களை இன்று வரை செயல்படுத்த முடியவில்லை.

இனக்கூறுகள்

1921ஆம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்பின்படி இலங்கையில் பத்து பெரிய இனங்கள் காணப்பட்டன. அவற்றுள் மூன்று இனம் துணைப் பிரிவுகளாக அமைந்தன (இலங்கை முன்பு சிலோன்) தலையாய இனங்களாக,

 1. கீழ்நாடு மற்றும் கண்டய சிங்களர்கள்
 2. இலங்கை மற்றும் இந்திய தமிழர்கள்
 3. இலங்கை மற்றும் இந்திய மூர்கள், ஏனைய நான்கு இனங்களாக பர்கர்கள், யூரேசியன்ஸ், மலேயர்கள் மற்றும் வேதாஸ் வாழ்ந்து வந்தார்கள்.

பெருவாரியான மக்கள்தொகையில் சிங்களர்கள் மூன்றில் ஒரு பகுதியாகவும் , புத்த இனத்தை சார்ந்தவராகவும் சிங்கள மொழியை பேசக்கூடியவராகவும் இருந்தனர். இலங்கையின் தமிழர்கள் இந்துக்களாகவும், திராவிட மொழியான தமிழை பேசக்கூடியவராகவும் வாழ்ந்தார்கள். இஸ்லாமியர்கள், தமிழ் மற்றும் சிங்கள மொழியை பேசக்கூடியவர்களாக இருந்தார்கள்.

இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சனை

 • 1948-க்கு பிறகு செயல்படுத்தப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டம் தமிழர்களை வேற்றுமைப்படுத்த ஆரம்பித்தது. இலங்கை நாடாளுமன்றத்திலே இயற்றப்பட்ட இந்த சட்டம் தெற்கு இந்தியாவின் பூர்வக்குடிமக்களாக பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு அவர்கள் உரிமையை மறுத்தது.
 • கிட்டத்தட்ட 11 சதவீதம் அதாவது ஏழு இலட்சம் தமிழர்கள் தேச அடையாளமின்றி நாடடற்றவர்களாக விடப்பட்டார்கள். 1964இல் பண்டார நாயக்கேவும், சாஸ்திரியும் சேர்ந்து ஒரு உடன்படிக்கையை உருவாக்கி அதன் மூலம் தமிழர்களை இந்தியாவிற்கு குடியேற்றம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
 • அடுத்த 30 ஆண்டுகளுக்குள் தமிழர்களை, கிட்டத்தட்ட மூன்று இலட்சம் நபர்களை குடியேற்றம் செய்ய ஏற்பாடு செய்தனர். 2003-வரை இந்நிகழ்வுகள் நடக்கும் தருவாயில் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இலங்கை அரசு முடிவு செய்தது. அதுவும், பல போராட்டங்களின் பிறகு, இச்சட்டம் நிறைவேற்றிய தருணத்தில் தமிழர்களின் எண்ணிக்கை இலங்கையில் ஐந்து சதவீதம் குறைந்தது.
 • 107 முகாம்களில் அகதிகளாக 62,000 தமிழர்கள் பல்வேறு நிவாரண சலுகைகளை மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திடம் பெற்று வருகிறார்கள். சமீபகாலத்தில் இலங்கை மாணாக்கர்களுக்கு தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பதற்கு ஏதுவாய் பல சலுகைகளை தமிழ்நாடு அரசு வழங்கியது. இச்சலுகை, முகாம்களிலில்லாத 36,800 அகதிகளால், தகுதியுள்ளவர்களுக்கு பயனை அளித்தது.

நிலை மாற்றங்கள்

 • தற்போது, இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் அகதிகள், நாடு திரும்புதல் ஆகியவை முதன்மையான பிரச்சனையாக காணப்படவில்லை. ஆனால் இருக்கின்ற நிலைமையும் மாறாது வைத்திருக்க இயலவில்லை.
 • தமிழ்நாடு அகதிகளின் அதிக எண்ணிக்கையை சமாளித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை போற்ற வேண்டுமெனில், அகதிகள் பிரச்சனையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது சிறந்தது.
 • இந்திய தரப்பில் நீடித்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதும் இலங்கைக்கு இனப்பிரச்சனைக்கு தீர்வு காணுவதும் முதன்மையானது ஆகும். இரு நாடுகளும் தாராள மனப்பான்மையுடன் தீர்வை கொண்டுவரும் பட்சத்தில் தன்னார்வத்தில் நாடு திரும்புதலை முடிவாக அறிவித்து, அதற்கென்று பிரத்தியோக பிரதிநிதிகளை நியமிப்பது நன்று. இப்பிரதிநிதித்துவம் தமிழ்நாடு அரசாங்க தரப்பிலும், இலங்கையின் வட மாகாண குழு அமைப்பிலும் அமைவது சிறந்தது.
 • இந்தியாவிலேயே வசிக்க விரும்பும் மக்களுக்கு குடியுரிமை வழங்குதல் அவசியம். பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியது போல இலங்கை அகதிகளுக்கும் வழங்கலாம். பிரச்சனையை உண்டாக்குபவர்க்கு குடியுரிமை வழங்க மறுப்பது அவசியமாகிறது.
 • இவை அனைத்தும் சீராக நடக்கின்ற வேளையில் அனைத்து அகதிகள் முகாம்களையும் மூடும்பட்சத்தில் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு கொண்டு வரப்படும். ஏனெனில் அகதிகள் பிரச்சனையானது குடிமை போரை விட, வெகு காலம் தொடருகின்ற பெரும்சவாலாக அமைந்துள்ளது.

கட்சத்தீவு

 • கட்சத்தீவு பூர்வீகமாக ராமநாதபுரம் மன்னர்களுக்கு சொந்தமானதாகும். எந்த ஒரு இலங்களையின் வரைபடமும் அதனுடைய நிலப்பரப்பாக கட்சத்தீவை கொண்டிருக்கவில்லை. ஆனாலும் கட்சத்தீவின் அமைவிடத்தை அடிப்படையாக வைத்து இலங்கை அதனை சொந்தம் கொண்டாட ஆரம்பித்தது, முன்னதாக இரு நாடுகளின் தலைவர்களுக்கும் கட்சத்தீவை பற்றி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள்.
 • ஆனாலும் 1974இல் இந்திராகாந்தி கட்சத்தீவை ஒப்பந்தம் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கினார். கட்சத்தீவு என்பது 285 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நடுவே மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஆளில்லா தீவு ஆகும்.
 • அங்கே கத்தோலிக்க கோவில் இருப்பதால் இலங்கை அரசாங்கம் அவ்விடத்தை புனிதத் தன்மை உடையதாக அறிவித்தது.
 • இரு நாடுகளிலிருந்து பக்தர்கள் புனித பயணமாக கட்சத்தீவுக்கு செல்வது வழக்கம். 1974-ன் ஒப்பந்தத்தின்படி இந்திய மீனவர்கள் தங்களுடைய மீன் பிடிக்கும் வலையை காய வைப்பதற்கும், அங்கே இருக்கும் தேவாலயத்திஅ வழிபடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர். இதன் பிறகு 1976இல் கடல் போக்குவரத்து எல்லை கட்டுப்பாட்டின் காரணமாக்ச் ஐக்கிய நாட்டின் உத்தரவின் பேரில் வலைகளை காய வைப்பதற்கும் மற்றும் தேவாலயத்தை வழிபடும் உரிமையும் இழந்தனர். இதன் தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் எண்ணற்ற துன்பங்களையும் சந்தித்து வருகின்றனர்.

மீனவர்கள் பிரச்சனை

 • இரு நாடுகளின் கூட்டு பணிக்குழு தகவலின்படி தமிழ்நாடு மீனவர்களின் – 111 படகுகள் மற்றும் 51 இந்திய மீனவர்களை 2019இல் இலங்கை வடக்கு மாகாணத்தில் கைது செய்யப்பட்டோ அல்லது காவலில் வைக்கப்பட்டோ இருக்கிறார்கள்.
 • இப்பிரச்சனைக்கு காரணம் பிரச்சனைக்குரிய கட்சத்தீவு மீன் பிடித்தலும், குழம்பிய குட்டைகளில் மீன் பிடித்து சுற்றுபுற சூழ்நிலைக்கும் பொருளாதாரத்திற்கும் இடைஞ்சல் விளைவித்தது ஆகும்.
 • ஏனைய மற்ற இடங்களில் மீன் வளங்கள் குறைவாக இருப்பதால் பாக்-வளைகுடாவை தவிர்த்து இந்திய மீனவர்களால் வாழ்வாதாரத்தினை மூட இயலாது.

2016இல் நவம்பரில் நடந்த இரு நாடுகளுக்கு இடையேயான அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் கூட்டுப் பணிக்குழு தொடர்பான நடவடிக்கைகளில் இந்தியா 3 வருட கால அவகாசம் கேட்டது. மீனவர்கள் தொடர்பான இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்தது.

நேரு –ஜான் கொடெலாவாலா உடன்படிக்கை 1954

இந்த உடன்படிக்கை இந்தியாவின் பிரதமர் நேரு மற்றும் இலங்கையின் பிரதமர் கொடெலாவாலா ஆகிய இருவரும் சேர்ந்து கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஆகும். (18, ஜனவரி, 1954) இந்த ஒப்பந்தமானது இலங்கையில் வசிக்கக் கூடிய இந்திய பூர்வீகக்குடி மக்களின் நிலை மற்றும் எதிர்காலத்தை பற்றியது ஆகும். இம்மக்கள் யாவரும் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் தேயிலை, காப்பி மற்றும் தேங்காய் தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய மக்கள் இலங்கையிலிருந்து சொந்த நாடு திரும்புவதற்கு வழிவகுப்பதாகும். ஆனாலும் பிரதமர் நேரு, இந்திய குடியுரிமையை தாமாகவே முன்வந்து கோரும் மக்களுக்கு மட்டுமே இச்சலுகையை அனுமதித்தார். இலங்கை குடியுரிமை பெற தகுதியில்லாத மக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமையை வழங்கப்பட வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கையை இந்தியா முற்றிலுமாக நிராகரித்து விட்டது.

சாஸ்திரி –சிறிமாவோ ஒப்பந்தம் 1964

திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா இந்தியாவிற்கு 1964இல் வருகை செய்தார். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பண்டாரநாயக்காவிற்கும் சாஸ்திரிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் 9,75,000 குடியுரிமை அல்லாத நபர்கள் பின்வரும் கணக்கீட்டை பொருத்து பிரிக்கப்படுவார்கள்.

 • 3 இலட்சம் மக்கள் இலங்கை குடியுரிமையை பெறுவதாகும்.
 • 5 இலட்சம் 25 ஆயிரம் மக்கள் இந்திய குடியுரிமையை பெறுவார்கள்.
 • இவர்களுக்கு 15 வருடங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டு அதற்குள்ளாக இந்தியாவிற்கு வருமாறும் எஞ்சியுள்ள 1.50 லட்சம் குடியுரிமை இல்லாத நபர்களின் நிலையை பின்வரும் காலங்களில் தீர்மானிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ராஜீவ் –ஜெயவர்த்தனே ஒப்பந்தம் (இந்தியா – இலங்கை 1987)

இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை பிரதமர் ஜெ.ஜெயவர்த்தனே இடையேயான தூதரக ஒப்பந்தம்.

 • வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தன்னாட்சி அமைப்பு (எங்கு தமிழர்கள் செறிவாக இருக்கிறார்களோ) உருவாக்கப்படும்.
 • இந்திய மேற்பார்வையாளர்களின் முன்னிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் டிசம்பர் 31, 1987 ஆம் ஆண்டிற்கு நடத்தி முடிக்கப்படும்.
 • வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவசர நிலையானது நீக்கப்பட்டுள்ளது.
 • தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகியவை இலங்கையின் அலுவல் மொழியாக இருக்கும்.
 • இலங்கை ராணுவம் மற்றும் தமிழ் போராளிகளிடையே பகைமையை நிறுத்துவதற்கு இந்திய அமைதி காக்கும் படையை கொண்டுவரப்பட்டது.

இவ்வொப்பந்தம் இலங்கையில் கடுமையாக எதிர்க்கப்பட்டது. கொழும்பு விமான நிலையத்தில் அணி வகுப்பு மரியாதையின் போது ராஜீவ் காந்தியை தாக்கவும் முயற்சி நடந்தது.

இலங்கை தமிழர்களுக்கான இந்திய மறுவாழ்வு திட்டங்கள்

 • வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு 50,000 வீடுகள் கட்டித் தருவதாக பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை குடியரசுத்தலைவர் ராஜபக்சேவுக்கு 2010இல் உறுதி அளித்திருந்தார். 47,000 வீடுகள் 2018-ல் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இதற்கான செலவு கிட்டத்தட்ட 350 மில்லியன் அமெரிக்கா டாலர்கள். இது இந்தியாவின் மானியங்களிலேயே அதிகபட்சமாகும்.
 • இந்திய பிரதமர் மேற்கு இலங்கையில் தலைமன்னார் நகரத்திற்கு புதிய ரயில் பாதையில் பயணிகள் ரயிலை கொடியசைத்து தொடக்கி வைத்தார். தலைமன்னாரில் தொடங்கிய இந்த புது ரயில் பணியானது, உள்நாட்டு போர் முடிவடைந்த பின் வடமாகாணத்தின் வளர்ச்சிக்கான பணியாக தொடங்கியது. இது இந்தியாவின் எல்லைக்கருகே அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்திய பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் தலைமன்னாரில் ஒரு புதிய ரயில் நிலையத்தை 1650 பையர் (Pier) அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளனர்.
 • கடைசியாக கட்டப்பட்ட 63 கிலோ மீட்டர் ரயில் தடங்கள், ஏற்கனவே தொடங்கப்பட்ட 265 கிலோமீட்டர் தூரமுள்ள பிரத்தியோகமான வடமாகான ரயில்வே திட்டமாகும். இது இந்திய அரசாங்கத்தின் கீழ் வரும் கம்பெனியான IRCON-ன் உதவியால் உருவாக்கப்பட்டது.
 • இந்திய பூர்வீக தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுகள் காண லால் பகதூர் சாஸ்திரியின் காலத்திலேயே இரு நாடுகளும் முயற்சி எடுத்தன.
 • இந்திய அரசாங்கம் இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினருக்கு இரண்டில் மூன்று பங்கு குடியுரிமை வழங்குவதாக ஒத்துக்கொண்டது. ஆனால் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்குமான இனப் போரின் விளைவாக தமிழகத்தில் அகதிகளின் வரவு பிரச்சனையை தீவிரப்படுத்தியது.

எதிர்கால ஒத்துழைப்பு

 • கச்சத்தீவை காலவரம்பற்ற குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் உடன்படிக்கை ஏற்படுத்த இந்தியா முனையலாம்.
 • உரிமம் பெற்ற இந்த மீனவர்கள் குறிப்பிட்ட வரையறைக்குட்பட்ட இப்பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கலாம். அதுபோலவே இலங்கை மீனவர்களுக்கும் இச்சலுகையை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
 • இந்திய அரசாங்கம் மீன்பிடித் தொழிலை நிறுவனப்படுத்த முயற்சி செய்யலாம். இதன்மூலம் வாழ்வாதாரத்திற்கு மாற்றுவழிகள் பெருகும்.
 • இந்திய அரசாங்கம் விரிவான திட்டத்தை மேற்கொண்டு இந்திய மீனவர்கள் பாக் வளைகுடாவில் மீன் பிடித்தலை ஒழுங்குபடுத்துவதற்கு முயற்சி செய்யலாம்.

மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும் சரிவர தீர்வுகள் காணும் பட்சத்தில் இந்தியாவும் இலங்கையும் தெற்காசியாவில் தலையாய முடிவெடுக்கும் தன்மையை பெறுவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு.

இந்திய-நேபாள உறவுகள்

 • இந்தியா, நேபாளம் ஒன்றுக்கொன்று புவியியல் ரீதியாக அருகே அமைந்துள்ளன. நேபாளம் தாழ்வான நிலப்பகுதியில் பெரும்பாலும் கங்கை சமவெளியின் பாதையில் அமைந்து, இமயத்தின் அடிவாரத்தில் சீனாவிற்கும், ஆசியாவிற்கும் இடையே உள்ளது. இவ்விரு நாடுகளும் கிழக்கே 1,850 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்தும் , தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற ஐந்து இந்திய மாநிலங்களால் சூழப்பட்டுள்ளன.
 • முன்னதாக நேபாளம் ஒரு இந்து பெரும்பான்மையான நாடாக விளங்கியது. ஆனாலும் எட்டில் ஒரு பங்கு மக்கள் பௌத்த கொள்கையில் நம்பிக்கை உடையவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
 • நேபாளத்தினை இறையாண்மை பெற்ற நாடாக நேரு ஏற்றுக்கொண்டாலும் , அதே சமயத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஒரு தனிச்சிறப்புடைய பகுதியாகவே அது விளங்குகிறது.
 • சீனா திபெத்தை தன்பிடிக்குள் 1951இல் கொண்டுவந்தபோது நேபாளத்தின் முக்கியத்துவத்தை இந்தியா உணரலாயிற்று. நேபாளத்தின் மூலம் அச்சுறுத்தல் என்பதைவிட, நேபாளத்திற்கு அச்சுறுத்தல் என்பது இந்தியாவிற்கும் பெரும் இழப்பு ஏற்படுத்தும் என்பதனினை உணர்த்தியது. இதன் தொடர்ச்சியாக இந்தியா நேபாளத்துடன் அமைதி மற்றும் நட்புறவு உடன்படிக்கையை ஜூலை 31, 1950 இல் மேற்கொண்டது.
 • நேபாளத்துடன் உறவுகளுக்கு இந்தியாவின் பாதுகாப்பு காரணி என்பதுடன் ஏனைய மற்ற காரணிகளும் அடிப்படையாக உள்ளன. மேற்கூறிய ஒப்பந்தம் கையெழுத்திட்ட அதே நாளில் வர்த்தக வாணிப உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே வலிமையான பொருளாதார உறவுகளை மேம்படுத்தியது.

அரசியல் உறவுகள்

 • இந்தியாவுடனான நேபாளத்தின் உறவுகள், அரசருக்கும் வம்சாவழி பிரதமர் குடும்பத்திற்கும் இடையேயான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இருந்து வந்தது. 1950இல் நேபாளத்தோடு ஒப்புதல் மேற்கொண்ட இந்தியா, மக்களாட்சிக்கு மாறவும், உரிமைகளை மக்களுக்கு அளிக்குமாறும் வேண்டிக் கொண்டது. ஆனால் அதற்கு சிறிதளவும் ராணா குடும்பத்தினர் செவிசாய்க்காமல் இருந்ததால் இந்திய அரசு நேரடியாக பிரச்சனையில் கவனம் செலுத்தியது.

 • நேரு இறந்த பிறகு, இந்தியாவின் உறவுகள் ஒரே மாதிரியானநிலை போக்கை கடைபிடித்தது. அடுத்தடுத்து பதவியேற்ற, சாஸ்திரி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, வி.பி.சிங் மற்றும் சந்திரசேகர் முன்பு வழக்கமாயிருந்த கொள்கையையே பின்பற்றினர். இரு நாட்டின் தலைவர்களும் பல்வேறு சந்திப்புகளை முறையே நடத்தினர்.

 • 1990-களில் இந்தியா “இரு தூண் கொள்கையை” பின்பற்றியது. பலகட்சி முறைமை நேபாளத்தில் தோன்றியதால் இந்நிலையை இந்தியா தேர்ந்தெடுத்தது. இரு தூண் கொள்கையாக அரசியல் சாசனச் சட்டத்தில் மன்னராட்சியும், பலகட்சி மக்களாட்சிமுறையும் அமைய இந்தியா விருப்பம் தெரிவித்தது.
 • ஆனால் புதிய புத்தாயிரத்தில் இக்கொள்கை தொடர்பான நடவடிக்கைகளின் மாற்றம் ஏற்பட்டது. ஏனெனில் மன்னராட்சியில் மாற்றமும், மாவோ கிளர்ச்சியாளர்களின் செயலும் வேகமும் நேபாளத்தைப் புரட்டி போட்டது.

இந்தியா –நேபாள உறவுகளுக்கிடையே தற்போதைய பிரச்சினைகள்

சூழல்

 • வாணிபம் மற்றும் போக்குவரத்து தொடர்பான உடன்படிக்கையை நேபாளமும் சீனாவும் செய்து கொண்டுள்ளது.
 • பிம்ஸ்டெக் பயிற்சியை (MILEX 2018) இந்தியா நடத்துகின்றபோது நேபாளம் அதில் கலந்து கொள்ளவில்லை.

இரு பெரும் பொருளாதார வல்லரசுகளான இந்திய-சீனாவிற்கு தெற்கே இமய மலைப்பகுதியின் இடையில் அமைந்துள்ள நேபாளம் இரண்டு நாடுகளுடனான தனி முக்கியத்துவமான வரலாற்று நட்பு உறவுகளை கொண்டுள்ளது.

நட்புறவின் பின்னணி

 • இரு நாடுகளும் பிரத்தியேகமான நட்புறவைக் கொண்டுள்ளது. இதன் பகிர்வு பொதுவான கலாச்சாரத்தையும், இமயத்திற்கு தெற்கேயுள்ள பகுதியிலுள்ள இரு நாடுகளுக்கும் நெருக்கமான பண்பாட்டு உறவுகள் உள்ளன. திருமணம், தொன்மையான சமயம், மொழி, இனம் ஆகியவற்றால் இரு நாடுகளுக்கும் நெருக்கமான பண்பாட்டு உறவுகள் உள்ளன.
 • இரு நாடுகளின் மக்களுக்கிடையேயான உறவுகளும், மிக நெருக்கமாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.
 • இந்தியக் குடியரசு, நேபாளம் அமைதி மற்றும் நட்புக்கான 1950 இந்திய –நேபாள ஒப்பந்தத்துடன் முறையான உறவைத் தொடங்கின. இந்த ஒப்பந்தம் இந்திய-நேபாளத்துடனான தற்போதைய உறவின் மைல்கல்லாகும்.

நேபாள உறவுகளின் முக்கியத்துவம்

 • இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே “இசைச்சுவராக” நேபாளம் செயல்படுகிறது.
 • மேலும், நிலம் சூழ்ந்த நாடாக நேபாளம் அமைந்திருப்பதால் வெளிநாடுகளுடன் இணைப்பு பெற இந்தியாவை சார்ந்து இருப்பது அவசியமாகிறது.

பிரதமர் மோடி அவர்கள் “டி” (T) சூத்திரத்தைக் கொண்டு வந்துள்ளார். இந்திய-நேபாள உறவுகள் “பாரம்பரியம், வாணிபம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து” போன்றவைகளால் நிர்ணயிக்கப்படும் என்று தனது மே 2018 பயணத்தின்போது கூறியுள்ளார்.

அரசியல் உறவுகள்

 • வரலாற்று ரீதியான உறவு முறையை நேபாளமும், இந்தியாவும் கொண்டுள்ளது.
 • 1950-களிலிருந்து அமைதி மற்றும் நட்புறவு தொடர்பான உறவுமுறை இரு நாடுகளுக்கும் உண்டு.
 • மேற்கூறிய ஒத்துழைப்பு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே இன்றுவரை நட்புறவு வலுப்பெற கருவியாக உள்ளது.
 • இந்தியா எப்போதும் தெற்காசியாவை அதன் செல்வாக்கு செலுத்தும் ஒரு பகுதியாக கருதுகிறது.

இந்திய –நேபாள அமைதி மற்றும் நட்புறவுக்கான உடன்படிக்கை -1950

1950இல் மேற்கொள்ளப்பட்ட அமைதி மற்றும் நட்புறவு உடன்படிக்கையானது நேபாள அரசாங்கத்திற்கும் , இந்திய அரசாங்கத்திற்கும் உலகத்தின் ஒற்றுமையை அடிப்படையாக வைத்து அண்டை நாடுகளுடன் உறவுமுறையை வலிமைப்படுத்தும் நோக்கமுடையதாகும். இந்த உடன்படிக்கை 1950ஆம் ஆண்டு ஜூலை 31இல் நேபாள பிரதமர் ஷம்ஷர் ஜாங் பகதூர் ராணா, இந்திய தூதுவர் சத்ரேஷவர் நாராயாணசிங் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையின்படி இருநாட்டு மக்களும் தங்குதடையின்றி சுதந்திரமாக இரு நாடுகளுக்கும் செல்வதற்கும், பொருள்கள் ஏற்றுமதி-இறக்குமதி செய்வதற்கும் வெளியுறவுத்துறை விஷயங்களிலும், பாதுகாப்பு துறையில் பரிமாற்றங்கள் ஏற்பட ஏதுவான சூழல் ஏற்படுத்தப்பட்டது.

கலாச்சார உறவுகள்

 • இரு நாடுகளும் ஒரே வகையான கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றன. மேலும் இரு நாட்டு மக்களுக்கும் மக்களுக்கிடையேயான உள்ள உறவுமுறைகளுக்கு வரலாற்றில் தனிச்சிறப்பு பெற்றதாக அமைந்துள்ளது.
 • இருநாட்டு மக்களும் பரஸ்பரம் , மத ரீதியான யாத்திரைகளுக்கு அடுத்த நாட்டுக்கு செல்வது வழக்கமாகியுள்ளது. பசுபதி மற்றும் ஜனக்பூர் ஆகிய பிரசித்தி பெற்ற கலாச்சார இடங்கள் நேபாளத்திலும், வாரணாசி மற்றும் நான்கு புனித ஸ்தலங்கள் இந்தியாவிலும் மக்கள் சென்று வர ஏதுவாய் உள்ளது.
 • புத்த புனித ஸ்தலங்களான லும்பினி நேபாளத்திலும், குஷி நகர், கயா, சாரநாத் இந்தியாவிலும் மக்களை ஈர்க்கிறது.
 • குறிப்பிட்டு கூறும் வகையில், இந்தியாவிற்கும் நேபாளத்திற்குமான உறவுகள் உணவு மற்றும் குடும்பம் ரீதியாக அமைந்து சிறப்பித்து காணப்படுகிறது.

ஒத்துழைப்புக்கான பகுதிகள்

 1. பொருளாதார மற்றும் வாணிபம்
 • நேபாளத்தின் மிகப்பெரிய வாணிப பங்குதாராக இந்தியா செயல்படுகிறது. அந்நிய முதலீட்டிலும் , நேபாளத்துடனான வாணிபம், போக்குவரத்து வசதிகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

2. நேபாளத்தில் இந்திய முதலீடு

 • 40 சதவீதம் வெளிநாட்டு முதலீடானது இந்தியாவிலிருந்து முதன்மையான முதலீட்டாளர்கள் மூலம் நேபாளத்திற்கு செல்கிறது.

3. நீர் வளங்கள் மற்றும் ஆற்றல் துறைகளின் ஒத்துழைப்பு

 • 2008இல் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு இருதரப்பு ஒப்பந்தமானது நீர்வளம் மற்றும் நீர்மின் நிலையம் தொடர்பாக மூன்று அடுக்கு செயல்வழி முறை உருவாக்கப்பட்டது.
 • அதிவேகமாக பாய்கின்ர பல ஆறுகள் நேபாளத்தில் இருப்பதால் நீர் மின் நிலையம் மூலமாக மின் ஆற்றல் தயாரிக்க எளிதாகிறது. 80,000 மெகாவாட் உற்பத்தி திறனிலிருந்து நேபாளம் 700 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்கிறது.
 • சமீபத்தில் அருண் III என்ற 900 மெகாவாட் மின் ஆற்றல் தயாரிக்கக்கூடிய நீர் மின் நிலையம் நிறுவப்பட்டது.
 • 2014 இல் இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் மின்னாற்றல், வாணிபம் எல்லை கடந்த இடைவெளி இணைப்பு மற்றும் கட்டடம் இணைப்பு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
 • நீண்ட கால ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்திட்டம் 2035இல் உருவாக்குவதற்கு உண்டான இணை தொழில்நுட்பக்குழு நிறுவப்பட்டது.

4. தற்காப்பு ஒத்துழைப்பு

 • இந்திய இராணுவத்தில் கூர்க்கா படையில் ஆள் எடுப்பு பெருவாரியான நேபாள மலைவாழ் மாவட்டங்களிலிருந்து நடத்தப்படுகிறது.
 • 1950-லிருந்து இந்தியாவும், நேபாளமுடன் தங்களது தரைப்படை தளபதிகளுக்கு ஜெனரல் பதவியை மரியாதை நிமித்தமாக வழங்குகிறது.
 • இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில், நேபாள ராணுவத்தை நவீனமாக்கவும், பயிற்சிகள் தரவும், புதிய கருவிகள் அளிப்பதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 • இந்திய ராணுவ பயிற்சி மையங்களில் ஒவ்வொரு வருடமும் நேபாள ராணுவத்தினர் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
 • 2019இல் இந்தியாவும் நேபாளமும் சூரிய கிரண் XIII என்றழைக்கப்படும் கூட்டு ராணுவ பயிற்சியை , மே 30-லிருந்து ஜூன் 12 வரையில் உத்தராகண்டில் நடத்தியது.

5. உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு

 • சமீபத்தில் ரக்ஸால் காத்மண்டு ரயில் பாதை அமைப்பதற்கு புரிதல் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. தகவல் பரிமாற்ற, தேசிய நெடுஞ்சாலை திட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
 • இவ்விரு நாடுகளும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

6. இரு நாட்டு மக்களுக்கிடையேயான ஒத்துழைப்பு

 • இரு நாடுகளின் அரசாங்கங்களும், மூன்று சகோதர நகரங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. காத்மண்டு –வாரணாசி-லும்பினி –புத்தகயா மற்றும் ஜனக்பூர், அயோத்தியா ஆகிய நகரங்களை மையப்படுத்தி உருவாக்கிய ஒப்பந்தமாகும்.
 • ஜனக்பூருக்கும் அயோத்யாவிற்கும் நேரடியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை இராமாயண வட்டம் வழியாக இயக்கப்படும் சுதேஷ் தரிசன திட்டத்தை அறிவித்தது.
 • நேபாளமும் இந்தியாவும் இந்து மற்றும் புத்த பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்கின்றன. லும்பினி, புத்தரின் பிறந்த இடம் நேபாளத்திலும், அவர் ஞானம்பெற்ற புத்தகயா இந்தியாவில் உள்ளது. இதேபோல் இரு நாடுகளிலும் இந்து புனித யாத்திரை இடங்கள் பரவி உள்ளன.

சவால்கள்

 1. எல்லைப் பிரச்சனைகள்
 • இருபிரதான பிரச்சனைகள் சுஸ்தா மற்றும் கலாபானி (இந்தியா-சீனா-நேபாளம்- முச்சந்திப்பு) ஆகும்.
 • இரு நாடுகளுக்கிடையேயான பேச்சு வார்த்தைகள் செயலாளர்களிடையே முடிவு செய்யப்பட்ட நிலையில், ஒரே ஒரு பேச்சுவார்த்தை மட்டும் 2015இல் நடத்தப்பெற்றது.

2. உள்நாட்டு பாதுகாப்பு

 • நேபாளத்திற்கும், இந்தியாவிற்கும் இடையில் திறந்தவெளி எல்லை அமைந்துள்ளதால் சட்டப்பூர்வமற்ற இடம்பெயர்தலும் ஆள்கடத்தலும் எளிதான் வகையில் அரங்கேற்கிறது.
 • இந்த எல்லையானது மாவோஸ்டுகள், தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மிகச் சுலபமாக உள்ளது.

3. வாணிபம்

 • நேபாளத்தில் வாணிபம் அதிகமாக இறக்குமதி செய்வதாலும் குறைவான ஏற்றுமதியாலும் சமீபகாலத்தில் பற்றக்குறையாவே நீடிக்கிறது.
 • இந்தியா –நேபாளம் வாணிபத்தில் அதிகளவில் இந்தியாவிற்கு இலாபம் அளிக்கின்ற நிலை தற்போது உள்ளது.

4. அமைதி மற்றும் நட்புறவுக்கான ஒப்பந்தம்

 • 1950இல் கையெழுத்திடபட்ட இந்திய –நேபாள ஒப்பந்தம் நேபாள அரசியல் வித்தகர்களால் சமமற்றதாக விமர்ச்சிக்கப்பட்டது.
 • இந்த ஒப்பந்தத்தின்படி, நேபாளம் எந்த ஒரு இராணுவம் தொடர்பான பொருள்கள் வாங்கும்போது இந்தியாவில் ஒப்புதலைக் கேட்க வேண்டும் என்ற விதி அமைப்பு உள்ளது. நேபாளம் இவ்விதியை மாற்ற விருப்பம் தெரிவித்தது.
 • நேபாள –இந்திய பிரபலமானவர்கள் குழுமம் இரு நாடுகளுக்கிடையேயான அனைத்து உடன்படிக்கைகளையும் மறுஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கையை அளிக்க உள்ளது. இவ்வறிக்கை இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை சீரமைப்பது பற்றியது ஆகும்.

5. சீனா – நேபாள நெருக்கம் அதிகரித்தல்

 • நேபாளம் இந்தியாவுடன் நட்புறவை ஈடுகட்டுவதற்கு சீனாவுடனான நேபாள உறவுகள், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
 • சீனத் தரப்பில் , திபெத்தின் பக்கத்திலிருந்து நேபாளத்திற்கு அதிக எண்ணிக்கைகளில் நெடுஞ்சாலைகள் கட்டப்படு வருகிறது. நேபாளத்தின் அனைத்து கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை வழியின் கீழ் கட்டப்பட்டுள்ளது.
 • வெகு விரைவில் சீன அரசாங்கம் திபெத்திலிருந்த காத்மாண்டிற்கு ரயில் போக்குவரத்தை தொடர்வதற்கு தயார் செய்துகொண்டிருக்கிறது.
 • மேலும் “ஒரு பாதை ஒரு சாலை முன்னெடுப்பில்” நேபாளம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
 • நேபாள குழுமங்களோடு சீனா, இந்திய விற்பனையாளர்களை சீர் கெடுக்கும் போட்டி மனப்பான்மையோடு பணி செய்து வருவது. இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இடமாற்று மற்றும் போக்குவரத்து ஒப்பந்தம்

 • நேபாளமும், சீனாவும் இடமாற்று மற்றும் போக்குவரத்து ஒப்பந்தத்தை இறுதி செய்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நேபாளம், சீனாவுன் நான்கு துறைமுகங்களையும் மூன்று உட்பகுதி துறைமுகங்களையும் வாணிபத்திற்காக பயன்படுத்தவும். இதன்மூலம் இந்தியாவை சார்ந்திருப்பது குறைகிறது.
 • இம்மாதிரியான தரைவழி மற்றும் ரயில்வே சாலைகளும் நேபாளத்திற்கும் சீனாவிற்குமான உறவுகளை வலிமையாக்கி கொண்டு இந்தியாவுடனான உறவில் சீன-இந்திய எல்லையை சீரழிக்கின்றன.

நிலத்தால் சூழப்பட்ட (பூட்டப்பட்ட இமாலய பேரரசு, ஒரு மாற்று வர்த்தகப் பாதையைப் பெற்றது, ஆனால் அது உதவுமா?

 • சீனா-நேபாளம் செய்துக் கொண்ட இடமாற்று மற்றும் போக்குவரத்து ஒப்பந்தத்தின்படி நேபாள நாட்டு வர்த்தகர்கள் ரயில், சாலை, துறை மற்றும் கடல் துறைமுகங்களைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
 • நேபாளத்தின் லாரிகள், நீண்ட சரக்கு லாரிகள் மற்றும் சிறியப் போக்குவரத்துக் கப்பல்கள் ஆகியவற்றில் திபெத்தின் “சியாக்ட்சே” பகுதியிலிருந்து கொண்டுவர சீனா அனுமதியளிக்கிறது.
 • நேபாளம் சீனாவின் ஆறு சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

சாலை வழித்தடை

 • தொலைவு ஒரு முக்கிய சிக்கலாகும் நேபாளத்திலிருந்து சீனத்துறைமுகம் 2000 கி.மீக்கும் அப்பால் உள்ளது.
 • சரியான சாலை வசதி மற்றும் சுங்கம் சார்ந்த உள்கட்டமைப்பு போன்றவை இல்லாமை நேபாளத்தின் பக்கம் இருக்கும் மிகப் பெரிய சவால் என வர்த்தகர்கள் கூறுகிறார்கள்.

நேபாளத்தை பொறுத்தவரையில் ஏன் இந்தியாவிற்கு மாற்றாக சீனா இருக்கமுடியாது?

 • புவி அமைப்பில் இந்தியாவின் இடம் சிறப்பு வாய்ந்ததாகவும் அருகருகே அமைந்துள்ளது. ஆனால் சீனாவின் துறைமுக பாதையோ (அல்லது) ரெயில் பாதையோ நேரடியாக நேபாளத்திற்கு வர இயலாத புவி அமைப்பு உள்ளது.
 • நேபாளம் உபயோகப்படுத்துகிற சீனாவின் தூறைமுகம் 3000 கி.மீ தொலைவில் உள்ளது. ஆனால் இந்தியாவின் கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்கள் வெகு அருகருகே அமைந்துள்ளது.

இந்திய –பூடான் உறவுகள்

இந்தியாவுடன் பூடானின் நட்பு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. முற்றிலுமாக நிலம் சூழ்ந்த நாடாக இருப்பதால் பெருமளவில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இந்தியாவையே சார்ந்திருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இந்தியாவும் தன்னாலான உதவிகளை பூடானுக்கு செய்வதால், இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லுறவு நட்பு நாடுகளாக நட்பு பாராட்டி வருகின்றன.

1968-லிருந்து இந்தியாவுடனான பூடானின் நட்பு வெகு நேர்த்தியாக வளர்ந்து வருகிறது. திம்புவில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பணியமர்த்தப்பட்ட பிறகு கூடுதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பாக சிக்கிமிலிருந்த அரசியல் அதிகாரியின் மூலம் இந்திய உறவுகள் மேம்படுத்தப்பட்டது.

இந்தியாவின் அணுகுமுறையால், 1965இல் பூடான் கொழும்பு திட்டத்தில் 1969இல் உலக தபால் பணி குழுவிலும் சேர்ந்தது. இறுதியாக பூடான் உறுப்பினராவதற்கு 1971இல் இந்தியா சிபாரிசு செய்தது. அணிசேரா இயக்கத்துடனான பூடானின் உறவுகளுக்கும் இந்தியா முயற்சிகள் மேற்கொண்டது.

கால வரிசை நிகழ்வுகளும்

 1. புனக்‌ஷா ஒப்பந்தம் (1910): பிரிட்டிஷ் இந்தியாவின் மற்றொரு பாதுகாப்பான அரசாக பூடான் விளக்கியது. இதன் மூலம் உள்சுதந்திரத்தை பெற்று இருந்ததே தவிர வெளி சுதந்திரத்தை பெறவில்லை.
 2. நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் ஒப்பந்தம்: இந்தியாவும் பூடானும் அமைதி மற்றும் நட்புறவு உடன்படிக்கையை 1949, ஆகஸ்டு 8-இல் டார்ஜிலிங்கில் கையெழுத்திட்டன.
 • இந்த உடன்படிக்கையானது 1910 ஆம் ஆண்டு ஆங்கிலேயே- பூடானிய உடன்படிக்கையின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. இதன் மூலம் இமலாயப் பகுதி இந்தியப் பாதுகாப்பின் அடிப்படையாகக் கருதப்படுகிறது.
 • பூடான் அயல்நாட்டு கொள்கையில் இந்திய –பூடான் உடன்படிக்கை ஒரு மைல் கல்லாகவே செயல்படுகிறது.
பூடான் – 1949ஆம் ஆண்டு
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல் உறுப்பு 2- வெளியூறவுக் கொள்கை இந்தியாவின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாதுகாப்பு உறுப்பு 6- இந்தியாவிற்கு எதிராகப் போகாதவரை, ஆயுதங்கள் இறக்குமதி செய்துக் கொள்ள அல்லது இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துக் கொள்ள எந்தத் தடையும் இல்லை.
வெளியுறவு உறவுகள் உறுப்பு 2

மறுசீரமைக்கப்பட்ட உடன்படிக்கை (2007)

 • பூடான் வேண்டிக்கொண்டதன் மூலம் இந்தியா தமது நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையை மறுசீரமைத்தது.
 • இம்மறுசீரமைப்பின்படி இந்தியா வழிநடத்தும், பங்குதாரரின் நிலையிலிருப்பது மற்றும் நெருங்கிய நட்புறவாகவும், சமபங்குதாரராகவும் செயல்பட வடிவகுப்பது.
 • மேலும் புதியதாக இராணுவம் தொடர்பான பொருள்கள் இறக்குமதி செய்வதற்கு இந்தியாவின் அனுமதி பெறத்தேவையில்லை.
 • வெளிநாடுகளுடனான உறவுகளில் சுதந்திரமும் ஆனால் அதே சமயம் இந்தியாவின் பாதுகாப்புமும் அச்சுறுத்தும் வகையில் செயல்படாத வகையில் உறவுகளை மேற்கொள்ளுமாறு சீரமைக்கப்பட்டது.
 1. இந்திய –பூடான் வாணிபம் மற்றும் பரிமாற்ற ஒப்பந்தம் (1972)
 • பூடான் ஏற்றுமதி பொருள்கள் எவ்வித வரியுமின்றி வெளிநாடுகளுக்கு செல்லும் வகையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
 • நீர் மின்திட்ட கூட்டுறவு ஒப்பந்தம் (2006):

இந்த ஒப்பந்தத்தின்படி 2020ஆம் ஆண்டு வரை பூடான் 10,000 மெகாவாட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு இந்தியா உதவி புரிவதாகவும், தேவைக்கும் அதிகமான மின்சாரம் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் கையெழுத்திடப்பட்டது.

ஒத்துழைப்பிற்கான பகுதிகள்

நீர்மின்திட்டம் ஒத்துழைப்பு

 • இந்தியா பூடானில் மூன்று நீர்மின் திட்டங்களை நிறுவியுள்ளது. இவை அனைத்தும் மொத்தமாக 1416 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்குகின்றன.
 • நீர் மின்சாரம் ஏற்றுமதியின் மூலம் பூடானிற்கு 40% உள்நாட்டு வருவாயும் அதன் மூலம் 25% மொத்த உள்நாட்டு உற்பத்தி பெருக்கமும் அடைகிறது.
 • தற்போது மூன்று நீர் மின்நிலையங்கள் இரு அரசாங்கங்களுக்கிடையே திட்டமிடப்பட்டு கட்டுமான பணியில் உள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பு

 • இரு நாடுகளும் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக கூட்டு பயிற்சி இராணுவ நடவடிக்கையை நடத்தி உள்ளது.
 • 2004இல் நடைபெற்ற இராணுவ பயிற்சி குறிப்பிடத்தக்கதாகும். பூடான் இராணுவம் உல்ஃபா தீவிரவாத குழுவிற்கு எதிராக நடத்தியது.

தூதரக ஒத்துழைப்பு

 • இரு நாடுகளுக்கிடையேயான உயர்மட்ட அரசாங்க பிரதிநிதிகளின் சந்திப்பு ஆரம்பக்காலத்திலிருந்தே வழக்கமாக இருந்து வந்துள்ளது. 2014ஆம் ஆண்டும் நரேந்திர மோடி பிரதமரானவுடன் முதல் பயணமாக பூடான் பயணம் அமைந்தது.
 • இந்தியா தான்னுடைய தூதரக அதிகாரிகளை பூடானுக்கு அனுப்பி தூதரக உறவு மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 • தெற்கு ஆசியா மண்டல ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்கத்தில் உறுப்பினராக பூடான் விளங்குகிறது. மேலும் பிம்ஸ்டெக், உலக வங்கி, ஐ.எம்.எஃப், ஜி-77 போன்ற பன்னாட்டு கழங்களிலும் உறுப்பினராக பூடான் விளங்குகிறது.

பொருளாதார ஒத்துழைப்பு

 • பூடானின் நாணயம் குல்ட்ரம் (Ngultrum) இந்திய ரூபாயுடன் இணைக்கப்பட்டுள்ளது.
 • பூடானின் மிகப்பெரிய வர்த்தக நாடாக இந்தியா விளங்குகிறது.
 • 2016இல் புதிய வாணிப ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகளில் குறைந்த அளவு ஆவணங்களுக்கும் மிகுதியான வாணிப நிலையங்களும் அமைப்பதற்கு ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்லப்பட்டன.
 • மேலும் இந்தியா பூடானிற்கு சுங்கவரி நீக்கப்பட்ட வர்த்தக சலுகை அளித்துள்ளது. இது இரு நாடுகளும் வர்த்தகத்தை மேம்படுத்த வசதியளித்துள்ளது.

ஒட்டுமொத்த தேசிய மகிழ்ச்சி

1972இல் பூடானின் நான்காம் மன்னரான ஜிக்மே சிங்கே வாங்சுக் “ஒட்டுமொத்த தேசிய மகிழ்ச்சி” என்ற கருத்தை பிரகடனம் செய்தார்.

கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு

 • எண்ணிலடங்கா பூடான் மாணாக்கர்கள் இந்தியாவின் பல்கலைக்கழகங்களில் இளநிலைக் கல்வியை சுயநிதியை அடிப்படையாகக் கொண்டு பயின்று வருகிறார்கள்.
 • 2003-ல் இந்திய-பூடான் கழகம் உருவாக்கப்பட்டு இரு நாடு மக்களுக்கிடையேயான ஒத்துழைப்பு கலாச்சாரம், கல்பி மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை போன்றவைகளின் வளர்ச்சிக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பிரச்சனைப் பகுதிகள்

 • 2015இல் பங்களாதேஷ், பூடான், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையேயான மோட்டார் வாகன ஒப்பந்தத்தை பூடானின் மேலவை சுற்றுப்பூற காரணியை மையமாக வைத்து தடை செய்தது.
 • சரிசமமற்ற வர்த்தக வளர்ச்சியானது இந்தியாவிற்கே ஆதாரமாக உள்ளது. இந்திய சேவை மற்றும் பொருள்கள் வரி, ஏற்றுமதிக்குக் குறைவாகவும், இறக்குமதி அதிகமாகவும் உள்ளதால், பூடானின் வர்த்தகக் குறைபாடு மேலும் சங்கடத்தை சந்திக்க நேருகிறது.
 • பூசான் தன்னுடைய ஏற்றுமதி வரியை அதிகரிக்கும் நிலையில் உள்ளது. உற்பத்தி விலையை விட வரி குறைவாக இருப்பதால் பூடான் பாதிப்படைகிறது.
 • தேசிய குடியரசு கிளர்ச்சி கழகங்களான போடோலான்ட் (NDFB), உல்பா (ULFA), மற்றும் சம்பத்பர் விடுதலை அமைப்பு (KLO) போன்றவை எளிதாக நுழையும்படி பூடான் இருப்பதால், வடகிழக்கு பகுதியின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

டோக்லாம் பிரச்சனை

 • டோக்லாம் என்பது இந்தியா பூடான் மற்றும் சீனா நாடுகளுக்கு இடையேயான 100 கி.மீ-க்கும் குறைவாக உள்ள ஒரு பீடபூமி மற்றும் பள்ளத்தாக்கை உள்ளடக்கியதாகும். இப்பகுதியாவது திபெத்தின் அம்பி பள்ளத்தாக்கு மற்றும் பூடானின் உஹா பள்ளத்தாக்காலும் சிக்கிமாலும் சூழப்பட்டுள்ளது.

 • தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் சீனா மற்றும் பூடானிடையே நடைபெற்றிருந்தாலும், டோக்லாம் பிரச்சினை முடிவற்றதாக அமைந்துள்ளது. 2017இல் இப்பிரச்சினை வலுப்பெற்று சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட காரணமாயிருந்தது. இப்பகுதியில் சீனா சாலையை நிறுவத் தயார் ஆகும்போது இந்திய இராணுவத்தினர், பூடானிற்கு ஆதரவாக தடை ஏற்படுத்தினர்.
 • டோக்லாம் இந்தியாவின் சிலிகுரி பகுதிக்கு நெருக்கமாக இருப்பதால், இந்தியாவிற்கும் வடகிழக்கு பகுதிக்கும் இடையே முக்கியமான அங்கம் வகிக்கிறது. இப்பகுதி இரு நாடுகளுக்கிடையேயான குறுகிய நிலப்பரப்பாக அமைந்துள்ளது.
 • சமீப காலத்தில் அம்பி பள்ளத்தாக்கில் சீனா பெருமளவில் படைகளை குவித்து வருகிறது. ஆனால் இராணுவப் படை ரீதியாக அனுகூலமற்ற நிலையே காணப்படுகிரது. இந்த பள்ளத்தாக்கைச் சுற்றிலும் இந்தியா மற்றும் பூடான் துருப்புகள் அதிகம் உள்ளன.

நீர்மின் திட்டப் பிரச்சினைகள்

 • பூடான் இந்தியாவிற்கு குறைந்த விலையில் மின்சாரம் அனுப்புகிறது.
 • கூட்டு நீர் மின் நிலைய திட்டங்களின் மேலாண்மையில் இந்தியா அதிக பங்கு பெற விரும்புவதாக பூடான் நம்புகிறது.
 • எல்லை கடந்த வாணிபத்தில் மின்னாற்றல் அமைச்சகத்தின்மூலம் நிர்வகிக்கப்பட்டு இந்தியாவை ஒரே பங்குதாரராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நீர்மின் நிலைய முதலீட்டில் பூடானின் சுதந்திரத்தை பாதிக்கிறது.
 • நீர் மின் நிலையங்கள் சுற்றுப்புறச் சூழலும் இணைந்து பார்க்கப்படுகிறது.

ஒத்துழைப்பிற்கான நடவடிக்கைகள்

 • இரு நாடுகளிக்கிடையேயும் நட்பு ரீதியான சந்திப்புகள் அடுக்கு நிகழ்வுகளாக நடைபெறுகிறது.
 • பூடானின் 20 மாவட்டங்களுக்கான மின்னணுத்திட்டம் இந்தியாவால் மேம்பாடு அடைகிறது.
 • தற்போதைய பிரதமரால் “B-to-B” என்று (பாரத்-டு-பூடான்) கொள்கை உருவாக்கப்பட்டு இரு நாடுகளுக்கிடையான உறவுகள் வலுப்படுத்தப்படுகிறது.
 • இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் அதிகம் உதவிகளைப் பெரும் நாடாக பூடான் விளங்குகிறது.
 • நிரந்தரமாகவே 1000 வீரர்கள் கொண்ட் இந்திய இராணுவப் பயிற்சி குழு (IMTRAT) மேற்கு பூடானில் செயல்படுகின்றது. இக்குழு பூடான் படைக்கு பயிற்சி அளிக்கிறது. ஏனைய மற்ற இந்திய படைக்கும் ராயல் பூடான் படைக்கும் உதவி புரிகின்றன.

எதிர்கால ஒத்துழைப்பு

 • இந்திய-பூடான் உறவுகள் நீருக்கும் பாலுக்குமான உறவாகும். இரண்டையும் பிரிக்க முடியாததாக உறவு அமைந்துள்ளது.
 • இந்தியா, கிடப்பில் போடப்பட்டிருக்கும் சில நீர் மின் நிலைய திட்டங்களை விரைந்து முடித்தல் வேண்டும். போதுமான நிதியில்லாதது காரணமாக கூறப்படுகிறது.
 • இந்தியாவிற்கும், பூடானிற்கும் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கிறது. ஆனால் இது சீனா பல்வேறு எல்லை பிரச்சனைகளை கொடுக்கின்றது. இந்தியாவுடான ஒத்துழைப்பை பூடான் நன்றாக பயன்படுத்தி சீனாவின் தவறான கணக்கீட்டிற்கு தகுந்த பதிலடி அளித்தல் வேண்டும்.
 • பூடானுடனான வடகிழக்கு தொடர்பை இந்தியா மண்டல பொருளாதார வளர்சிக்கு பயன்படுத்த வேண்டும்.
 • பூடானின் மொத்த தேசிய மகிழ்ச்சியை இந்தியா தன்னுடைய பொருளாதார வளர்ச்சியோடு இணைத்து மகிழ்ச்சி மற்றும் நட்பு பகிர்தலை மேற்கொள்ளவேண்டும்.

இந்திய – மியான்மர் உறவுகள்

 • அனைத்து புத்த பர்மியர்களும் வாழ்வில் ஒருமுறை இந்தியாவில் அமைந்துள்ள புத்தகயாவில் பிரார்த்தனை செய்வதற்கு விரும்புகிறார்கள். இரு நாடுகளும் சுதந்திரம் பெறுவதற்கு வெகு நாள்கள் முன்னதாகவே, அங்கு இருக்கக்கூடிய மீசோ, நாகா குக்கி, தங்குள், பைட்டே போன்ற குழுக்கள் குடும்ப ரீதியாகவும், மொழி, மத மற்றும் கலாச்சார ரீதியாகவும் உறவு பாராட்டினார்கள்.
 • பிரிட்டிஷ் அரசாங்கம் வந்த பிறகே இரு நாடுகளுக்கிடையே எல்லைகள் உருவாக்கப்பட்டு தனி நாடுகளாக உருப்பெற்றன.
 • இந்தியாவிற்கும் மியான்மருக்குமான (முன்பு பர்மா) உறவுகளின் வரலாறு 2500 ஆண்டுகள் கொண்டதாகும். பர்மியர்கள் புத்தமதத்தின் தொடர்புகள் இந்தியாவையும் மியான்மரையும் இணைத்துள்ளது என்று நம்புகிறார்கள் ஸ்வேதகான் பகோடா என்கிற புகழ்பெற்றவர் கூற்றின்படி, கோவிலின் இதயப் பகுதி புத்தரின் முடி புதைந்த இடத்தில் உள்ளதாகவும், அவை இரண்டு பர்மா வியாபாரிகளுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையில் அசோகரை பர்மாவில் பகோடா வகை கட்டுமானத்தை நிறுவுவதற்கு தூண்டியதாகவும் புத்த மதம் பரவுவதற்கு காரணமாகவும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இனக்கூறுகள்

பர்மாவின் பாதுகாப்பு என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆகும். இதனால் இந்தியாவின் முழு கவனமும் எல்லையின் மீது இருந்தாக வேண்டும். பர்மாவை பாதுகாப்பதைவிட வேறு எந்த ஒரு செயலும் இந்தியாவிற்கு முக்கியமில்லை என்று கூறுகிறார்.

 • K.M.பணிக்கர்

அறிமுகம்

 • இந்தியா, பர்மாவுடன் 1600 கி.மீ நில எல்லையும் வங்காள விரிகுடாவில் கடல் எல்லையும் பகிர்ந்து காணப்படுகிறது.
 • இந்தியாவின் நான்கு வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம், மியான்மருடன் எல்லை பகிர்வு காணப்படுகிறது.
 • இந்த புவிப்பரப்பு அமைப்பின் இணைப்பானது இந்தியப் பெருங்கடலில் பெருமளவு இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. மேலும் இரு நாடுகளும் பாரம்பரியம், மதம் , மொழி மற்றும் இன ரீதியான இணைப்புகளையும் பெற்றுள்ளது.
 • மேலும் ‘ஆசியான்’ அமைப்பின் உறுப்பினராக மியான்மர் இந்தியாவின் அருகருகே இருப்பதால், தென் கிழக்கு ஆசியாவில் பெருமளவில் பொருளாதார ஒருமைப்பாடு ஏற்படுவதற்கு மியான்மர் உதவி செய்யும் என்று இந்தியா நம்புகிறது.
 • இதற்காகவே உருவாக்கப்பட்ட “கிழக்கு நோக்கி கொள்கை” மற்றும் “கிழக்கு நோக்கி செயல்பாடு” போன்ற திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மியான்மரின் பொருளாதார மேம்பாட்டில் இந்தியாவிற்கு வர்த்தக வாய்ப்புகள் ஏராளமாகவும் அமைத்து காணப்படுகிறது.
 1. இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை
 • இக்கொள்கையின் மூலம் இந்தியா தென் கிழக்கு ஆசியாவில் கலாச்சார, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்திக்கொள்ளவும் மண்டல சக்தியாக உருவாகவும், சீனாவிற்கு சிறந்த போட்டியாளராக முன்னேறவும் இந்தியா இராணுவம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
 • இரு தேசிய நெடுஞ்சாலையும் மியான்மருடன் ஏனைய மற்ற தென் கிழக்கு மண்டலங்களுடன் இணைவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

2. இந்தியா –மியான்மர் –தாய்லாந்து நெடுஞ்சாலை நட்புறவு

 • இந்தியாவும் மியான்மரும் , 3200 கி.மீ தொலைவில் உள்ள நான்கு வழிச்சாலை அமைப்பதற்கும், இந்தியா-மியான்மர் மற்றும் தாய்லாந்தை இணைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இப்பாதை திட்டம் மூலம் வட கிழக்கு பகுதிகளின் வழியாக 1600 கி.மீ நீளத்துக்கு சாலைகள் அமைக்கப்படும். ஏப்ரல் 2021இல் இத்திட்டம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. வட கிழக்கு அணுகுமுறை

காலதான் பல்-அடுக்கு இடமாற்று போக்குவரத்துத் திட்டத்தின்படி, கொல்கத்தாவின் கிழக்கு துறைமுகத்தையும் இணைக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மியான்மரின் சிட்வி துறைமுகத்திலிருந்து லேஸ்யோவிற்கு ஆறு வழியாகவும் பின் லேஸ்யோவிலிருந்து மிசோரத்திற்கு தரை வழி போக்குவரத்தும் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா – மியான்மர் உறவுகளின் பல்வேறு அம்சங்கள்

தற்காப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு

 1. பல ஆண்டுகளாக இவ்வகை நட்புறவு வலிமைப்பெற்று வருகிறது. உயர் மட்ட அரசாங்க நிர்வாக சந்திப்புகள் எல்லை ஒத்துழைப்பு உடன்படிக்கைகள், பயிற்சி, தரைப்படை, விமானம் மற்றும் கப்பற்படை உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் போன்ற நிகழ்வுகள் குறிப்பிட்டு விளங்குகின்றன.
 2. மேலும் மியான்மர் தன்னுடைய மண்னை எக்காரணம் கொண்டும் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்காமல் இருப்பதற்கு உத்திரவாதம் அளித்துள்ளது.

வர்த்தக் ஒத்துழைப்பு

 1. 1970-களில் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுள்ளது.
 2. மியான்மரின் ஐந்தாவது பெரிய வர்த்தக பங்குதாரராக இந்தியா விளங்குகிறது.
 3. இந்தியாவில் ஏற்றுமதியானது சர்க்கரை (424 மில்லியன் டாலர்) மருந்து பொருள்கள் (184 மில்லியன் டாலர்) போன்றவை உள்ளடக்கியது. மோரே மற்றும் சாவ்காதர் வழியாக எல்லை வர்த்தகம் (87.89 மில்லியன் டாலர்)களை எட்டியது.
 4. மியான்மரின் முதலீட்டாளர்களில் இந்தியா பத்தாவது இடத்தில் நின்று 740.64 மில்லியன் அமெரிக்கா டாலர்களை முதலீடு செய்துள்ளது.
 5. பெருமளவில் முதலீட்டாளர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளிலேயே தங்கள் முதலீடுகளை அமைந்த்துள்ளனர். மியான்மரில் முதலீடு செய்வதற்கு இந்திய நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளன.
 6. வெகு சாதாரண வர்க்கத்திலிருந்து, இரு நாடுகளும் நில எல்லையில் தங்கள் பொருள்களை விற்பதற்கும் வாங்குவதற்குமான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளன. வங்கி துறையில் கூட்டுறவு, முதலீட்டிற்கும் , வர்த்தகத்திற்கும் முக்கியமானதாக அமைகிறது. யுனைட்டெட் இந்திய வங்கி (United Bank of India) மியான்மரின் வங்கிகளான எம்.எப்.டி.ஆர் (MFTR), எம்.ஐ.சி.பி (MICB), எம்.இ.பி. (MEB) மற்றும் ஒன்பது தனியார் வங்கிகளுடன் இரு நாடுகளின் வர்த்தக வளர்ச்சிக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
 7. ஏனைய நாடுகளுடனான ஆற்றல் தொடர்பான உறவுகளுக்கு மியான்மருடனான கூட்டணி முக்கியமானதாகும். எடுத்துக்காட்டாக பெட்ரோல் மற்றும் இயற்கை வாயு தொடர்பான துறைகளாகும்.

கலாச்சார உறவுகள்

இந்தியாவும் மியான்மரும் நெருங்கிய கலாச்சார உறவுகளையும், புத்த சமய பாரம்பரியத்தையும் தழுவிய பண்பாட்டையும் கொண்டுள்ளன.

 1. பாகனில் உள்ள ஆனந்தா கோவிலை மறுசீரமைப்பது.
 2. இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட 16அடி நீளமுள்ள புத்த சிலை (சாரநாத் மாதிரி) யாங்கூனில் உள்ள ஷீவெடககோன் பகோடவில் நிலை நிறுத்தப்பட்டது.
 3. “சம்வட் – II” என்ற பல்வேறு நம்பிக்கைகள், பண்பாடுகள் பற்றிய பேச்சு வார்த்தையை யாங்கூனில் ஆகஸ்ட் 6 – 7 2017 இல் நடத்தியது.
 • மியான்மரின் மன்னர்கள் மிண்டான் மற்றும் பாகியதா கட்டிய இரு கோவில்களை புத்தகயாவில் சீரமைப்பது பற்றிய பர்மாவின் விருப்பத்திற்கு இசைந்து கொடுத்தது. இந்த கோவில்களும் அதன் கல்வெட்டுகளும் இந்தியாவின் தொல்லியல் ஆராய்ச்சி துறையின் உதவியோடு மீட்டெடுப்பது ஒரு நாடுகளின் கொள்கைத் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய புலம் பெயர்ந்தவர்கள்

 1. மியான்மரில், இந்தியர்களின் வருகையின் ஆரம்பம் 19ஆம் நூற்றாண்டின் மத்தியிலே பிரிட்டிஷ் அரசாங்கம் பர்மாவை 1852 இல் ஆண்ட போது தொடங்கியது.
 2. இரு நகரங்களான யாங்கூன் மற்றும் மண்டலேயில் இந்திய மக்கள் குடிமைப்பணிகள், வர்த்தகம், வாணிபம் போன்ற துறைகளில் வளர்ச்சியடைந்து இருந்தனர்.

இரு நாடுகளிக்கிடையேயான மண்டல மற்றும் துணை மண்டல ஒத்துழைப்பு

ஆசியான் (ASEAN):

இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஒரே ஏசியான் நாடு மியான்மர் ஆகும். இந்தியாவிற்கும் ஆசியன் அமைப்பிற்கும் ஒரு பாலமாகவே செயல்படுகிறது.

பிம்ஸ்டெக் (BIMSTEC):

பிம்ஸ்டெக் அமைப்பின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் மியான்மர் கையெழுத்திட்டுள்ளது. ஆற்றல் துறையில் மியான்மர் முன்னோடியாக திகழ்கிறது. பிம்ஸ்டெக் அமைப்பில், மியான்மர் பெரும்பாலும் தாய்லாந்து மற்றும் இந்தியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. மியான்மரின் இந்திய ஏற்றுமதி பொருள்களாக பருப்பு வகைகள், சோளம், பீன்ஸ் மற்றும் வன உற்பத்திகளான தேக்கு, கடின மர வகைகள் போன்றவை உள்ளடக்கம். இந்தியாவிலிருந்து மியான்மர் ரசாயன பொருள்கள், மருந்துகள், மின்சார உபகரணங்கள் மற்றும் போக்குவரத்து சாதனங்கள் ஆகியவை இறக்குமதி செய்கிறது.

மீகாங் – கங்கா ஒத்துழைப்பு

 • மீகாங்- கங்கா ஒத்துழைப்பு திட்டத்தில் உறுப்பினராக, இவ்வமைப்பு ஆரம்பித்த 2000ஆம் ஆண்டு முதல் மியான்மர் செயல்படுகிறது. இவ்வமைப்பு, இந்தியாவை மட்டுமல்லாமல் ஐந்து ஆசியன் நாடுகளான கம்போடியா, லாவோச், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை உள்ளடக்கி சுற்றுலா, கல்வி, கலாச்சாரம், போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் போன்ற துறைகளில் நல்லுறவு ஏற்படுத்தும் பொருட்டு உண்டாக்கப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பின் தலைவர் பதவியானது ஆங்கில அகர வரிசையின்படி மேற்கொள்ளப்படுகிறது.

சார்க் (SAARC)

ஆகஸ்ட் 2008இல் மியான்மருக்கு சார்க் அமைப்பு பார்வையாளர் அந்தஸ்தை அளித்தது.

 1. இந்தியாவில் மியான்மரை “கிழக்கின் நுழைவாயில்” என்று அழைக்கிறோம். ஆனாலும் இரு நாடுகளின் உறவுகளை பார்க்கிறபோது கடக்கக்கூடிய தூரங்கள் நிறையவே இருப்பதாக தெரிகிறது. நீண்ட நிலம் மற்றும் கடல்நீர் எல்லைகளை கொண்டிருப்பதால் புவியியல் அமைப்பை இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 2. வரலாற்று ரீதியாக , மியான்மர் நாட்டின் சமூக-பொருளாதார காரணங்களை நிர்ணயிக்கக்கூடிய நாடாக இந்தியா 1960 வரை இருந்தது. இராணுவ சர்வதிகாரத்துவ ஆட்சியும், அதன் பொருளாதார திட்டங்களும் இந்தியாவுடனான மியான்மரின் நட்பை சீர்க்குலைக்க துவங்கியது.
 3. அரசியல் மாற்ற நிகழ்வுகளால் தற்போதைய காலக்கட்டம் இந்தியாவிற்கு மிகச் சிறந்த வாய்ப்பை அளித்துள்ளதால் மியான்மருடனான உறவுகளை புதுப்பிப்பதற்கு தகுந்த நேரமாகும்.

இந்திய-மாலத்தீவு உறவுகள்

 • மாலத்தீவு, கிட்டத்தட்ட 1192 தீவுகளை உள்ளடக்கியது. இவற்றுள் 200 தீவுகளில் 4,30,000 மக்கள் வாழ்கிறார்கள். 80 தீவுகளில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு உண்டான ஓய்வு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
 • தலைநகரமான மாலே அதிக மக்கள் வசிக்கின்ற நகரமாக உள்ளது. பெருவாரியாக சன்னி இஸ்லாமியர்கள் வாழும் இந்நாட்டில், ஏனைய மற்ற மதங்கள் தொடர்பான வழிபாடுகள் வீடுகளிலேயே நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

 • நவம்பர் 1968இல் மாலத்தீவு விடுதலை பெற்றதிலிருந்து இந்தியாவிற்கும் அந்நாட்டிற்கும் முறையான உறவுகள் ஆரம்பித்தன. இந்தியா, மாலத்தீவை அங்கீகரித்த முதல் நாடாகும். இதன் பிறகு இரு நாட்டின் பிரதிநிதிகளும் உறவுகள் மேம்பட சந்திப்புகளும், பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. அவற்றில் மாலத்தீவுகளில் பொருளாதார வளர்ச்சி உச்சநிலையை நோக்கி சென்றது.
 • இம்மாதிரியான சுமூக உறவுகள் குடியரசுத்தலைவர் நஷீத் பதவி வகித்த காலத்திலும் வழக்கத்தில் இருந்தது. நஷீத் குடியரசுத்தலைவர் ஆனவுடன் முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக 2008இல் இந்தியா வந்தார்.
 • 2008இல் நடைபெற்ற இச்சந்திப்பின் போது இந்தியா, மாலத்தீவிற்கு 100 மில்லியன் டாலரை அதனுடைய சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு கடன் அளிப்பதாக உத்திரவாதம் அளித்தது. இதன்பிறகு இரு நாட்டினரின் அரசு தொடர்பான சந்திப்புகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. 2012 இல் நஷீத் அவர்கள் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
 • மாலத்தீவுகளின் பிரதமர் அகமது ஜகி 1974 இந்தியா வந்ததுதான், அந்நாட்டின் முதல் அரசுமுறை பயணமாகும்.

இந்தியா – மாலத்தீவின் பாதுகாப்பு முக்கியத்துவம்

புவியமைப்பு

 • மாலத்தீவு லச்சத்திவிலிருந்து 700 கி.மீ தொலைவிலும், இந்திய பிரதான இடத்திலிருந்து 1200 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் அச்சுறுத்தலை விளைவிக்கிறது.

மாலத்தீவு ஏன் இந்தியாவிற்கும் முக்கியமானது என்பதற்கான 10 காரணங்கள்

 1. மாலத்தீவானது இந்தியப் பெருங்கடலில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்தும் 1200 கோரல் தீவுகளைக் கொண்டதும், சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு தடையில்லாமல் ஆற்றல் தேவையை அளித்துவரும் கடல்வழி பாதைக்கு அடுத்தும் அமைந்துள்ளது.
 2. பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக சீனா, தனது கடற்படை கப்பலை இந்திய பெருங்கடலுக்கு ஏடன் வளைகுடாப் பகுதியில் கடற்கொல்லைக்கு எதிரான நடவடிக்கைக்கு அனுப்பி வைத்தது.
 3. இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒரு இன்றியமையாத தெற்கு ஆசியா சக்தியின் ஒரு வலைப்பின்னலாக இருக்கும் மாலத்தீவுடன் இந்தியா இராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையில் அதன் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
 4. மாலத்தீவில் சீனாவின் பெருமளவிலான பொருளாதார இருப்பானது, இந்தியாவிற்கு பெருங்குறையாகும். அந்நாடு, 70% தனது கடனுக்கு சீனாவிற்கு கடன்பட்டுள்ளது. இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டது.
 5. பெருவாரியான மக்கள் தொகை நஷீத்தின் எம்.டி.பி. (MDP) கட்சியை ஆதரிக்கிறார்கள். இக்கட்சியானது இந்தியா முன்னாள் அதிபர் யாமினுக்கு எதிராக செயல்பட விரும்புகிறது.
 6. சார்க் அமைப்பில், மாலத்தீவும் ஒரு உறுப்பினர் நாடாகும். இது இப்பகுதியில் இந்தியா தலைமை தாங்குவதற்கு மாலத்தீவு அதற்கு மிகவும் முக்கியமாகும். யூரி தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானின் நடக்கும் சார்க் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று இந்தியாவின் அழைப்பை புறக்கணித்து வரும் ஒரே சார்க் நாடு மாலத்தீவே ஆகும்.
 7. யாமின் ஆட்சியின் கீழ், தீவிரவாதப் போக்கு மிக வேகமாக அதிகரித்தது. சிரியாவில் வெளிநாட்டு படையினரின் பெரும் பகுதியினர் ஒருவர் மாலத்தீவை சார்ந்தவர்களாக உள்ளனர். இந்தியாவுக்கு கேடு உண்டாக்கும், ஒரு இஸ்லாமிய தீவிரத்தை தடுத்து நிறுத்துவதில் தவறிப்போன அண்டை நாடாக இருக்கிறது.
 8. இந்தியாவும்-மாலத்தீவும் இன, மொழி, கலாச்சாரம், மதம் மற்றும் வணிக தொடர்பைப் பகிர்ந்து கொள்கின்றன. 1965ஆம் ஆண்டு மாலத்தீவு சுதந்திரம் அடைந்தவுடன் முதலில் அங்கீகரித்த நாடு இந்தியாவாகும், பிறகு 1972ஆம் ஆண்டு “மாலே”யில் அதன் தூதரகத்தை அமைத்துக் கொண்டது.
 9. மாலத்தீவில் 25,000 இந்திய நாட்டினர் வசிக்கிறார்கள் (இது இரண்டாவது புலம் பெயர்ந்த சமூகம் ஆகும்) ஒவ்வொரு ஆண்டும் மாலத்தீவுகள் பெறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 6% பங்கினைக் கொண்டதாகும்.
 10. மாலத்தீவு நட்புணர்வுக்கு கல்வி, மருத்துவ சிகிச்சை பொழுது போக்கு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றிற்கு விரும்பி வருவதற்கு இந்தியா உகந்த நாடாக இருக்கிறது. வெளியுறவு அமைச்சகமானது அதிக எண்ணிக்கையிலான மாலத்தீவினர் இந்தியாவில் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு நீண்ட காலத்திற்கு விசா நீடிப்பை மேலும் மேலும் நீட்டிக்க வேண்டியுள்ளது.

இந்தியா பெருங்கடல் மேலாதிக்கம்

மாலத்தீவில் சீனாவின் இருப்பால் நேரடியாகவோ (அல்லது) மறைமுகமாகவோ இந்திய பெருங்கடலில் தன் கட்டுப்பாட்டை நிறுவுவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் வாய்ப்பு அதிகம். மேலும் அரபு நாடுகளிலிருந்து வரக்கூடிய ஆற்றல் பகிர்வு, மாலத்தீவு வழியாகவே வருவது வழக்கமாக உள்ளது.

மண்டல ஏற்றத்தாழ்வு

இந்திய பெருங்கடல் மண்டலத்தில் இந்தியா, மாலத்தீவு , செஷல்ஸ், மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளுடன் இணைந்து நட்பு பாரட்டுவது சீனாவிற்கு பிரச்சினையாக உள்ளது. சீன –மாலத்தீவு நல்லுறவானது இந்தியாவின் நிலையை குறைக்கும் வண்ணம் உள்ளது.

பொருளாதார உறவுகள்

மாலத்தீவில் இந்தியர்கள்

கிட்டத்தட்ட 25,000 இந்திய மக்கள் மாலத்தீவில் பல்வேறுபட்ட துறைகளில் பணிபுரிந்து, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர்.

நீல பொருளாதாரம்

கடல் வளத்தை மையமாக கொண்டதாக மாலத்தீவின் பொருளாதாரம் இயங்குகிறது. நீல பொருளாதாரம் என்று அழைக்கப்படும் இவ்வகை நடவடிக்கைகளின் பாதுகாப்பிற்கும், நிலையான அபிவிருத்திக்கும் அடித்தளமாக உள்ளது.

சுற்றுலாத்துறை

இரு நாடுகளுக்கிடையே சுற்றுலாத்துறை சார்ந்த உறவுகளும், சந்திப்புகளும் நடந்தவண்ணம் உள்ளது. மேலும் 6% இந்திய சுற்றுலாப் பயணிகளும் ஒவ்வொரு ஆண்டும் மாலத்தீவிற்கு பயணிக்கின்றனர்.

காக்டஸ் நடவடிக்கைகள் மாலத்தீவை இந்தியா காப்பாற்றியுள்ளது

1988இல் 80-200 இலங்கை தமிழ் போராளிகள் (PLOTE) அப்துல்லா லுத்துபி என்கிற தொழிலதிபரின் சூழ்ச்சியில் மாலத்தீவை நோக்கி தாக்குதல் நடத்தினர். மாலத்தீவில் ஊடுருவிய பிறகு, அவர்கள் தலைநகரமான ‘மாலே’வில் ஊடுருவி முக்கியமான பகுதிகளை ஆக்கிரமித்தனர்.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆட்சியை கலைப்பதற்கு முனைந்தனர். ஆனால் கயும், மாலத்தீவின் தேசியப் பாதுகாப்பு பணி தலைமையிடத்தில் தஞ்சம் புகுந்தார். கயும் பல நாடுகளுக்கு அதாவது இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, இலங்கை பிரச்சினையை விளக்கினார். அமெரிக்காவும், பிரிட்டனும், தங்களால் நேரடியாக நடவடிக்கையில் இறங்க இயலாது என்றும், இந்தியா மூலம் தீர்வு கிடைக்கப் பெறும் என்றும் நம்பிக்கை அளித்தனர். பிரதமர் ராஜீவ் காந்தி மூலமாக இந்தியா வெகுவேகமாக தீர்வு நடவடிக்கையில் இறங்கியது.

குடியரசுத்தலைவர் கயுமின் வேண்டுகோள் கிடைத்த சில மணி நேரங்களில் இந்திய படைவீரர்கள் மாலத்தீவில் இருந்தனர். நவம்பர் 3, 1988இல் 15.30 மணி அளவில் இந்திய படை வீரர்களை மாலத்தீவில் இறக்கியது. கயூமின் செய்தி கிடைத்த 16 மணி நேரங்களில் ஆக்ரா போர் விமான நிலையத்திலிருந்து இல்யுசன் II 76 போர் விமானம் கிளம்பியது. 2,500 கிலோ மீட்டர் கடந்து இந்தியா விமானப்படையின் 44-வது ஸ்கோட்ரன், முற்றுகையிடப்பட்ட மாலேதலைநகருக்கு ஒருகிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹல்ஹிலே விமான நிலையத்தில் இறங்கியது. மேலும் தரையிறக்கப்பட்ட இந்திய விமானப் படைவீரர்கள், குடியரசுத்தலைவர் கயுமை மீட்டெடுத்தனர். போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

இலங்கை தமிழ் போராளிகள் நகரம் முழுவதும் பல முக்கிய பகுதிகளைக் கைப்பற்றியபோது, அவர்கள் கண்காணிக்க மறந்த ஒரு பகுதி ஹல்ஹிலே விமான நிலையம். இந்த நுழைவாயிலை யாரும் கவனிக்காமல், இந்திய விமானப் படைவீரர்கள் தரையிறங்கின. விரைவாக விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டனர். பின்னர் கமாண்டோகள் படகுகளைப் பயன்படுத்தி தலைநகருக்குள் நுழைந்து குடியரசுத்தலைவர் கயூமை மீட்டு, போராளிகளை விரட்டியடித்தனர்.

இந்திய தரப்பில் இந்நடவடிக்கையில் எந்தவித இழப்பும் இல்லாதது என்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆசியாவின் பாதுகாப்பில் இந்தியா மிகச்சிறப்பாக பங்காற்ற முடியும் என்பதை நிரூபித்தது காக்டஸ் நடவடிக்கை. அமெரிக்கா அதிபர் ரொனால்டு ரீகன் முதல் பிரிட்டனின் பிரதமர் மார்கரெட் தாட்சர் வரை உலக சமூகம் அனைத்தும் இந்தியாவின் இந்த உறுதியான நடவடிக்கையை பாராட்டினார்கள்.

சுகாதாரம்

பெருவாரியான மாலத்தீவு மக்களுக்கு மருத்துவ ரீதியான முதல் அண்டை நாடாக இந்தியா விளங்குகிறது. இதன் மூலம் இந்திய சுகாதாரத் துறை வளர்ச்சி காண்கிறது.

அரசியல் உறவுகள்

அரசியல் குழப்பம்

அரசியல் குழப்பம் அரசியலில் நிலைத்தன்மை இல்லாததால் மாலத்தீவில் தீவிரவாதம், மத அடிப்படைவாதம், கடத்தல் மற்றும் போதை பொருள் பழக்கம் அதிகமாகவே அச்சுறுத்துகிறது. ஐ.எஸ்.ஐகள் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்களும் மாலத்தீவில் நிலையூன்றி நிற்கின்றன.

சார்க் அமைப்பு

 • சார்க் அமைப்பானது இந்தியாவிற்கும், அண்டை நாடுகளுக்கும் உள்ள உறவுகளை வலுமைப்படுத்துவதாக உள்ளது. ஆனால் சார்க் நாடுகளின் சீனா ஊடுருவி இருப்பதால் இந்தியாவின் நிலை சற்று பின்னோக்கி உள்ளது எனலாம். பாகிஸ்தானின் போக்குவரத்திலும் இலங்கையில் ஹம்பன்தோட்டா துறைமுகம் போன்றவற்றிலும் சீனாவினால் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது., சீனாவிற்கு அடுத்த கவனம் மாலத்தீவில் உள்ளது.

இந்திய-மாலத்தீவு உறவுகளில் தற்போதைய வளர்ச்சி

இரு நாடுகளின் அரசியல் நிலைமையைப்பொறுத்து உறவுகள் பாதிப்பை சந்திக்கின்றது. 2013இல் யாமீன் குடியரசுத்தலைவர் நசீதை தோற்கடித்தார். யாமீனின் ஆட்சியில் இந்தியாவுடனான உறவுகள் மோசமடைந்த நிலையில் சீனாவுடன் வலிமையான உறவினை மாலத்தீவு உண்டாக்கி வருகிறது. இதை பின்வரும் நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன.

 • இந்தியாவுடனான ‘ஜி.எம்.ஆர்’ திட்டம் 2012இல் மாலத்தீவு ரத்து செய்தது. 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள இத்திட்டம் மாலத்தீவு தலைநகரமான “மாலேக்கு” அருகே பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்காக திட்டமிட்டதாகும். இத்திட்டம் தற்போது சீனாவிடம் தரப்பட்டுள்ளது.
 • 2015இல் இந்திய பிரதமர் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தார். மாலத்தீவில் நிலவிய எதிர்மறையான அரசியல் சூழ்ச்சியே காரணமாக காட்டப்பட்டது.
 • 2017இல் சீனாவிற்கும், மாலத்தீவிற்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பாகிஸ்தானிற்கு அடுத்ததாக சீனாவுடன் மாலத்தீவு இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்தியாவுடன் இம்மாதிரியான ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை என்பது உண்மை.
 • கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நடவடிக்கை 2018இல் மாலத்தீவிற்கும் , பாகிஸ்தானிற்கும் இடையே கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் பாகிஸ்தானின் இராணுவ படை தளபதியின் பயணத்தின் போது மாலத்தீவில் முடிவு செய்யப்பட்டது. வெளிப்படையாகவே இந்தியாவிற்கும் எதிராக நகர்த்தப்படும் காயாக இந்நடவடிக்கை விளக்குகிறது.

மேற்கூறிய அனைத்து நடவடிக்கைகளும் இந்தியாவிற்கு எதிராக இருப்பினும், இந்தியா தமது பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் இழக்காமல் மாலத்தீவுடனான உறவுகளை புதுப்பிக்கும் முயற்சி செய்து வருகிறது. ஆனால் 2018இல் தேர்தல் வெற்றி பெற்ற சோலி குடியரசுத்தலைவராக பதவியேற்கும் நிலையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

 • இந்திய பெருங்கடல் நாடுகள் அமைப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியபோது இந்தியா மாலத்தீவை இவ்வமைப்பில் இணைப்பதற்கு மூத்த உயரதிகாரிகளை சமாதானப்படுத்தியது. இதன்மூலம், மாலத்தீவு புதிய உறுப்பினராக இந்திய பெருங்கடல் நாடுகள் அமைப்பில் சேர்க்கப்பட்டது.
 • மாலத்தீவுகள் வேண்டுதலுக்கு இணங்க டோர்னியர் போர் விமானத்தை உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்தது.
 • மாலத்தீவின் புதிய அரசாங்கம், சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு முடிவு செய்துள்ளது. சீனாவின் ஒரு தலைப்பட்சமான ஒப்பந்தமாக இருப்பதால் மாலத்தீவு வெளியேற முடிவு செய்தது.

இந்திய-மாலத்தீவு தொடர்பான இடைவெளிகள்

சீனாவின் இருப்பு

மாலத்தீவுகளில் சீனாவின் உள்கட்டுமான திட்டங்கள் இந்திய நிறுவனங்களுக்கு மாபெரும் போட்டியாக உள்ளது.

சீன –மாலத்தீவு சுதந்திர வாணிப ஒப்பந்தம்

சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான சரியான தீர்வை இன்றளவில் மாலத்தீவு மூலம் வெளியிட தயாராகிறது. மேலும் எதிர்கால முதலீடு தொடர்பாகவும் சரியான நிலைமை மாலத்தீவு தெரிவிக்க மறுக்கிறது.

இந்திய –மாலத்தீவு வர்த்தகம் குறைப்பு

இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே வர்த்தகம் இன்றளவில் 200 அமெரிக்கா டாலர் வரை, குறைவாகவே காணப்படுகிறது.

2018 இல் இப்ராஹிம் சோலி மாலத்தீவின் குடியரசுத்தலைவராக பதவியேற்ற பிறகு மாற்றங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. சோலியின் பதவியேற்பு விழாவில் இந்திய பிரதமர் பங்கேற்று அமைதியையும், நட்புறவையும் தெரிவித்தார். இப்ராஹிம் முகமது சோலியின் இந்தியப் பயணம் 2018, டிசம்பர் 16-18” அன்று நடந்தது அப்பயணத்தில் “இந்தியாவே முதன்மைத்துவம் என்ற கொள்கையை வலியுறுத்தினார்.” மேலும் இந்தியா மாலத்தீவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்காக 1.4 மில்லியன் டாலர்கள் அளிப்பதாக உறுதி செய்தது.

எதிர்கால ஒத்துழைப்பு

சமீபத்திய அரசியல் மாற்றங்கள், இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கிடையேயான உறவுகளை புதுப்பிக்க, ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது. நம்பிக்கை கட்டுமானத்தின் பின்வருவன கவனத்திற்கு உட்பட்டது.

 • மாலத்தீவுடனான முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை குழு ஒன்றையமைத்து பிரச்சினைக்குரிய பகுதிகளை ஆய்வு செய்வதற்கு முனைய வேண்டும். மேலும் இக்குழுவானது முதலீட்டில் குறைபாடுகள் உள்ள பகுதிகளை கண்டறியலாம்.
 • இலவச (அ) அன்பளிப்பு கொள்கை மாலத்தீவிற்கு அவசியமாக உள்ளது. சீனாவின் பெயரளவிலான முதலீடுகள் தடுப்பதற்கு இந்தியா மேற்கூறிய வழியை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.
 • இந்தியா தீவிரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மாலத்தீவுடன் சேர்ந்து உருவாக்குவதல் வேண்டும். மாலத்தீவில் காவல்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு படையுடன் சேர்ந்து பயிற்சி மற்றும் திறன் மேம்படுத்துதல் போன்ற வழிகளை பின்பற்ற தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு முயற்சிக்கவும் வேண்டும்.
 • நிரந்தரமான அடிக்கடி நிகழக்கூடிய பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பையும், நட்புறவையும் வளர்க்கும் சிறிய நாடுகளான மாலத்தீவை போல உள்ள மற்ற நாடுகளையும் இந்தியா தன் பெருந்தன்மையான அணுகுமுறையின் மூலம் உறவை வளர்க்க வேண்டும். இதற்கு குஜ்ரால் கொள்கை போன்றவைகளை பயன்படுத்தி உண்மையையும் நம்பிக்கையையும் மேம்படுத்தலாம்.
 • சார்க் மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகள் அமைப்பு போன்ற அமைப்புகள் நல்லுறவு நாடுகளாக பயன்படுத்தி பல்வேறு பிரச்சினைகளுக்கு முடிவு கானலாம்.
 • மேலும் பல்வேறு உறவுமுறை தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்தியா இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து முத்தரப்பு செயல் வழிமுறையை உருவாக்கி தீர்வு காணலாம்.

இந்திய அயல்நாட்டு கொள்கையில் தற்போதைய புதிய மாற்றங்கள்

குஜ்ரால் கொள்கை

குஜ்ரால் கொள்கை என்பது, இந்தியாவின் அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு உண்டான ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது ஆகும். இக்கொள்கை முன்னால் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், பிரதமராகவும் பதவி வகித்த I.K.குஜ்ரால் அவர்களால் உருவாக்கப்பட்டது. இக்கொள்கையின்படி, இந்தியாவின் நிலையும், வலிமையும் ஏனைய நாடுகளுடன் உள்ள உறவுகளை நிர்ணயிக்கிறது. அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டுவது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. இக்கொள்கைகள் பின்வருவன:

 • முதலாவதாக, அண்டை நாடுகளான பங்களாதேஷ் , பூடான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை போன்ற நாடுகள் இந்தியாவின்மீது வைத்துள்ள நம்பிக்கை, உண்மையின் அடிப்படையில் தன்னாலான அதிகமான உதவிகளையும் எதிர்பார்ப்பில்லாமல் செய்கிறது.
 • இரண்டாவதாக, எந்த ஒரு தென்கிழக்கு ஆசிய நாட்டிற்கும், தன் அண்டை நாடுகளுக்கு எதிராக காரியங்களை நிகழ்த்துவதற்கு தன் நாட்டில் இடமளிக்க்கக் கூடாது.
 • மூன்றாவதாக, எந்த இரு நாடும், தென்கிழக்கு ஆசியாவின் மற்ற நாடுகளில் உள்ள பிரச்சனைகளில் தலையிடக்கூடாது.
 • நான்காவதாக, அனைத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளும் ஏனைய நாடுகளின் நிலப்பரப்பையும், இறையான்மையையும் மதித்தல் வேண்டும்.
 • ஐந்தாவதாக, அவர்கள் தங்கள் மோதல்களை அமைதியான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

மேற்கூறிய கொள்கையை, அனைத்து நாடுகளும் பின்பற்றுகின்ற பட்சத்தில் நட்புறவும், நம்பிக்கையும் நீடிக்கும். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒற்றுமையை மேம்படுத்தலாம். இந்திய –பாகிஸ்தானின் மோசமடைந்த உறவுகளையும் சீர்படுத்தலாம் என்பது குஜ்ராலின் நேர்மறை கொள்கை அம்சமாகும்.

“கிழக்கு நோக்கி கொள்கை” மற்றும் “கிழக்கு நோக்கி செயல்பாடு” இடையேயான வேறுபாடுகள்

“கிழக்கு நோக்கி கொள்கை” மற்றும் “கிழக்கு நோக்கி செயல்பாடு” இடையேயான வேறுபாடுகள் இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பை உண்டாக்குவதற்காகவே “கிழக்கு நோக்கி கொள்கை” உண்டாக்கப்பட்டது. அதேசமயம் “கிழக்கு நோக்கி செயல்பாடு” என்பது பொருளாதார மற்றும் பாதுகாப்பு கிழக்கு ஆசியாவையும் உள்ளடக்கியது ஆகும்.

“கிழக்கு நோக்கி கொள்கை”யின் இலக்குகள்

 1. ஆசிய-பசிபிக் மண்டலத்தில் உள்ள நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு, கலாச்சார, மரபு மற்றும் ராணுவம் சார்ந்த உறவுகளை இரட்டிப்பு மற்றும் பலதரப்பு கட்டங்களில் மேம்படுத்துதல்.
 2. வடகிழக்கு மாநிலங்களுடன் அண்டை நாடுகளை இணைக்கும் பரஸ்பர நடவடிக்கைகள் செயல்முறைப்படுத்துதல்.
 3. பாரம்பரிய நட்பு நாடுகள் மட்டுமல்லாது, மற்ற நாடுகளை வர்த்தகத்திற்காக அமைத்தல், இதில் இந்திய பசிபிக் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.

இந்தியாவின் “கிழக்கு நோக்கி கொள்கை”

இக்கொள்கை திட்டம் 1991இல் பிரதமர் நரசிம்மராவ் அவர்களால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமே இந்தியாவின் இலக்கு மேற்கிலிருந்து தென் கிழக்கு ஆசியா நாடுகளுடனான பொருளாதார ஒருங்கிணைப்பு தொடர்பான நடவடிக்கைகள் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டது. 2014 நவம்பர் மாதம் நடைபெற்ற கிழக்கு ஆசியா கூட்டத்தில் ஜனதா ஆட்சியானது, இத்திட்டத்தை “கிழக்கு நோக்கி செயல்பாடு” ஆக மாற்றியது.

அண்டை நாடுகளே முதன்மை முக்கியத்துவம் பெறுபவை என்றால் என்ன?

 • இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையானது நட்புறவுல் அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அமைந்து நட்புறவை வளர்க்கும் விதமாக வடிவமைக்கப்படல்.
 • பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக பிரதமர் பதவி ஏற்றபோது, அப்பதவி ஏற்பு விழாவிற்கு தெற்காசியாவின் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டது பின்பு அவர்களுடன் இரு தரப்பு உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது ஒரு சிறிய சார்க் மாநாடு என்று கூறப்பட்டது.
 • முதன் முதலில் பதவி ஏற்ற பிறகு பிரதமர் பூடானிற்கு பயணம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *