இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு Notes 9th Social Science

9th Social Science Lesson 8 Notes in Tamil

8. இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

அறிமுகம்

 • உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படைத் தேவைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
 • தற்போதைய உலகில் அந்தப் பட்டியலில் வேலைவாய்ப்பு என்ற ஒன்றையும் சேர்க்கப்பட வேண்டியது முக்கியம்.
 • இவ்வுலகில் வாழ்வதற்காக வருவாய் ஈட்ட நாம் அனைவருக்கும் வேலை அவசியம். பொருளியல் செயல்பாடுகளில் மேல்நிலையில் அலுவலர்களாகவும் மற்றும் கீழ்நிலையில் தொழிலாளர்களாகவும் பங்குபெறுவோர் ஊழியர் எனப்படுவர்.
 • இந்த ஊழியர்களைப் பணியமர்த்தி, அவர்களின் பணிக்கு ஊதியம் தருவோரை, பணியமர்த்துவோர் என்று குறிப்பிடப்படுவர்.
 • உழைப்பாளர் குழு என்பது நாட்டு மக்களில் வேலையில் இருப்போரும், கூடவே வேலை செய்யும் திறன் பெற்ற நபர்களும் ஆவர்.
 • உழைப்பாளர் குழுவைக் கணக்கிடுவதில் 15 முதல் 60 வயது வரையிலும் உள்ளவர்களை நாம் எடுத்துக் கொள்கிறோம்.
 • 15 வயதுக்குக் குறைந்தவர்கள் குழந்தைகளாகக் கருதப்படுகின்றனர். 60 வயதைக் கடந்தவர்கள், உற்
 • பத்தி சார்ந்த வேலையை மேற்கொள்வதற்கு உடல் ரீதியாகத் தகுதியாளவர்கள் அல்ல என்பதால் அவர்கள் உடல் உழைப்பைச் செய்ய முடியாது என விலக்கப்படுகின்றனர்.
 • மக்கள் தொகையில் பெரும்பகுதி குழந்தைகளும் வயது முதிர்ந்தவர்களும் இருந்தால் , உழைப்பாளர் குழுவின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும்; இதனால் நாட்டு முன்னேற்றம் மெதுவாக நடைபெறும்.
 • மேலும், குறைந்த உழைப்பாளர்கள் குழுவானது, உழைப்பாளர் அல்லாத பெரிய குழுக்களுக்குச் சிறிய தேச்சிய உற்பத்தியிலிருந்து உணவளித்துப் பராமரிக்க வேண்டியிருக்கும்.

இந்தியாவில் வேலைவாய்ப்பு அமைப்பு

 • இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மையானது பல பரிமாணங்களைக் கொண்டது. சிலருக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும், ஒரு சிலருக்கு ஓராண்டில் சில மாதங்களுக்கே வேலை கிடைக்கும்.
 • முதன்மைத்துறை அல்லது விவசாயத் துறை, இரண்டாம் துறை அல்லது தொழில்துறை, மூன்றாம் துறை சார்புத்துறை அல்லது சேவைத் துறை எனப் பொருளியல் வருவாய் ஈட்டும் துறைகள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

 • பொருளியல் அமைப்பின் வெவ்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை
 • வேலைவாய்ப்பு அமைப்பு கூறிக்கிறது.
 • வேலைவாய்ப்பு பாணி நாட்டுக்கு நாடு மாறுகின்ற போதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழு பெரும்பகுதி முதன்மைத் தொழிலிலும் சிறிய குழுக்கள் இரண்டாம், மூன்றாம் நிலைத் தொழில்களிலும் ஈடுபட்டிருப்பதைக் காணலாம்.
 • நன்கு வளர்ந்த நாடுகளில், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள உழைப்பாளர் குழுவின் பங்கு சிறியதாகவும், தொழில் மற்றும் சேவை துறைகளில் ஈடுபட்டிருக்கும் உழைப்பாளர் குழுவின் பங்கு பெரியதாகவும் இருக்கும்.
 • இந்திய வளர்ச்சிக் கொள்கையின் ஒரு முக்கியமான கூறாக வேலைவாய்ப்பு எப்போதுமே இடம்பெற்றுள்ளது.

முதன்மைத்துறை

விவசாயம், காடுகள், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பால் பண்ணை, மீன் வளர்ப்பு போன்றவை.

இரண்டாம் துறை

உற்பத்தி, சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள், கட்டுமானம் போன்றவை.

சார்புத்துறை

போக்குவரத்து, காப்பீடு, வங்கி, வணிக, தொலைத்தொடர்பு, வீட்டுமனை விற்பனை, அரசு மற்றும் அரசு மற்றும் அரசு சாரா சேவைகள்.

 • 1972- 73ஆம் ஆண்டுகளில் தொடங்கி கடந்த நான்கு பத்தாண்டுகளில் வேலை வாய்ப்பு வளர்ச்சி, சராசரியாக 2% அளவுக்கு உயர்ந்துள்ளது.
 • இடைக்கால வரலாற்றுக் காலத்தில் இந்தியாவின் டெல்லி சுல்தான் பெரோஸ் ஷா துக்ளக், வேலைவாய்ப்பின்மைச் சிக்கலைத் தீர்ப்பதற்காக “வேலைவாய்ப்பு அலுவலகத்தை” அமைத்தார்.

வேலைவாய்ப்பின் வகைகள்: ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகள்

 • பதிவு செய்யப்பட்டதும், அரசாங்க விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுவதும், ஊழியர்களையும் ஊழியர் சங்கங்களையும் கொண்டுள்ள துறை ஒழுங்கமைக்கபட்ட துறை எனப்படும்.
 • இந்தியாவில் வங்கிகள், ரயில்வே, காப்பீடு , உற்பத்தித் தொழிற்சாலைகள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களைக் கொண்டு செயல்படும் துறைகள் ஒழுங்கமைக்கப்பட்டத் துறைகள் என்று கூறலாம்.
 • இந்தத் துறைகள், சட்டத்திலுள்ள குறிப்பிட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி செயல்படுகிறது.
 • இந்த ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு உண்டு என்பதோடு அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்படாத தூறையில் இருப்பவரைக் காட்டிலும் அதிக ஊதியம் பெறுகின்றனர்.
 • ஒழுங்கமைக்கப்பட்டத் துறையில் நல்ல ஊதியம், நிர்ணயிக்கப்பட்ட வேலை, நேரம், ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மருத்துவ உதவித்தொகை மற்றும் காப்பீடு போன்றவை வழங்கப்படும்.

ஒழுங்கமைக்கப்படாத துறைகள்

 • அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்படாத துறைகள் என்பது ஊட்டு உபயோகப் பொருள்கள், சிறு மற்றும் குடிசைத் தொழில்கள் போன்றவற்றைக் கூறலாம். இதற்கு விதிகளும் ஒழுங்குமுறைகளும் இருந்தாலும் அவை பின்பற்றபடுவதில்லை.
 • இவற்றில் வேலை செய்வோருக்குக் குறைந்த கூலி கொடுக்கப்படுவதோடு பல நேரங்களில் தொடர்ச்சியாக வேலையும் இருக்காது, பெரும்பாலும் அவர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு, விடுமுறை நாட்கள், மருத்துவ விடுப்பு போன்றவை இருக்காது. வேலை உத்தரவாதம் கிடையாது.
 • வேலையில்லாத போது அவர்கள் தொழில் கூடங்களிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
 • தெருக்களில் விற்பனை செய்வோர், பழுதுகள் சரி பார்ப்போர், சிறிய அளவிலான தொழில் செய்வதில் ஈடுபட்டுள்ள ஏராளமான எண்ணிக்கையிலான மக்களை இந்தத் துறை உள்ளடக்கியுள்ளது.
 • அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்படாத துறையில் வேலைவாய்ப்பு வரையறைகள் நிலையானதாக, ஒழுங்குபடுத்தப்பட்டதாக இல்லை.
 • தொழிலாளர்களுக்குச் சிறப்பு ஆதாயங்களோ வேலை நிரந்தரமோ கிடையாது. இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தில் பதிவு பெற்றவைகள் அல்ல.

பொதுத் துறையும் தனியார் துறையும்

 • சொத்துகளின் உரிமையாளரையும், சேவைகள் அளிப்பதற்குப் பொறுப்பானவரையும் அடிப்படையாகக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் பொதுத் துறை மற்றும் தனியார் துறை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுத்துறை நிறுவனங்கள்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்திய உருக்கு ஆணையம் பாரத தொலைபேசி நிறுவனம்.

தனியார் தூறை நிறுவனங்கள்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்

அசோக் லேலண்ட்

டாடா இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை

பொதுத்துறை மற்றும் தனியார் துறைக்கான வேறுபாடுகள்

வ.எண் பொதுத்துறை தனியார் துறை
1 சேவை நோக்கம் கொண்டது இலாப நோக்கம் கொண்டது
2 சொத்துக்கள் அரசாங்கத்துக்குச் சொந்தம் சொத்துக்கள் தனி நபர்களுக்குச் சொந்தம்
3 ஊதியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன ஊதியம் உரிமையாளரால் வழங்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அமைப்பு

 • சமீப ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அமைப்பில் ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளதோடு இது பணியமர்த்துவோர், அவர்களின் ஊழியர்களிடையே அதிக நெகிழ்ச்சியோடு பணிபுரியும் பாணியை வளர்த்தெடுக்க உதவியது. தற்கால வேலைவாய்ப்பு போக்குகள்
 1. அதிகரித்துவரும் சுய-வேலைவாய்ப்பு
 2. நிறுவனங்கள் ஒரு சில நிரந்தர ஊழியர்களையே பயன்படுத்துதல் மற்றும் குறுகிய கால ஒப்பந்தப் பணிகளைத் தருவதும் ஆகும்.
 3. பகுதி நேர வேலைவாய்ப்பில் ஒரு வளர்ச்சி இருந்து வருகிறது. மக்களின் வாழ்க்கை முறையே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

தமிழகத்தில் வேலைவாய்ப்புப் போக்குகள்

 • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் தமிழகத்தில் விவசாயமே அதிகம் பேருக்கு வேலையளித்துக் கொண்டிருக்கிறது.
 • இதற்குக் காரணம், விவசாயமல்லாத துறைகள், உழைப்பாளர்கள் குழு தொழில்களை மாற்றி கொள்வதற்குப் போதுமான அளவு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.
 • தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சியின் பெரும்பகுதி, குறைந்த வருமானங்களை அளிக்கின்ற அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கபடாத முறைசாரா துறைகளின் பங்களிப்பாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *