Book Back QuestionsTnpsc

ஒலி Book Back Questions 9th Science Lesson 8

9th Science Lesson 8

8] ஒலி

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

கணக்கீடு 1: ஒரு ஒலி அலையின் அதிர்வெண் 2 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் அலைநீளம் 15 செ.மீ எனில் 1.5 கி.மீ தூரத்தைக் கடக்க, அது எடுத்துக் கொள்ளும் காலம் என்ன?

தீர்வு: வேகம், v = nλ

இங்கு, n = 2 கிலே; ஹெர்ட்ஸ் = 2000 ஹெர்ட்ஸ்

λ = 15 செ.மீ = 0.15 மீ

v = 0.15 x 2000 = 300 மீ செ-1

வேகம் (v) = கடந்த தொலைவு (d) / காலம் (t)

t = 1500 / 300 = 5 வி

ஒலியானது 1.5 கி.மீ தொலைவைக் கடக்க 5 வினாடிகள் ஆகும்.

கணக்கீடு 2: 20oC வெப்பநிலையில் 22 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட ஒலியின் அலைநீளம் என்ன?

தீர்வு: λ = v/n

இங்கே, v = 344 ms-1

n = 22 MHz = 22 x 106 Hz

λ = 344/22 x 106 = 15.64 x 10-6 m = 15.64 µm.

ஒலியானது காற்றைவிட 5 மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும். கடல் நீரில் ஒலியின் வேகம் மிக அதிகமாக (அதாவது 5500 கி.மீ/மணி) இருப்பதால், கடல் நீருக்குள் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இரண்டு திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று எளிதில் பேசிக் கொள்ள முடியும்.

ஒலி முழக்கம்: ஒரு பொருளின் வேகமானது, காற்றில் ஒலியின் வேகத்தைவிட (300 மீவி-1) அதிகமாகும் போது அது மீயொலி வேகத்தில் செல்கிறது. துப்பாக்கிக் குண்டு, ஜெட் விமானம், ஆகாய விமானங்கள் போன்றவை மீயொலி வேகத்தில் செல்பவையாகும். ஒரு பொருளானது காற்றில் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும்போது அவை அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இவ்வதிர்வலைகள் அதிக ஆற்றலைப் பெற்றிருக்கும். இவ்வதிர்வலைகளால் காற்றில் ஏற்படும் அழுத்த மாறுபாட்டின் காரணமாக அவை கூர்மையான மற்றும் உரத்த ஒலியை உண்டாக்குகின்றது. இதனை ஒலி முழக்கம் என்கிறோம். ஆகாய விமானங்களால் உண்டாகும் அதிர்வலைகள் கண்ணாடி மற்றும் கட்டடங்களையும் சேதப்படுத்தும் அளவிற்கு ஆற்றல் கொண்டவையாகும்.

நீண்ட நேரம் காதுகேள் பொறியைப் (Ear Phones) பயன்படுத்தும்போது உட்செவிப் பகுதியில் தொற்று ஏற்படுவதுடன் செவிப்பறை பாதிக்கப்படும் நிலையும் உருவாகும். நீங்கள் சாலைகளில் செல்லும் போதும், சிக்னலைக் கடக்கும் போதும், காதுகேள் பொறியைப் பயன்படுத்தினால் உங்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது. Pg 101 காதுகேள் பொறியை பயன்படுத்துவது பேராபத்தினை ஏற்படுத்தும். ஏனெனில், அதனுள் மின்சாரமானது செல்கிறது. அதிகமான பயன்பாடு எரிச்சலையும் உண்டு பண்ணலாம். ஆகவே, காதுகேள் பொறியைப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

கணக்கீடு 3: ஒருவர் தனது துப்பாக்கியைச் சுட்ட 5 வினாடிக்குப் பிறகு எதிரொலியைக் கேட்கிறார். அவர் குன்றை நோக்கி 310 மீ முன்னோக்கி நகர்ந்து மீண்டும் சுடுகிறார். இப்பொழுது 3 வினாடிக்குப் பிறகு எதிரொலியைக் கேட்கிறார் எனில் ஒலியின் வேகம் எவ்வளவு?

தீர்வு: தொலைவு (d) = வேகம் (v) x காலம் (t)

முதன்முறை சுடும்போது ஒலி கடந்த தொலைவு, 2d = v x 5 (1)

இரண்டாவது முறை சுடும்போது ஒலி கடந்த தொலைவு, 2d – 620 = v x 3 (2)

சமன்பாடு 2ஐ மாற்றி எழுதினால்,

2d = (v x 3) + 620 (3)

சமன்பாடு 1 மற்றும் 3 லிருந்து, 5v = 3v + 620

2v = 620

ஒலியின் திசைவேம், v = 310 மீ/வி-1.

வெளவால், டால்பின் மற்றும் ஒரு சில திமிங்கலங்கள், மீயொலிகளைப் பயன்படுத்தும் முறையாகிய, எதிரொலித்து இடம் கண்டறிதல் என்ற முறையைப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம், பொருட்களை அடையாளம் கண்டு கொள்கின்றன. எதிரொலித்து இடம் கண்டறிதல் மூலம் வெளவால்கள் இருட்டான குகைகளில் பயணிப்பதோடு, தங்களுக்குத் தேவையான இரையையும் பெற்றுக்கொள்கின்றன. டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள், தண்ணீருக்கு அடியில் மீயொலி அதிர்வெண்களைக் கொண்ட ஒலியை எழுப்பி அதன் மூலம் பயணிக்கின்றன. மேலும் தங்களுக்குத் தேவையான இரையையும் தேடிக்கொள்கின்றன.

கணக்கீடு 4: ஒரு கப்பலிலிருந்து அனுப்பப்படும் மீயொலியானது கடலுக்கு அடியிலுள்ள பொருளின் மீது எதிரொலிக்கப்பட்டு 3.42 வினாடிக்குப் பிறகு மீண்டும் வந்தடைகிறது. கடல் நீரில் மீயொலியின் வேகம் 1531 எனில் கப்பலிலிருந்து கடலின் அடிப்பகுதி வரை உள்ள தொலைவு எவ்வளவு?

தீர்வு: மீயொலி கடந்த தொலைவு = 2 x கடலின் ஆழம்

தொலைவு = வேகம் x நேரம் என்பதால்,

2d = வேகம் x நேரம்

⸫ d = 5236/2 = 2618 மீ

ஆகவே, கப்பலிலிருந்து கடலின் ஆழம் = 2618 மீ அல்லது 2.618 கி.மீ.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இசைச் கச்சேரிகளில் ஜால்ரா எனும் இசைக் கருவியை இசைக்கும் போது எது அதிர்வடையும்?

(அ) நீட்டிக்கப்பட்ட கம்பி

(ஆ) காற்றுத் தம்பம்

(இ) நீட்டிக்கப்பட்ட சவ்வு

(ஈ) உலோகத்தகடு

2. காற்றில் எப்பொழுது ஒலி பயணிக்கும்?

(அ) காற்றில் ஈரப்பதம் இல்லாத போது,

(ஆ) துகள்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போது.

(இ) துகள்களும் அதிர்வுகளும் ஒரு இடத்திலிருந்து வேறிடத்திற்கு நகரும் போது.

(ஈ) அதிர்வுகள் நகரும் போது.

3. ஒரு இசைக்கருவி உண்டாக்கும் தொடர் குறிப்புகளை சாதாரண செவித்திறன் கொண்ட ஒருவரால் உணர முடியவில்லையெனில் இக்குறிப்புகள் கீழ்க்கண்டவற்றுள் எதன் உள்ளே புகுந்து செல்ல முடியும்?

(அ) மெழுகு

(ஆ) வெற்றிடம்

(இ) நீர்

(ஈ) வெறுமையான பாத்திரம்

4. செவியுணர் ஒலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?

(அ) கடல் நீர்

(ஆ) கண்ணாடி

(இ) உலர்ந்த காற்று

(ஈ) மனித இரத்தம்

5. ___________ ல் ஒலி வேகமாக பயணிக்கும்.

(அ) திரவங்களில்

(ஆ) வாயுக்களில்

(இ) திடப்பொருளில்

(ஈ) வெற்றிடத்தில்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒலி என்பது ___________ அலை. எனவே ஒலி ஊடுருவ ஊடகம் தேவை

2. ஒரு விநாடியில் உருவாகும் அதிர்வுகளின் எண்ணிக்கை ___________ எனப்படும்.

3. திடப்பொருளில் ஒலியின் திசைவேகமானது, திரவத்தில் உள்ள திசைவேகத்தை விட ____________

4. அதிர்வுரும் பொருட்கள் ___________ உருவாக்கும்.

5. ஒலிச் செறிவானது ___________ ன் இரு மடங்கிற்கு நேர்த்தகவில் உள்ளது.

6. உடலில் ஏற்படும் ஒலிகளை உணர பயன்படுத்தப்படும் மருத்துவக் கருவி ______________

7. ஒலியை நீட்டிக்கும் தொடர் எதிரொலித்தலுக்கு _____________ என்று பெயர்.

பொருத்துக:

1. இசைக்கலவை – காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள புள்ளி

2. ஒலி – சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி

3. அழுத்தங்கள் – 20000ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி

4. வீச்சு – நெட்டலைகள்

5. மீயொலி – ஒலியின் உற்பத்தி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. உலோகத் தகடு 2. அதிர்வுகள் நகரும் போது 3. வெற்றிடம் 4. கண்ணாடி 5. திடப்பொருளில்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. நெட்டலை 2. அதிர்வெண் 3. அதிகம் 4. ஒலி 5. வீச்சு 6. இதயத் துடிப்பளவி 7. எதிர் முழக்கம்

பொருத்துக: (விடைகள்)

1. இசைக்கலவை – ஒலியின் உற்பத்தி

2. ஒலி – நெட்டலைகள்

3. அழுத்தங்கள் – காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள புள்ளி

4. வீச்சு – சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி

5. மீயொலி – 20000 ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!