Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

ஒளி Book Back Questions 9th Science Lesson 6

9th Science Lesson 6

6] ஒளி

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

அவசர கால ஊர்திகளின் முன்புறம் AMBULANCE என்னும் வார்த்தை வலமிருந்து இடமாக பெரிய எதிரொலித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும்.

கணக்கீடு 1: 10 செ.மீ குவிய தொலைவு கொண்ட குழியாடி ஒன்றிலிருந்து 15 செ.மீ தொலைவில் வைக்கப்பட்டுள்ள 1 செமீ. உயரம் கொண்ட ஒரு பொருளின் பிம்பத்தின் அளவு, தன்மை மற்றும் இடம் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கவும்.

தீர்வு: பொருளின் தொலைவு, u = -15 செ.மீ.

பிம்பத்தின் தொலைவு, v = ?

குவியத் தொலைவு, f = -10 செ.மீ.

ஆடிச் சமன்பாட்டைப் பயன்படுத்த

1/v + 1/u = 1/f

1/v + 1/-15 = 1/-10

1/v – 1/15 = -1/10

1/v = -1/10 + 1/15 = -3+2/30 = -1/30

பிம்பத்தின் தொலைவு v = -30 செ.மீ. (இங்கு எதிர்க்குறி வந்துள்ளது. எனவே, பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் உள்ளது). ஆடிக்கு 30 செ.மீ முன்னே பிம்பம் உருவாகிறது. ஆடிக்கு முன் பிம்பம் ஏற்படுவதால், அது தலைகீழான மெய் பிம்பம் ஆகும். பிம்பத்தின் அளவைக்கான உருப்பெருக்கத்தைக் கணக்கிட வேண்டும்.

m = -v/u = – (-30) / (-15) = -2

m = h2/h1, என்பதை நாம் அறிவோம்.

இங்கு பொருளின் உயரம் h1 = 1 செ.மீ.

-2 = h2/1

h2 = -2 x 1 = -2 cm

எனவே, பிம்பத்தின் உயரம் = 2 செ.மீ. (இங்கு எதிர்க்குறி வந்துள்ளது. எனவே, பிம்பம் முதன்மை அச்சுக்குக் கீழே ஏற்படுகிறது).

கணக்கீடு 2: குழியாடியிலிருந்து 16 செ.மீ தொலைவில் வைக்கப்படும் 2 செ.மீ உயரம் கொண்ட பொருள் ஒன்றின் மெய் பிம்பம் 3 செ.மீ உயரம் உள்ளதாக இருந்தால் பிம்பம் உருவாகும் இடத்தைக் காண்க.

தீர்வு: பொருளின் உயரம், h1 = 2 செ.மீ.

பிம்பத்தின் உயரம், h2 = 3 செ.மீ.

உருப்பெருக்கம் m = h2/h1 = -3/2 = -1.5

ஆனால், m = -v/u

இங்கு பொருளின் தொலைவு u = 16 செ.மீ. மதிப்புகளைப் பிரதியிட,

-1.5 = -v / (-16)

-1.5 = v/16

v = 16 x (-1.5) = -24 cm

பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் 24 செ.மீ தொலைவில் இருக்கும். (எதிர்க்குறி, பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் உள்ளது என்பதைக் குறிக்கிறது).

வானில் உள்ள பொருள்கள் ஈரிலாத் தொலைவில் உள்ளன. எனவே, குழியாடி ஏற்படுத்தும் பிம்பம் தலைகீழாகவும் சிறியதாகவும் இருக்கும். இருப்பினும், ஏன் வானியல் தொலைநோக்கிகளில் குழியாடிகள் பயன்படுத்தப்படுகின்றன?

வாகனங்களின் பின்னோக்குக் கண்ணாடிகளில் எழுதப்பட்டுள்ள பின்வரும் சொற்றொடரைக் கண்டதுண்டா? “Objects in the mirror are closer than they appear” (ஆடியில் பிம்பம் தோன்றும் தொலைவை விட பொருள்கள் மிக அருகில் உள்ளன.) ஏன்?

கணக்கீடு 3: 20 செ.மீ குவிய தொலைவு கொண்ட குவியாடி ஒன்று மகிழுந்து (car) ஒன்றில் பொருத்தப்பட்டு உள்ளது. அதிலிருந்து 6 மீ தொலைவில் இன்னொரு மகிழுந்து உள்ளது எனில்,

அ) முதல் மகிழுந்தின் ஆடியிலிருந்து பார்க்கும் போது இரண்டாவது மகிழுந்து (அதன் தொலைவு) எங்கு இருக்கும்?

ஆ) இரண்டாவது மகிழுந்து 2 மீ அகலமும் 1.6 மீ உயரமும் கொண்டது எனில், அதன் பிம்பத்தின் அளவு என்ன?

குவியத் தொலைவு, f = 20 செ.மீ (குவியாடி)

பொருளின் தொலைவு, u = -6 மீ. = -600 செ.மீ

பிம்பத்தின் தொலைவு, v = ?

தீர்வு: அ) பிம்பத்தின் இடத்தை ஆடிச் சமன்பாட்டைக் கொண்டு அறிதல்.

1/f = 1/u + 1/v

1/20 = 1/-600 + 1/v

1/v = 1/20 – 1/-600 = 1/20 + 1/600 1/v = 30+1/600 = 31/600

v = 600/31 = 19.35 cm

ஆ) பிம்பத்தின் அளவு

m = -v/u = -v / (-u) = 600/31 x 1/-600 = 1/31

பிம்பத்தின் அகலம் = 1/31 x 200 செ.மீ = 6.45 செ.மீ

பிம்பத்தின் உயரம் = 1/31 x 160 செ.மீ =5.16 செ.மீ

சில உயிரினங்கள் இயல்பாகவே தங்களுக்குள் ஒளிரும் தன்மையைப் பெற்றுள்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பண்பிற்கு உயிரி ஒளிர்தல் என்று பெயர். கடலின் அடி ஆழத்தில் ஒளி குறைந்த பகுதியில் வாழக்கூடிய சில வகையான புழுக்கள், மீன், ராட்சத சிப்பி மீன், நட்சத்திர மீன் போன்ற உயிரினங்கள் மற்ற உயிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள இத்தகைய மின்னுகின்ற அல்லது ஒளிரும் பண்பைப் பெற்றுள்ளன.

கணக்கீடு 4: காற்றில் ஒளியின் திசைவேகம் 3 x 10 மீ/வி, கண்ணாடியில் 2 x 108 மீ/வி எனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன?

தீர்வு: aµg = 3 x 108/2 x 108 = 3/2 = 1.5

கணக்கீடு 5: அடர்குறை ஊடகத்திலிருந்து (ஊடகம் 1) அடர்மிகு ஊடகத்திற்கு (ஊடகம் 2) ஒளி செல்கிறது. படுகோணம் மற்றும் விலகு கோணம் முறையே 45o, 30o எனில் முதல் ஊடகத்தைப் பொறுத்து 2-வது ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடுக.

தீர்வு: 1µ2 = sin i/sin r = sin 45o/sin 30o = 1√2 / ½ = √2 = 1.414

இந்தியாவைச் சேர்ந்த நரிந்தர் கபானி என்ற இயற்பியலாளர் இழை ஒளியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும் போது எந்த படு கோணத்தில் ஒளிவிலகல் அடையாது?

(அ) 0o

(ஆ) 45o

(இ) 90o

2. டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது _____________

(அ) குழியாடி

(ஆ) குவியாடி

(இ) சமதள ஆடி

3. பெரிதான, மாய பிம்பங்களை உருவாக்குவது ____________

(அ) குழியாடி

(ஆ) குவியாடி

(இ) சமதள ஆடி

4. எதிரொளிக்கும் பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பின், அது

(அ) குழியாடி

(ஆ) குவியாடி

(இ) சமதள ஆடி

5. முப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாயும்போது, அது,

(அ) எதிரொளிக்கப்படுகிறது.

(ஆ) விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது.

(இ) விலகல் மட்டும் அடைகிறது.

6. ஒளியின் திசைவேகம் ____________ ல் பெருமமாக உள்ளது.

(அ) வெற்றிடத்தில்

(ஆ) கண்ணாடியில்

(இ) வைரத்தில்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும் போது அது _________ செல்கிறது.

2. தெரு விளக்குகளில் (Street light) பயன்படும் ஆடி __________

3. முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு கோணம் ___________ கோணத்தைப் பொறுத்தது.

4. 5 செ.மீ குவிய தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் = ___________

5. சூரிய அடுப்புகளில் சூரிய ஒளியைக் குவித்து வெப்பம் உண்டாக்கப் பயன்படும் பெரிய ஆடிகள்__________

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. ஒளிவிலகல் கோணம் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்தது.

2. ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும் போது, விலகல் அடைவதில்லை.

3. குவியாடி எப்போதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும்.

4. குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும் போது நேரான மாய பிம்பம் உருவாகும்.

5. வைரங்கள் மின்னுவதற்குக் காரணம் ஒளியின் முழு அக எதிரொளிப்பே.

பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II

1. பிம்பத்தின் உயரத்திற்கும் பொருளின்

உயரத்திற்கும் இடையேயான தகவு – அ. குழியாடி

2. மலைகளில் காணப்படும் மிகக்குறுகிய

வளைவுகளில் பயன்படுவது – ஆ. முழு அக எதிரொளிப்பு

3. தண்ணீருக்குள் உள்ள நாணம் சற்று மேலே

உள்ளது போல் தெரிவது – இ. உருப்பெருக்கம்

4. கானல் நீர் – ஈ. குவியாடி

5. பல்மருத்துவர் பயன்படுத்துவது – உ. ஒளிவிலகல்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

அ) கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.

இ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.

1. கூற்று: மலைப்பாதைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவில் போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்க குவி ஆடி மற்றும் குழி ஆடியை விட சமதள ஆடியே பயன்படுத்தப்படுகிறது.

காரணம்: ஒரு குவி ஆடியானது சமதள ஆடி அல்லது குழி ஆடியை விட மிக அதிகமான பார்வைப் புலம் உடையது.

2. கூற்று: படுகதிர் கோளக ஆடியின் வளைவு மையத்தில் பட்டு எதிரொளித்த பின் மீண்டும் அதே பாதையில் திரும்புகிறது.

காரணம்: படுகோணம் I = எதிரொளிப்புக் கோணம் (r) = 0o.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. 900 2. குழியாடி 3. குழியாடி 4. குவியாடி 5. விலகலடைகிறது மற்றும் நிறப்பிறிகை அடைகிறது 6. வெற்றிடத்தில்

கோடிட்ட இடத்தை நிரப்புக: (விடைகள்)

1. குத்துக்கோட்டை நோக்கி 2. குழி ஆடி 3. படுகதிர் 4. (10 செ.மீ) 5. குழி ஆடி

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. சரி

2. தவறு

சரியான விடை: ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது விலகல் அடையும்.

3. சரி

4. தவறு

சரியான விடை: குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும்போது தலை கீழான மெய்ப்பிம்பம் உண்டாகும்.

5. சரி

பொருத்துக: (விடைகள்)

1. பிம்பத்தின் உயரத்திற்கும் பொருளின்

உயரத்திற்கும் இடையேயான தகவு – உருப்பெருக்கம்

2. மலைகளில் காணப்படும்

மிகக் குறுகிய வளைவுகளில் பயன்படுவது – குவியாடி

3. தண்ணீருக்குள் உள்ள நாணயம்

சற்று மேலே உள்ளது போல் தெரிவது – ஒளிவிலகல்

4. கானல் நீர் – முழு அக எதிரொலிப்பு

5. பல் மருத்துவர் பயன்படுத்துவது – குழியாடி

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்று தவறு ஆனால் காரணம் சரி

2. கூற்றும் காரணமும் சரி மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றிற்க்கான சரியான விளக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!