Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

செல் Book Back Questions 6th Science Lesson 12

6th Science Lesson 12

12] செல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

நம்மால் வெறும் கண்களால் செல்லினை காண இயலாது. ஏனெனில் அது அளவில் மிகச்சிறியது. அதனை கூட்டு நுண்ணோக்கியால் நம்மால் காண இயலும். தற்காலத்தில் எலக்ட்ரான் நுண்ணோக்கியானது செல்களை நன்கு உருப்பெருக்கம் செய்து காணப்பயன்படுகிறது.

செல்லின் அளவிற்கும் உயிரினத்தின் அளவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. உதாரணமாக யானையின் செல், சுண்டெலியின் செல்லை விட மிகப் பெரியதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தோராயமாக, மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை 3.7 x 1013 (அ) 37,000,000,000,000.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு

(அ) சென்டி மீட்டர்

(ஆ) மில்லி மீட்டர்

(இ) மைக்ரோ மீட்டர்

(ஈ) மீட்டர்

2. நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல்.

(அ) தாவர செல்

(ஆ) விலங்கு செல்

(இ) நரம்பு செல்

(ஈ) மீட்டர்

3. யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது

(அ) செல் சுவர்

(ஆ) நியூக்ளியஸ்

(இ) நுண்குமிழ்கள்

(ஈ) பசுங்கணிகம்

4. கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

(அ) ஈஸ்ட்

(ஆ) அமீபா

(இ) ஸ்பைரோ கைரா

(ஈ) பாக்டீரியா

5. யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்

(அ) செல்சுவா

(ஆ) சைட்டோபிளாசம்

(இ) உட்கரு (நியூக்ளியஸ்)

(ஈ) நுண்குமிழ்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. செல்களைக் காண உதவும் உபகரணம் ____________

2. நான் செல்லில் உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறேன் நான் யார்? ___________

3. நான் ஒரு காவல்காரன் நான் செல்லினுள் யாரையும் உள்ளே விடமாட்டேன், வெளியேயும் விட மாட்டேன். நான் யார்? __________

4. செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் ___________

5. நெருப்புக் கோழியின் முட்டை ______________ தனி செல் ஆகும்.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. உயிரினங்களின் மிகச் சிறிய அலகு செல்.

2. மிக நீளமான செல் நரம்பு செல்.

3. பூமியில் முதன் முதலாக உருவான செல் புரோகோயோட்டிக் செல் ஆகும்.

4. தாவரஙத்திலும், விலங்கிலும் உள்ள நுண்ணுறுப்புகள், செல்களால் ஆனவை.

5. ஏற்கனவே உள்ள செல்களிலிருந்து தான் புதிய செல்கள் உருவாகின்றன.

IV. பொருத்துக:

1. கட்டுப்பாட்டு மையம் – அ. செல் சவ்வு

2. சேமிப்பு கிடங்கு – ஆ. மைட்டோ காண்ட்ரியா

3. உட்கரு வாயில் – இ. நியூக்ளியஸ் (உட்கரு)

4. ஆற்றல் உற்பத்தியாளர்- ஈ. உட்கரு உறை

5. செல்லின் வாயில் – உ. நுண்குமிழ்கள்

V. சரியான வரிசையில் எழுது:

1. யானை, பசு, பாக்டிரியா, மாமரம், ரோஜாச் செடி.

2. கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை, பூச்சிகளின் முட்டை

VI. ஒப்புமை தருக:

1. புரோகேரியோட்: பாக்டிரியா: : யூகேரியோட்: _____________

2. ஸ்பைரோகைரா: தாவர செல்: : அமீபா: _____________

3. உணவு உற்பத்தியாளர்: பசுங்கணிகம்: : ஆற்றல் மையம்: ______________

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மைக்ரோ மீட்டர், 2. தாவர செல் , 3. நியூக்ளியஸ், 4. ஸ்பைரோகைரா, 5. சைட்டோபிளாசம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. நுண்ணோக்கி, 2. பசுங்கணிகம், 3. செல்சுவர், 4. ராபர்ட்ஹூக், 5. மிகப்பெரிய

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. சரி, 2. சரி, 3. சரி, 4. செல்கள் நுண்ணுறுப்புகளால் ஆனவை, 5. சரி

IV. பொருத்துக:

1. இ, 2. உ, 3. ஈ, 4. ஆ, 5. அ

V. சரியான வரிசையில் எழுது:

1. பாக்டீரியா, ரோஜா செடி, பசு, யானை, மாமரம்

2. பூச்சிகளின் முட்டை, கோழி முட்டை, நெருப்புக்கோழி முட்டை

VI. ஒப்புமை தருக:

1. தாவர அல்லது விலங்கு செல்

2. விலங்கு செல்

3. மைட்டோகாண்ட்ரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!