Tnpsc Tamil News

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு : ஆன்சர் கீ – உத்தேச விடைத்தாள் இன்று வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு : ஆன்சர் கீ – உத்தேச விடைத்தாள் இன்று வெளியீடு – Tnpsc Group 2 Answer Key 2022

தமிழகம் முழுவதும் 4012 மையங்களில் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நடக்கிறது. 5,529 காலி பணியிடத்துக்கு நடைபெறும் தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இன்று நடைபெறும் தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவி 116 பணியிடம். குரூப் 2ஏ பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதற்கான முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 117 இடங்களில் 4012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,843 பேர் எழுதுகின்றனர். மிக குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5,624 பேர் எழுதுகிறார்கள். சென்னையில் மட்டும் 7 மையங்களில் குரூப் 2 தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்போரின் வசதிக்காக வார நாட்களில் இயக்கப்படுவதைப் போல 3233 மாநகர பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பேருந்துகளும் இன்று தடையின்றி இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tnpsc Group 2 Answer Key 2022 – 21.05.2022 இன்று நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகள் அடங்கிய ஆன்சர் கீ விடைத்தாளை நமது விண்மீன் இணையத்தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 உத்தேச விடைத்தாள் லிங்க்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!