Book Back QuestionsTnpsc

தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Book Back Questions 7th Science Lesson 5

7th Science Lesson 5

5] தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சூரியக் காந்தி என்பது தனிமலர் அன்று, பல மலர்கள் ஒன்றிணைந்து உருவான தொகுப்பே சூரியக்காந்தியாகும். இப்படிப் பல மலர்கள் ஒன்றோடொன்று இணைந்து காணப்பட்டால் அதற்கு மஞ்சரி என்று பெயர். வெட்டுக்காயப் பூண்டு என்றும் கிணற்றடிப் பூண்டு என்றும் அழைக்கப்படும் ட்ரைடாக்ஸ் புரோகும்பன்ஸ் என்ற தாவரத்தின் தனி மலர் போல் காணப்படுவது மஞ்சரி ஆகும். இதன் இலைச்சாறு வெட்டுக்காயங்களைக் குணமாக்கும்.

உலகின் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை, இரட்டைத் தேங்காய் ஆகும். இதன் விதை இரண்டு தேங்காய் ஒன்றோடொன்று இணைந்து உருவானது போல இருக்கும். இவ்விதை சேசில்லிஸ் (Seychelles) என்ற இடத்தில் உள்ள இரண்டு தீவுகளில் மட்டுமே முளைக்கும். ஒரு விதையின் நீளம் 12 அங்குலம், அகலம் 3 அடி, எடை 18 கிலோ உள்ளதாக இருக்கும். தாவர உலகின் மிகச் சிறிய விதைகள் எனப்படுபவை ஆர்க்கிட் விதைகள். 35 மில்லியன் ஆர்க்கிட் விதைகளின் எடை வெறும் 25 கிராம் மட்டும் தான்.

வாண்டா தாவரம் தொற்றுத் தாவரமாக மரங்களில் வளரும். இதன் தொற்று வேர்களில் உள்ள வெலமன் திசு காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி ஒளிச்சேர்க்கைக்கு உதவும்.

சில தாவரங்களில் வேர்கள் நிலமட்டத்திற்கு மேல் தண்டிலோ, இலைகளிலோ காணப்படுகின்றன. இவை மாற்றிட வேர்கள் என அழைக்கப்படுகின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது

(அ) பிரையோபில்லம்

(ஆ) பூஞ்சை

(இ) வைரஸ்

(ஈ) பாக்டீரியா

2. ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை

(அ) ஸ்போர்கள்

(ஆ) துண்டாதல்

(இ) மகரந்தச் சேர்க்கை

(ஈ) மொட்டு விடுதல்

3. ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு

(அ) வேர்

(ஆ) தண்டு

(இ) இலை

(ஈ) மலர்

4. மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை

(அ) காற்று

(ஆ) நீர்

(இ) பூச்சிகள்

(ஈ) மேற்கூறிய அனைத்தும்

5. பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்

(அ) வெற்றிலை

(ஆ) மிளகு

(இ) இவை இரண்டும்

(ஈ) இவை இரண்டும் அன்று

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு ____________

2. _____________ என்பது சூலக வட்டத்தின் பருத்த அடிப்பகுதியாகும்.

3. கருவுறுதலுக்குப் பின் சூல் ____________ ஆக மாறுகிறது.

4. சுவாச வேர்கள் ____________ தாவரத்தில் காணப்படுகின்றன.

5. வெங்காயம் மற்றும் பூண்டு ____________ வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களைக் கொண்டது.

2. அல்லி இதழ், சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர்.

3. கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு – கேரட்.

4. இஞ்சி என்பது தரை கீழ் வேராகும்.

5. சோற்றுக் கற்றாழையின் இலைகள், நீரைச் சேமிப்பதால் சதைப் பற்றுள்ளதாக உள்ளன.

பொருத்துக:

1. அல்லி – சப்பாத்திக் கள்ளி

2. பெரணி – கிரை சாந்திமம்

3. இலைத் தொழில் தண்டு – பூச்சிகளை ஈர்க்கிறது

4. கொக்கி – ஸ்போர்

5. தரைகீழ் ஓடு தண்டு – பிக்னோனியா

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: பூவில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையும் கருவுறுதலும், கனிகளையும், விதைகளையும் உருவாக்கும்.

காரணம்: கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறும். சூலானது, விதையாக மாறும்.

(அ) கூற்று சரி, காரணம் தவறு

(ஆ) கூற்று தவறு, காரணம் சரி

(இ) கூற்றும் சரி, காரணமும் சரி

(ஈ) கூற்று தவறு, காரணமும் தவறு

2. கூற்று: கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட் ஆகும்.

காரணம்: இது வேற்றிட வேரின் மாறுபாடாகும்.

(அ) கூற்று தவறு, காரணம் சரி

(ஆ) கூற்றும் தவறு, காரணமும் தவறு

(இ) கூற்றும் சரி, காரணமும் சரி

(ஈ) கூற்று சரி, காரணம் தவறு

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. பிரையோபில்லம் 2. மொட்டுவிடுதல் 3. மலர் 4. மேற்கூரிய அனைத்தும்

5. இவை இரண்டும்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. மகரந்த தாள் வட்டம் 2. சூற்பை 3. விதை 4. அவிசீனியம்

5. தரைகீழ் தண்டு(குமிழம்)

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக. தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக: (விடைகள்)

1. சரி

2. தவறு

சரியான விடை: மகரந்தத்தூள் சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர்.

3. சரி

4. தவறு

சரியான விடை: இஞ்சி என்பது தரைகீழ் தண்டு ஆகும்.

5. சரி

பொருத்துக: (விடைகள்)

1. அல்லி – பூச்சிகளை ஈர்க்கிறது

2. பெரணி – ஸ்போர்

3. இலைத் தொழில் தண்டு – சப்பாத்திக் கள்ளி

4. கொக்கி – பிக்னோனியா

5. தரைகீழ் ஓடு தண்டு – கிரைசாந்திமம்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து. சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

2. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button