திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் Notes 12th Political Science Lesson 8 Notes in Tamil

12th Political Science Lesson 8 Notes in Tamil

திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும்

திட்டமிடல் : பொருள், பரிணாமம் மற்றும் நோக்கங்கள்

விடுதலைக்கு முன்பு திட்டமிடல் முறை

 • அனைத்துப் பொருளாதாரங்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் அனைத்திலும் ஏதோ ஒரு வடிவத்தில் திட்டமிடும்முறை நிலவத்தான் செய்கிறது. திட்டமிடல் அமைப்பின் நோக்கம் என்பது, ஓர் அரசின் மூலவளங்களை நீண்டகாலத்திற்கு பயன்படுத்தும் வகையில் ஒரு முறைப்படுத்தப்பட்ட பயன்பாட்டு முறைகளை உருவாக்குவதாகும்.
 • உற்பத்தி அதிகரிப்பு, தேசியப் பங்கீடு , அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்பு, மட்டுமல்லாமல் மக்கள் சமூக நலன்கள் அதிகரிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அரசு இச்செயல்முறைகளைக் கொண்டுள்ளது. ஒரு அரசின் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பின் கீழ் அனைத்துத் தொழில் உற்பத்தி அமைப்புகளும் தங்கள் மூலவளங்களைப் பயன்படுத்துகின்றன.
 • அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் விலக்குகளும் இதில் அடங்கும். ஒரு அரசின் அனைத்து தனியார் மற்றும் பொது நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசே ஒழுங்குபடுத்தி கண்காணிக்கிறது. ஒரு அரசின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் நாட்டின் முன்னேற்றம் மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாஅக்கப்படுகின்றன.
 • நவீன அரசு என்பது மக்கள் நல செயல்பாடுகளை நோக்கமாகக் கொண்டது. முந்தையக் காலங்கள்போல தற்கால நவீன அரசுகள் ‘காவல் அரசுகளாக’ மட்டுமே செயல்பட முடியாது.
 • முந்தையக் காலங்களில் மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு மட்டுமே அரசின் செயல்பாடாக கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்கால மக்கள் நல அரசுகளில் பங்களிப்பு மிகவும் விரிவானதாகும். அது நல்ல ஆட்சியை தருவது மட்டுமல்லாமல் மக்களின் சமூக-பொருளாதார நீதியையும் உறுதிப்படுத்துகிறது. நவீன அரசின் இலக்காக மக்கள்நல அரசு என்ற நிலையை காட்டுவதற்கான வாய்ப்புகளை ஒரு மக்களார்சி வடிவிலான அரசே வழங்குகிறது.
 • ஒரு நாடு தமது பின்னடைந்த நிலையிலிருந்து விடுபட்டு முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கான சமூக-பொருளாதாரச் சீர்திருத்தங்களை அரசே முன்மொழிந்து நடைமுறைப்படுத்துகிறது.
 • இந்தியாவில், தற்காலம் மட்டுமல்லாமல் எதிர்கால வளர்ச்சிக்குமான தேவைகளை எட்டும் வகையில் நாட்டின் மூலவளங்களை உரிய வகையில் பயன்படுத்தி மக்களின் பொதுநலன்களைக் காட்டிலும் செயல்திட்டங்களை உருவாக்குவதற்காக திட்ட ஆணையம் நிறைவேற்றப்பட்டது.

 • இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாகவே பொருளாதாரத் திட்டமிடலில் தேவைக் குறித்து அறிந்திருந்தது. 1936இல் எம்.விஸ்வேசுவரய்யா ‘இந்தியாவுக்கான திட்டமிட்ட பொருளாதாரம்’ என்னும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார். அதில் இந்தியாவுக்கான ஒரு பத்தாண்டு திட்டத்தினை முன்மொழிந்திருந்தார். அவரே , இந்தியாவுக்கான பொருளாதாரத் திட்டமிடலின் முன்னோடி என்று கருதப்படுகிறார்.
 • 1938இல் நடைபெற்ற அனைத்து இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முயற்சியால் தேசியத் திட்டக்குழு உருவாக்கப்பட்டது.
 • இந்திய நாடு எதிர்கொள்ள உள்ள பல்வேறு பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு விடைக் காணும் வகையில் ஒரு நாடு தழுவிய பொருளாதாரத் திட்டத்தினை தயாரிப்பதே இதன் நோக்கமாகும். உடனடியாக, இரண்டாம் உலகப்போர் வெடித்ததாலும் அதனைத் தொடர்ந்து தேசியத் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதனாலும் இக்குழுவால் அத்திட்டத்தினை உருவாக்க முடியவில்லை.
 • 1944இல் இந்திய தொழிலதிபர்களால் ஒரு பொருளாதார வளர்ச்சித்திட்டம் உருவாக்கப்பட்டது. இது பம்பாய் திட்டம் என்று அழைக்கப்பட்டது.
 • மக்கள் திட்டம் என்று அழைக்கத்தக்க இத்திட்டத்தினை எம்.என்.ராய் முன்மொழிந்தார். இத்திட்டத்தில் வேளாண்மை வளர்ச்சிக்கும், சிறுதொழில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
 • 1944இல் ஸ்ரீமன் நாராயண அகர்வால், காந்தியத் திட்டம் ஒன்றை முன்மொழிந்தார். பின்னர், 1950 இல் முன்மொழிந்த திட்டம் சர்வோதயத்திட்டம் என்று அழைக்கப்பட்டது. இந்த அனைத்து திட்டங்களுமே இந்தியப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தன.

விடுதலைக்கு பின்பான திட்டமிடல்

 • விடுதலைக்கு பின்னர் உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அனைத்து மக்களுக்கும் சமூக-பொருளாதார நீதியை உறுதிப்படுத்தும் வண்ணம், அரசமைப்பு பிரிவு IV இல் அரசு கொள்கைக்கான வழிகாட்டு கொள்கை நெறிமுறைகள் இணைக்கப்பட்டது.
 • பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி உறுதி அளிக்கப்படுவதும் இணைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அரசமைப்பை உருவாக்கியவர்கள் நன்கு புரிந்திருந்தனர். இதனால், திட்டமிடல் நீண்டக் கால வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதினர். இதன்படி, பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்கான கருவியாக திட்டமிடுதலை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.
 • நாட்டின் வருவாயும் தனிநபர் வருவாயும் உயரும் பொருட்டு அதிகரிக்கும் வகையில் உற்பத்தியை பெருக்குவதை நோக்கமாகக் கொண்டே இந்திய திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது.
 • வேலைவாய்ப்பு உத்திரவாதம், பணக்காரர் ஏழைகளுக்கிடையே பொருளாதார இடைவெளியைக் குறைப்பது ஆகிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. நாட்டில் சமத்துவத்தை உருவாக்குவதில் அரசுக்கு முக்கியப் பங்கு இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் சமூக-பொருளாதார நீதியை உறுதிப்படுத்த முடியும் என்று, பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்றும் எதிர்பார்த்தது.

இந்தியத் திட்ட ஆணையம்

 • இந்தியத் திட்ட ஆணையம் 1950ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு தலைமையில் இது உருவாக்கப்பட்டது.
 • இந்திய அரசு தீர்மானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட இந்திய திட்ட ஆணையம் ‘நாட்டின் வளங்களை மிகுந்த திறனுடன் சமநிலையுடனும்’ பயன்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கும் நோக்கமாக கொண்டிருந்தது.
 • திட்டங்களை உருவாக்குவது தொடர்பான ஒரு ஆலோசகர் என்ற பங்களிப்பினை திட்ட ஆணையம் ஆற்றுகிறது. அத்திட்டங்களை நடைமுறைபடுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

திட்ட ஆணைய பணிகள்

 • நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான மூலவளங்களை மதிப்பீடு செய்வது திட்ட ஆணைய பணியாகும். மனித வளங்கள், மூலதனம், கச்சா பொருள்கள் ஆகியனவும் இதில் அடங்கும்.
 • மூலவளங்களை மிகுந்த திறனுடனும் சமநிலைத் தவறாமலும் பயன்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பது ஆணையத்தின் முதன்மை பணியாகும்.
 • முன்னுரிமை அடிப்படையில் துறைகள் கண்டறியப்பட்டு மூலவளங்களை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மேலும், திட்டங்களை ஒவ்வொரு கட்டமாக நிறைவேற்றி முழுமைப்படுத்துவதிலும் ஆணையத்தின் பொறுப்பாகும். எனவே, வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் சூழ்நிலைகளை அடையாளம் காண வேண்டியது ஆணையத்தின் பொறுப்பு ஆகும்.
 • நாட்டில் அவ்வப்போது நிலவும் சூழ்நிலைகளுக்கு தக்கவாறு திட்டங்களை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கான வழிகளையும் திட்ட ஆணையம் ஆராய்கிறது. ஒரு திட்டத்தின் பல்வேறு கட்டங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய இலக்குகளை ஆணையம் வரையறை செய்கிறது.
 • எனவே, திட்டச் செயல்பாடுகள் உரிய கால இடைவேளைகளில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இதன்மூலம் உரிய செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த செயல்முறைகளில் உரிய செயல்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் வகுக்கும் வகையில் ஆலோசகராக திட்ட ஆணையம் இயங்குகிறது.
 • ஒரு குறிப்பிட்ட பிரச்சனைகள் எழும்போது அதனை ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதும் திட்ட ஆணையப் பணியாகும்.
 • மேலும், ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட்ட காலத்தில் எட்ட வேண்டிய இலக்குகளை வகுத்து, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வரையறை செய்வதும் ஆணையத்தின் பணி ஆகும்.

நிறுவனமும் அமைப்பும்

 • பிரதமர், நான்கு முழு நேர உறுப்பினர்கள், கேபினட் அமைச்சர் நிலையிலுள்ள நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் ஆகியோரை திட்ட ஆணையம் கொண்டுள்ளது.
 • முழுநேர ஊழியர்களை பொருத்தமட்டில் தொழில்நுட்பத்துறை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியத் துறைகளில் வல்லமைமிக்கவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். திட்ட ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை பிரதமர் ஏற்று, ஆணையப் பணிகள் சுமூகமாக நடைபெற ஒத்துழைக்கிறார்.
 • நிர்வாக சீர்திருத்த ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை ஏற்று திட்ட ஆணையம் மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி, பிரதமர் தலைவராக இருந்து கூட்டங்களை தலைமை ஏற்று நடத்துவார்.
 • ஆணைய துணைத் தலைவர் பொறுப்பில் நியமிக்கப்படும் ஒருவர் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராக செயல்படுவார். திட்ட அவரிவுகளை தயாரித்து மத்திய அமைச்சகம், செயலகம், நான்கு முழு நேர உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்களாக உள்ள சம்மந்தப்பட்ட கேபினட் அமைச்சர்கள் ஆணையத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களான நிதி அமைச்சர், திட்ட அமைச்சர், உறுப்பினர் மற்றும் செயலர் (இவை பொதுவாக இ.ஆ.ப. அலுவலர் ஆவர்) ஆகியோருக்கு அனுப்ப வேண்டியது திட்டக்குழு உதவித்தலைவரின் பொறுப்பாகும்.
 • ஆணையத்தின் நிர்வாகச் செயல்பாடுகள் கூடுதல் செயல்பாடுகள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. திட்டங்களை கண்கானிக்கும் பொறுப்பில் துறைச் செயலாளர்கள், கீழ்நிலைச் செயலாளர்கள், நிலையிலான உயர் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். திட்ட ஆணைய நிர்வாகத்தில் மாநில அரசுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை. இது முழுவதும் மத்திய அரசு அமைப்பாகும்.
 • கூட்டுப்பொறுப்பு எனும் நெறியின் கீழ் திட்ட ஆணையம் இயங்குகிறது. பொதுப்பிரிவு, பொருள் பிரிவு, நிர்வாகப் பிரிவு என மூன்று பிரிவுகளாக ஆணையம் பிரிக்கப்பட்டுள்ளது.
 • பொருளாதாரம் தொடர்பான அனைத்து பணிகளையும் இப்பிரிவு மேற்கொள்கிறது. குறிப்பிட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த திட்டங்கள் உதாரணமாக, உணவு, வேளாண்மை, மின்சாரம், நீர்ப்பாசனம், போக்குவரத்து போன்ற தனிப்பட்ட துறைகளுக்கான திட்டங்கள் பொருள் பிரிவின் கீழ் வருகின்றன. நிர்வாகப் பணிகள் நிர்வாகப் பிரிவின் கீழ் வருகின்றன.
 • இதைத்தவிர, வேறு சில பிரிவுகளும் திட்டங்கள் உருவாக்கம் மற்றும் அமலாக்கம் தொடர்பாக இயங்குகின்றன. அவை பின்வருமாறு,
 1. தேசிய திட்டக்குழு

4-வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் 1965இல் தேசிய திட்டக்குழு அமைக்கப்பட்டது. அறிவியல், பொறியியல், பொருளாதாரம் ஆகிய துறை வல்லுநரைக் கொண்டு உருவாக்கப்படும் இக்குழு வேளாண்மை, நிலச்சீர்திருத்தம், நீர்ப்பாசனம் , கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்துறை, வர்த்தகம், மேலாண்மை, குடும்பக்கட்டுப்பாடு, சமூக நலம், இயற்கை வளங்கள், போக்குவரத்து, பன்னாட்டு வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுகிறது. இந்த ஒவ்வொரு துறையிலும் தேவைகள் குறித்து விரிவான ஆய்வு செய்து திட்ட ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டியது இக்குழுவின் கடமையாகும்.

 1. தேசிய வளர்ச்சிக்குழு

பிரதமர் தலைமையிலான தேசிய வளர்ச்சிக் குழுவில் அனைத்து முதலமைச்சர்களும் உறுப்பினர்கள் ஆவர். இக்குழுவில் மாநிலங்கள் இணைக்கப்பட்டதன் மூலம் ஒவ்வொரு மாநிலங்களிலும் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவது சாத்தியமாகிறது. தேசிய வளர்ச்சிக் குழு கூட்டங்களில் மத்திய அரசின் கேபினட் அமைச்சர்கள் சில நேரங்களில் பங்கேற்பதில்லை. திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை அவ்வப்போது சீராய்வு செய்வதும் மாநில வளர்ச்சி குறித்த பல்வேறு பிரச்சனைகளை விவாதிப்பதும் இக்குழுவின் பங்காகும். திட்டங்களை திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை உருவாக்குவதும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதும் இக்குழுவின் பணிகளாகும். எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான மூலவளங்களை கருத்தில் கொண்டு, நிர்வாகப் பணிகளை திறம்பட செயல்படுத்தும் வகையில் இக்குழு பணியாற்றுகிறது.

வறுமை ஒழிப்பை நோக்கி

 • இந்தியாவின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று வறுமையாகும். நாட்டில் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதையும் திட்ட ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்து பிரிவினர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பொது மக்களின் வாழ்க்கைத்தரம் அவரது பொருளாதார நிலையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்ற கருத்து புரிந்து கொள்ளத்தக்கது.
 • அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம் வழங்குவதுடன் அவர்கள் ஒரு நாகரிகமான வாழ்க்கையை நடத்துவதற்கான தேவையை கல்வி, சுகாதாரம் ஆகியவற்றையும்பெரும் வகையில் தரமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவது அரசின் முக்கியமான கடமையாக உணரப்பட்டுள்ளது.
 • ஆனாலும், பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு என்பது இன்னமும் சவாலாகவே நீடிக்கிறது. எனவே, 4-வது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து அரசு இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி வருகிறது. 1970-களின் தொடக்கத்தில் “வறுமையை ஒழிப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டது.
 • வறுமை ஒழிப்புக்கான வழிகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வேலையின்மை மற்றும் முழுமையான வேலையின்மை காரணமாக ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அனைத்து ஐந்தாண்டு திட்டங்களும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளித்தன.

சமூக நீதியினை உறுதிப்படுத்துதல்

 • அரசமைப்பின் 38(2)-வது உறுப்பு இவ்வாறு கூறியது: “அரசு குறிப்பாக, வருமானத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதையும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பிரிவினர் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் மக்கள் குழுக்கள் மற்றும் தனிநபரிடையிலும் தகுதி, வசதி, வாய்ப்புகள் ஆகியவற்றில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதையும் நோக்கமாகக் கொள்ள வேண்டும். “திட்டங்களை வகுப்போர் இப்பிரிவினை மனதில் கொண்டு திட்டங்களை வகுக்கின்றனர்.
 • சமூக நீதியை உறுதிப்படுத்துதல் என்பது பொருளாதாரத்தை திட்டமிடும் நிலையிலேயே இணைந்து உள்ளது. வளர்ச்சிக்கான வழிமுறைகளை வகுக்கும்போது கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக அனைவருக்கும் சமவாய்ப்புகளை உருவாக்குவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
 • சமூக மயப்படுத்தப்பட்ட சமுதாயங்களில் உருவாக்குவதன் மூலம் செல்வங்கள் ஒரு சிலர் கைகளில் மட்டுமே குவிவது தடுக்கப்படுவதுடன் சுரண்டல், ஒடுக்குமுறை ஆகிய கொடுமைகளுக்கு முடிவு கட்ட இயலும்.
 • வரலாற்று பூர்வமாகவே இந்திய சமுதாயம் என்பது சமூகத்தின் ஒரு பிரிவால் மற்ற பிரிவு ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வந்திருக்கிறது. எனவே தான், இத்தகைய பழைமை வாய்ந்த சக்திகள் மற்றும் சமூகத் தீமைகளை தடுக்கும் வழிகளை காண்பது அரசமைப்பை உருவாக்கியவர்களுக்கு சவாலாகவே அமைந்தது.
 • அடிப்படை உரிமைகள் குறித்து பேசும் அரசமைப்பின் பிரிவு III-ன் கீழ் ஒருவர் முழுமையாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து உரிமைகளும் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பட்ட அடிப்படை உரிமைகள் ஆகும். பிரிவு IV அரசு கொள்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் மக்களின் வருமானத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை குறைந்து ஒரு சமத்துவ சமுதாயம் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அரசின் பணிகள் அமைய வேண்டும் என்று கூறுகிறது.
 • திட்ட ஆணையம் கவனம் செலுத்த வேண்டியுள்ள மற்றொரு முக்கிய பகுதி கிராம நகர்ப்புற ஏற்றத்தாழ்வாகும். பொருளாதார வளர்ச்சி, தொழில்மயமாக்கல், நகர்மயமாக்கல் ஆகியவற்றிற்கான செயல்பாடுகள் அதிகரிக்கும்போது, இந்திய சமூகத்திலும் பொருளாதாரத்திலும் அதன் பாதிப்பு ஏற்படுகிறது.
 • கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழும் மக்களின் வளர்ச்சியில் காணப்படும் ஏற்றத்தாழ்வு அரசமைப்பில் கூறப்பட்டுள்ள கொள்கை நெறிக்கு எதிராக சமத்துவமின்மையை ஊக்குவிக்கிறது.
 • எனவே, இந்த ஏற்றத்தாழ்வினை அகற்றி சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் கிராம பொருளாதாரத்தினை முன்னேற்றுவதற்கான பல திட்டங்களை திட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் நிலை

மனிதக்கழிவுகளை மனிதரே அகற்றும் நிலைத் தொடர்வது அரசமைப்பில் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானது என்றும் எனவே இதுபோன்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுவோருக்கு உரியப் பாதுகாப்புகளை உறுதிப்படுத்துவது தொடர்புடைய அரசுகள், நிறுவனங்களின் கடமை என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2011ஆம் ஆண்டே முக்கியத் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இன்றும்கூட இந்தியாவின் பல நகரங்களில் இந்நிலை நீடிக்கிறது.

உலகளாவிய பலபரிமாண வறுமைப் பட்டியல் 2018 (MPI)

பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் கடந்து வறுமைகளை ஒழிப்பதற்காக பலபரிமான அணுகுமுறைகளின் முக்கியத்துவம் வளம் குன்றா வளர்ச்சிக்கானச் செயல்திட்டம் 2030இல் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. வளம் குன்றா வளர்ச்சி இலக்கு -1 வறுமையை அனைத்து வடிவங்களிலும் முடிவுக்கு கொண்டுவருமாறு அறைக்கூவல் விடுக்கிறது. இதற்கான சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான முயற்சிகளில் உலகளாவிய பலபரிமாண வறுமை பட்டியல் 2011இல் இறங்கியது. இதையொட்டி வறுமையை அனைத்து வடிவங்களிலும் ஒழிப்பதற்கான புதிய சாளரம் திறக்கப்பட்டது. 2018இல் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி 105 நாடுகளில் வறுமை பல்வேறு பரிமாணங்களில் இருப்பதை உலகளாவிய பலபரிமாண வறுமை பட்டியலை மதிப்பீடு செய்தது. உலக மக்கள் தொகையில் 77 விழுக்காடு மக்கள் இவ்வாறே வறுமையின் படியில் சிக்கியுள்ளனர்.

2018 உலகளாவிய பலபரிமாண வறுமை பட்டியல் : பரிமாணங்கள், சுட்டி, ஏற்றத் தாழ்வு குறைப்பு, எடை

மக்கள் எவ்வாறு பல்வேறு காரணங்களால் பல்வேறு சூழல்களில் வறுமைக்கு ஆளாகின்றனர் என்பதை பொருளாதார காரணங்கள் தாண்டியும் உலகளாவிய பலபரிமான வறுமை பட்டியலை ஆய்வு செய்தது. அப்போது மூன்று முக்கிய பரிமாணங்களான சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் மக்கள் பின்தங்கியிருப்பது அடையாளம் காணப்பட்டது. இவற்றின் தரம் 10 சுட்டிகளாக அளவிடப்பட்டது. வறுமையில் வாழும் மக்களில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதி மக்களாவது கீழ்க்காணும் அட்டவணையில் மிகவும் கீழ்நிலையில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது.

வறுமையின் பரிமாணம் அட்டவணை ஒவ்வொரு வீட்டிலும் வறுமைக்கான காரணம் எடை
சுகாதாரம் ஊட்டச்சத்து 70 வயது கடந்த முதியோர் அல்லது குழந்தை ஊட்டச்சத்து குறைவால் பாதிப்புக்குள்ளாவது. 1/6
குழந்தை இறப்பு விகிதம் பிறந்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு குழந்தை இறப்பது. 1/6
கல்வி பள்ளி ஆண்டுகள் 10 வயது அல்லது அதை கடந்த உறப்பினரில் 6 ஆண்டுகள் பள்ளியில் கழித்தவர்கள் 1/6
பள்ளி வருகை பள்ளிக் கல்வி வயதில் 8ஆம் வகுப்பைக்கூட நிறைவு செய்ய இயலாத இடைநிற்றல் குழந்தைகள். 1/6
வாழ்க்கைத்தரம் எரிபொருள் விறகு, சாணம், கரி போன்றவற்றைப் பயன்படுத்தி சமையல் 1/18
பொதுச் சுகாதாரம் வளம் குன்றா வளர்ச்சி இலக்குகள் வழிகாட்டுதலின்படியான பொதுச்சுகாதாரம் வசதியின்மை அல்லது சற்று மேம்பட்டு இருந்தாலும் சுற்றுப்பகுதியில் இருக்கும் அளவிற்கு மேம்படாத நிலைமை. 1/18
வாழ்க்கைத்தரம் குடிநீர் வளம் குன்றா வளர்ச்சி இலக்குகள் வழிகாட்டுதலின்படியான மேம்பட்ட குடிநீர் வசதியின்மை அல்லது வீட்டிலிருந்து குறைந்தது 30 நிமிடங்கள் நடந்து சென்றால் மட்டுமே குடிநீர் பெறும் நிலைமை. 1/18
மின்சாரம் மின்வசதி இல்லாத வீடு 1/18
வீட்டுவசதி முறையான கூரை, சுவர், தளம் இல்லாத வீடு : இயற்கையாக கிடைக்கும் பொருள்களை கொண்டு கூரை, சுவர் மற்றும் தளங்களை அமைத்தல். 1/18
உடமைகள் வானொலி, தொலைக்காட்சி, தொலைப்பேசி, கணினி, மாட்டுவண்டி, இருசக்கர மிதிவண்டி, இருசக்கர மோட்டார் வாகனம், ரெப்ரிஜிரேட்டர் போன்ற பொருள்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் வீட்டில் இல்லாதது; சொந்த கார் இல்லாதது. 1/18

மக்களாட்சி சமதர்மம்

 • இந்தியா விடுதலைப் பெற்ற தருணத்தில் தேசத்தை எவ்வாறு ஆள்வது எவ்வாறு திட்டமிடுவது என்பதில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. இவற்றில் ஒன்று நீண்டக்கால வளர்ச்சிக்கான சிறந்த செயல்திட்டம் எது என்பதை கண்டுபிடிப்பதாகும்.
 • இந்திய வளர்ச்சிக்கான திட்டமிடுதலின் சிற்பி ஜவஹர்லால் நேரு ஆவார். அவரை பொறுத்தவரை சோவியத் யூனியன் பின்பற்றிய திட்டமிடல் முறையில் மட்டுமல்லாமல் முதலாளித்துவம் பின்பற்றிய தாராளவாத கொள்கைகளாலும் கவரப்பட்டிருந்தார். இந்த இரண்டு கோட்பாடுகளும் இணைந்து இந்தியாவில் பின்பற்றப்படவேண்டும் என்று அவர் விரும்பினார். இதுவே மக்களாட்சி சமதர்மம் என்று அழைக்கப்படுகிறது.

கலப்புப் பொருளாதாரம்

 • தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் தாராளவாத கொள்கைகளை, சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களை ஊக்கப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியதே கலப்புப் பொருளாதாரக் கொள்கை. இதன்மூலம் உற்பத்தி அமைப்புகள் சமூகமயப்படுத்தப்படுவதுடன் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரங்களும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • தற்போது இந்தியா பின்பற்றி வரும் இந்த கலப்புப் பொருளாதாரக் கொள்கை உலகில் பல நாடுகளை கவர்ந்துள்ளது.
 • 1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொழிற்கொள்கை தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரக் கொள்கையின் வழிக்காட்டுதலாக இது பின்பற்றப்படுகிறது. இத்தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஐந்தாண்டுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
 • சமதர்ம சமுதாயத்தை எட்டும் வகையில் அரசு நிர்வாகத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தொழிற்துறை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, முழுவதும் அரசுடைமை ஆக்கப்பட்ட தொழில்களாகும்.
 • இரண்டாவது பிரிவு, அரசுடைமை ஆக்கப்பட்டபோதிலும் பொதுத்துறை நிறுவனங்களையும் உள்ளடக்கும் வாய்ப்புகளை கொண்ட தொழில்களாகும்.
 • மூன்றாவது பிரிவு, தனியார் தொழில் நிறுவனங்களாகும். அனைத்து தொழில் பிரிவுகளையும் அரசு கட்டுப்படுத்துகிறது. மூன்றாவது பிரிவான தனியார் தொழில்கள் இலாபம் அல்லது சுயநலனை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல் ஒட்டு மொத்த சமூகத்தின் நலனும் பாதுகாக்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்படுகிறது. சமுதாய நலனே உச்ச முன்னுரிமையாகும்.
 • ஒரு கலப்புப் பொருளாதாரத்திற்கான முன் நிபந்தனையாக திட்டமிடல் கருதப்படுகிறது. பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளின் பயன்கள் சமுதாய நலனுடன் இணைக்கப்பட வேண்டும். இதையொட்டி ஐந்தாண்டு திட்டமிடல் உருவாக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியையும் சமூக நீதியையும் எட்டும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
 • உரிய முறையில் வளர்ச்சியை கொண்டு வருவதற்கான உரிய திட்டங்களை உருவாக்குவது மற்றும் அதற்கான உரிய செயல்திட்டங்களை தகவமைப்பது ஆகிய பொறுப்புகளும் அரசை சார்ந்ததாகும்.

 • P.V.நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசு அரசு அமைந்ததை தொடர்ந்து 1991இல் ஜூலையில் பொருளாதார சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.
 • இந்திய பொருளாதாரத்தின் மீது நிலவிய அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாடுகளை குறைத்து இந்தியப் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கும் வகையில் தாராளமயப்படுத்துவதை இது நோக்கமாக கொண்டிருந்தது.
 • இதன்படி, உருவாக்கப்பட்ட சீர்திருத்தங்கள், தொழிற்துறை உரிமம் வழங்குதல், அந்நிய முதலீடு அனுமதி , அந்நிய தொழில்நுட்பங்கள் மற்றும் பொதுத்துறை கொள்கைகளில் செல்வாக்கு செலுத்தியது. ஏழாவது ஐந்தாண்டு திட்டம் 1990இல் நிறைவேறியது.
 • அன்றைய நாட்டின் பொருளாதார நிலையை கருதி அடுத்த எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் அறிமுகப்படுத்தவில்லை. அடுத்து வந்த 1990 – 91, 1991-92 ஆகிய இரு ஆண்டுகளில் ஆண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் 1992இல் கொண்டு வரப்பட்டது.

நிதி ஆயோக்

மாறும் இந்தியாவிற்கான தேசிய நிறுவனம் (NITI Aayog)

 • திட்டமிடல் அணுகுமுறையில் இந்திய அரசு 2015ஆம் ஆண்டு பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. திட்ட ஆணையத்திற்கு பதிலாக நிதி ஆயோக் (மாறும் இந்தியாவிற்கான தேசிய நிறுவனம்) எனும் புதிய ஆணையத்தினை அறிமுகப்படுத்தியது.
 • ஒட்டுமொத்த திட்டமிடல் செயல்முறைகளையும் மேலும் அதிகார பரவலாக்கம் செய்யும் நோக்குடன் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகள் சிறப்பான முறையில் பங்கேற்க முடியும்.
 • மாநிலங்கள் விரிவான அளவில் பங்களிக்கும் வகையில் கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பு உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. அது, தேவை அடிப்படையிலான திட்டங்களுக்கு கவனம் செலுத்துவதுடன் ஒட்டுமொத்த செயல்களிலும் மக்கள் தொகையில் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கி வளர்ச்சி செயல்முறையில் ஒரு பகுதியாக பங்கேற்க செய்கிறது.
 • ஆனால் மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்கள் வழங்காமல் போதிய ஆதாரங்களை அளிக்காமல் இந்த மாநில அரசுகள் திட்டமிடலில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கமுடியும் என்று கூறுவது பலனளிக்காது.
 • மேலும் திட்ட ஆணையத்தை கலைத்ததன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் இதுவரை அரசுக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு தனியார் நிறுவனங்களின் கைகளில் விடப்பட்டது.
 • இருப்பினும், தற்போதைய உலக நிலவரங்கள் மற்றும் பொருளாதார அம்சங்களை உற்று நோக்கும்போது ‘சந்தை அடிப்படையிலான பொருளாதாரம்’ தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

 • அரசின் சிந்தனை பிரிவாக மட்டுமே நிதிஆயோக் செயல்படுகிறது. அது, அரசுக் கொள்கை உருவாக்கத்தில் பொருத்தமான தொழில்நுட்ப அறிவுரைகளை மட்டுமே மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.
 • தேசிய மற்றும் சர்வ தேசிய முக்கியத்துவம் கொண்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அது அறிவுரை வழங்கி தமது நாட்டுக்கும் உலகில் பிற நாடுகளுக்கும் எவை சிறந்த நடைமுறைகளாக இருக்க முடியும் என்பதையும் ஆராய்ந்து கூறுகிறது. 2015, ஜனவரி 1 அன்று மத்திய அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசு திட்ட ஆணையம் கலைக்கப்பட்டு நிதிஆயோக் உருவாக்கப்பட்டது.

அமைப்பு

 • நிதி ஆயோக் தலைவராக பிரதமர் செயல்படுவார். அவர் ஒரு துறைத் தலைவரை நியமனம் செய்வார். ஐந்து முழுநேர மற்றும் இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள் இருப்பர்.
 • அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஒன்றிய பகுதிகளின் துணை நிலை ஆளுநர்களைக் கொண்ட ஆளுநர் குழுவை கொண்டிருக்கும்.
 • மாநிலங்கள் அல்லது மண்டலங்களின் குறிப்பிட்ட பிரச்சனை தொடர்பாக விவாதிக்க மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறிப்பிட்ட கால வரம்பிற்குள் செயல்படும்.
 • குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், வல்லுநர்கள், துறை வல்லுநர்கள் போன்றோரை சிறப்பு அதிகாரிகளாக அழைக்கும் உரிமை பிரதமருக்கு உண்டு. பகுதி நேர உறுப்பினர்களாக முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறிவனங்களைச் சேர்ந்தவர்கள் பகுதி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். அலுவல் சாரா உறுப்பினர்களாக மத்திய அமைச்சரவையிலிருந்து நான்கு மத்திய அமைச்சர்கள் நியமிக்கப்படுவர். ஒரு தலைமை செயல் அதிகாரியையும் நிதி ஆயோக் கொண்டிருக்கும்.
 • இந்தியா பன்மைத்துவமும் மாறுபாடுகளும் கொண்ட நாடு என்பதை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. ஒவ்வொரு மாநிலங்கள் அல்லது ஒன்றியப் பகுதியின் இயல்பு வேறுபாடு கொண்டவை. ஒவ்வொரு பகுதியில் புவியியல் நிலைமைகளும் பொருளாதார நிலைமைகளும் வேறுபாடு கொண்டவை. சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களைவிட அதிக வளர்ச்சி அடைந்தவை.
 • எனவே, ஒருங்கிணைந்த சீரான திட்டத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டமுடியாது என்பதையும் நல்ல பயன்களைக் கொடுக்காது என்பதையும் இந்திய அரசு உணர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலம் அல்லது மண்டலத்தின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் நிதிஆயோக் அமைக்கப்பட்டது.
 • ஒரு வளரும் நாடு என்ற நிலையிலிருந்து எழுச்சிபெற்ற உலக நாடு என்ற நிலைக்கு இந்தியா மாறியுள்ளது என்று அமைச்சரவை தீர்மானம் தெரிவிக்கிறது. ஆனாலும் வறுமை ஒழிப்பு என்பது இன்னமும் மிகப் பெரிய சவாலாக நீடிக்கிறது.

திட்ட ஆணையத்திருக்கு பதிலாக நிதி ஆயோக் கொண்டு வரப்பட்டதன் காரணங்கள்:

 1. ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கி அதன் பொருளாதார இலக்குகளை எட்டும் வகையில் ஆதாரங்களை திட்ட ஒதுக்கீடு செய்ததற்கு மாறாக, மாறும் இந்தியாவுக்கான தேசிய நிறுவனம் என்ற புதிய அமைப்பு ஒரு சிந்தனைக் குழுவாகச் செயல்படும்.
 2. நிதி ஆயோக் அமைப்பு இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 9 ஒன்றிய பகுதிகளில் தலைவர்களை உள்ளடக்கியது. அதன் முழுநேர நிர்வாகிகளான துணைத் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிபுணர்கள் நிதி ஆயோக் தலைவர் பிரதமருக்கு நேரடியாக பதில் சொல்வர். இது திட்ட ஆணைய நடைமுறைக்கு மாறுபாடானதாகும்.
 3. திட்டமிடல் தொடர்பான முக்கிய வேறுபாடு என்னவென்றால் நிதி ஆயோக் திட்டமிடலில் பெரும் ஆர்வம் காட்டுமாறு மாநில அரசுகளுக்கு வாய்ப்புகள் அளிக்கும். மாறாக, திட்ட ஆணையத்தின் அணுகுமுறையோ அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவினைக் கொண்டதாக இருக்கும்.
 4. திட்ட ஆணைய பங்களிப்பு என்பது விரிந்த திட்டங்களை உருவாக்குவது என்றாலும் அதன் தகுதி ஆலோசனை வழங்குதல் என்ற அளவிலேயே இருந்தது. நிதி ஆயோக் மாநிலங்களின் தேவைக்கேற்ப ஆதாரங்களை ஒதுக்கீடு செய்யும் அதிகாரங்களைக் கொண்டு இருக்கிறது.
 5. திட்டமிடல் கொள்கை வகிப்பதில் மாநில அரசுகளுக்கு அறிய வாய்ப்புகள் அளிப்பதில்லை. இதுவே திட்ட ஆணையத்தின் அணுகுமுறையாக இருந்தது. மாநிலங்கள் நேரடியாக இல்லாமல் தங்கள் தேசிய வளர்ச்சி குழுவின் மூலம் மட்டுமே தங்கள் கருத்துக்களை கூற முடியும். நிதி ஆயோக்கில் இது தொடராது.

நிதி ஆயோக்கின் நோக்கங்கள்

 • முன்னுரிமை திட்டங்களை அடையாளம் காண்பதில் மாநில அரசுகளையும் மத்திய அரசு இணைத்துக் கொள்வதன் மூலம் திட்டமிடல் செயல்முறையின் மாநிலங்களின் இணைக்கப்படுகின்றன.
 • திட்டமிடல் செயல் முறையில் மாநிலங்களின் பங்களிக்க உள்ளதால் இது கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பாக செயல்படும். கிராமங்கள் அளவிலான நம்பகமானத் திட்டங்களை உருவாக்கி அவை வளர்ச்சியோடு ஒருங்கிணைக்கப்படும். பொருளாதார செயல்திட்டத்துடன் தேசப்பாதுகாப்பு இணைக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
 • சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முறைகேடுகளை தடுப்பதற்கு தேவையான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
 • பொருளாதார வளர்ச்சியின் அனைத்து பிரிவு மக்களும் பயனடைகீறார்களா என்பது கண்காணிக்கப்படும்.
 • தொலைநோக்கு கொள்கைகளும் திட்டங்களும் உருவாக்கப்பட்டு அவற்றின் வளர்ச்சியை நிதி ஆயோக் கண்காணிக்கும். படைப்பாற்றல் கொண்ட வளர்ச்சிகள் உருவாக்கப்படும். பயனாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வி மற்றும் கொள்கையாட்சி நிறுவனங்கள் போன்ற பங்காளர்களின் பங்கேற்பு ஊக்கப்படுத்தப்படும்.
 • தேசிய, சர்வதேச வல்லுநர்களைக் கொண்ட சமுதாயத்தின் மூலமாக அறிவும் ஊக்கமும், தொழில் முனைப்பும் கொண்ட ஆதரவு அமைப்பு உருவாக்கப்படும்.
 • வளர்ச்சித் திட்டங்களைத் துரிதப்படுத்தும் வண்ணம் பிரிவுகள் மற்றும் துறைகள் இடையிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான தளத்தினையும் வழங்குகிறது.
 • நீடித்த மற்றும் சமத்துவமான வளர்ச்சியை அடைவதற்கான சிறந்த நடைமுறைகளை உருவாக்குவதிலும் நல்ல ஆட்சி நிர்வாகத்தை உருவாக்குவதிலும் ஆராய்ச்சி சிறப்பாக மேற்கொள்வதற்கான திறன் மிக்க வளமையம் ஒன்றையும் அது பராமரிக்கிறது. தேவையான மூலவளங்களை அடையாளம் காண உதவும் வகையில் திட்ட அமலாக்கம் வடிவமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
 • புதிய திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ளுதல் மற்றும் தகுதிபடுத்தலுக்கு நிதி ஆயோக் அதிக அழுத்தம் தருகிறது. தேசிய வளர்ச்சி செயல்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான இதர நடவடிக்கைகளிஅயும் மேற்கொள்ளும்.
 • நிதி ஆயோக் தொடங்கப்பட்ட பின்னர் முன் முயற்சி மேற்கொண்ட சில திட்டங்கள் வருமாறு: பதினைந்தாண்டு செயல்திட்டம், ஏழு ஆண்டு கண்ணோட்டம், நகர்புற மாற்றம் மற்றும் மறு உருவாக்கத்திற்கான அடல் திட்டம், டிஜிட்டல் இந்தியா, அடல் புத்தாக்க திட்டம் போன்றவை.
 • 2018-2022 காலக்கட்டத்திற்கான வளம் குன்றா வளர்ச்சி வடிவமைப்பு ஒன்றில் நிதி ஆயோக் கையொப்பமிட்டுள்ளது. வளம் குன்றா வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் அரசின் உறுதிப்பாடு இதில் பிரதிபலிக்கிறது.
 • வறுமை ஒழிப்பு மற்றும் நகர்மயமாக்கம், உடல்நலம் குடிநீர் மற்றும் பொது சுகாதாரம், கல்வி, வேலை உருவாக்கம், பாலினச் சமத்துவம், இளைஞர் மேம்பாடு போன்ற பகுதிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
 • பல்வேறு நிலைகளில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பது மற்றும் ஒரு சிலர் கைகளில் செல்வம் குவிவதை தடுப்பது ஆகியவற்றை செயல்படுத்தக்கூடிய அம்சங்கங்கள் தற்போதைய பொருளாதார கொள்கைகளிலும் மற்றும் செயல் அமைப்புகளிலும் காணப்படுவதில்லை.
 • மேலும், திட்டக்குழு கலைக்கப்பட்டதால் தமது வருவாய் ஆதாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக பல மாநில அரசுகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
 • இந்த நடவடிக்கையின் காரணமாக தமது மக்களுக்கு தேவையான சொந்த திட்டங்களை உருவாக்கும் ஆற்றலும் செயல்படுத்தும் திறனும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
நிறுவன அமைப்பின் வேறுபாடுகள்
நிதி ஆயோக் திட்ட ஆணையம்
தலைவர் பிரதமர் பிரதமர்
துணைத்தலைவர் பிரதமரால் நியமிக்கப்படுகிறார் துணைத் தலைவர், கேபினட் அமைச்சர் தகுதி கொண்ட ஒருவர் நியமிக்கப்படுவார்.
ஆளுநர் குழு முதலமைச்சர்களும் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் தேசிய வளர்ச்சிக் குழு
உறுப்பினர் செயலர் பிரதமரால் நியமிக்கப்படும் இவர் தலைமை நிர்வாக அதிகாரி என்று அழைக்கப்படுகிறார். செயலர்கள் அல்லது உறுப்பினர் செயலர்கள் வழக்கமான செயல் முறைகளின் கீழ் நியமிக்கப்படுகிறார்கள்.
பகுதிநேர உறுப்பினர்கள் தேவையைப் பொறுத்து அவ்வப்போது பகுதி நேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். திட்ட ஆணையத்தில் பகுதிநேர உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான பகுதி வழங்கப்படவில்லை.
முழு நேர உறுப்பினர்கள் திட்ட ஆணையத்தை விட குறைவான எண்ணிக்கையில் முழுநேர உறுப்பினர்கள் எண்ணிக்கையில் இருக்கும். கடைசி திட்ட ஆணையத்தில் எட்டு முழு நேர உறுப்பினர்கள் இருந்தனர்.

இந்தியாவில் நிலச் சீர்திருத்தங்கள்

அறிமுகம்

 • நிலம் ஒரு முக்கிய செல்வமாக எப்போதும் கருதப்படுகிறது. அரிசி, கோதுமை போன்ற வேளாண் பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் செல்வம் ஈட்டித் தருவதோடு தொழிலாளர்கள் மற்றும் குத்தகை விவசாயிகள் ஆகியோரை அதிகாரம் செய்வதற்கான கருவியாகவும் நிலம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக காலனிய ஆட்சியின்போதே நிரந்தர குடியிருப்புச் சட்டம், நில ஒழுங்குமுறை சட்டம் போன்றவைகள் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளரால் கொண்டுவரப்பட்ட போதிலும் நில உடமையாளர்க்கும், குத்தகை விவசாயிகளுக்கும் இடையேயான மோதல்கள் தொடர்ந்தவாரே இருந்தன.
 • விடுதலைக்குப் பின்னரும் கூட இந்த மோதல்கள் தொடர்ந்தன. விடுதலை இந்தியாவில் இது ஒரு சிக்கலான பிரச்சனையாக எழுந்ததை தொடர்ந்து நில உடமையாளர்கள், குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், உழவர்கள் ஆகியோர்களுக்கான மோதல்களைத் தவிர்த்து ஒரு உடன்பாடு கொண்டு வருவதற்கான தீவிரமான முயற்சிகள் விடுதலை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டன.

 • நாடு விடுதலை அடைந்தபோது, நிலம் ஒரு சில கைகளில் மட்டும் குவிந்து இருந்தது. இதுவே, நிலமற்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு விட்டுச் சென்றது. இதனால் கிராமப்புற வாழ்க்கையில் சமூக-பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்தது. இந்தியா விடுதலை அடைந்த தருணத்தில் நாட்டில் பல இடங்களில் (தெலங்கானா, திருவிதாங்கூர், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டங்கள்) விவசாயப் போராட்டங்கள் வெடித்தன.
 • இத்தருணத்தில் நில உடமையாளர்கள் தங்களிடம் அதிகமாக உள்ள உபரி நிலங்களை தானமாக வழங்கும் பூமிதான இயக்கத்தினை வினோபா பாவே தொடங்கினார். அரசும் தேவையான சட்டங்களை இயற்றியது.
 • இவ்வாறு பெறப்பட்ட உபரி நிலங்கள் நிலமற்ற ஏழைமக்களுக்கு வழங்கப்பட்டன. ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையில் சர்வோதயா இயக்கம் கூட்டுறவு சங்கங்களை அமைத்து வலுப்படுத்தின.
 • தமிழ்நாட்டில் கிராமப்புற மக்கள் மத்தியில் பூமிதான இயக்கமும் சர்வோதயா இயக்கமும் வலுப்பெற ஜெகன்நாதன், கிருஷ்ணம்மாள் தம்பதியர் அரும்பாடுபட்டனர்.
 • நிலம் சமமாக பிரித்து வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சுதந்திர இந்தியாவில் கவனம் பெற்ற முதல் பிரச்சனையாக அமைந்தது. 1950-60 களில் நில உச்சவரம்பிற்கான சட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் இயற்றப்பட்டன. மத்திய அரௌச்ம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது.
 • நிலச்சீர்திருத்தங்கள் பொருத்தவரை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட முடியும்.
 • முதல் பிரிவு குத்தகை விவசாய முறை தொடர்பான சட்டங்களை இயற்றுவதாகும். இச்சட்டங்கள் மூலமாக குத்தகை விவசாய ஒப்பந்தங்கள் முறைப்படுத்தப்பட்டன. ஒப்பந்த விதிமுறைகளை வரையறைப்படுத்துவது விளைச்சலில் உரிய பங்கினை உறுதிப்படுத்தலின் குத்தகை ரத்து மற்றும் மாற்றம் போன்ற நடவடிக்கைகளை தடைவிதிப்பது போன்ற குத்தகை சட்ட சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
 • இரண்டாவது, இடைத்தரகர்களை தடைசெய்யும் நிலச்சீர்திருத்த சட்டங்கள் ஆகும். காலனி ஆட்சியில் ஜமின்தார்களின் கீழ் பணியாற்றிய இந்த இடைத்தரகர்கள் குத்தகை வாரம் வசூலிக்கும்போது அரசுக்கு அளிக்க வேண்டியதைவிட மிக அதிகமான பங்கினை எடுத்துக்கொண்டு உபரியை தமக்காக வைத்து கொண்டனர். இந்த இடைத்தரகர்முறை பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் 1958-க்கு முன்னதாகவே தடை செய்யப்பட்டுவிட்டது.
 • மூன்றாவது, நிலச்சீர்திருத்த சட்டங்கள் ஒருவர் எவ்வளவு நிலத்தை உரிமையாக வைத்துக் கொள்ளலாம் என்பதை வரையறை செய்வதாகும். இதன்மூலம் உபரி நிலங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு நிலமற்ற ஏழைகளுக்கு மறுபங்கீடு செய்யப்பட்டது.
 • நான்காவது, பிரிவு நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் நாம் மாறுபட்ட நிலங்களை வைத்திருப்பது தொடர்பானதாகும். இவ்வாறான நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் வேளாண்மையில் அதிக விளைச்சல் பெறுவதையும் வறுமை குறைப்பையும் நோக்கமாக கொண்டவையாகும்.

விடுதலைக்கு பிறகான நிலச் சீர்திருத்தங்கள்

 • இந்திய வேளாண்மைத் துறையில் காணப்பட்ட தனிப்பட்ட அம்சங்கள் என்னவெனில் பொருளாதார வளர்ச்சியை கொண்டுவருவதுடன் சமூக நீதியை வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.
 • இதையொட்டியே விடுதலைக்கு பிறகு ஒருங்கிணைந்த நிலச்சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதற்கு முன்னர் நிலவிய நிலத்தகராறுகள் மோதல்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

நிலச் சீர்திருத்தங்களின் நோக்கங்களை சுருக்கமாக கீழ்க்கண்டவாறு கூறலாம்.

 • ஜமீன்தாரி மூறை ஒழிப்பு, இடைத்தரகர் முறை ஒழிப்பு.
 • நில உச்ச வரம்பு கொண்டுவருதல்.
 • குத்தகை விவசாயிகள், உழவர்கள், விவசாய தொழிலாளர்கள் பாதுகாப்பு.
 • விவசாய சமுதாயங்கள் இடையே கூட்டுறவு.

அ) இடைத்தரகர் முறை ஒழிப்பு

நிலச்சீர்திருத்தச் சட்டங்களின் முதன்மை நோக்கங்களில் ஒன்று வேளாண் விளைச்சலைப் பகிர்வில் காணப்பட்ட முரண்பாடுகளுக்கு காரணமான இடைத்தரகர்கள் எனப்படும் ஜமீன்தார்கள், ஜாகிர்தார்கள் போன்றோரை அகற்றுவதாகும். இதன் மூலம் உழுபவனக்கே நிலம் சொந்தம் என்னும் முறை கொண்டுவரப்பட்டது. ஜமீன்தாரர்முறை ஒழிப்பு மற்ற மாநிலங்களைவிட உத்திடப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தற்காலிகமாகவாவது அமல்படுத்துவது எளிதாக அமைந்தது. அங்கு பத்திரப்பதிவுகள்முறை மற்றும் நிர்வாக இயந்திரம் ஏற்கனவே இருந்தது காரணமாகும்.

ஆ) நில உச்ச வரம்பு

 • நில உடமை மற்றும் பயன்பாட்டில் சமத்துவத்தை எட்டும் வகையில் நில உடமைக்கு உச்சவரம்பு விதிக்கும் உச்சவரம்பு சட்டங்கள் அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வரப்பட்டன.
 • இதன்மூலம் எதிர்காலத்தில் நிலம் பிரிக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டது. இருந்தபோதும், அளவுகள் நிர்ணயிப்பது, உடமை மாற்றங்கள், விதிவிலக்குகள் ஆகியன குறித்த சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டன.
 • அசாம், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நிலஉச்சவரம்பு முறையே 50 ஏக்கர், 22.75 ஏக்கர், 25 ஏக்கர் என ஒரே சீராக அமைந்தது.
 • ஆனாலும் மாநிலங்களுக்குள் நிலவிய இந்த வேறுபாடுகள் காரணமாக இது ஒரு அரசியல் பிரச்சனையாக மாறியது. இதனால் இந்த நில உச்சவரம்பு சட்டங்கள் முறையாக அமல்படுத்த இயலவில்லை.

தஞ்சை பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம், 1952

நாடு விடுதலையடைந்தபோது அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை பகுதியில் நில உடமைத்துவ பண்ணையடிமை நிலவியதால் பாதிக்கப்பட்ட சிறு குத்தகை விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்க பண்ணையாள் பாதுகாப்பு சட்டம், 1952 நிறைவேற்றப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இச்சட்டம் காலத்தின் தேவைக்கேற்ப தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் சிறு குத்தகை விவசாயிகள் தங்கள் விளைச்சலில் நியாயமான பங்கினைப் பெறுகிறார். இதேபோல நில உச்சவரம்புச் சட்டம், 1961 நிறைவேற்றப்பட்டு அவ்வப்போது காலத்தின் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து நிலம் பெறப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இ) குத்தகை வாரம் ஒழுங்குபடுத்துதல்

 • விவசாய குத்தகை மற்றும் தொழிலாளர் தொடர்பான அம்சங்களை சீர்படுத்தவும், நெறிமுறைப்படுத்தவும் மூன்றாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடுமையான குத்தகை நிபந்தனைகள் காரணமாகவும் குறைவான கூலி காரணமாகவும் வேளாண்மை தொழிலில் காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகள் குறித்து வேளாண்மை தொழிலில் நிலவிய சுரண்டலை தடுக்கும் நோக்கத்துடன் காங்கிரசு அரசு மத்திய-மாநில அரசுகளில் விவசாயக் கொள்கை கொண்டுவந்தது.
 • விவசாய பிரிவினர் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இச்சட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் திட்ட ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டன. அவற்றுள் குத்தகை வார விதிமுறைகள், குத்தகைவார பாதுகாப்பு, குத்தகைத்தாரர்களின் நில உரிமை பாதுகாப்பு ஆகியன முக்கிய அம்சங்களாகும்.

ஈ) கூட்டுறவு விவசாயம்

 • நான்காவது முயற்சியாக, விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து அனைவரும் இணைந்து பயிரிட்டு குத்தகை வாரம் மற்றும் செலவீனங்கள் போக விளைச்சலில் கிடைப்பதை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் கூட்டுறவு விவசாயமுறை கொண்டு வரப்பட்டது.
 • 1960-களின் இறுதிவரை 1.88 இலட்சம் உறுப்பினர்களுடன் 7,294 கூட்டுறவு விவசாய சங்கங்கள் இயங்கின. இவற்றின் கீழ் 3.93 இலட்சம் ஹெக்டர் பயிரிடப்பட்டது. இருந்தபோதும், இவற்றின் பெரும்பாலான கூட்டுறவு சங்கங்கள் செயலிழந்துவிட்டன.
 • சில சங்கங்கள் மட்டும் அரசு மானியத்தை பெறுவதற்காக பெயரளவில் இயங்குகின்றன. அதுவும் பழைய முறையில் விவசாயம் செய்கின்றனர். இதில் நிலங்களில் கூட்டு நடவடிக்கையோ வளங்கள் திரட்சியோ இருப்பதில்லை. பல மாநிலங்களில் நிலச்சீர்திருத்தங்கள் நீர்த்துப்போவதற்கு இவை வழிவகுத்தன.

இந்திய கூட்டுறவுச் சட்டம் 1904

இந்தியக் கூட்டுறவுச் சட்டம் 1904இல் இயற்றப்பட்டதன் அடிப்படையில் அன்றைய சென்னை மாகாண கூட்டுறவுச் சட்டம் 1932ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. விடுதலை பெற்றபின் இச்சட்டம் காலப்போக்கில் மேலும் பலப்படுத்தப்பட்டது. கூட்டுறவு வங்கிகள், நிலவள வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் என மூன்று வழிகளில் கூட்டுறவு அமைப்புகள் இயங்குகின்றன. வேளாண் தொழில்கள் மட்டுமல்லாமல் கைத்தறி நெசவு, பட்டு நெசவு, மண்பாண்டம் செய்தல் போன்ற பல கைவினைத் தொழில்களுக்கும் கூட்டுறவு அமைப்புகள் இயங்குகின்றன. இவ்வாறு தமிழ்நாட்டில் 10,000-க்கும் அதிகமான கூட்டுறவு அமைப்புகள் இயங்குகின்றன.

தமிழகத்தின் வளர்ச்சி அனுபவம்

“வருவாயில் தொடர்ந்து உயர் வளர்ச்சி விகிதத்தை எட்டியதன்மூலம் அண்மை காலமாக இந்தியாவின் தனிநபர் வருமானம் அதிகரித்து வந்தபோதும் இந்தியாவை போன்ற வருவாயுடைய பிர நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதன் மனித மேம்பாட்டு தர நிர்ணயங்களில் இன்னமும் பின்தங்கியே உள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் அண்டை நாடான வங்கதேசமாகும். அந்நாட்டில் தனிநபர் வருமானம் இந்தியாவைவிட குறைவாக உள்ளபோதும் மனித மேம்பாட்டு தரங்களில் பல துறைகளில் வங்கதேசத்தில் சிறப்பாக காணப்படுகிறது. இந்த வகையில் இந்தியாவிற்குள் தமிழ்நாடு மாநிலம் ஒப்பீட்டு அளவில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது.

“வருவாயில் தொடர்ந்து உயர் வளர்ச்சி விகிதத்தை எட்டியதன்மூலம் அண்மை காலமாக இந்தியாவின் தனிநபர் வருமானம் அதிகரித்து வந்தபோதும் இந்தியாவை போன்ற வருவாயுடைய பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதன் மனித மேம்பாட்டு தர நிர்ணயங்களில் இன்னமும் பின்தங்கியே உள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் அண்டை நாடான வங்கதேசமாகும். அந்நாட்டில் தனிநபர் வருமானம் இந்தியாவைவிட குறைவாக உள்ளபோதும் மனித மேம்பாட்டு தரங்களில் பல துறைகளில் வங்கதேசத்தில் சிறப்பாக காணப்படுகிறது. இந்த வகையில் இந்தியாவிற்குள் தமிழ்நாடு மாநிலம் ஒப்பீட்டு அளவில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களைவிட வளர்ச்சி விகிதத்தில் உயர்ந்து காணப்படுவதுப்போல மனித வளர்ச்சியிலும் உயர் எல்லைகளைத் தொட்டுள்ளது. உண்மையில் தெற்கு ஆசியா நாடுகளிலேயே சுகாதாரம் மற்றும் கல்வி வழங்குவதில் தமிழ்நாடு மாநிலமும் கேரளா மாநிலமும் மிக உயர்ந்த நிலையில் காணப்படுகின்றன.

1980 வரை நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் வறுமையில் வாடுவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாகவே காணப்பட்டு வருகின்றது. 1990-களுக்கு பின்னரே, வறுமை தொடர்ந்து குறைந்து வந்ததையும் தனிநபர் வருமானம் உயர்ந்ததையும் நாம் கண்டோம். சென் மற்றும் டிரெஸ் (2013) சுட்டிக் காட்டுவதைப்போல சமூக முரண்களுக்கான மூலவேர்களை தேடிய பொதுமக்கள் எழுச்சி பொதுவெளிகளில் சாதிய படிநிலைகளில் மேலாதிக்கம் நிலவுவதை எதிர்ந்து கேள்விகள் எழுப்பி பொதுவெளியை மக்களாட்சிபடுத்தியது ஆகியவற்றின் காரணமாகவே பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டம் போன்ற சமூக உள்கட்டமைப்புகளில் அரசு முதலீடுகள் செய்தது; இந்த முன்னேற்றத்திற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

மேலும், சமூக நலத்திட்டங்களில் அரசு முதலீடுகள் செய்வதால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முதலீடுகள் மடைமாற்றம் செய்யப்பட்டு வளர்ச்சி தடுக்கப்படுகிறது என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால், சமூக நலத்திட்டங்களில் முதலீடு செய்வதால் வளர்ச்சி தடுக்கப்படாது ; மாறாக, வளர்ச்சி வீதம் அதிகரிக்கும் என்பதற்கான உதாரணமாக தமிழ்நாடு அனுபவம் விளங்குகிறது. உண்மையில் கூட்டுச் செயல்பாடுகள் மக்களாட்சிப்படுத்தக்கூடிய இத்தகைய சமூக நலத்திட்டங்கள் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கான தூண்டுதலாக அமைகிறது. முக்கியமாக வளர்ச்சி மேம்பாட்டின் காரணமாக அரசால் எதிர்காலத்திற்கு தேவையான மூலவளங்களை திரட்டிக் கொள்வதும் அனுமதிக்கப்படுகிறது”

ஆதாரம்: தமிழ்நாடு மனித வளர்ச்சி அறிக்கை, மாநிலத் திட்ட ஆணையம் 2017.

கூட்டுறவு விவசாயம்

 • நான்காவது முயற்சியாக, விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து அனைவரும் இணைந்து பயிரிட்டு குத்தகை வராம் மற்றும் செலவீனங்கள் போக விளைச்சலில் கிடைப்பதை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் கூட்டுறவு விவசாயமுறை கொண்டு வரப்பட்டது.
 • 1960-களின் இறுதிவரை 1.88 இலட்சம் உறுப்பினர்களுடன் 7,294 கூட்டுறவு விவசாய சங்கங்கள் இயங்கின. இவற்றின் கீழ் 3.93 இலட்சம் ஹெக்டர் நிலங்களில் பயிரிடப்பட்டன. இருந்தபோதும், இவற்றின் பெரும்பாலான கூட்டுறவு சங்கங்கள் செயலிழந்துவிட்டன. சில சங்கங்கள் மட்டும் அரசு மானியத்தை பெறுவதற்காக பெயரளவில் இயங்குகின்றன. அதுவும் பழைய முறையில் விவசாயம் செய்கின்றனர். இதில் நிலங்களில் கூட்டு நடவடிக்கையோ வளங்கள் திரட்சியோ இருப்பதில்லை. பல மாநிலங்களில் நிலச்சீர்திருத்தங்கள் நீர்த்துப்போவதற்கு இவை வழிவகுத்தன.

நிலச்சட்டம் : நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஆறு அம்சங்கள் (2013)

உள்கட்டமைப்பு உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கு நிலம் தேவைப்படும்போது அந்நிலங்களை வைத்திருப்போரிடமிருந்து கையகப் படுத்துவதற்குகாக மத்திய அரசு சட்டங்களில் திருத்தம் (2013) கொண்டு வந்தது. இது நிலச்சட்டம் என அழைக்கப்படுகிறது.

 1. நிலம் கையக்கப்படுத்தும்போது வெளிப்படைத்தன்மை , நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் மறுக்குடியிருப்பு (திருத்தம்) சட்டம் 2015. இது 2013 சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமாகும் (LARR Act, 2013).
 2. இச்சட்டம் நிலப்பயன்பாட்டில் ஐந்து வகைமைகளை உருவாக்கியது.
 3. பாதுகாப்பு,
 4. ஊராக உள்கட்டமைப்பு
 5. எளிய மக்கள் வீட்டு வசதித் திட்டங்கள் (affordable housing),
 6. தொழிற்சாலைத் தொகுப்பு,
 7. அரசு, தனியார் பங்கேற்புடனான உள்கட்டமைப்புத் திட்டங்கள் (Public Private Partnership) மத்திய அரசு நிலங்களில்.
 8. இந்த ஐந்து வகைமை பிரிவுகளும் 2013 சட்டத்திலிருந்து விலக்கு (LARR Act, 2013) அளிக்கப்பட்டன. அதாவது, 2013 சட்டத்தின்படி தனியார் நிலங்களுக்கு நிலம் கையகப்படுத்த அந்நிலத்தின் உரிமையாளர்களில் 80 விழுக்காடு உரிமையாளர்களின் ஒப்புதல் பெறுவது, அரசு தனியார் பங்களிப்புத் திட்டங்களில் 70 விழுக்காடு நில உரிமையாளர்களின் ஒப்புதல் (Public Private Partnership) பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. முன்கூறிய ஐந்து பிரிவுகளுக்கும் இந்த நிபந்தனை விலக்கப்படுகிறது.
 9. பல்போக நிலங்களை கையகப்படுத்துவதற்கு நிலச்சட்டம் 2013 விதித்திருந்த நிபந்தனைகளிலிருந்து முன்கூறிய ஐந்து பிரிவுகளுக்கு இச்சட்டம் விலக்கு அளிப்பதுடன் இத்திட்டங்களால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கான சமூக பாதுகாப்பு மதிப்பீட்டாய்வு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது (LARR Act, 2013).
 10. தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம், இரயில்வே சட்டம் போன்ற இதர சட்டங்களின் கீழ் இழப்பீடு, புனர்வாழ்வு, மறுக்குடியிருப்பு வழங்குவது தொடர்பான பிரிவுகளும் இச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன (LARR Act).
 11. நிலச்சட்டம் 2013இன் கீழ் குறிப்பிட்டுள்ளப்படி தனியார் நிறுவனங்களுக்கான நில கையக்கப்படுத்தல் பிரிவில் (LARR Act, 2013) மாற்றங்கள் ஏற்படுத்தியது. இதன்படி ‘தனியார் பிரிவின் கீழ் கம்பெனிகள், குழும நிறுவனங்கள் இலாப நோக்கற்ற அமைப்புகள் ஆகியனவற்றையும் சேர்க்க முடியும்.

பசுமைப் புரட்சியும் வெண்மைப் புரட்சியும்

பசுமைப் புரட்சி

அறிமுகம்

 • இந்தியாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் வேளாண்மைத் தொழில்தான் மிகவும் அடர்த்தியாகச் செயல்படும் தொழிலாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு 12-15% ஆகும். அதிகரித்துவரும் மக்கள் தொகைப் பெருக்கத்தால் அதிகரித்துவரும் உணவு தானியங்களின் தேவையைத் தொடர்ந்து நிறைவு செய்வதற்காக மட்டுமல்லாமல் மிகப்பெரும் எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழிலாகவும், உணவுப் பொருள்கள் உற்பத்தியின் மூலமாக வேளாண் தொழில்கள் பெருகவும், ஏற்றுமதி மூலம் அன்னிய செலவாணி ஈட்டவும் பெரும் பங்களிப்பு ஆற்றுகிறது.
 • வேளாண்மை என்பது வெறும் உணவு தானிய விளைச்சலை மட்டும் குறிக்கவில்லை; மாறாக, தென்னை வளர்ப்பு, தோட்டங்கள், முந்திரி, காபி, தேயிலை, மிளகு, காய்கனிகள் என பணப் பயிர்கள் வளர்ப்பையும் உள்ளடக்கியது ஆகும்.
 • இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து அதிகருத்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்திய வேளாண் துறையை வளர்ப்பதன் அவசியம் குறித்து உணரப்பட்டது. இருந்தபோதும் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட 1 முதல் 12 ஐந்தாண்டுத் திட்டங்களிலும் வேளாண் துறைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் வேறுபாடானவை ஆகும்.
 • ஏனெனில், விடுதலையைத் தொடர்ந்த தொடக்க ஆண்டுகளில் புதிய தொழில்கள் தொடங்கவும் தொழிற்துறையைப் பலப்படுத்தவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
 • விடுதலையை அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை ஆண்டுக்கு 2.5% அதிகரித்து வந்தது. இதனால் பாரம்பரிய முறை விவசாயம் மூலம் உணவுப் பொருள்கள் தேவையை ஈடுகட்ட முடிந்தது. ஆனால், 1960-களில் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப உணவுத் தேவையை ஈடுகட்டுவதில் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து பசுமைப் புரட்சி உருவானது.

இந்தியாவில் பசுமைப் புரட்சி

இந்தியா அடிப்படையில் ஒரு வேளாண்மை நாடு என்பதும் அதிகரித்துவரும் மக்கள் தொகை வேளாண்மையைச் சார்ந்துள்ளது என்பதும் நாம் அறிந்ததே. நாட்டின் முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் அளித்த அனுபவங்கள் காரணமாக வேளாண்மையில் நிலவும் தீவிரமான பற்றாக்குறை உணரப்பட்டது. அவை வருமாறு:

 • மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க இயலவில்லை.
 • பாரம்பரிய விவசாய முறைகளே பின்பற்றப்பட்டதால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டது.
 • பாரம்பரிய வேளாண்மை முறைகளைப் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல் நீண்ட கால சாகுபடு முறையையே விவசாயிகள் தேர்ந்தெடுத்தனர். இதனால் விளைச்சல் காண அதிக நாள்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
 • இந்தியா ஒரு பருவமழை சார்ந்த நாடு என்பதால் மழைப்பொழிவைப் பொருத்தே விளைச்சல் இருந்தது. மழைப் பற்றாக்கூறை ஏற்பட்டபோது வறட்சி உருவாகி, உணவு தானிய விளைச்சலைப் பாதித்தது. இதனால் பஞ்சம், பட்டினி, இறப்பு ஏற்பட்டன.
 • 1960-களின் போது ஃபோர்ட் அறக்கட்டளை பரிந்துரைகள் அடிப்படையில் புதிய வேளாண் கொள்கை உருவாக்கப்பட்டது. ‘இந்தியாவின் உணவு நெருக்கடியும் அதை எதிர்கொள்ளும் வழிகளும்’ எனும் தலைப்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை இந்திய அரசு 1959-60 ஆம் ஆண்டு ஏற்று வேளாண் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தது.
 • இச்சீர்திருத்தங்கள் ஒரு கலப்புத்திட்டமாக அமைந்தன; ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாசன முறைகளுடன் புதிய பாசன வசதிகள் ஏற்படுத்துவது உரமிடல் முறை, அதிக மகசூல் தரும் வீரிய விதைகள் அறிமுகம், பூச்சுக்கொல்லிகள் போன்ற இடுபொருள்கள் அறிமுகம் ஆகியனவற்றை உள்ளடக்கியதாக சீர்திருத்தங்கள் அமைந்தன; ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாசன முறைகளுடன் புதிய பாசன வசதிகள் ஏற்படுத்துவது உரமிடல் முறை, அதிக மகசூல் தரும் வீரிய விதைகள் அறிமுகம், பூச்சுக்கொல்லிகள் போன்ற இடுபொருள்கள் அறிமுகம் ஆகியனவற்றை உள்ளடக்கியதாக சீர்திருத்தங்கள் அமைந்தன.
 • பசுமைப்புரட்சி என அழைக்கப்படும் இத்திட்டம் வேளாண் அறிவியலாளர் M.S.சுவாமிநாதன் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனால் இவர் இந்தியாவின் “பசுமைப் புரட்சியின் தந்தை” என அழைக்கப்படுகிறார். சுருக்கமாகக் கூறினால் பாசன வசதிகள் அதிகரிப்பு, புதிய உரங்களின் பயன்பாடு ஆகியனவே இந்திய புசுமைப்புரட்சி என அறியப்படுகிறது. பசுமைப் புரட்சியின் மூலம் 1967 – 78 இல் வேளாண் உற்பத்தி 50% அதிகரித்தது.
 • முதல் கட்டமாக, 1960இல் ஏழு மாநிலங்களில் ஏழு மாவட்டங்கள் முன்மாதிரி மாவட்டங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அடர்த்தியான பகுதி மேம்பாட்டுத் திட்டம் (IADP) எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவுகள் திருப்தியாக இருந்ததால் பிற மாநிலங்களுக்கும் மாநிலத்துக்கு ஒரு மாவட்டம் என விரிவுபடுத்தப்பட்டது. இது 1965இல் 144 மாவட்டங்கள் என மேலும் விரிவடைந்தது.
 • தொடக்கத்தில் 2 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் செயல்படுத்தப்பட்டது. படிப்படியாக மேலும் விரிவுபடுத்தப்பட்டு 70 மில்லியன் அதாவது 7 கோடி ஹெக்டேர் நிலங்களில் செயல்படுத்தப்பட்டது. இது, இந்தியாவின் மொத்த நிலங்களில் 40% ஆகும்.
 • இந்த மாபெரும் வெற்றியே பசுமைப்புரட்சியாக எழுச்சி கண்டது. இதன் விளைவாக ஆண்டு முழுவதும் வேளாண் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆண்டுக்கு ஒரு போகம் என்ற நிலை மாறி இரண்டு போகம், மூன்று போகம் மகசூல் காணப்பட்டன. மேலும் ஊடு பயிரிடும் முறையும் பின்பற்றப்பட்டன.
 • இதனால் நெல், கோதுமை போன்ற பாரம்பரிய பயிர்கள் மட்டுமல்லாமல் மற்ற பயிர்களும் அறிமுகம் செய்யப்பட்டன. நாட்டின் பல ப்குதிகளில் மாறுபட்ட தட்ப வெப்ப நிலைகள் நிலவும் நாட்டில் மாறுபட்ட பயிரிடும் முறைகள் பின்பற்றப்படுகின்றன.
 • கோதுமை விளைவிக்கும் பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் நல்விளைவுகள் காணப்பட்டன; நெல் பயிரிடும் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், போன்ற மாநிலங்கள் குறைவான வெற்றி காணப்பட்டன. இருப்பின்யும், ஒட்டுமொத்தமாக விளைச்சல் அதிகரித்து உணவுப் பற்றாக்குறை சிறப்பாகக் குறைக்கப்பட்டது.

பசுமைப் புரட்சியின் முக்கிய தாக்கங்கள்

வேளாண் உற்பத்தி தொடர் அதிகரிப்பு

 • 1950-களில் காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் வேளாண் உற்பத்தி இரண்டிலிருந்து மூன்றுமடங்குகள் அதிகரித்தது. 1950-களில் நிலவிய உணவு பற்றாக்குறை காரணமாக உணவு தானியங்களை PL140 திட்டத்தின் கீழ் அமெரிக்காவிலிருந்து உணவுத் தானியங்களை இந்தியா இறக்குமதி செய்யவேண்டியிருந்தது.
 • அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக இன்று நிலைமை மாறியது. மேலும் வெளிசந்தையிலும் விவசாய உற்பத்திப் பொருள்கள் தாராளமாக கிடைக்கின்றன.

வேளாண் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு

ஆண்டு முழுவதும் விவசாய நடவடிக்கைகள் தொடர்ந்தால் விவசாய வேலைவாய்ப்புக்கான தேவை அதிகரித்தது. இந்த தேவை இரண்டு குழுக்களில் உணரப்பட்டது. முதலாவதாக, விவசாய நிலங்களில் பாரம்பரொய முறைகளில் பணியாற்றும் திறனற்ற விவசாய தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. இரண்டாவதாக, அறிவியல் முறையில் வேளாண் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு தகுதி பெற்ற வேளாண் பொறியாளர்களின் தேவையும் அதிகரித்தது.

வேளாண்மை தொழிற்துறை சந்தை

 • இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பசுமைப் புரட்சியின் விளைவாக வேளான் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் சந்தைக்கும் தொழிற்துறைக்கும் இடையிலான ஆரோக்கியமான உறவுகள் ஏற்பட்டது.
 • அறிவியல் முறை, வேளாண்மை, டிராக்டர்கள், போன்ற பண்ணை உபகரணங்கள் வேளாண் பொறியியல் சார்ந்து இருந்ததால் அதிகரித்து வரும் தேவையை உணர்ந்த தொழிற்துறையும் இத்தகைய வேளாண் உபகரணங்களை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டினர்.
 • அதேபோல், வேளாண் உற்பத்திப் பொருள்களை நுகர்வோருக்கு கொண்டு சேர்க்கும் வகையில், பதப்படுத்துதல் மற்றும் விநியோகத்தில் சந்தையும் தனது பங்கினை திறம்பட ஆற்றத் தொடங்கியது.

மாநிலங்களுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் சந்தைமுறை

 • பசுமைப் புரட்சியின்போது இந்தியாவில் பல மாநிலங்கள் எதிர்கொள்ள நேர்ந்த முக்கிய பிரச்சனை என்பது மண் வளமிக்க மாநிலங்களில் மட்டுமே பசுமைப் புரட்சி பயனளிக்கக்கூடியதாக இருந்தது என்பதாகும்.
 • இதனால் உபரி உற்பத்தி அடைந்த மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட விதர்பா பகுதி மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு தங்கள் உபரியை விநியோகித்தனர். இதன்மூலமாக நுகர்வு தேவையை நிறைவு செய்யும் வண்ணம் மாநிலங்களுக்கிடையேயான வேளாண்மை சந்தை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் உணவுத் தானியங்களை இறக்குமதி செய்யும் நிலை குறைந்தது.

சிறு விவசாயிகள், பெரிய விவசாயிகள் இடையேயான ஏற்றத்தாழ்வு

 • சிறு விவசாயிகள் நிதி வசதியின்மை, உள்கட்டமைப்பு வசதியின்மை, சந்தையை அணுகும் ஆற்றலின்மை காரணமாக சிறு விவசாயிகளால் பெரிய விவசாயிகளுடன் போட்டியிட இயலவில்லை. இதனால் சிறு விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டனர். சிறு விவசாயிகளும், புதிய வேளாண் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட இயலவில்லை. இதனால் வேலாண் பொருளாதாரத்தைப் பொருத்தவரை மாநிலங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது போன்றே விவசாயிகள் மத்தியிலும் ஏற்றத்தாழ்வுகள் உருவாயின

வெகுமக்கள் இயக்கம்

 • பசுமைப் புரட்சியால் இந்தியாவின் பெரும்பான்மை வேளாண் சமுதாயம் தனிப்பட்ட மற்றும் தேசிய சமூகப்-பொருளாதார நலன்களுக்காக ஒன்றுப்படுத்தப்பட்டனர். இதனால் விவசாய உற்பத்தி அதிகரித்ததுடன் விவசாய சமுதாயத்தின் வருவாயும் அதிகரித்தது.
 • விவசாய சந்தைகளில் ஏற்பட்ட போட்டிகளின் காரணமாக விவசாய விளைப்பொருள்களுக்கு நல்ல விலை கிடைத்தது. இதனால் இந்தியாவின் ஒட்டு மொத்த வேளாண் சமுதாயம் பசுமைப் புரட்சியில் பங்கெடுத்தது. தொழிற்துறை போல் அல்லாமல் வேளாண்மைத்துறை குறுகிய கால வளர்ச்சியும் இலாபமும் பெற்றது. இதனால் விவசாய சமுதாயத்தினர் மத்தியில் பசுமைப் புரட்சியில் பங்கெடுப்பது புரட்சிகரமாகப் பார்க்கப்பட்டது.

பசுமைப் புரட்சியின் முக்கிய பின்னடைவுகள்

இந்தியாவில் நிலவிய புவி-காலநிலை அம்சங்கள் காரணமாக கீழ்க்காணும் பின்னடைவுகள் ஏற்பட்டன.

 • பகுதி சார்ந்த , மகசூல் சார்ந்த, பண்ணைமுறை சார்ந்த வேறுபாடுகள்.
 • ஏழை, பணக்கார விவசாயிகளிடம் காணப்பட்ட நீண்ட இடைவெளி.
 • வேளாண் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தேவையான தொடக்க முதலீடு, சிறு விவசாயிகளிடம் இல்லாதது.
 • மகசூலை அதிகரிப்பதற்காக கேடு விளைவிக்கும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகமாக பயன்படுத்தியது.
 • புதிய தொழில்நுட்பப் பயன்பாட்டை சமூக மயப்படுத்துவதிலும் முன் தயாரிப்பிலும் பின்னடைவு.
 • மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த இயலாததால் இதில் ஒரு முடிவில்லா செயல்முறையாக நீண்டது.

பசுமைப் புரட்சியின் சாதனைகள்

 • உணவுத் தானிய பற்றாக்குறை முடிவுக்கு வந்தது.
 • உயர் மகசூல் அளிக்கும் விதைகளும் பயிரிடும் முறைகளும் விவசாயிகளுக்கு ஊக்கமளித்தன.
 • நீலம், மஞ்சள், வெண்மைப் புரட்சிகளின் மூலமாக மீன் வளம், கோழி வளர்ப்பு மற்றும் பால்பண்ணை தொழில்கள் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டன.
 • பணப்பயிர்கள் மற்றும் நறுமணப் பொருள்கள் உற்பத்திக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பணப்பயிர்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்யும் நாடாக இந்தியா உருவானது. இதனால் அந்நிய செலவாணி வரவு அதிகரித்தது. இருந்தபோதும், கரும்பு, எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் போன்ற பயிர்கள் பயிரிடுவதில் விவசாயிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதன் முக்கியத்துவம் 1970-களிலும் 1980-களின் தொடக்கத்திலும் உணரப்பட்டது.

வெண்மைப் புரட்சி

 • 1950-ல் விவசாய உற்பத்தியில் மட்டுமல்லாமல் பால், தயிர், நெய் போன்ற குழந்தைகளுக்குத் தேவையான பால் பொருள்கள் உற்பத்தியிலும் இந்தியா தன்னிறைவு காண இயலவில்லை.
 • பால்பவுடர், வெண்ணெய் மற்றும் குழந்தைகளுக்கான பால் பொருள்களை அப்போது இந்தியா இறக்குமதி செய்து வந்தது.
 • வேளான்மை துறையில் ஏற்பட்டது போன்றே கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியிலும் ஒரு புரட்சியின் தேவையென உணரப்பட்டது.

வெண்மைப் புரட்சிக்கான முக்கிய காரணங்கள்

 • பசு, எருமை போன்ற கால்நடை வளர்ப்பு வேளாண்மைக்கு அடுத்த நிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பழமையான தொழில்நுட்பம், மோசமான பராமரிப்பு போன்றவை காரணமாக கால்நடை வளர்ப்பு தொ9சில் இலாபமற்ற சிறு தொழிலாகவே இருந்தது.
 • பசு, எருமை போன்ற கறவை மாடுகள் இந்திய வகை நாட்டு இனங்களாக இருந்ததால் மக்கள் தொகைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய இயலவில்லை.
 • இந்தியாவில் பண்னை தொழில் இன்னமும் கிராமத் தொழிலாகவே இருந்து வருகிறது. போக்குவரத்து, பராமரிப்பு, பால் மற்றும் பால்பொருள்கள் விநியோகம் போன்றவற்றில் போதுமான ஆதரவு அளிக்கப்படவில்லை.
 • பழமையான தொழில்நுட்பம் மற்றும் கால்நடை மருத்துவ வசதியின்மை ஆகியவையின் காரணமாக பண்ணை தொழில் பாதிக்கப்பட்டது. தொற்று நோய்கள் காரணமாக கறவை மாடுகள் இறப்பது தொடர்கதையாக இருந்ததால் இந்த தொழிலை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காணப்படவில்லை. இதை உணர்ந்து 1970இல் தேசிய பால்வளம் மேம்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டது. இந்த மத்திய அமைப்பு பால் உற்பத்தியை அதிகப்படுத்தி நாடு முழுவதும் விநியோகிப்பதால் பால்பொருள் பற்றாக்குறை தடுக்கப்பட்டது.
 • 1950இல் ஆனந்த் பால் ஒன்றிய நிறுவனம் (அமுல்) வர்கீஸ் குரியன் அவர்களால் குஜராத் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இதில் 200-க்கும் குறைவானவர்களே உறுப்பினர்களாக இருந்தனர். இந்த விவசாயிகளிடம் இருந்து பால் சேகரிக்கப்பட்டு மும்பை நுகர்வோர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில் நல்ல இலாபம் காணப்பட்டதால் விவசாய சமுதாயத்தினர் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு ஏராளமானோர் இதில் உறுப்பினர்கள் இணைந்தனர்.
 • 1960-ல் ஆனந்த் பால் ஒன்றிய நிறுவனம் இந்தியாவிலேயே வளர்ச்சியடைந்த பால் கூட்டுறவு சங்கமாக வளர்ந்தது. இதனை தொடர்ந்து இந்திய அரசு இந்த முறையினை பின்பற்ற முடிவு செய்து தேசிய பால் வள மேம்பாட்டு வாரியம் தொடங்கியது. 1966-இல் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நாடு தழுவிய வெண்மைப் புரட்சியை தொடங்கி வைத்தார். இந்த தேசிய முயற்சிக்கு வர்கீஸ் குரியன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
 • வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் ஆவார். அவரின் வழிகாட்டல், திட்டமிடல் மற்றும் தொழில்முறை அணுகுதல் காரணமாக இந்தியாவின் வெண்மைப்புரட்சி வெற்றிக் கண்டது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (TCMPF)

தமிழ்நாட்டில் கூட்டுறவு முறையில் பால் வளத்தைப் பெருக்கும் வகையில் 1972 இல் தமிழ்நாடு பால்வள மேம்பாட்டுக் கழகம் தொடங்கப்பட்டது, இது டாக்டர் குரியன் வழியில் 1981 இல் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பாக விரிவுபடுத்தப்பட்டது. ஊரக, ஒன்றிய, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் இது இயங்கியது. தற்போது ஆவின் எனும் வணிக முத்திரையுடன் தமிழகம் முழுவதும் பால் தேவையை தன்னிறைவு செய்கிறது. மேலும் ஆவின் செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் தனிநபர் பால் நுகர்வு 1993 -94இல் நாள் ஒன்றுக்கு 169 கிராம் என்று இருந்ததும் 2018-19இல் 268 கிராமாக அதிகாரித்துள்ளது.

 • 1955இல் நாம் ஆண்டுக்கு 500 டன் வெண்ணெய் இறக்குமதி செய்து வந்தோம். இன்று நமது கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே ஆண்டுக்கு 12,000 டன்களுக்கு அதிகமாக உற்பத்தி செய்கின்றன. இதேபோல் 1955இல் நாம் 3,000 டன் குழந்தைகளுக்கு உணவு இறக்குமதி செய்து வந்தோம். இன்று நமது கூட்டுறவு சங்கங்கள் 38,000 டன்களுக்கு அதிகமாக உற்பத்தி செய்கின்றனர். அனைத்து வகையான பால் மற்றும் பால் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலைமை 1975 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
 • வர்கீஸ் குரியன்

வெண்மைப்புரட்சியின் முக்கிய இலக்குகள்

 1. பால் உற்பத்தியை அதிகரித்தல் (பால் வெள்ளம்)
 2. கிராமப்புற பால் பண்ணைகளில் வருவாய் அதிகரித்தல்
 3. நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குதல்
 4. நாட்டில் அந்நிய செலவாணி இருப்புக்கு சுமையாக இறக்குமதி செய்வதைக் குறைத்தல்
 5. தேசிய பால் தொகுப்பு உருவாக்குதல்
 6. நுண்ணூட்டத் தேவைகளை சமாளித்தல்
 • வெண்மைப் புரட்சி மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக (1970 -79), நாட்டின் முக்கிய பால் பண்ணைகளின் 18 பண்ணைகள் தேர்வுச் செய்யப்பட்டு மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் நுகர்வோரோடு இணைக்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பீடு 116 கோடி ஆகும்.
 • இரண்டாம் கட்டத்தில் (1981-1985), பால் பண்ணைகளின் எண்ணிக்கை 18-லிருந்து 136ஆக அதிகரிக்கப்பட்டு 290 நகர்ப்புற சந்தைகளில் நுகர்வோருடன் இணைக்கப்பட்டு பால் விநியோகம் வழங்கப்பட்டது.
 • 1985 இறுதியில் 43 ஆயிரம் தன்னிறைவு கிராமக் கூட்டுறவு சங்கங்கள் இதில் இணைந்தனர். இவ்வாறு நாடு முழுவதும் 42.5 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு முறையில் இணைக்கப்பட்டனர். உள்நாட்டு பால் பவுடர் உற்பத்தியின் அளவு திட்டத்திற்கு முந்தைய ஆண்டு 22 ஆயிரம் டன்களாக இருந்தது 1989இல் 1 இலட்சத்து 40 ஆயிரம் டன்களாக உயர்ந்தது.
 • மூன்றாவது, கட்டத்தில் (1985 -1996), கூட்டுறவு பால் சங்கங்கள் தமக்கு தேவையான இடுபொருள்களை கொள்முதல் செய்வதற்கும் ச்ந்தையை அதிகரிப்பதற்கும் ஏற்ற வகையில் வலுப்பெற்று விரிவடைந்தன. கால்நடை மருத்துவ விழிப்புணர்வு, கால்நடைக்களுக்கான நுண்ணூட்டச்சத்துகள், செயற்கை விந்தணு சேவை போன்றவை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு விரிவான அளவில் சென்றடைந்ததுடன் பால் பண்ணைய தொழிற்கல்வியும் விவசாயிகளுக்கு ஊட்டப்பட்டது. இரண்டாம் கட்ட இறுதியில் இயங்கிய 42 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுடன் மூன்றாம் கட்டத்தில் மேலும் 30 ஆயிரம் புதிய கூட்டுறவு சங்கங்கள் உருவாகின. கூட்டுறவு சங்கங்களில் ஆண்களும், பெண்களும் உறுப்பினர்களாக சேர்வது மிகப் பெருமளவில் அதிகரித்தது. 1988 -89இல் பால் பண்ணைகளின் எண்ணிக்கை 173ஆக அதிகரித்தது.

வெண்மைப் புரட்சியின் முக்கிய சாதனைகள்

 • இந்தியாவில் பால் உற்பத்தி 40 ஆண்டுகளில் 20 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து 100 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவிற்கு உயர்ந்தது. பால் கூட்டுறவு இயக்கத்தின் காரணமாகவே இந்த சாதனை சாத்தியமானது என்று கூறுவது மிகையல்ல.
 • இன்று இதன் காரணமாகவே உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தி நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. நமது நாட்டுக்கான தேவையை தன்னிறைவு செய்துள்ளதுடன், குழந்தைகளுக்கான பால்பவுடர் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளன.
 • இந்திய கால்நடை வளர்ப்பாளர்களின் மத்தியில் , பசு, எருமை போன்ற பால் மாடுகளை வளர்ப்பதில் அரிய ஆர்வம் ஏற்பட்டதால் தற்போது நாட்டில் 500 மில்லியன் அதாவது 50 கோடி பால் மாடுகள் உள்ளன. இதன் மூலம் உலகின் மிகப் பெரிய பால் மாடுகளை வளர்ப்பதில் அரிய ஆர்வம் ஏற்பட்டதால் தற்போது நாட்டில் 500 மில்லியன் அதாவது 50 கோடி பால் மாடுகள் உள்ளன.
 • இதன் மூலம் உலகின் மிகப் பெரிய பால் மாடுகள் வளர்ப்பு நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் நீள-அகலங்களில் குறுக்கு-நெடுக்கிலுமாக 22 மாநிலங்களில் 180 மாவட்டங்களில் 1 இலட்சத்து 25 ஆயிரம் கிராமங்களில் பால் கூட்டுறவு இயக்கம் பரந்து விரிந்துள்ளது. இந்த வெற்றி கொள்முதல் மற்றும் விநியோக அமைப்பினை நாடு முழுவதும் பலப்படுத்துவதற்கு மத்திய மாநில உள்ளாட்சி அரசுகள் ஆதரவு அளித்ததன் காரணமாகவே சாத்தியமாய் உள்ளது.

தொழில்மயமாக்கல்

 • இந்திய விடுதலைக்கு பின்னர், பொருளாதார வளர்ச்சியில் தொழில்மயமாக்கல் ஒரு முக்கிய செயல்பாடாக திகழ்கிறது. விடுதலைக்கு பின்னர், நமது நாடு தொழில்மயமாக வேண்டியதன் தேவையை நமது தலைவர்கள் உணர்ந்தனர். இதையொட்டி 1956இல் தொழிற்கொள்கை தீர்மானம் கொண்டுவரப்பட்டு நாட்டை தொழில்மயப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
 • அனைத்து ஐந்தாண்டு திட்டங்களிலும் தொழில்மயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளனர். தொழில்மயமாக்கல் தொடர்பாக நமது அரசுகள் மேற்கொண்ட முன் முயற்சிகள் காரணமாக இன்று இந்தியா உலகின் ஆறாவது பெரிய தொழிற்துறை நாடாக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியென்பது சிறு தொழில்கள் முதல் பெரும் தொழில்கள் வரை அனைத்து விதமான தொழில்கள் ஊடாக விரிந்து பரந்து நுகர்வோருக்கான பொருள்கள் மட்டுமல்லாமல் இடைநிலை மற்றும் மூலதன பொருள்களையும் உற்பத்தி செய்கிறது.
 • இந்த தொழிற்துறை முன்னேற்றத்தின் காரணமாக இந்திய அந்நிய வர்த்தகத்திலும் ஒரு மாற்றம் விரிவாக நிகழ்ந்தது. இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி அதிகரித்தது. இதற்கு இணையாக தொழில்நுட்ப வளர்ச்சியும், வேளாண்மை உற்பத்தியும் மேம்பாடு அடைந்தன. இதனால் தொழிற்சாலைகள் திறம்பட மேலாண்மை செய்யும் வகையில் திட்டமிடல், வடிவமைப்பு ஆகிய திறன்கள் மேம்பாடு கண்டன.
 • கனரக தொழில்களும் வளர்ந்தன. உள்கட்டமைப்பு வளர்ச்சி, நவீன தொழில்நுட்பங்கள் , உரிய உற்பத்தி சாதனங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உயர் தொழில்நுட்ப ஆற்றலும் மேம்படுத்தப்பட வேண்டியிருந்தது.
 • இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் பொறியியல் தொழிற்துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் தொழில் மயமாக்கலை விரைவுபடுத்தும் வகையில் திட்டமிடுவோர் தயாரித்த செயற்திட்டங்களுக்கு ஏற்ப வளர்ச்சி முடுக்கிவிடப்பட்டது.
 • இவ்வாறு, திட்டமிட்டு செயல்பட்டதன் காரணமாக அடிப்படை மற்றும் மூலதனப் பொருள்கள் உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி கண்டன. இத்தகைய தொழிற்சாலைகளின் உற்பத்தி 1959இல் 50 விழுக்காடாக இருந்தது. 1990-1991இல் 79 விழுக்காடாக அதிகரித்தது.
 • இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. ஆலைகளிலும் சுரங்கங்களிலும் பணியாற்றிய தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் அபரிதமாக உயர்ந்தது. தொழில்மயமாக்கல் எஃகு, இரும்பு, உரம், இரசாயனம், சிமெண்ட் மற்றும் ஃபெரஸ் அல்லாத உலோகங்கள் தொழில்களை மேம்படுத்தியது. புதிய மூலதன பொருள்களும் தொடங்கப்பட்டு வளர்ச்சியடைந்தன.
 • இக்காலகட்டத்தில் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவிற்கு விரிவாக்கப்பட்டன. திறன்மிக்க சுத்திகரிப்பு ஆலைகள், குழாய் பதித்தல், சேமிப்பு மற்றும் விநியோக அமைப்புகள் உருவாக்கப்பட்டு, பெர்டோ கெமிக்கல் ஆலைகள் வளர்ச்சி கண்டன. இதனால் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டதுடன் நாட்டின் பாசன அமைப்புகள், சேமிப்பு பணிகள், கால்வாய்கள் அனல் –நீர் மின் உற்பத்தி நிலையங்கள், இரயில்வே அமைப்பு மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் ஆகியன மேம்பாடடைந்தன. இந்தியாவை உலகின் பிற பாலங்களுடன் இணைப்பதில் போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு வசதிகள் முக்கிய பங்காற்றின.
 • இந்தியாவில் பொருளாதார சீர்த்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் தொழிற்துறை வடிவம் மாற்றங்களை கண்டது. மூலதனப் பொருள்கள் மற்றும் நுகர்பொருள்கள் தொழில்கள் பெரும் வளர்ச்சிக் கண்டதுடன் அடிப்படை தொழில்களின் வளர்ச்சி பின்னடைவு கண்டது.
 • வங்கி, காப்பீடு மற்றும் வணிக தொழில்கள் வளர்ச்சி அடைந்தன. துறைமுகங்கள் கப்பல் கட்டுதல் மற்றும் உள்நாட்டு பன்னாட்டு விமான சேவைகள் நவீனப்படுத்தப்பட்டன. இவையாவும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக நிகழ்ந்து தொழில்மயமாக்கலுக்கு இட்டு சென்றது.
 • அறிவியல் தொழில்நுட்பத்துறைகளிலும் பெரும் மாற்றமடைந்தது. வேலாண்மை, தொழிற்துறை, தொழில்நுட்பம், தொலை தொடர்பு போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த இந்திய அறிவியலாளர்களின் பங்களிப்பு வரவேற்கத்தக்க பிரம்மாண்டமாக இருந்தது.
 • சிமெண்ட், இரசாயனம், உர ஆலைகள், எண்னெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின் உற்பத்தி ஆலைகள், இரும்பாலைகள், இரயில் பெட்டித் தொழிற்சாலைகள், பொறியியல் தொழில்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றனர்.
 • சர்.விஸ்வேஸ்வரய்யா இந்திய பொருளாதார திட்டமிடலின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார் இவர் ஒரு முதன்மை பொறியாளர் இராஜதந்திரி அரசியல்வாதி மற்றும் மைசூர் மாநிலத்தின் 19வது திவான் ஆவார் 1955ம் ஆண்டும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது.

உலக பால் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதியும் தேசிய பால் தினம் நவம்பர் 26ம் தேதியும் திரு வர்கிஸ் குரியனின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. இவர் வெண்மை புரட்சியின் தந்தையாவார்.

தொழிற்கொள்கை

ஒரு நாடு தொழிற்மயமாவதற்கு திறமையான தொழிற்கொள்கை அவசியமாகும். இதன் மூலமாகவே உரிய கொள்கைகள், சட்டங்கள், விதிமுறைகள் இயற்றப்பட்டு தொழிற்சாலைகள் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.

தொழிற்கொள்கை தீர்மானம் 1948

 • இந்தியா கலப்புப் பொருளாதாரக் கோட்பாட்டினை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து 1948இல் நிறைவேற்றப்பட்ட தொழிற்கொள்கை தீர்மானம் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகள் தங்களுக்கான பகுதிகளில் தொடர்ந்து இயங்கும் என்பதை வலியுறுத்தியது.
 • அனைத்து முக்கிய தொழில்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் உற்பத்தி, மின்னணு ஆற்றல் உற்பத்தி, கட்டுப்பாடு மற்றும் இரயில்வே போன்றவற்றை பொதுத்துறை நிறுவனங்கள் கட்டுப்படுத்தின.
 • இத்துறையில் மத்திய அரசு ஏகபோகம் செலுத்தியது. நிலக்கரி, இரும்பு, ஸ்டீல், விமானம் உற்பத்தி, கப்பல் கட்டுதல் போன்ற துறைகளிலும் அரசு கட்டுப்பாடு செலுத்தியது. மீதமுள்ள துறைகளில் தனியார் நிறுவனங்களும் கூட்டுறவு நிறுவனங்களும் இயங்கின.

தொழிற்கொள்கை தீர்மானம் 1956

 • புதிய தொழிற்கொள்கை தீர்மானம் 1956 ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மூன்று வகை தொழில்கள் வகைமைப்படுத்தப்பட்டன. அவை, முழுவதும் அரசுக்கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிறுவனங்கள், அரசும் தனியாரும் இணைந்து நிர்வகிக்கும் நிறுவனங்கள், மூன்றாவதாக, முழுவதும் தனியாருக்கு ஒதுக்கப்பட்ட தொழில்கள்,
 • மேலும், தொழில்கள் தொடங்குவது தனியாரை ஊக்கப்படுத்தும் வகையில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட இதர சேவைகள் அரசால் மேம்படுத்தப்பட்டன. சிறு மற்றும் குறு தொழில்களும் அரசால் ஊக்கப்படுத்தப்பட்டன.

தொழிற்கொள்கை 1980

 • 1980, ஜூலையில் ஒரு புதிய தொழிற்கொள்கை காங்கிரசு அரசால் அறிவிக்கப்பட்டது. தொழிற்கொள்கை தீர்மானம், 1956இல் ஏற்பட்ட வளர்ச்சியினை அங்கீகரிக்கும் விதமாக இத்தொழிற்கொள்கை கொண்டுவரப்பட்டது.
 • தொழில்ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் அணுமின் நிலையங்கள் அமைத்து தொழில் வளர்ச்சியை ஒருங்கிணைப்பதற்கு இது அழுத்தம் கொடுத்தது.
 • வளர்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறு தொழில் நிறுவனங்களும் தொடங்கப்பட வேண்டுமென்று ஊக்கப்படுத்தியது. ஒரு பொருளாதார கூட்டாட்சியை கொண்டு வருவது நோக்கமாக கொண்டிருந்தது.
 • தொழிற்கொள்கை 1980 லைசன்ஸ் ராஜ்ஜியம் எனப்படும் உரிமம் மூறையிலிருந்து பெரிய தொழில்களை விடுவிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. இந்த தாராளவாதக் கொள்கையால் ஏகபோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் (MRTP), அந்நிய செலவாணிச் சட்டம் போன்றவற்றின் பிடியிலிருந்து பெரும் நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டது.
 • மேலும், பின்தங்கிய பகுதியென்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் புதிய தொழில்களை தொடங்குவோருக்கு உரிமங்களிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்பட்டது. அகல அலைவரிசை எனும் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் சந்தையின் தேவைக்கேற்ப உற்பத்திப் பொருள்களை தம் விருப்பம்போல் வடிவமைத்துக் கோள்ள உற்பத்தியாளர்களுக்கு நெகிழ்வு தன்மையுடன் கூடிய சலுகைகள் அளிக்கப்பட்டன.

தொழிற்கொள்கை 1991

 • P.V.நரசிம்மராவ் அரசு பதவியேற்றத்தை தொடர்ந்து 1991 ஜூலையில் ஒரு புதிய தொழிற்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தாராளமயமாக்கக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதால் நாட்டின் பொருளாதார வரலாற்ரில் ஒரு மைல்கல் என்று அழைக்கப்படுகிறது.
 • புதிய பொருளாதாரக் கொள்கை நேரடி அந்நிய முதலீட்டிற்கு தடையாக இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. தாராளமயமாக்கல் கொள்கையின் வாயிலாக, இந்திய பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இதையொட்டி தொழில் உரிமம் பெறுதல், அந்நிய முதலீடு, அந்நிய தொழில்நுட்பம், பொதுத்துறை நிறுவனங்களின் கொள்கைகளில், பெரும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
 • புதிய சட்டத்தின்படி கட்டாயம் உரிமம் பெறவேண்டிய தொழில்களின் பட்டியலில் 18 தொழில்கள் மட்டுமே இருந்தது. இவற்றில் நிலக்கரி, லிக்னைட், பெட்ரோலியம், சர்க்கரை, தொழில்துறை வெடிமருந்துகள், கேடு விளைவிக்கும் இரசாயனப் பொருள்கள், விமானப்படை மற்றும் இராணுவத்திற்கு தேவையான மின்னணுப் பொருள்கள். மருந்துகள் முக்கியமானவையாகும்.
 • அதாவது பாதுகாப்பு, உடல்நலம், சுற்றுச்சூழல் போன்றவை தொடர்பான தொழில்கள் மட்டும் உரிமம் பெறும் தொழில்களின் கீழ் கொண்டுவரப்பட்டன.
 • இந்த பட்டியலிலிருந்து 1993இல் மேலும் மூன்று தொழில்கள் விடுவிக்கப்பட்டன. அவை மோட்டார் வாகனங்கள், வெள்ளை பொருள்கள் என்று அழைக்கப்படும் குளிரூட்டும் சாதனங்கள், சலவை எந்திரம், குளிரூட்டும் பெட்டிகள் மற்றும் காப்புரிமைப் பெற்ற தோல் பொருள்கள் ஆகும்.

பொருளாதாரக் கொள்கையின் தந்தை

அன்றைய பிரதமர் P.V.நரசிம்மராவ் 24.07.1991 அன்று புதிய பொருளாதாரக் கொள்கை அறிவித்தப்போது டாக்டர் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தார். இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையின் தந்தை என்று இவர் அழைக்கப்படுகிறார்.

போட்டிச் சட்டம், 2002

 • வர்த்தக நடவடிக்கைகள் ஏகபோக தடுப்புச் சட்டம் (MRTP Act) 1969இல் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக போட்டிச்சட்டம் 2002 மத்திய குழும நிறுவனங்கள் அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டது. இது, மீண்டும் 2007 மற்றும் 2009 ஆண்டுகளில் திருத்தப்பட்டது.
 • மூலதன தடுப்புச் சட்டம் (MRTP Act) என்பது ஏகபோக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் நிதி ஒரே இடத்தில் குவிவதையும் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளையும் தடுக்கும் சட்டமாகும்.
 • ஆனால் புதிய போட்டிச் ச்சட்டம் இத்தகைய வர்க்க கட்டுப்பாடுகளை விலக்கியது. இதன்மூலம் ஆரோக்கியமானப் போட்டி நிலவச் செய்து நுகர்வோருக்கு சிறந்தப் பொருள்களை வழங்குகிறது. அதே நேரத்தில் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் அழுத்தம் அளிக்கப்பட்டது. நிறுவனங்கள் தமது அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரும்போது அரசிடம் முன் அனுமதிப் பெறவேண்டிய தேவை இல்லை.
 • தாராளமயமாக்கலை நோக்கி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் , தொழில்மயமாக்கல் செயல்முறையில் போதாமைகளும் காணப்பட்டன. வேலையின்மை மற்றும் அரைகுறை வேலைவாய்ப்பு போன்ற பிரச்சனைகளால் இந்தியா இன்னமும் பாதிக்கப்படுகிறது.
 • இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளும் சீரான வளர்ச்சி காண்பது இன்னமும் சவாலாகவே நீடிக்கிறது. தொழில்மயமாக்கல் முயற்சிகள் ஒவ்வொரு முறையும் பெரும் தொழில்கள் வளர்ச்சிக் காண்பதிலேயே முடிவடைகின்றன. ஆனால் சிறிய, நடுத்தர தொழில்கள் இன்னமும் பின்தங்கிய நிலையிலே உள்ளன. புதிய தொழில்கள் மேலும் நகர்ப்புற பகுதிகளை மையப்படுத்தியே தொடங்கப்படுகின்றன. இதனால் வளர்ச்சி என்பது நகர்ப்புறம்- கிராமப்புறங்களை ஒப்பிடும்போது ஏற்றத்தாழ்வுடனேயே ஏற்படுகிறது. நகர்மயமாக்கல் மற்றும் இடப்பெயர்வு என்பது இன்று அரசு எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக வளர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *