Book Back QuestionsTnpsc

நமது சுற்றுச்சூழல் Book Back Questions 6th Science Lesson 18

6th Science Lesson 18

18] நமது சுற்றுச்சூழல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

நீர்வாழ் காட்சியகம் (Aquarium) : மீன்கள், பிற நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்களை பராமரிக்கும் இடம் நீர்;வாழ் காட்சியகம் (Aquarium) எனப்படுகிறது. இது ஒரு சிறிய தொட்டியாகவோ அல்லது பல பெரிய தொட்டிகள் வைக்கப்பட்ட ஒரு கட்டிடமாகவோ இருக்கலாம்.

நிலவாழ் காட்சியகம் (Terrarium): நிலவாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்களைக் பராமரிக்கும் இடம் அல்லது அமைப்பு நிலவாழ் காட்சியகம் (Terrarium) எனப்படுகிறது. இங்கு இயற்கையான சூழ்நிலை மண்டலத்தினைப் போல வடிவமைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் விலங்குகளும், தாவரங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. நீர்வாழ் காட்சியகம் மற்றும் நில வாழ்காட்சியகம் ஆகியவை விலங்குகளையும், தாவரங்களையும் நெருக்கமாக உற்று நோக்க உதவுகின்றன. அலங்காரத்திற்காகவும் இவை பயன்படுகின்றன.

படைப்பாக்க மறுபயன்பாடு: படைப்பாக்க மறுபயன்பாடு அல்லது உயர்சுழற்சி என்பது கழிவுப்பொருள்கள் அல்லது தேவையற்ற பொருள்களை, உயர்தரமான மற்றும் சுற்றுச் சூழல் மதிப்புடைய பொருள்களாக மாற்றிப் பயன்படுத்துதல் ஆகும். நாம் ஒரு பொருளை உயர்சுழற்சி செய்யும் போது அதற்கு நாம் வேறு பயன்பாட்டினைத் தருகிறோம். (எ.கா) பயன்படுத்திய டயர்களை அமரும் நாற்காலியாக மாற்றுதல். பயன்படுத்திய நெகிழிப் பாட்டில்களை பேனா தாங்கியாக மாற்றிப் பயன்படுத்துதல்.

உலகளவில் தினந்தோறும் ஒவ்வொரு மனிதனும் உருவாக்கும் கழிவுகளின் அளவு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் ஒவ்வொருவரும் உருவாக்கும் கழிவுகளின் சராசரி அளவு 0.45 கிலோ கிராம். இது ஒப்பிடுகையில் குறைவான அளவாக இருந்தாலும், மக்கள் தொகை அதிகமுள்ள இந்திய நாட்டு மக்களினால் உருவாக்கப்படும் மொத்த கழிவுகளைக் கருத்தில் கொண்டால், அவற்றை எத்தனை வண்டிகளில் ஏற்ற வேண்டும்? வண்டிகள் வரிசையாக நிற்கும் தூரத்தைக் கணக்கிட்டால், அது 2800 கிலோ மீட்டரைத் தாண்டும். இது கன்னியாகுமரியிருந்து டெல்லி வரை உள்ள இடைவிடாத தூரத்தைக் குறிக்கிறது. (நடப்பதற்குக் கூட இடமிருக்காது இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்). எனவே இயன்ற வரை கழிவுகளைக் குறைத்தல் அவசியம் ஆகும். ஒவ்வொரு நாளும் 532 மில்லியன் கிலோ திடக்கழிவுகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக:

(அ) குளம்

(ஆ) எரி

(இ) நதி

(ஈ) இவை அனைத்தும்.

2. உற்பத்தியாளர்கள் எனப்படுபவை

(அ) விலங்குகள்

(ஆ) பறவைகள்

(இ) தாவரங்கள்

(ஈ) பாம்புகள்

3. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு

(அ) நெகிழி

(ஆ) தேங்காய் ஓடு

(இ) கண்ணாடி

(ஈ) அலுமினியம்

4. காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

(அ) மறுசுழற்சி

(ஆ) மீண்டும் பயன்படுத்துதல்

(இ) மாசுபாடு

(ஈ) பயன்பாட்டைக் குறைத்தல்

5. களைக்கொல்லிகளின் பயன்பாடு __________ மாசுபாட்டை உருவாக்கும்.

(அ) காற்று மாசுபாடு

(ஆ) நீர் மாசுபாடு

(இ) இரைச்சல் மாசுபாடு

(ஈ) இவற்றில் எதுவும் இல்லை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. தாவரங்களை உண்பவை ____________ நிலை நுகர்வோர்கள் ஆகும்.

2. வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _________ காரணிகள் ஆகும்.

3. __________ என்ற நிகழ்வின் மூலம் கழிவுப் பொருள்களிலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.

4. நீர் மாசுபாடு மனிதனுக்கு ____________ நோயை உருவாக்குகிறது.

5. 3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல், ____________ மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசிபிக் பெருங்கடல் ஓர் எடுத்துக்காட்டாகும்.

2. பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.

3. மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும், உயிரினச் சிதைவிற்கு உட்படாத கழிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

4. அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால் ஒலி மாசுபாடு உருவாகும்.

5. பள்ளியின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவுகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.

IV. பொருத்துக:

1. உயிரினக் கூறுகள் – அ. நிலவாழ் சூழ்நிலை மண்டலம்

2. சாக்கடைக் கழிவுகள் – ஆ. நில மாசுபாடு

3. செயற்கை உரங்கள் – இ. காற்று மாசுபாடு

4. பாலைவனம் – ஈ. நீர் மாசுபாடு

5. புகை – உ. விலங்குகள்

V. சரியான வரிசையில் எழுதி, உணவுச்சங்கிலியை உருவாக்கு:

1. முயல் – கேரட் – கழுகு – பாம்பு

2. மனிதன் – பூச்சி – ஆல்கா – மீன்

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இவை அனைத்தும், 2. தாவரங்கள், 3. தேங்காய் ஓடு, 4. மாசுபாடு, 5. நீர் மாசுபாடு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. முதல்நிலை, 2. உயிரற்ற, 3. மறுசுழற்சி, 4. வயிற்றுப்போக்கு, 5. மீண்டும் பயன்படுத்துதல்

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. சரி, 2. சரி, 3. உட்படும், 4. நீர் மாசுபாடு, 5. சரி

IV. பொருத்துக:

1. உ, 2. ஈ, 3. ஆ, 4. அ, 5. இ

V. சரியான வரிசையில் எழுதி, உணவுச்சங்கிலியை உருவாக்கு:

1. கேரட் – முயல் – பாம்பு- கழுகு

2. ஆல்கா – பூச்சி –– மீன்–– மனிதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button