Book Back QuestionsTnpsc

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Book Back Questions 6th Science Lesson 3

6th Science Lesson 3

3] நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஒரு கலவை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே தன்மையுடைய துகள்களைக் கொண்ட தூய்மையற்ற பொருளாகும்.

கலவையின் பகுதிப் பொருள்கள் எந்த விகிதத்திலும் கலந்திருக்கும்.

துணி துவைக்கும் இயந்திரம் மூலம் ஈரம் நிறைந்த துணிகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு அவை உலர்த்தப்படுகின்றன. இம்முறைக்கு மைய விலக்கல் என்று பெயர்.

உமி என்பது விதை அல்லது தானியத்தைச் சுற்றிக் காணப்படும் கடினமான அல்லது பாதுகாப்பான உறையாகும். அரிசியின் வளர்நிலைக் காலங்களில் இது அரிசியைப் பாதுகாக்கிறது. கட்டுமானப் பொருளாகவும், உரமாகவும், மின்காப்புப் பொருளாகவும் எரிபொருளாகவும் இது பயன்படுகின்றது.

பிரித்தெடுத்தலை முழுமையாக்குவதற்கு, பல பிரித்தல் முறைகளை ஒன்றாக இணைத்தும் செயல்படுத்தலாம். உதாரணமாக, நீரில் கலந்துள்ள மணலும் உப்பும் கலந்த கலவையினைப் பிரிப்பதற்கு படிய வைத்தல், தெளியவைத்து இறுத்தல், வடிகட்டுதல், ஆவியாக்குதல் மற்றும் குளிரவைத்தல் போன்ற பல முறைகளை வெவ்வேறு படிநிலைகளில் நிகழ்த்த வேண்டும்.

பெரும்பாலான இல்லங்களில் நீரில் உள்ள மாசுக்களை நீக்குவதற்காகவும், நுண்கிருமிகளை புறஊதா கதிர்களைக் கொண்டு அழிப்பதற்காகவும் வணிகரீதியிலான நீர் வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

எதிர் சவ்வூடு பரவல் (RO) என்ற முறையில், நீரில் உள்ள மாசுக்கள் நீக்கப்பட்டு, நீர் சுத்திகரிக்கப்படுகிறது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. _____________ பருப்பொருளால் ஆனதல்ல.

(அ) தங்க மோதிரம்

(ஆ) இரும்பு ஆணி

(இ) ஒளி

(ஈ) எண்ணெய்த் துளி

2. 400 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மி.லி. நீர் ஊற்றப்படுகிறது. இப்போது நீரின் பருமன்

(அ) 400 மி.லி.

(ஆ) 600 மி.லி.

(இ) 200 மி.லி.

(ஈ) 800 மி.லி.

3. தர்பூசணிப் பழத்தில் உள்ள விதைகளை __________ முறையில் நீக்கலாம்.

(அ) கைகளால் தெரிந்தெடுத்தல்

(ஆ) வடிகட்டுதல்

(இ) காந்தப் பிரிப்பு

(ஈ) தெளிய வைத்து இறுத்தல்

4. அரிசி மற்றும் பருப்பில் கலந்துள்ள லேசான மாசுக்களை ______________ முறையில் நீக்கலாம்.

(அ) வடிகட்டுதல்

(ஆ) படியவைத்தல்

(இ) தெளிய வைத்து இறுத்தல்

(ஈ) புடைத்தல்

5. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____________ அவசியம் தேவைப்படுகிறது.

(அ) மழை

(ஆ) மண்

(இ) நீர்

(ஈ) காற்று

6. ___________ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.

(அ) திடப்பொருள் – திடப்பொருள்

(ஆ) திடப்பொருள் – நீர்மம்

(இ) நீர்மம் – நீர்மம்

(ஈ) நீர்மம் – வாயு

7. பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல?

(அ) பாலுடன் கலந்த காபி

(ஆ) எலுமிச்சைச் சாறு

(இ) நீர்

(ஈ) கொட்டைகள் புதைத்த ஐஸ்கீரிம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பருப்பொருள் என்பது __________ஆல் ஆனது.

2. திண்மத்தில் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி _______________ஐ விடக் குறைவு.

3. நெற்பயிரிலிருந்து நெல்லை _______________ முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.

4. “உப்புமா” வில் இருந்து __________ முறையில் மிளகாயினை நீக்கலாம்.

5. நீரில் இருந்து களிமண் துகள்களை நீக்க ______________ முறை பயன்படுத்தப்படுகிறது.

6. குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர் பொதுவாக ___________ நீராக அமையும்.

7. ஊசி, பென்சில் மற்றும் இரப்பர் வளையம் இவற்றுள் ______________ காந்தத்தால் கவரப்படும்.

III. பொருத்துக:

அ. பண்புகள் உதாரணம்

1. எளிதில் உடையக்கூடியது (நொறுங்கும் தன்மை) – அ. உலோகத்தட்டு

2. எளிதில் வளையக்கூடியது – ஆ. ரப்பர் வளையம்

3. எளிதில் இழுக்கலாம் – இ. பருத்தி, கம்பளி

4. எளிதில் அழுத்தலாம் – ஈ. மண் பானை

5. எளிதில் வெப்பமடையும் – உ. நெகிழி ஒயர்(wire)

ஆ.

கண்களால் பார்க்ககூடிய தேவையற்ற பகுதிப் பொருளை நீக்குதல் சுண்ணாம்புக் கட்டி (சாக்பீஸ் தூள்) நீருடன் கலந்திருத்தல் காந்தப் பிரிப்பு முறை
லேசான மற்றும் கனமான பகுதிப் பொருள்களைப் பிரித்தல் மணல் மற்றும் நீர் தெளிய வைத்து இறுத்தல்
கரையாத மாசுப்பொருள்களை நீக்குதல் இரும்பு சார்ந்த மாசுக்கள் வடிகட்டுதல்
காந்தத்தன்மை கொண்ட பகுதிப்பொருள்களை காந்தத்தன்மை அற்ற பகுதிப்பொருள்களில்

இருந்து பிரித்தல்

அரிசி மற்றும் கல் கைகளால் தேர்வு செய்தல்
நீர்மங்களில் இருந்து திண்மங்களைப் பிரித்தல் உமி மற்றும் நெல் தூற்றுதல்

IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக: தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக:

அ) காற்று அழுத்தத்திற்கு உட்படாது.

ஆ) திரவங்களுக்கு குறிப்பிட்ட பருமன் இல்லை. ஆனால் குறிப்பிட்ட வடிவம் உண்டு.

இ) திண்மத்தில் உள்ள துகள்கள் எளிதில் நகர்கின்றன.

ஈ) சமைக்கும் முன் பருப்பு வகைகளை நீரில் கழுவும்போது, வடிகட்டுதல் மூலம் நீரைப் பிரித்தெடுக்கலாம்.

உ) திடப்பொருள்களில் இருந்து நீர்மப் பொருள்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி என்பது ஒரு வகையான சல்லடையே.

ஊ) தானியத்தையும், உமியையும் தூற்றுதல் முறை மூலம் பிரிக்கலாம்.

எ) காற்று ஒரு தூய பொருளாகும்.

ஏ) வண்டலாக்குதல் முறை மூலம் தயிரிலிருந்து வெண்ணெயைப் பிரித்தெடுக்கலாம்.

V. ஒப்புமையின் அடிப்படையில் நிரப்புக:

1. திண்மம் : கடினத்தன்மை :: வாயு : __________

2. துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உடையது : வாயு :: __________ : திண்மம்

3. திண்மம் : குறிப்பிட்ட வடிவம் :: __________ : கொள்கலனின் வடிவம்

4. உமி தானியங்கள் : தூற்றுதல் :: மரத்தூள் சுண்ணக்கட்டி : _______________

5. சூடான எண்ணெயிலிருந்து முறுக்கினை எடுத்தல் : __________ :: காபியை வடிகட்டியபின் அடியில் தங்கும் காபித்தூள் : ____________

6. இரும்பு – கந்தகம் கலவை : ____________ :: உளுத்தம் பருப்பு – கடுகு கலவை : உருட்டுதல்.

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. ஒளி, 2. 200 மி.லி, 3. கைகளால் தெரிந்தெடுத்தல், 4. புடைத்தல், 5. காற்று, 6. திடப்பொருள் – நீர்மம், 7. நீர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. அணுக்கள், 2. நீர்மம் மற்றும் வாயு, 3. கதிரடித்தல், 4. கைகளால் தெரிந்தெடுத்தல், 5. படிய வைத்தல், தெளிய வைத்து இருத்தல், 6. ஊசி, 7. தூய்மை இல்லாத

III. பொருத்துக:

அ. 1. ஈ, 2. உ, 3. ஆ, 4. இ, 5. அ

ஆ. கண்களால் பார்க்ககூடிய தேவையற்ற பகுதிப் பொருளை நீக்குதல் -அரிசி மற்றும் கல், கைகளால் தேர்வு செய்தல்

லேசான மற்றும் கனமான பகுதிப் பொருள்களைப் பிரித்தல்- உமி மற்றும் நெல், தூற்றுதல்

காந்தத்தன்மை கொண்ட பகுதிப்பொருள்களை காந்தத்தன்மை அற்ற பகுதிப்பொருள்களில் இருந்து பிரித்தல்- இரும்பு சார்ந்த மாசுக்கள், காந்தப் பிரிப்பு முறை

நீர்மங்களில் இருந்து திண்மங்களைப் பிரித்தல்- மணல் மற்றும் நீர், தெளிய வைத்து இறுத்தல்

IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக: தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக:

அ. உட்படும், ஆ. வடிவம் இல்லை, இ. நகரும் தன்மை அற்றவை, ஈ. சரி, உ. சரி, ஊ. சரி, எ.கலவை, ஏ. கடைதல்

V. ஒப்புமையின் அடிப்படையில் நிரப்புக:

1. லேசானது, 2. துகள்களுக்கு இடையே மிக குறைந்த இடைவெளி உடையது, 3. திரவம், 4. வடிகட்டுதல், 5. வடிகட்டுதல்& வீழ்ப்படிவு, 6. காந்த பிரிப்பு முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button