Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Book Back Questions 7th Science Lesson 3

7th Science Lesson 3

3] நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பேரண்டத்தில் முதன்மையாகக் காணப்படுவது ஹைட்ரஜன் அணுவாகும். ஏறக்குறையப் பேரண்டத்தில் காணப்படும் அணுக்களில் 74% ஹைட்ரஜன் அணுக்களாகும். இருந்த போதிலும் பூமியில் இரும்பு, ஆக்சிஜன் மற்றும் சிலிக்கான் போன்றவை முக்கிய அணுக்களாகக் காணப்படுகின்றன.

வயிற்றுப்போக்கு மருந்தில் பிஸ்மத்: பிஸ்மத் என்பது இயற்கையில் கிடைக்கக்கூடிய ஒரு தனிமம் ஆகும். இதை மற்ற தனிமங்களுடன் சேர்த்து வயிற்றுப்போக்கு சிகிச்சை மருந்தாகப் பயன்படுகின்றனர்.

இராபர்ட் பாயில் என்ற விஞ்ஞானி முதன் முதலில் தனிமம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இவர் பொருளின் அடிப்படை இயல்பு மற்றும் வெற்றிடத்தின் தன்மை ஆகியவற்றின் ஆரம்ப கால ஆதரவாளர் ஆவார். பாயில் விதியின் மூலம் இவர் நன்கு அறியப்பட்டவர்.

ஆரம்பத்தில் தனிமங்களின் பெயர்கள் அத்தனிமம் முதன்முதலில் கிடைத்த இடத்தின் பெயரால் அழைக்கப்பட்டன. உதாரணமாகத் தாமிரம் (Copper) சிப்ரஸ் என்ற பெயரில் இருந்து உருவாக்கப்பட்டது. சில தனிமங்களின் பெயர்கள் அத்தனிமத்தின் நிறங்களிலிருந்து உருவாக்கப்பட்டன. உதாரணமாக, தங்கம் (Gold) மஞ்சள் எனப் பொருள் தரும் ஆங்கில வார்த்தையிலிருந்து வருவிக்கப்பட்டது. தற்காலங்களில் IUPAC தனிமங்களுக்கான பெயர்களை அங்கீகரிக்கிறது. பல தனிமங்களின் குறியீடுகள் அத்தனிமங்களின் ஆங்கிலப் பெயர்களின் எழுத்துகளில் ஒன்று அல்லது இரண்டு எழுத்துகள் இணைத்து உருவாக்கப்படுகின்றன. குறியீட்டின் முதல் எழுத்தானது எப்போது ஆங்கிலப் பெரிய எழுத்தினாலும் இரண்டாவது எழுத்தானது ஆங்கிலச் சிறிய எழுத்தினாலும் எழுதப்பட வேண்டும்.

தண்ணீர் – H2O. H குறியீட்டின் அருகிலுள்ள சிறிய எண் கீழ்க்குறியீடு என அழைக்கப்படுகிறது. இது அத்தனிமத்தின் மூலக்கூறுகள் இருக்கும் அணுவின் எண்ணிக்கையை நமக்குச் சொல்கிறது. எனவே, நீர் மூலக்கூறில் 2 ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளன. O குறியீட்டின் அருகில் எந்த ஒரு எண்ணும் இல்லை, இது தனிமங்களில் இருக்கும் மூலக்கூறுக்குள் ஒரு அணு மட்டுமே உள்ளது என்று பொருள். எனவே, நீர் மூலக்கூறில் ஒரு ஆக்சிஜன் அணு மட்டுமே உள்ளது.

வெப்பக்காற்று நிரப்பப்பட்ட பலூனானது எவ்வாறு காற்றில் மிதக்கின்றது? பலூனில் உள்ள காற்றை வெப்பப்படுத்தும் போது அது விரிவடைகின்றது. அதனால் பலூனில் உள்ள காற்றின் அடர்த்தி வெளிப்புறத்தில் உள்ள காற்றின் அடர்த்தியைவிட குறைகின்றது. இந்த அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக வெப்பக்காற்று பலூன் காற்றில் மிதக்கின்றது.

திண்மம்: திண்மத்தை வெப்பப்படுத்தும் போது, துகள்கள் ஆற்றலைப் பெற்று தீவிரமாக அதிர்வுறுகின்றது. உருகுதல் வெப்ப நிலையை அடையும்போது உருகுதல் நடைபெறுகின்றது. திண்மம் திரவமாக மாறுகின்றது.

திரவம்: உருகுதல் வெப்ப நிலையை அடையும்போது உருகுதல் நடைபெறுகின்றது. திண்மம் திரவமாக மாறுகின்றது. திரவத்தை வெப்பப்படுத்தும் போது துகள்கள் ஆற்றலைப்பெற்று தீவிரமாக அதிர்வுறுகின்றது. கொதிநிலையை அடையும்போது கொதித்தல் நடைபெறுகின்றது. திரவம் வாயுவாக மாறுகின்றது.வாயு: கொதி நிலையை அடையும்போது கொதித்தல் நடைபெறுகின்றது. திரவம் வாயுவாக மாறுகின்றது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்க்கண்டவற்றில் உலோகம் எது?

(அ) இரும்பு

(ஆ) ஆக்சிஜன்

(இ) ஹீலியம்

(ஈ) தண்ணீர்

2. ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்?

(அ) உலோகம்

(ஆ) அலோகம்

(இ) உலோகப்போலிகள்

(ஈ) மந்த வாயுக்கள்

3. கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?

(அ) கணித வாய்ப்பாடு

(ஆ) வேதியியல் வாய்ப்பாடு

(இ) கணிதக் குறியீடு

(ஈ) வேதியியல் குறியீடு

4. அறை வெப்ப நிலையில் திரவமாக உள்ள உலோகம்.

(அ) குளோரின்

(ஆ) சல்பர்

(இ) பாதரசம்

(ஈ) வெள்ளி

5. எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய, ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?

(அ) அலோகம்

(ஆ) உலோகம்

(இ) உலோகப்போலிகள்

(ஈ) வாயுக்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பருப்பொருளின் மிகச் சிறிய துகள் ___________

2. ஒரு கார்பன் அணு இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் கொண்ட சேர்மம் ____________

3. ___________ மின்சாரத்தைக் கடத்தும் ஒரேயொரு அலோகம்.

4. தனிமங்கள் ___________ வகையான அணுக்களால் உருவாக்கப்படுகின்றன.

5. ___________ தனிமம் லத்தீன் அல்லது கிரேக்கப் பெயர்களிலிருந்து பெறப்பட்டன.

6. இதுவரை அறியப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை ___________

7. தனிமங்கள் தூய பொருட்களின் ____________ வடிவம்.

8. தனிமங்களின் பெயரை எழுதும்போது முதல் எழுத்தை எப்போதுமே ________ எழுத்தால் எழுத வேண்டும்.

9. மூன்று அணுக்களுக்கு மேலாக உள்ள மூலக்கூறுகளை __________ மூலக்கூறுகள் என்று அழைக்கலாம்.

10. __________ வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு.

ஒப்புமை தருக:

1. பாதரசம்: அறை வெப்ப நிலையில் திரவம்:: ஆக்சிஜன்: ____________

2. மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்: ___________:: மின்சாரத்தைக் கடத்தும் உலோகம்: தாமிரம்,

3. தனிமங்கள்: இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றது:: சேர்மங்கள்: ____________

4. அணுக்கள்: தனிமத்தின் அடிப்படை துகள்:: __________: சேர்மங்களின் அடிப்படைத் துகள்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. இரண்டு வேறுபட்ட தனிமங்களில் ஒரே விதமான அணுக்கள் இருக்கும்.

2. தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் ஒரு தூய பொருளாகும்.

3. அணுக்கள் தன்னிச்சையாக இருக்க முடியாது; அவை ஒரு குழுவாக இருக்கும் அதற்கு மூலக்கூறுகள் என்று பெயர்.

4. சோடியம் குளோரைடில் (NaCl) ல் ஒரு சோடியம் மூலக்கூறு மட்டுமே உள்ளது.

5. ஆர்கான் வாயு ஓரணு வாயுவாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. இரும்பு 2. அலோகம் 3. வேதியியல் வாய்ப்பாடு 4. பாதரசம் 5. உலோகம்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. அணு 2. கார்பன்-டை-ஆக்சைடு (CO2) 3. கிராஃபைட் 4. ஒரே 5. தங்கம் 6. (118)

7. எளிமையான 8. ஆங்கில எழுத்தின் பெரிய 9. பலஅணு 10. நைட்ரஜன்

ஒப்புமை தருக: (விடைகள்)

1. அறை வெப்பநிலையில் வாயு 2. கிராஃபைட் 3. இணைந்து கலவையை உருவாக்குகின்றது

4. தனிமங்கள்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக. தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக: (விடைகள்)

1. தவறு

சரியான விடை: இரண்டு வேறுப்பட்ட தனிமங்களில் வெவ்வேறு விதமான அணுக்கள் இருக்கும்.

2. சரி

3. சரி

4. தவறு

சரியான விடை: சோடியம் குளோரைடில் ஒரு சோடியம் மூலக்கூறும் ஒரு குளோரின் மூலக்கூறும் உள்ளது.

5. சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!