Book Back QuestionsTnpsc

நீர் Book Back Questions 6th Science Lesson 16

6th Science Lesson 16

16] நீர்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

நீரானது மண்ணில் உள்ள உப்புகள் மற்றும் தாதுப் பொருள்களை தன்னுடன் கரைத்து எடுத்துச் செல்கிறது. இந்த உப்புகளும், தாதுக்களும் கடல்கள் மற்றும் பெருங்கடல்களில் இலட்சக்கணக்கான ஆண்டுகளாக படிந்து வருகிறது. கடலின் அடியில் காணப்படும் எரிமலைகளும் கடல் நீருடன் உப்பினை சேர்க்கின்றன. அதிக அளவு கரை பொருள் கரைந்துள்ள நீரினை நம்மால் பயன்படுத்தவோ அல்லது பருகவோ இயலாது. இத்தகைய நீரினை நாம் உப்புநீர் என அழைக்கிறோம்.

பொதுவான வளிமண்டல அழுத்தத்தில் நீரானது 0o செல்சியஸ் வெப்பநிலையில் பனிக்கட்டியாக உறைகிறது. ஓவ்வொரு வருடமும் மார்ச் 22ஆம் தேதி உலக நீர் கொண்டாடப்படுகிறது.

இமயமலை: பனிப்படிவுகள், பனிப்பாறைகள் மற்றும் பனியாறுகளைக் கொண்டுள்ளது. ஆசியாவின் முக்கிய ஆறுகளில் பத்து பெரிய ஆறுகள் இமயமலையில் இருந்து தொடங்கிப் பாய்கின்றன. ஏறக்குறைய நூறு கோடி மக்களின் வாழ்வாதாரமான நீர்த்தேவையை இவ்வாறுகள் பூர்த்தி செய்கின்றன.

நீர்வாழ் விலங்குகள்: பனிக்காலங்களில், குளிர்ந்த நாடுகளில் ஏரிகள் மற்றும் குளங்கள் குளிர்ச்சியடைந்து நீரின் மேற்பரப்பில் திண்ம நிலை பனிப்படலங்கள் உருவாகின்றன. இருந்த போதிலும் பனிப்படலத்திற்கு கீழ் வசிக்கும் நீர்வாழ் விலங்குகள் இறப்பதில்லை. ஏனெனில் மிதக்கும் பனிப்படலமானது ஒரு பாதுகாப்புப் படலமாக செயல்பட்டு நீரிலிருந்து வெப்பம் வெளியேறுவதனை அனுமதிப்பதில்லை. எனவே நீரின் மேற்பரப்பு மட்டுமே குளிர்ச்சியடைந்து பனியாக மாறுகின்றது. இக்காரணங்கள் நீர்வாழ் விலங்குகளுக்கு சாதகமாக அமைந்து அவை உயிர் வாழ உதவுகின்றன.

கூவம் ஒரு முகத்துவாரம்: நீர் நிலைகள், கடலைச் சந்திக்கும் ஈர நிலங்களுக்கு முகத்துவாரம் என்று பெயர். இது நிலத்திலிருந்து நன்னீரும் கடலிலிருந்து உப்பு நீரும் சந்திக்கும் இடமாகும். சில தனித்தன்மையான தாவர மற்றும் விலங்கு வகைகளுக்கு உறைவிடமாக முகத்துவாரம் அமைகிறது.

சதுப்பு நிலங்கள் என்பவை ஈரப்பதம் நிறைந்த காடுகள் ஆகும். அவை பெரிய ஆறுகளைச் சார்ந்தோ அல்லது பெரிய ஏரிகளின் கரைகளிலோ காணப்படும். சதுப்பு நில நீர் நன்னீராகவோ, உவர்ப்பு நீராகவோ அல்லது கடல் நீராகவோ அல்லது கடல் நீராகவோ இருக்கலாம். உயிரினங்களுக்கு நன்னீரையும், ஆக்ஸிஜனையும் அளிப்பதில் சதுப்பு நிலங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. சிதம்பரத்தினை அடுத்து பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள், முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகள், சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம், காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் சதுப்பு நிலம் ஆகியன தமிழ்நாட்டில் உள்ள சில சதுப்பு நிலங்களாகும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. உலகில் உள்ள மொத்த நீரில் 97% _____________ ஆகும்.

(அ) நன்னீர்

(ஆ) தூயநீர்

(இ) உப்பு நீர்

(ஈ) மாசடைந்த நீர்

2. பின்வருவனவற்றுள் எது நீர் சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

(அ) ஆவியாதல்

(ஆ) ஆவி சுருங்குதல்

(இ) மழை பொழிதல்

(ஈ) காய்ச்சி வடித்தல்

3. பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?

I. நீராவிப்போக்கு II. மழைபொழிதல் III. ஆவி சுருங்குதல் IV. ஆவியாதல்

(அ) II மற்றும் III

(ஆ) II மற்றும் IV

(இ) I மற்றும் IV

(ஈ) I மற்றும் II

4. நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

(அ) பனி ஆறுகள்

(ஆ) நிலத்தடி நீர்

(இ) மற்ற நீர் ஆதாரங்கள்

(ஈ) மேற்பரப்பு நீர்

5. வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் __________

(அ) வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.

(ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

(இ) வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.

(ஈ) அதில் அதிகமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ___________ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.

2. நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு __________ என்று பெயர்.

3. நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _____________ கட்டப்படுகிறது.

4. ஆறுகளில் பாயும் நீரின் அளவு ______________ காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்.

5. நீர் சுழற்சியினை _________ என்றும் அழைக்கலாம்.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை.

2. நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும்.

3. சூரிய வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும்.

4. குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும்.

5. கடல் நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.

IV. பொருத்துக:

1. வெள்ளம் – அ. ஏரிகள்

2. மேற்பரப்பு நீர் – ஆ. ஆவியாதல்

3. சூரிய ஒளி – இ. நீராவி

4. மேகங்கள் – ஈ. துருவங்கள்

5. உறைந்த நீர் – உ. அதிகளவு மழை

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக:

1. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த் துளிகளாக ஆகிறது.

2. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.

3. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.

4. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.

5. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.

6. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிறது.

7. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.

8. தூசுப் பொருள்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த் திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாக்கும்.

VI. ஒப்புமை தருக:

1. மக்கள் தொகைப் பெருக்கம் : நீர் பற்றாக்குறை :: மறு சுழற்சி : ____________

2. நிலத்தடி நீர் : __________ :: மேற்பரப்பு நீர் : ஏரிகள்

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. உப்பு நீர், 2. காய்ச்சி வடித்தல், 3. I மற்றும் IV, 4. நிலத்தடி நீர், 5. அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. (0.3), 2. ஆவியாதல், 3. அணை, 4. மழை, 5. ஹைட்ராலிஜிக்கல் சுழற்சி

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. உள்ளது , 2. குளம் , 3. சரி, 4. சரி, 5. முடியாது

IV. பொருத்துக:

1. உ, 2. அ, 3. ஆ, 4. இ, 5. ஈ

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக:

1. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.

2. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.

3. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.

4. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த் துளிகளாக ஆகிறது.

5. தூசுப் பொருள்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த் திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாக்கும்.

6. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிறது.

7. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.

VI. ஒப்புமை தருக:

1. நீர் அதிகமாதல், 2. ஆழ்துளை கிணறுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button