Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

மின்னியல் Book Back Questions 6th Science Lesson 9

6th Science Lesson 9

9] மின்னியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

எச்சரிக்கை: மின்சாரம் தொடர்பான சோதனைகள் அனைத்தும் டார்ச் விளக்கு அல்லது வானொலிப் பெட்டியில் பயன்படுத்தப்படும் மின்கலன்களைக் கொண்டே செய்யப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் உன் வீட்டிலோ அல்லது பண்ணையிலோ அல்லது பள்ளியிலோ உள்ள மின்சாரத்தைக் கொண்டு, எந்த சோதனையையும் செய்து பார்க்கக் கூடாது. வீட்டிலுள்ள மின்சாரத்துடன் விளையாடுவது மிகவும் ஆபத்தானது.

ஈல் என்னும் ஒரு வகை மீன் மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்டது. இவை மின்னதிர்வை வெளியிட்டு எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்து கொள்ளவும், தங்களது உணவைப் பிடிக்கவும் செய்கின்றன.

அம்மீட்டர் என்பது ஒரு மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிடும் கருவியாகும். இக்கருவியானது சுற்றில் தொடரிணைப்பில் இணைக்கப்பட வேண்டும்.

தாமஸ் ஆல்வா எடிசன் (பிப்ரவரி 11, 1847 முதல் அக்டோபர் 18, 1931) ஓர் அமெரிக்க கண்டுபிடிப்பாளர். இவர் 1000க்கும் மேற்பட்ட உபயோகமான பொருட்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் பல வீடுகளில் பயன்படுத்தக் கூடியவை. மின் விளக்கைக் கண்டுபிடித்ததற்காக நாம் என்றும் அவரைப் போற்றுகிறோம்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்

(அ) மின் விசிறி

(ஆ) சூரிய மின்கலன்

(இ) மின்கலன்

(ஈ) தொலைக்காட்சி

2. மின்சாரம் தயாரிக்கப்படும் இடம்

(அ) மின்மாற்றி

(ஆ) மின் உற்பத்தி நிலையம்

(இ) மின்சாரக் கம்பி

(ஈ) தொலைக்காட்சி

3. மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு

4. கீழ்க்கண்ட மின் சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?

5. கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

(அ) வெள்ளி

(ஆ) மரம்

(இ) அழிப்பான்

(ஈ) நெகிழி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ____________ பொருள்கள் தன் வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.

2. ஒரு மூடிய மின் சுற்றினுள் பாயும் மின்சாரம் __________ எனப்படும்.

3. __________ என்பது மின் சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனமாகும்.

4. மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு ____________ முனையைக் குறிக்கும்.

5. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு ____________ ஆகும்.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. பக்க இணைப்பு மின்சுற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட மின்னோட்டப் பாதைகள் உண்டு.

2. இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் எதிர் முனையை மற்றொரு மின்கலத்தின் எதிர் முனையோடு இணைக்க வேண்டும்.

3. சாவி என்பது மின் சுற்றினைத் திறக்க அல்லது மூடப்பயன்படும் மின்சாதனம் ஆகும்.

4. தூய நீர் என்பது ஒரு நற்கடத்தியாகும்.

5. துணை மின்கலன்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

IV. பொருத்துக:

V. பின்வரும் சொற்களைக் கொண்டு ஒரு முழுமையாக வாக்கியத்தை உருவாக்குக:

மாற்றும் சாதனம் மின்னாற்றலாக ஆற்றலை மின்கலன் வேதி ஆகும்.

VI. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று (A): நமது உடலானது மின் அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறது.

காரணம் (R): மனித உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாகும்.

(அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது Aக்கு சரியான விளக்கம்

(ஆ) A சரி, ஆனால் R என்பது Aக்கு சரியான விளக்கம் அல்ல.

(இ) A தவறு ஆனால் R சரி.

(ஈ) A மற்றும் R இரண்டும் சரி. R என்பது Aக்கு சரியான விளக்கம் அல்ல.

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மின்கலன், 2. மின் உற்பத்தி நிலையம், 3. அ, 4. ஈ, 5. வெள்ளி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மின்கடத்தும், 2. மூடிய மின்சுற்று, 3. சாவி, 4. நேர், 5. மின்கல அடுக்கு

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. சரி, 2. நேர்முனை, 3. சரி, 4. தூய்மையற்ற நீர், 5. முதன்மை செல்கள்

IV. பொருத்துக:

1. ஈ, 2. உ, 3. அ, 4. இ, 5. ஆ

V. பின்வரும் சொற்களைக் கொண்டு ஒரு முழுமையாக வாக்கியத்தை உருவாக்குக:

மின்கலன் வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் ஆகும்.

VI. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது Aக்கு சரியான விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!