Book Back QuestionsTnpsc

மின்னூட்டமும் மின்னோட்டமும் Book Back Questions 9th Science Lesson 4

9th Science Lesson 4

4] மின்னூட்டமும் மின்னோட்டமும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

கணக்கீடு 1: 1C மின்னூட்டத்தில் எத்தனை எலக்ட்ரான்கள் இருக்கும்?

தீர்வு: ஒரு எலக்ட்ரானின் மின்னூட்டம், e = 1.6 x 10-19 C q = ne (அல்லது) n = q/e

⸫ 1C-ல் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை, = 1/1.6 x 1019 = 6.25 x 10-18 எலக்ட்ரான்கள்.

இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் நிலை மின்னியல் விசை நியூட்டனின் மூன்றாவது விதியின் அடிப்படையில் இயங்குகிறது. ஒரு மின்னூட்டத்தின் மீது ஏற்படும் விசை வினையாகவும் இன்னொரு மின்னூட்டத்தின் மீது ஏற்படும் விசை எதிர் விசையாகவும் செயல்படுகின்றன.

கணக்கீடும் 2: கம்பியொன்றின் குறுக்குவெட்டுப் பரப்பை 25 கூலூம் அளவிலான மின்னூட்டம் 50 வினாடி காலத்தில் கடந்து சென்றால் அதனால் விளையும் மின்னோட்டத்தின் அளவு என்ன?

தீர்வு: I = q/t = (25 C)/(50 s) = 0.5 C/s = 0.5 A.

கணக்கீடு 3: விளக்கு ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் 0.2 A. விளக்கு ஒரு மணி நேரம் எரிந்திருந்தால், அதன் வழியே பாய்ந்த மொத்த மின்னூட்டத்தின் மதிப்பு என்ன?

தீர்வு: I = q/t; q = I t

1 மணி = 1 x 60 x 60 = 3600 s

q = I t = 0.2 A x 3600 s = 720 C

கணக்கீடு 4: ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை 1.5 V. 0.5 C மின்னூட்டத்தை அந்த மின்சுற்றைச் சுற்றி அனுப்பத் தேவைப்படும் ஆற்றல் எவ்வளவு?

தீர்வு: ɛ = 1.5 V; q = 0.5 C

ɛ = W/q; W = ɛ x q = 1.5 x 0.5 = 0.75 J.

கணக்கீடு 5: ஒரு மின் சூடேற்றியின் வழியாக 2 x 104 C மின்னூட்டம் பாய்கிறது. 5 x 106 J அளவு மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. எனில், சூடேற்றியின் குறுக்கே காணப்படும் மின்னழுத்த வேறுபாட்டைக் கணக்கிடுக.

தீர்வு: V = W/q = 5 x 106 J / 2 x 104 C = 250 V

மின்னியக்கு விசை – மின்னழுத்த வேறுபாடு இரண்டிற்குமான வேறுபாடு. இரண்டையுமே அளவிட வோல்ட் என்ற அலகையே பயன்படுத்துவதால் இவையிரண்டும் ஒன்று போலத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. மின்னாற்றல் மூலம் ஒன்று மின்சுற்றின் வழியே மின்னோட்டத்தைச் செலுத்தாத நிலையில் அதன் முனைகளுக்குக் குறுக்கே காணப்படும் மின்னழுத்தங்களின் வேறுபாடு மின்னியக்கு விசை எனப்படும். மாறாக, மின்னாற்றல் மூலமானது மின்கருவிகளின் வழியாகவோ அல்லது ஒரு மின்சுற்றிலோ மின்னோட்டத்தைச் செலுத்தும் நிலையில் அதன் முனைகளுக்குக் குறுக்கே காணப்படும் மின்னழுத்தங்களின் வேறுபாடு மின்னழுத்த வேறுபாடு எனப்படும்.

கவனம் (எச்சரிக்கை): வெப்ப விளைவு, வேதி விளைவு ஆய்வுகளை 9 V மின்னியக்கு விசை கொண்ட மின்கலங்களைக் கொண்டுதான் செய்ய வேண்டும். ஏனெனில் 9 V மின்கலம் மின் அதிர்ச்சியைத் தராது.

மாணவர்கள் எக்காரணம் கொண்டும் வீடுகளில் கொடுக்கப்படும் 220 V மாறுமின்னோட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், பெரும் மின் அதிர்ச்சி ஏற்பட்டு உடல் பெருமளவில் பாதிக்கப்படக்கூடும்.

மனித உடலில் மின்னூட்டத் துகள்களின் இயக்கத்தால் மிகவும் வலிமை குன்றிய மின்னோட்டம் உருவாகிறது. இதை நரம்பு இணைப்பு சைகை என்பர். இத்தகைய சைகைகள் மின் வேதிச்செயல்களால் உருவாகின்றன. மூளையிலிருந்து பிற உறுப்புகளுக்கு நரம்பியல் மண்டலம் மூலமாக இவை பயணிக்கின்றன.

இந்தியாவில், வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் மாறு மின்னோட்டத்தின் மின்னழுத்தம் மற்றும் அதிர்வெண் முறையே 220 V, 50 Hz ஆகும். மாறாக, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அவை முறையே 110 V மற்றும் 60 Hz ஆகும்.

உலர்ந்த நிலையில் மனித உடலின் மின் தடை ஏறக்குறைய 1,00,000 ஓம். நம் உடலில் தண்ணீர் இருப்பதால், மின் தடையின் மதிப்பு சில நூறு ஓம் ஆகக் குறைந்து விடுகிறது. எனவே, ஒரு மனித உடல் இயல்பிலேயே மின்னோட்டத்தைக் கடத்தும் நற்கடத்தியாக உள்ளது. ஆகவே, மின்சாரத்தைக் கையாளும் போது நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்

(அ) எலக்ட்ரான்களின் ஏற்பு

(ஆ) புரோட்டான்களின் ஏற்பு

(இ) எலக்ட்ரான்களின் இழப்பு

(ஈ) புரோட்டான்களின் இழப்பு

2. சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால்

(அ) மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன

(ஆ) மின்னூட்டங்கள் இடம் பெயர்கின்றன.

(இ) அ அல்லது ஆ

(ஈ) இரண்டும் அல்ல.

3. மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் ___________ எதிர் மின்னூட்டத்தில் ___________

(அ) தொடங்கி; தொடங்கும்

(ஆ) தொடங்கி; முடிவடையும்

(இ) முடிவடைந்து; தொடங்கும்

(ஈ) முடிவடைந்து; முடியும்

4. ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்படும் ____________ அளவாகும்.

(அ) விசையின்

(ஆ) திறமையின்

(இ) போக்கின்

(ஈ) வேலையின்

5. மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம் ____________

(அ) எலக்ட்ரான்கள்

(ஆ) நேர் அயனிகள்

(இ) அ மற்றும் ஆ

(ஈ) இரண்டும் அல்ல

6. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ____________ என அழைக்கப்படும்

(அ) ஜீல் வெப்பமேறல்

(ஆ) கூலூம் வெப்பமேறல்

(இ) மின்னழுத்த வெப்பமேறல்

(ஈ) ஆம்பியர் வெப்பமேறல்

7. மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?

(அ) வெப்ப விளைவு

(ஆ) வேதி விளைவு

(இ) பாய்வு விளைவு

(ஈ) காந்த விளைவு

8. ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்?

(அ) வெப்ப நிலை

(ஆ) வடிவம்

(இ) கம்பியின் இயல்பு

(ஈ) இவையனைத்தும்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. எலக்ட்ரான்கள் _________ மின்னழுத்தத்திலிருந்து ___________ மின்னழுத்தத்திற்கு நகரும்.

2. எலக்ட்ரான்கள் நகரும் திசைக்கு எதிர்த் திசையில் நகர்வது ___________ மின்னோட்டம் எனப்படும்.

3. ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் _________ க்கு ஒப்பானது.

4. இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் ________ Hz அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. மின்னியல் நடுநிலை என்பது சுழி மின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னுட்டம் உள்ளதைக் குறிக்கும்.

2. ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் பக்க இணைப்பில் இணைக்கப்படும்.

3. மின்பகு திரவத்தினுள் ஆனோடு எதிர்மின் குறி உடையது.

4. மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும்.

பொருத்துக:

1. மின்னூட்டம் – அ. ஓம்

2. மின்னழுத்த வேறுபாடு – ஆ. ஆம்பியர்

3. மின்புலம் – இ. கூலூம்

4. மின்தடை – ஈ. நியூட்டன் கூலூம்-1

5. மின்னோட்டம் – உ. வோல்ட்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. எலக்ட்ரான்களின் இழப்பு 2. அ அல்லது ஆ 3. தொடங்கி, முடிவடையும் 4. வேலையின் 5. எலக்ட்ரான்கள் 6. ஜீல் வெப்பமேறல் 7. வேதி விளைவு 8. இவையனைத்தும்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. உயர், தாழ் 2. நேர்திசை 3. இறைப்பான் 4. (50)

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. சரி

2. தவறு

சரியான விடை: ஒரு மின் சுற்றில் அம்மீட்டர் தொடர் இணைப்பின் இணைக்கப்படும்.

3. தவறு

சரியான விடை: மின்பகு திரவத்தினுள் ஆனோடு நேர்மின் குறி உடையது.

4. சரி

பொருத்துக: (விடைகள்)

1. மின்னூட்டம் – கூலும்

2. மின்னழுத்த வேறுபாடு – வோல்ட்

3. மின்புலம் – நியூட்டன் கூலும்-1

4. மின்தடை – ஓம்

5. மின்னோட்டம் – ஆம்பியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!