Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

மின்னோட்டவியல் Book Back Questions 7th Science Lesson 9

7th Science Lesson 9

9] மின்னோட்டவியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மரபு மின்னோட்டம் எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு எதிர் திசையில் அமையும்.

1 மில்லி ஆம்பியர் (mA) = 10-3 ஆம்பியர். அதாவது 1/1000 ஆம்பியர் ஆகும். 1 மைக்ரோ ஆம்பியர் (µA) = 10-6 ஆம்பியர் அதாவது 1/1000000 ஆம்பியர் ஆகும்.

மின்னோட்டமானது நீரோட்டம் போல் அதிக மின்னழுத்த மட்டத்தில் இருந்து குறைந்த மின்னழுத்த மட்டத்தை நோக்கி பாயும்.

இரு புள்ளிகளுக்கிடையேயான மின்னழுத்த வேறுபாடு என்பது ஓரலகு மின்னூட்டத்தை ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்த்த தேவைப்படும் ஆற்றலின் அளவாகும்.

மின்சாரத்தை நேரடியாகவோ அல்லது எளிதாகவோ பெற முடியாத மின் சாதனங்களுக்கு, மின்சாரத்தை அளிக்கவல்ல சாதனமே மின்கலனாகும்.

உலர் மின்கலமானது இயற்கையில் உலர்ந்த நிலையில் காணப்படாது, ஆனால் அவற்றில் உள்ள மின்பகு திரவத்தின் தன்மையானது. பசைபோல் உள்ளதால் நீர்மத்தின் அளவு மிக குறைந்து காணப்படும். மற்ற மின்கலன்களில் மின்பகு திரவங்களானது பொதுவாக கரைசல்களாகக் காணப்படும்.

கரைசல்களில் அயனிகளாக மாறும் தன்மை கொண்ட பொருட்கள் மின்பகுளிகளாகும், இவை மின்னோட்டத்தை கடத்தக்கூடிய திறனைப் பெற்றிருக்கும்.

நமது உடலில் இயற்கையாக உருவாகும் மின் சைகைகளின் துலங்களாக அனைத்து தசைகளும் இயங்கும்.

குறுக்கு மின்சுற்று: உன் வீட்டருகில் அமைந்திருக்கும் மின்கம்பங்களில் சில நேரங்களில் உருவாகும் தீப்பொறியை நீ கண்டு இருக்கிறாயா? அந்த மின்சார தீப்பொறி உருவாக காரணம் உனக்கு தெரியுமா? இது மின் பாதையில் ஏற்படும் குறுக்கு மின்சுற்றினால் உருவாகிறது, குறுக்குச் சுற்று என்பது இரு மின்னோட்டம் செல்லும் கடத்திகளுக்கு இடையே ஏற்படும் மிகக் குறைந்த மின்தடையினால் ஏற்படும் மின்சுற்று, குறுக்கு மின்சுற்று ஆகும். வெல்டிங் செய்தல், குறுக்கு மின் சுற்றின் விளைவாக உருவாகும் வெப்பத்தின் நடைமுறைப் பயன்பாடே ஆகும்.

தாமிரத்தாலான மின் கடத்திகள், மிக குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, தாமிரக் கம்பிகள் வீட்டு மின் சுற்றுகளில் பயன்படுத்துகின்றன. இவ்வகை கம்பிகள் அதிக மின் தடையைக் கொண்டுள்ள பொருட்களால் சூழப்பட்டு இருக்கும். இந்த பொருட்கள் பொதுவாக நெகிழ்வான பிளாஸ்டிக்கால் செய்யப்படுகின்றன.

சிம் கார்டுகள், கணினிகள் மற்றும் ATM கார்டுகள் எதனால் உருவாக்கப்பட்டுள்ளன என்று உனக்குத் தெரியுமா? சிம் கார்டுகள், கணினிகள் மற்றும் ATM கார்டுகளை பயன்படுத்தப்படும் சிப்புகளானது சிலிகான் மற்றும் ஜெர்மேனியம் போன்ற குறைக்கடத்திகளால் ஆக்கப்பட்டிருக்கும். ஏனெனில், அவற்றின் மின் கடத்துத் திறன் மதிப்பானது, நற்கடத்திகள் மற்றும் காப்பான்களுக்கும் இடையில் அமையப்பெற்றிருக்கும்.

மின்னோட்டத்தின் விளைவினால் வெப்பம் உருவாக்கப்படும் நிகழ்வே மின்னோட்டத்தின் வெப்ப விளைவு எனப்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் சுற்றில், ‘x’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?

(அ) 10 ஆம்பியர்

(ஆ) 1 ஆம்பியர்

(இ) 10 வோல்ட்

(ஈ) 1 வோல்ட்

2. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L, M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்?

(அ) சாவி L மட்டும்

(ஆ) சாவி M மட்டும்

(இ) சாவிகள் M மற்றும் N மட்டும்

(ஈ) சாவி L அல்லது M மற்றும் N

3. சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.

(அ) 2.5 mA

(ஆ) 25 mA

(இ) 250 mA

(ஈ) 2500 mA

4. கீழ்காணும் எந்த மின்சுற்றில், மின்விளக்குகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது?

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு __________ ல் அமையும்

2. ஓரலகு கூலூம் மின்னூட்டமானது ஏறக்குறைய _________ புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.

3. மின்னோட்டத்தை அளக்க __________ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.

4. மின் கடத்துப் பொருட்களில், எலக்ட்ரான்கள் அணுக்களோடு ___________ பிணைக்கப்பட்டிருக்கும்.

5. மின் கடத்துத்திறனின் S.I. அலகு ___________ ஆகும்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. எலக்ட்ரான் ஓட்டத்தின் திசை, மரபு மின்னோட்டத்தின் திசையிலேயே அமைகிறது.

2. வீடுகளில் உள்ள மின் இணைப்பில், அதிக மின் பளு இருந்தால், மின் உருகு இழை உருகாது.

3. பக்க இணைப்பில், மின் சாதனங்கள் கிளைகளாக பிரிக்கப்படுகின்றன.

4. மின்னோட்டத்தினை ‘A’ என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறோம்.

5. குறை கடத்தியின் மின் கடத்துத்திறன், கடத்தி மற்றும் கடத்தாப் பொருளின் மின்கடத்து திறனின் மதிப்புகளுக்கு இடையே அமையும்.

பொருத்துக:

1. மின்கலம் – மின்சுற்றை திறக்க அல்லது மூட பயன்படுகிறது.

2. சாவி – மின் சுற்றில் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம்

3. மின்சுற்று – அதிக மின் பளு

4. குறு சுற்று – மின்னோட்டம் செல்லும் ஒரு துண்டிப்பான் மூடிய பாதை

5 மின் உருகி – வேதி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றும் சாதனம்

ஒப்புமை தருக:

1. நீர்: குழாய்: மின்னூட்டம்: __________

2. தாமிரம்: கடத்தி: மரக்கட்டை: ___________

3 நீளம்: மீட்டர் அளவு கோல்: மின்னோட்டம்: ___________

4. மில்லி ஆம்பியர்: 10-3: மைக்ரோ ஆம்பியர்: ____________

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று (A): தாமிரம், மின் கடத்துக்கம்பிகள் உருவாக்கப் பயன்படுகிறது.

காரணம் (R): தாமிரம் குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது

தெரிவு:

(அ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்

(ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை

(இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு

(ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி

2. கூற்று (A): அரிதிற் கடத்திகள், மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிப்பதில்லை.

காரணம் (R): அரிதிற் கடத்திகளில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை.

(அ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்

(ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை

(இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு

(ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. 10 ஆம்பியர் 2. சாவி L அல்லது M மற்றும் N 3. (250 mA) 4. (ஆ)

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. எதிர்திசையில் 2. (6.242×1018) 3. அம்மீட்டர் 4. தளர்வாக

5. சீமென்ஸ்/மீட்டர் (s/m)

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தைத் திருத்தி எழுதுக:

1. தவறு

சரியான விடை: எலக்ட்ரான் ஓட்டத்தின் திசை, மரபு மின்னோட்டத்தின் எதிர் திசையில் அமைகிறது.

2. தவறு

சரியான விடை: வீடுகளில் உள்ள மின் இணைப்பில் குறைந்த மின்பளு இருந்தால் மின் உருகு இழை உருகாது. (அல்லது) வீடுகளில் உள்ள மின் இணைப்பில் அதிக மின்பளு இருந்தால் மின் உருகு இழை உருகிவிடும்.

3. சரி

4. தவறு

சரியான விடை: மின்னோட்டத்தினை ‘I’ என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறோம்.

5. சரி

பொருத்துக: (விடைகள்)

1. மின்கலம் – வேதி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றும் சாதனம்

2. சாவி – மின்சுற்றை திறக்க அல்லது மூட பயன்படுகிறது

3. மின்சுற்று – மின்னோட்டம் செல்லும் ஒரு துண்டிப்பான் மூடிய பாதை

4. குறு சுற்று துண்டிப்பான்- மின்சுற்றில் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம்

5. மின் உருகி – அதிக மின்பளு

ஒப்புமை தருக: (விடைகள்)

1. தாமிரக்கம்பி 2. காப்பான் 3. அம்மீட்டர் 4. 10-6

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கமாகும்.

2. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!