Book Back QuestionsTnpsc

விசையும் இயக்கமும் Book Back Questions 6th Science Lesson 2

6th Science Lesson 2

2] விசையும் இயக்கமும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவின் பழங்கால வானியலாளர் ஆரிய பட்டா, “நீங்கள் ஆற்றில் ஒரு படகில் செல்லும்போது எவ்வாறு ஆற்றின் கரையானது உங்களுக்குப் பின்புறம் எதிர்த்திசையில் செல்வதுபோலத் தோன்றுகிறதோ, அதைப்போல, வானில் உள்ள நட்சத்திரங்களை நாம் காணும்போது அவை கிழக்கிலிருந்து மேற்காகச் செல்வதாகத் தோன்றுவதால், நிச்சயம் நமது பூமியானது மேற்கிலிருந்து கிழக்காகத்தான் சுற்ற வேண்டும்” என்று அனுமானித்தார்.

பொருள்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தல் செயல்களே விசை என அழைக்கப்படுகிறது.

அதிவேகத்தில் இயங்கும் அலைவு இயக்கம்:

உங்கள் நண்பனை ஒரு நெகிழிப் பட்டையின் இரு முனைகளையும் நன்றாக இழுத்துப் பிடித்துக்கொள்ளுமாறு சொல்லவும். இப்போது அதன் மையப்பகுதியை இழுத்துவிடுங்கள். அதன் அலைவானது அதிக வேகத்தில் நடைபெறுவதைக் காண்கிறீர்களா?

அலைவானது அதிவேகமாக நடைபெறும்போது நாம் அந்த இயக்கத்தினை அதிர்வுறுதல் என அழைக்கிறோம்.

அலைவு இயக்கம் அனைத்துமே கால ஒழுங்கு இயக்கமாக அமையும். ஆனால் கால ஒழுங்கு இயக்கங்கள் அனைத்தும் அலைவு இயக்கமாகக் காணப்படாது.

ஓரலகு காலத்தில் ஒரு பொருள் கடந்த தூரமே அதன் வேகமாகும்.

ஒரு பொருளானது “d” தொலைவினை “t” கால இடைவெளியில் கடந்தால்:

வேகம் (s) = கடந்த தொலைவு (d) / எடுத்துக்கொண்ட காலம் (t) = d / t

உசைன் போலட் 100 மீ தூரத்தினை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். இதைவிட வேகமாக உங்களால் ஓட முடியும் என்றால் உலிம்பிக் தங்கப்பதக்கம் உங்களுக்காக காத்திருக்கிறது.

தரைவாழ் விலங்குகளில் சிறுத்தையானது 112 கிமீ / மணி வேகத்தில் ஓடக்கூடிய விலங்காகும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. வேகத்தின் அலகு __________

(அ) மீ

(ஆ) விநாடி

(இ) கிலோகிராம்

(ஈ) மீ/ வி

2. கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?

(அ) பூமி தன் அச்சைப் பற்றிச் சுழல்தல்

(ஆ) நிலவு பூமியைச் சுற்றி வருதல்

(இ) அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்

(ஈ) மேற்கண்ட அனைத்தும்

3. கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு:

(அ) வேகம் = தொலைவு x காலம்

(ஆ) வேகம் = தொலைவு / காலம்

(இ) வேகம் = காலம் / தொலைவு

(ஈ) வேகம் = 1 / (தெலைவு x காலம்)

4. கீதா தன் தந்தையுடன் ஒரு வண்டியில் அவளுடைய வீட்டிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள அவளது மாமா வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு செல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.

கூற்று 1: கீதாவின் வேகம் 1 கி.மீ/ நிமிடம்

கூற்று 2: கீதாவின் வேகம் 1 கி.மீ /மணி

(அ) கூற்று 1 மட்டும் சரி

(ஆ) கூற்று 2 மட்டும் சரி

(இ) இரண்டு கூற்றுகளும் சரி

(ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சாலையின் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம் _______________ இயக்கத்திற்கு ஒரு உதாரணமாகும்.

2. புவிஈர்ப்பு விசை ____________ விசையாகும்.

3. மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் _______________ இயக்கமாகும்.

4. ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால், அப்பொருளின் இயக்கம் __________

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக: தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக:

1. மையப் புள்ளியைப் பொருத்து முன்னும் பின்னும் இயங்கும் இயக்கம் அலைவு இயக்கம் ஆகும்.

2. அதிர்வு இயக்கமும், சுழற்சி இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும்.

3. மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனங்கள் சீரான இயக்கத்தில் உள்ளன.

4. வருங்காலத்தில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபாட்டுகள் செயல்படும்.

IV. ஒப்புமையின் அடிப்படையில் நிரப்புக:

1. பந்தை உதைத்தல் : தொடு விசை :: இலை கீழே விழுதல் : _____________

2. தொலைவு : மீட்டர் :: வேகம் : __________

3. சுழற்சி இயக்கம் : பம்பரம் சுற்றுதல் :: அலைவு இயக்கம் : _____________

V. பொருத்துக:

1. – அ. வட்ட இயக்கம்

2. – ஆ. அலைவு இயக்கம்

3. – இ. நேர்கோட்டு இயக்கம்

4. – ஈ. சுழற்சி இயக்கம்

5. – உ. நேர்கோட்டு இயக்கமும், சுழற்சி இயக்கமும்

VI. சீரான வேகத்தில் காட்டினுள் செல்லும் ஒரு யானை கடக்கும் தொலைவு, காலத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. சீரான வேகத்தின் அடிப்படையில் கீழ்கண்ட அட்டவணையைப் பூர்த்தி செய்க:

தொலைவு (மீ) 0 4 12 20
காலம் (வி) 0 2 4 8 10

VII. அட்டவணையைப் பூர்த்தி செய்க:

கால ஒழுங்கற்ற இயக்கம்
குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் இயக்கம் குறிப்பிட்ட அச்சைப் பற்றிச் சுழலும் இயக்கம்

VIII. ஓரிரு வார்த்தையில் விடை எழுதுக:

1. தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசை ______________

2. காலத்தைப் பொருத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது ______________

3. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழும் இயக்கம் ___________

4. சமகால இடைவெளியில், சமதொலைவைக் கடக்கும் பொருளின் இயக்கம் ______________

5. நுணுக்கமான அல்லது கடினமான வேலைகளைச் செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம். _______________

விடைகள்:

I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மீ/ வி, 2. அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம், 3. வேகம் = தொலைவு / காலம், 4. கூற்று 1 மட்டும் சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. நேர்கோட்டு இயக்கம், 2. தொடா விசை, 3. தற்சுழற்சி இயக்கம், 4. சீரான இயக்கம்.

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக: தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக:

1. சரி, 2. அதிர்வு இயக்கமும், வட்டப்பாதை இயக்கமும், 3. சீரற்ற இயக்கம், 4. மனிதர்களுக்கு பதிலாக எல்லா விஷயங்களிலும் ரோபோட்டுக்களால் செயல்பட முடியாது.

IV. ஒப்புமையின் அடிப்படையில் நிரப்புக:

1. தொடா விசை, 2. மீட்டர்/ வினாடி, 3. தனி ஊசலின் இயக்கம்

V. பொருத்துக:

1. உ, 2. ஈ, 3. ஆ, 4. அ, 5. இ

VI. சீரான வேகத்தில் காட்டினுள் செல்லும் ஒரு யானை கடக்கும் தொலைவு, காலத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. சீரான வேகத்தின் அடிப்படையில் கீழ்கண்ட அட்டவணையைப் பூர்த்தி செய்க:

தொலைவு (மீ) 0 4 8 12 16 20
காலம் (வி) 0 2 4 6 8 10

VII. அட்டவணையைப் பூர்த்தி செய்க:

கால ஒழுங்கற்ற இயக்கம் அலைவு இயக்கம் தற்சுழற்சி இயக்கம்
இயக்கம் சீரான இடைவெளியில் நடைபெறாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் இயக்கம் குறிப்பிட்ட அச்சைப் பற்றிச் சுழலும் இயக்கம்

VIII. ஓரிரு வார்த்தையில் விடை எழுதுக:

1. தொடா விசை, 2. இயக்கம், 3. அலைவு இயக்கம், 4. சீரான இயக்கம், 5. ரோபோட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button