Book Back QuestionsTnpsc

விலங்குகள் வாழும் உலகம் Book Back Questions 6th Science Lesson 5

6th Science Lesson 5

5] விலங்குகள் வாழும் உலகம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சிங்கப்பூரில் உள்ள ஜீராங் பறவைகள் பூங்காவில், பென்குவின் பறவைகள் பனிக்கட்டிகள் நிரம்பிய ஒரு பெரிய கண்ணாடிக் கூண்டினுள் 0oC அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில் பராமரிக்கப்படுகின்றன.

பருவ மாறுபாட்டின் காரணமாக விலங்குகள் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் செல்வது வலசை போதல் எனப்படும். தமிழ் நாட்டில் வேடந்தாங்கல், கோடியக்கரை மற்றும் கூடன்குளம் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் காணப்படுகின்றன.

பல பறவைகள் வெளிநாடுகளான சைபீரியா மற்றும் ரஷ்யாவிலிருந்து வேடந்தாங்கல் வருகின்றன. அதேபோல் கோடை மற்றும் வறட்சி அதிகமுள்ள காலங்களில் நம் நாட்டுப் பறவைகள் வெளி நாடுகளுக்கு வலசை போகின்றன. எனவே, இவை வலசைபோகும் பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன.

சில விலங்குகள் அதிகப்படியான குளிரைத் தவிர்க்க, அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக் கொண்டு உறக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்நிலைக்கு குளிர்கால உறக்கம் (Aestivation) என்று பெயர். எ.கா.ஆமை.

அதேவேளை, சில விலங்குகள், அதிகப்படியான வெப்பத்தைத் தவிர்க்க, அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக் கொண்டு, உறக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்நிலைக்கு கோடைகால உறக்கம் (Hibernation) என்று பெயர். எ.கா.நத்தை.

கங்காரு எலி எப்பொழுதும் நீர் அருந்துவதே இல்லை. அது தான் உண்ணும் விதைகளிலிருந்து நீரைப்பெறுகிறது.

நமது மாநில விலங்கான நீலகிரி வரையாடு மலைகளின் மீது உள்ள பாறைகளின் இடுக்குகளில் மிக எளிதாக நுழைந்து, உடல் சமநிலையுடன் ஏறி தாவர வகைகளை உண்ணும் திறன் பெற்றுள்ளது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. உயிருள்ள பொருள்கள் அல்லது உயிரினங்களைப் பற்றி படிப்பது.

(அ) உளவியல்

(ஆ) உயிரியல்

(இ) விலங்கியல்

(ஈ) தாவரவியல்

2. கீழ்க்காணும் எவற்றுள் எவை உயிருள்ளவைகளின் பண்புகளாகக் கருதப்படுகின்றன?

i. சுவாசம். ii. இனப்பெருக்கம். iii. தகவமைப்பு. iv. கழிவு நீக்கம்.

சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

(அ) i, ii மற்றும் iv மட்டும்

(ஆ) i, ii மட்டும்

(இ) ii மற்றும் iv மட்டும்

(ஈ) i, iv, ii மற்றும் iii

3. பல்லிகள் எதன்மூலம் சுவாசிக்கின்றன?

(அ) தோல்

(ஆ) செவுள்கள்

(இ) நுரையீரல்கள்

(ஈ) சுவாச நுண்குழல்

4. அனைத்து விலங்குகளுக்கும் தேவையானது

(அ) உணவு மற்றும் நீர்

(ஆ) நீர் மட்டும்

(இ) காற்று, உணவு மற்றும் நீர்

(ஈ) உணவு மட்டும்

5. எந்த விலங்கு செவுள்கள் எனப்படும் சுவாச உறுப்பைப் பெற்றுள்ளது?

(அ) மண்புழு

(ஆ) குள்ளநரி

(இ) மீன்

(ஈ) தவளை

6. ஒரு வாழிடத்தின் உயிரிக்காரணிகளை மட்டும் குறிக்கும் தொகுப்பினைத் தேர்ந்தெடு.

(அ) புலி, மான், புல், மண்

(ஆ) பாறைகள், மண், தாவரங்கள், காற்று

(இ) மண், ஆமை, நண்டு, பாறைகள்

(ஈ) நீர்வாழ்த்தாவரம், மீன், தவளை, பூச்சிகள்

7. கீழ்கண்டவற்றுள் எதை வாழிடமாகக் கூற முடியாது?

(அ) ஒட்டகங்களுடன் கூடிய பாலைவனம்.

(ஆ) மீன்கள் மற்றும் நத்தைகளுடன் கூடிய குளம்

(இ) மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்

(ஈ) காட்டு விலங்குகளுடன் கூடிய காடு

8. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவி செய்வது எது?

(அ) கனமான மற்றும் வலிமையான எலும்புகள்

(ஆ) மென்மையான மற்றும் தடித்த எலும்புகள்

(இ) உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்

(ஈ) தட்டையான மற்றும் தடித்த எலும்புகள்

9. பாரமீசியம் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்வதற்கு உதவுவது.

(அ) போலிக்கால்கள்

(ஆ) கசையிழை

(இ) பாதம்

(ஈ) குறு இழை

10. கங்காரு எலி வசிப்பது

(அ) நீர் வாழிடம்

(ஆ) பாலைவன வாழிடம்

(இ) புல்வெளி வாழிடம்

(ஈ) மலைப்பிரதேச வாழிடம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. நீர்நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை _______________ என்று அழைக்கலாம்.

2. செல் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை ____________ மற்றும் _____________ என வகைப்படுத்தலாம்.

3. பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு _____________க்கு உதவுகிறது.

4. அமீபா ______________ உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது.

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக: தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக:

1. ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது வசிக்கக்கூடிய இடம் வாழிடம் எனப்படும்

2. புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவை புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

3. ஒருசெல் உயிரியான அமீபா, போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றது.

4. பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.

5. பாரமீசியம் ஒரு பலசெல் உயிரி.

IV. பின்வருவனவற்றை நிறைவு செய்க:

1. மழைக்காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை _____________ என்று அழைக்கிறோம்.

2. ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் ______________ என்று அழைக்கப்படுகின்றன.

3. மீனின் சுவாச உறுப்பு _______________ ஆகும்.

4. கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் ________

5. ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் ______________ சேமிக்கின்றன.

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. உயிரியல், 2. i, iv, ii மற்றும் iii, 3. நுரையீரல்கள், 4. காற்று, உணவு மற்றும் நீர், 5. மீன், 6. நீர்வாழ் தாவரம், மீன், தவளை, பூச்சிகள், 7. மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம், 8. உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள், 9. குறு இழை, 10. பாலைவன வாழிடம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வாழிடம், 2. ஒரு செல் உயிரிகள், பல செல் உயிரிகள், 3. திசையை கட்டுப்படுத்த, 4. போலிக்கால்கள்

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக: தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக:

1. சரி, 2. இருக்காது, 3. சரி, 4. பல பொருட்களை, 5. ஒருசெல்

IV. பின்வருவனவற்றை நிறைவு செய்க:

1. வாழிடம், 2. ஒருசெல் உயிரி, 3. செவுள்கள், 4. நகரும், 5. கொழுப்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button