Book Back QuestionsTnpsc

வெப்பம் மற்றும் வெப்பநிலை Book Back Questions 7th Science Lesson 8

7th Science Lesson 8

8] வெப்பம் மற்றும் வெப்பநிலை

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மனிதர்கள் வெவ்வேறு உடல் வெப்ப நிலையினை பெற்றுள்ள போதிலும் அவர்களின் சராசரி உடல் வெப்ப நிலை 37oC (98.6oF) ஆகும். மேலும் ஒவ்வொருவரும் ஒரே மதிப்பிலான வெப்ப நிலையினை நாள் முழுவதும் பெற்று இருப்பதில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கு ஏற்பவும் புற சூழலுக்கு ஏற்றாற் போலவும் நமது உடல் வெப்ப நிலையானது நாள் முழுவதும் சிறிது உயர்வதும் தாழ்வதுமாக உள்ளது.

பெரும சிறும வெப்ப நிலைமானி: ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலையினை அளக்கப் பயன்படும் வெப்ப நிலைமானியானது பெரும சிறும வெப்ப நிலைமானி என அழைக்கப்படுகிறது.

பாரன்ஹீட் அளவீட்டிற்கும் செல்சியஸ் அளவீட்டிற்கும் உள்ள தொடர்பும், கெல்வின் அளவீட்டிற்கும் செல்சியஸ் அளவீட்டிற்கும் உள்ள தொடர்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

(F-32)/9 = C/5, K = 273.15 + C.

உலகின் பெரும்பான்மையான மனிதர்கள் அன்றாட வாழ்வில் வெப்ப நிலைகளை அளக்க செல்சியஸ் அளவீட்டு முறையினை பயன்படுத்துகின்றனர். கெல்வின் அளவீட்டு முறையானது தனிச்சுழி அளவீட்டு முறை மட்டும் அல்ல. 1oC வெப்ப நிலை மாற்றம் ஏற்பட்டால் 1 K வெப்ப நிலை மாறுபாடு ஏற்படும் வகையில் கெல்வின் அளவீட்டு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 273.15 என்ற மதிப்பினை செல்சியஸ் அளவீட்டுடன் கூட்டுவதன் மூலமாகவோ அல்லது கழிப்பதன் மூலமாகவோ நாம் மிக எளிமையாக செல்சியஸ் அளவீட்டு முறையினை தனிச்சுழி அளவீட்டு (கெல்வின்) முறைக்கு மாற்றிக்கொள்ள இயலும். ஆனால் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பாரன்ஹீட் அளவீட்டு முறையினை பயன்படுத்துகின்றனர். பாரன்ஹீட் அளவீட்டு முறையினை தனிச்சுழி (கெல்வின்) அளவீட்டு முறைக்கு மாற்றுவது எளிமையானதாக இல்லை. இதனை சரிசெய்ய அவர்கள் ரான்கீன் அளவீட்டு முறையினை பயன்படுத்துகின்றனர். கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர் மற்றும் இயற்பியலாளரான ரான்கீன் 1859ஆம் ஆண்டு இம்முறையினை அறிமுகப்படுத்தினார். இது தனிச்சூழி அளவீட்டு முறையாகும். மேலும் 1oRல் ஏற்படும் மாற்றம் 1oFக்கு சமமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பாரன்ஹீட் அளவீட்டு முறையினை பயன்படுத்துபவர்களுக்கு தனிச்சுழி அளவீட்டு முறை தேவைப்பட்டால் அவர்கள் R = F + 459.67 என்ற வாய்ப்பாட்டினை பயன்படுத்தி ரான்கீன் முறைக்கு மதிப்பினை எளிமையாக மாற்றிக் கொள்ள இயலும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வெப்ப நிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை ___________

(அ) கெல்வின்

(ஆ) பாரன்ஹீட்

(இ) செல்சியஸ்

(ஈ) ஜீல்

2. வெப்ப நிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும் போது அதில் உள்ள திரவம்

(அ) விரிவடைகிறது

(ஆ) சுருங்குகிறது

(இ) அதே நிலையில் உள்ளது

(ஈ) மேற்கூறிய ஏதுமில்லை

3. மனிதனின் சராசரி உடல் வெப்ப நிலை

(அ) 0oC

(ஆ) 37oC

(இ) 98oC

(ஈ) 100oC

4. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது __________

(அ) பாதுகாப்பான திரவம்

(ஆ) தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது.

(இ) ஒரே சீராக விரிவடையக்கூடியது

(ஈ) விலை மலிவானது

5. கீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது

K (கெல்வின்) = oC (செல்சியஸ்) + 273.15

oC K

அ. -273.15 0

ஆ. -123 +150.15

இ. +127 +400.15

ஈ. +450 +733.15

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மருத்துவர்கள் ____________ வெப்ப நிலைமானியினைப் பயன்படுத்தி மனிதனின் உடல் வெப்ப நிலையனை அளவிடுகின்றனர்.

2. அறை வெப்ப நிலையில் பாதரசம் __________ நிலையில் காணப்படுகிறது.

3. வெப்ப ஆற்றலானது ___________ பொருளில் இருந்து __________ பொருளுக்கு மாறுகிறது.

4. -7oC வெப்ப நிலையானது 0oC வெப்ப நிலையினை விட ____________

5. பொதுவாக பயன்படுத்தப்படும் ஆய்வக வெப்ப நிலைமானி ___________ வெப்ப நிலைமானி ஆகும்.

பொருத்துக:

1. மருத்துவ வெப்ப நிலைமானி – ஆற்றல்

2. சாதாரண மனிதனின் உடல் வெப்பநிலை – 100oC

3. வெப்பம் – 37oC

4. நீரின் கொதிநிலை – 0oC

5. நீரின் உறைநிலை – உதறுதல்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. கெல்வின் 2. விரிவடைகிறது 3. (370C)

4. ஒரே சீராக விரிவடையக்கூடியது 5. (+450 + 733.15)

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. மருத்துவ 2. திரவ 3. அதிக வெப்ப நிலையிலுள்ள, குறைந்த வெப்பநிலையிலுள்ள

4. குறைவு 5. செல்சியஸ்

பொருத்துக: (விடைகள்)

1. மருத்துவ வெப்பநிலைமானி – உதறுதல்

2. சாதாரண மனிதனின் உடல் வெப்பநிலை – 370C

3. வெப்பம் – ஆற்றல்

4. நீரின் கொதிநிலை – 1000C

5. நீரின் உறைநிலை – 00C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!