Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

வெப்பம் Book Back Questions 6th Science Lesson 8

6th Science Lesson 8

8] வெப்பம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஆப்பிரிக்காவிலுள்ள, லிபியாவில், 1922ம் வருடத்தில் ஒரு நாள், காற்றின் வெப்ப நிலையானது 59oC எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. அண்டார்ட்டிக் கண்டத்தின் வெப்பநிலை தான் உலகிலேயே மிகக் குறைந்த வெப்ப நிலையாக அளவிடப்பட்டுள்ளது. அது தோராயமாக -89oC எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வெப்ப நிலை நீரின் உறைநிலைக்குக் குறைவாக இருக்கும் பொழுது எதிர்குறி (-) உபயோகப்படுத்தப்படுகிறது. நீரின் உறைநிலை 0oC எனக் கணக்கிடப்படுகிறது. நீரானது 0oC வெப்ப நிலையில் பனிக்கட்டியாக மாறுகிறது என்றால் -89oC என்பது எந்த அளவுக்குக் குளிராக இருக்கும் என்பதனை சிந்தித்துப் பார். நமது உடலின் சராசரி வெப்ப நிலை 37oC ஆகும். காற்றின் வெப்ப நிலை 15oC முதல் 20oC அளவில் இருக்கும் பொழுது நமது உடல் குளிர்ச்சியாக உணர்கிறது.

சமையலறை மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தும் கண்ணாடிப் பொருள்கள் போரோசிலிகேட் கண்ணாடியால் (பைரக்ஸ் கண்ணாடி) உருவாக்கப்படுகின்றன. இந்த கண்ணாடிப் பொருள்களை வெப்பப்படுத்தும் பொழுது, மிகமிகக் குறைவாகவே விரிவடைகின்றன. எனவே இவற்றில் விரிசல் ஏற்படுவதில்லை.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்

(அ) வேகமாக நகரத் தொடங்கும்

(ஆ) ஆற்றலை இழக்கும்

(இ) கடினமாக மாறும்

(ஈ) லேசாக மாறும்

2. வெப்பத்தின் அலகு

(அ) நியூட்டன்

(ஆ) ஜீல்

(இ) வோல்ட்

(ஈ) செல்சியஸ்

3. 30oC வெப்ப நிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50oC வெப்ப நிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும் பொழுது, உருவாகும் நீரின் வெப்ப நிலை

(அ) 80oC

(ஆ) 50oC க்கு மேல் 80oC க்குள்

(இ) 20oC

(ஈ) ஏறக்குறைய 40oC

4. 50oC வெப்ப நிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 50oC வெப்ப நிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,

(அ) இரும்புக் குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்

(ஆ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது

(இ) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்குச் செல்லும்

(ஈ) இரண்டின் வெப்ப நிலையும் உயரும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வெப்பம் ____________ பொருளிலிருந்து ___________ பொருளுக்கு பரவும்.

2. பொருளின் சூடான நிலையானது ___________ கொண்டு கணக்கிடப்படுகுpறது.

3. வெப்ப நிலையின் SI அலகு _______________

4. வெப்பப்படுத்தும் பொழுது திடப்பொருள் ________ மற்றும் குளிர்விக்கும் பொழுது ____________

5. இரண்டு பொருள்களுக்குக்கிடையே வெப்பப் பரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் _________ நிலையில் உள்ளன.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. வெப்பம் என்பது ஒரு வகை ஆற்றல். இது வெப்ப நிலை அதிகமான பொருளிலிருந்து வெப்ப நிலை குறைவான பொருளிற்கு பரவும்.

2. நீரிலிருந்து வெப்பம் வெளியேறும் பொழுது, நீராவி உருவாகும்.

3. வெப்ப விரிவு என்பது பொதுவாக தீங்கானது.

4. போரோசிலிகேட் கண்ணாடியானது வெப்பப்படுத்தும் பொழுது அதிகம் விரிவடையாது.

5. வெப்பம் மற்றும் வெப்பநிலை இரண்டும் ஒரே அலகினைப் பெற்றுள்ளன.

IV. பொருத்துக:

1. வெப்பம் – அ. 0oC

2. வெப்பநிலை – ஆ. 100oC

3. வெப்பச் சமநிலை – இ. கெல்வின்

4. பனிக்கட்டி – ஈ. வெப்பம் பரிமாற்றம் இல்லை

5. கொதி நீர் – உ. ஜீல்

V. ஒப்புமை தருக:

1. வெப்பம்: ஜீல்: : வெப்ப நிலை : ______________

2. பனிக்கட்டி: 0oC: : கொதி நீர் : ______________

3. மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல்: வெப்பம்: : சராசரி இயக்க ஆற்றல்: _______________

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வேகமாக நகரத் தொடங்கும், 2. ஜீல், 3. ஏறக்குறைய 40oC, 4. இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. உயர்ந்த வெப்பநிலை உள்ள, குறைந்த வெப்பநிலை உள்ள, 2. வெப்பநிலைமானி, 3. கெல்வின், 4. விரிவடைகிறது, சுருங்குகிறது, 5. வெப்ப சம

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. சரி, 2. பனிக்கட்டியாக, 3. நன்மையானது, 4. சரி, 5. வெவ்வேறு அலகினை

IV. பொருத்துக:

1. உ, 2. இ, 3. ஈ, 4. அ, 5. ஆ

V. ஒப்புமை தருக:

1. கெல்வின், 2. 100 டிகிரி செல்சியஸ், 3. வெப்பநிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!