Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

வேதிப்பிணைப்பு Book Back Questions 9th Science Lesson 13

9th Science Lesson 13

13] வேதிப்பிணைப்பு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஒரு உலோகத்தின் இணைதிறன் என்பது அந்த உலோகம் இழக்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும். ஒரு அலோகத்தின் இணைதிறன் என்பது அது ஏற்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்.

அணுவின் குறியீடைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் ஒவ்வொரு புள்ளிகளாக முதலில் குறிக்கப்படுகின்றன. பிறகு ஒரு பக்கத்திற்கு இரண்டு வீதம் இணைதிறன் எலக்ட்ரான்கள் முழுவதும் புள்ளிகளாக குறிக்கப்படுகின்றன. ஒற்றைப் புள்ளியை எந்தப் பக்கத்திலும் குறிக்கலாம்.

ஒரு தனிமத்தின் அணு எலக்ட்ரானிய இணைதிறன் பிணைப்பை உருவாக்கும்போது அவ்வணு இழக்கும் அல்லது ஏற்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதன் எலக்ட்ரான் இணைதிறன் எனப்படுகிறது.

சகப்பிணைப்பின் மூன்று வகைகள்: 1. ஓற்றை சகப்பிணைப்பைக் குறிக்க அணுக்களுக்கிடையே ஒரு கோடு (-) பயன்படுத்தப்படுகிறது. (எ.கா) H – H; 2. இரட்டை சகப்பிணைப்பைக் குறிக்க அணுக்களுக்கிடையே இரண்டு கோடுகள் (=) பயன்படுத்தப்படுகின்றன. (எ.கா) 0 = 0; 3. மும்மை சகப்பிணைப்பைக் குறிக்க அணுக்களுக்கிடையே மூன்று கோடுகள் (≡) பயன்படுத்தப்படுகின்றன. (எ.கா) N ≡ N.

வேறுபட்ட எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற அணுக்கள் இணைவதால் முனைவுள்ள கரைப்பான்கள் உருவாகின்றன. எ.கா: நீர், எத்தனால், அசிட்டிக் அமிலம், அம்மோனியா. அயனிச் சேர்மங்கள் இத்தகைய கரைப்பான்களில் எளிதில் கரைகின்றன. எலக்ட்ரான் கவர் தன்மையில் குறைந்த அளவே வேறுபாடு கொண்ட கார்பன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற அணுக்கள் இணைவதால் முனைவற்ற கரைப்பான்கள் உண்டாகின்றன. எ.கா: அசிட்டோன், பென்சீன், டொலுவீன், டர்பன்டைன். சகப்பிணைப்புச் சேர்மங்கள் இத்தகைய கரைப்பான்களில் கரைகின்றன.

பிணைப்பில் உள்ள இணை எலக்ட்ரான்களை தன்னை நோக்கி கவர்ந்திழுக்கும் தன்மை எலக்ட்ரான் கவர் தன்மை எனப்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை.

(அ) 2

(ஆ) 4

(இ) 3

(ஈ) 5

2. சோடியத்தின் அணு எண் 11. அது ___________ நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது.

(அ) ஒரு எலக்ட்ரானை ஏற்று

(ஆ) இரண்டு எலக்ட்ரான்களை ஏற்று

(இ) ஒரு எலக்ட்ரானை இழந்து

(ஈ) இரண்டு எலக்ட்ரான்களை இழந்து

3. வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்.

(அ) பொட்டாசியம்

(ஆ) கால்சியம்

(இ) புளுரின்

(ஈ) இரும்பு

4. உலோகங்களுக்கும், அலோகங்களுக்கும் இடையே தோன்றும் பிணைப்பு ____________

(அ) அயனிப்பிணைப்பு

(ஆ) சகப்பிணைப்பு

(இ) ஈதல் சகப் பிணைப்பு

5. ______________ சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவை.

(அ) சகப்பிணைப்பு

(ஆ) ஈதல் சகப்பிணைப்பு

(இ) அயனிப்பிணைப்பு

6. சகப்பிணைப்பு ____________ மூலம் உருவாகிறது.

(அ) எலக்ட்ரான் பரிமாற்றத்தின்

(ஆ) எலக்ட்ரான் பங்கீடு

(இ) ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கீடு

7. ஆக்ஸிஜனேற்றிகள் ___________ கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

(அ) எலக்ட்ரான் ஈனி

(ஆ) எலக்ட்ரான் ஏற்பி

8. வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள் ___________

(அ) ஹேலஜன்கள்

(ஆ) உலோகங்கள்

(இ) மந்த வாயுக்கள்

(ஈ) அலோகங்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. (4) 2. ஒரு எலக்ட்ரானை இழந்து 3. புளுரின் 4. அயனிப் பிணைப்பு 5. அயனிப் பிணைப்பு 6. எலக்ட்ரான் பங்கீடு

7. எலக்ட்ரான் ஏற்பி 8. மந்த வாயுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!